சைக்கோ ஆட்கள் நாம் நிறைய பேரை பார்த்து இருக்கலாம்... சில சைக்கோகள் பேசவே மாட்டார்கள்... சிலர் நம்மோடு கலந்து இருப்பவர்களும் உண்டு...எப்போதவதுதான் சிலர் அது போல் நடந்து கொள்வார்கள்... மற்ற நேரத்தில் ரொம்ப அமைதியாக அவர்கள் இருப்பார்கள்...அவர்களுக்கு அப்படி ஒரு நோய் இருப்பது அவர்களுக்கே தெரியாது....
ஒரு சைகோ தன் சக கூட்டாளியிடம் தன் தங்கையை தன் கண் எதிரில் உடலுறவு செய்ய சொன்னாள் எப்படி இருக்கும்? அவன் தயங்கும் போது... அவளின் அங்கத்தை வர்ணித்து அவளை கெடுக்க வற்புறுத்தினாள் என்ன செய்வது அந்த சைகோவை...
GOD SPEED படத்தின் கதை என்ன???
சார்லி என்பவன் கடவுளின் பெயரால் சில பிரேயர்கள் செய்து பலரை நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றுகின்றான்...ஒரு நாள் இரவில் சார்லியின் மனைவி மகனை யாரோ முகம் தெரியாதவர்கள் கொலை செய்து விடுகின்றார்கள்...அந்த கொலை நடந்து ஆறுமாதம் கழித்து சாரா என்பவள் தன் சகோதரன் புத்தி பேதலித்து இருப்பதாகவும் அவனை குணபடுத்த வேண்டும் என்று அழைத்து போகின்றாள்..சார்லி தன் மனைவி மகனை கொன்றவனை கண்டுபிடித்தானா? சாரவின் சைக்கோ அண்ணன் என்னவானன்... என்பதை எந்த அவசரமும் இல்லாமல் இந்த படத்தை பார்க்கலாம்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
இந்த படம் ஒரு திரில்லர் படம்
ஸ்லோவான திரைக்கதை...
பல விருதுகளை பெற்று இருக்கின்றது... ஒரு வேளை மெத்த படித்தவர்களுக்கு இந்த படம் பிடித்தாலும் பிடிக்கும்...
என்னை பொறுத்தவரை படம் ரொம்பவும் ஸ்லோ..
லொகேஷன்கள் சான்சே இல்லை அவ்வளவு அற்புதம்...
காயம் பட்ட சார்லியை துப்பாக்கியுடன் துரத்தும் இடங்களிலும்....
தன் கூட்டாளியிடம் தன் சொந்த தங்கையை ரேப் செய்ய சொல்லும் காட்சிகளில் கொஞ்சம் நிமிர்ந்து உட்காரலாம்...
சிலருக்கு இந்த படம் பிடிக்கலாம்...அதனால்தான் இந்த படம் டைம்பாஸ் லிஸ்ட் படத்தில் வைத்து இருக்கