(THE BURNING PLAIN)18+அம்மாவின் கள்ளகாதலை காணவிழையும் மகள்...

குமரிமாவட்டம் பக்கத்தில் அருமனைநல்லூரில்...அப்பா தான் பெற்ற பெண்ணையே மிரட்டி உடலுறவில் ஈடுபடவைத்து கர்பமாக்கி கொலை செய்த செய்தியைசமீபத்தில் படித்த போது மனது ரொம்பவும் வருத்தம் கொண்டது....இத்தனைக்கும்அவன் ஒரு ராணுவ வீரன்...அந்த பெண்ணை நீங்கள் புகைபடத்தில் பார்த்து இருந்தால்... நிச்சயம் அந்த பெண்ணுக்காக வருத்தபட்டு இருப்பீர்கள்...
அந்த பெண் பிளஸ் டூ படிக்கும் பெரிய பெண்..இந்த பெண்ணின் அம்மாதான் அந்த கொடுரனின் முதல் மனைவி... அந்த பெண்மணி இறந்த காரணத்தால்,இந்த பெண்ணை வளர்க்க இரண்டாவது திருமணம் செய்து கொண்டவன் அவன்... இரண்டாவது மனைவி வெளியூருக்கு போய் இருக்கும் சமயம்... தன் வயதுக்கு வந்த மகளின் மீது காமம் வந்து தொலைக்க.. அந்த படுபாவி அந்த பெண்ணை மிரட்டியே உடலுறவில் ஈடுபட வைத்து இருக்கின்றான்.. அந்த பெண் இப்படி என் வாழ்க்கையை சிரழிக்கின்றாயே... என்று கதறி இருக்கின்றது.. எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை...அந்த மனித மிருகம்..ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு கரு வளர அதை கலைக்க என்னவெல்லாமோ கை வைத்தியம் செய்து பார்த்து இருக்கின்றான்.. பலன் இல்லை...அடுத்து அந்த பெண்ணுக்கு கல்லூரி திறந்தால் தான் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அவன், அந்த பெண்ணுக்கு தூக்கமாத்திரை கொடுத்து அவள் மயக்கமானதும் அந்த மயக்கத்துடன் உடலுறவில் ஈடுபட்டு.... அவன் பெற்ற பிள்ளையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நகை க்காக கொலை நடந்தது போல் செட் செய்ய... முதலில் போலிஸ் தினறி அவன் செய்த ஒரு சிறு தவறை வைத்து...அப்புறம் போலிஸ் அந்த கொலைகார காமந்தக தகப்பனை கைது செய்தது...அவனை எல்லாம் குற்றவாளி கூண்டில் எல்லாம் நிறுத்தக்கூடாது..கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்...இதற்கு அடிப்படை காரணம் அடங்கா காமம்...
நாலுபிள்ளை பெத்தவள் கள்ளகாதலில் பிள்ளைகளை கொலை செய்து விட்டு பின்பு பிடிபட்டபிறகு அந்த கொலையை செய்ய தூண்டியது ஏது... என்றால் அதுவும் காமம்தான்...பெரிய பெண் வீட்டில் இருக்க சிலநடுத்தரவயது பெண்கள் முறைதவறிய உறவில் ஈடுபடும் போது... அந்த வீட்டில் இருக்கும் கணவனோ மகனோ அதனை கண்டுபிடிக்க முடிவதில்லை... ஆனால் வீட்டில் இருக்கும் மூத்த பெண் எல்லாவற்றையும் உற்றுநோக்கி கண்டுபிடித்துவிடுவாள்...
எப்போதுமே ஒரு வீட்டில் இருக்கும் பெரிய பெண்ணுக்குதான் அந்த வீட்டில் நடக்கும் நிகழ்வினை மிகச்சரியாக கணிக்க முடியும்..அவளுக்கு பெண் உடல்சார்ந்த பல விஷயங்கள் அந்த பெண்ணுக்கு அத்துபடி.. அதே போல் மகள் செய்யும் தவறையும் தாயால்தான் மிக ஈசியாக கண்டுபிடிக்கமுடியும்....
ஒரு அம்மா கள்ளகாதலில் ஈடுபட்டது தெரிந்தும் அந்த பெண்... ஒன்று தன் அம்மாவை கண்டிக்க வேண்டும்.. அல்லது கையும் களவுமாக பிடித்து விட்டு கண்டிக்க வேண்டும்... அந்த பெண் எதுவும் செய்யவில்லை... கையும் களவுமாக பிடித்து விட்டு அவர்களை பயமுறுத்த சில வேலைகள் செய்ய... அது கொலையில் போய் முடிகின்றது..... அப்படி பட்ட பெண்யார்... அவள் வார்க்கையில் அதன் பின்விளைவுகளை காண இந்த படத்தை பாருங்கள்.


THE BURNING PLAIN படத்தின் கதை இதுதான்...

Sylvia (now played by Charlize Theron) ஒரு ஒட்டல் நடத்தும் பெண்மணி...ஒர்க்கில் கெட்டி...அவளுக்கு விருப்பமான யாருடனும் படுத்து எழுந்து சந்ஷமாக வார்க்கையை அவள் போக்கில் வாழ்க்கையை வாழ்பவள்......அவள் ஓட்டலில் வேலை செய்யும் சர்வரிடம் கூடபடுத்துஎழுந்திருப்பவள்..... தினமும் அவளை கார்லோ என்பன் பின்தொடர்கிள்றான்...ஒரு நாள் அவளுக்கு பிரச்சனை.. அவள் பலருடன் நட்பு பாராட்டுவதை அந்த சர்வருக்கு பிடிக்கவில்லை...அவளுக்கும் அந்த சர்வருக்கும் சண்டை அந்த நேரத்தில் அவளை தினமும் பின் தொடரும் கார்லோ.. அவளைகாப்பாற்றுகின்றான்..அவனை அவள் ரூமுக்கு அழைத்து சென்று கொஞ்சம் சரக்கை கொடுத்து விட்டு....டிரஸ்மாற்றி வருவதாய் சொல்லிவிட்டு நிர்வாணமாய்.. அவன் எதிரில் வர... அவன் தனக்கு உன்னிடம் உடலுறவு வேண்டாம் என்று சொல்கின்றான்..காரணம்...? ஏப்படி ? எதனால்? அவன் அவ்வளவு யோக்கியமானவனா? அவன் திரும்ப மறுநாள் சில்வியாவை பின்தொடர... அவள் கடுப்பாகி.. என்னவேண்டும் என்று கேட்க....

மரியான உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்ல...

அதற்கு தன் பெயர் சில்வியா... தப்பான ஆளிடம் நீ பேசிக்கொண்டு இருக்கின்றாய்... என்று சொல்லி விட்டு நகர...
உன் கணவன் சென்டிகோ உன்னை பார்த்து வர அனுப்பினான் என்ற சொல்ல அவள் சற்றே நிலைதடுமாறிநிற்க்க... அவன் ஒரு போட்டோவை எடுத்து உன் பெண் பிள்ளை மரியா என்று காட்ட.. என்னை விட்டு விலக என்று சொல்லிவிட்டு நடக்க அவள் கதை பின்புலத்தில் விரிகின்றது... அவள் தன்மகளுடன் தன் கணவனுடன் சேர்ந்தாளா என்பது மீதிக்கதை..


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....


Guillermo Arriaga ஒரு நல்ல கதை சொல்லி... அதுவும் லீனியரை விட நான்லீனியரில் கதை சொல்வது இவருக்கு கை வந்த கலை... ஏற்கனவே.. பேபள் ,21கிராம்ஸ் படங்களுக்கு கதை எழுதியவர்.....

நான் எற்க்னவே பேபள் படத்தை இதே வரிசையில் எழுதி இருக்கின்றேன்....இந்த படமும் கோழி சீச்சது போலான திரைக்கதை வடிவம்....

நிகழ்காலமும் இறந்தகாலமும் துண்டு துண்டாக வரும்....

4குழந்தைக்கு தாய் கள்ளகாதலில் ஈடுபட காரணம்... கணவனிடம் சரியான திருப்தி இல்லை...அப்புறம்... அவளுக்கு பிரஸ்ட் கேன்சர்... மார்பே இல்லாதவளை ஒருவன் ரசிக்கின்றான் என்றாள் அவள் பாயின்ட் ஆப் வியூவில் அது சரி என்பதாக காட்டபட்டதும்....அதற்க்கான அழுத்தமான காட்சி அமைப்பு அவை...

இந்த படத்தின் இன்னொரு கான்செப்ட் என் குழந்தையும் உன் குழந்தையும் காதல் செய்கிகின்றார்கள்... என்பதுதான்....

Guillermo Arriaga இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கின்றார்..

அம்மா வெறு ஒருவனுடன் தப்பு செய்ய போகின்றாள்.. என்பதை தெரிந்து கொண்டு அவனை பின்தொடர்ந்து அவர்கள் உடலுறவு கொள்ளும் ஊரின் ஒதுக்குபுறமான டிரைலரில் உள்ளே சென்று அம்மா படுத்த படுக்கை என்று எல்லாவற்றிலும் உட்கார்ந்து எழுந்து ரசிப்பதை... ஒரு பெண்ணின் உள் உணர்வுகளை மிக அழகாய் சொன்ன காட்சிகள்....

அம்மா உடலுறவு கொள்வதை மறைந்து இருந்து பார்க்கும் அந்த பெண் பாலுறவின் அதீத கவர்ச்சியாகவும் அதற்கு பழி வாங்க அவள் தேர்ந்து எடுக்கும் முறையும்....பாவம் அந்த பெண்...

மருந்து அடிக்கும் எரோபிளேன் சட்டென விபத்துக்கு உள்ளாகும் அந்த காட்சி எடுத்து விதம் அற்புதம்....

மகளை விட்டு போன அம்மா... பேசமாட்டேன் என அடம் பிடிக்கும் மகள் ஒரு கட்டத்தில் அந்த பெண் அவளிடம் பேச இசைவு தெரிவிக்கும் காட்சியும்...

நான் அப்பாவை பார்க்க போறேன் நீயும் வரியா? என்பதான கேள்விகளும் கவிதையான இடங்கள்....

ஏரோப்ளேன் வயலுக்கு மருந்து அடிக்கும் காட்சிகள் ஒளிபதிவும் பிரேம்சும் அருமை...

பிரெஸ்ட் கேன்சரில் மார்பகம் இழந்த அந்த தாயை... அவன் அதை காண்பிக்க சொல்லும் போது கைகள் நடுங்க உடை அவிழ்க்கும் போதும்...அதன் பிறகு அவன் அந்த இடத்தை முத்தம் இட்டு இதுதான் தனக்கு பிடித்து இருப்பதாய் சொல்ல விழிகளில் நீருடன்...அவனை நடுக்கத்துடன் அனைக்கும் போது... அந்த கள்ளகாதலை நீங்களும் ரசிப்பது போல் காட்சியும் வசனங்களும் அமைத்து இருப்பது... நல்ல உளவியல் காட்சி...

குழந்தையில் விட்டு விட்டு போன அம்மாவுக்கு தன் மகள் 16வயதில் எப்படி இருப்பாள் என பார்க்கும் ஆசையும்... சிறுவயதில் இருந்தே அம்மாவை வெறுக்கும் பெண் கண் எதிரில் அம்மா இருக்கும் போது பேசாமல் இருக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் படத்தின் பெரிய சென்டிமென்ட் பலம்...

இந்தபடம் இரண்டு உலக படவிழாவில் கலந்து கொண்டது....

படத்தின் டிரைலர்...

படக்குழுவினர் விபரம்...


Directed by Guillermo Arriaga
Produced by Walter F. Parkes
Laurie MacDonald
Charlize Theron
Written by Guillermo Arriaga
Starring Charlize Theron
Jennifer Lawrence
Kim Basinger
Music by Omar Rodríguez-López
Hans Zimmer
Cinematography Robert Elswit
Studio Wild Bunch
2929 Productions
Distributed by Paramount Pictures (UK)
Release date(s) 2008
Country United States
Language English
Budget $20 million
Gross revenue $4,456,346 (worldwide)


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

7 comments:

 1. அண்ணே அவசியம் படத்தை பார்கிறேன்..
  கல்லால் அடிக்கும் தண்டனை கொடுக்கலாம்... அல்லது லுல்லவை கட் பண்ணிடலாம் .

  ReplyDelete
 2. நீங்களும் இந்த வாரம் நான் லீனியரா... கலக்குங்க... இன்னும் இந்தப்படம் பார்க்கலை... பார்க்கணும்... ஒவ்வொரு படத்துக்கும் நம்ம சமூகத்துலேயே இருக்கிற ஒரு பிரச்சினையோட சேர்த்து சொல்லறீங்க.. அருமை...

  ReplyDelete
 3. ரைட்டு :)

  கள்ள காதல

  ReplyDelete
 4. ஐய்யா இந்த படம் நான் பார்த்துட்டேன். ஆனா இவ்வளவு வெளங்கிக்கல, அதுக்கு தேங்க்ஸ் தல, :-)

  ReplyDelete
 5. பட பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. நல்ல விமர்சனம் ஜாக்கி.

  ReplyDelete
 7. அண்ணே டவுன்லோடு கையோடு போட்டே விட்டேன்.முத்து முத்தா எழுதிருக்கீங்க,
  http://isohunt.com/torrent_details/77344569/the+burning+plain?tab=summary

  இதோ டாரண்டை பிடிங்க.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner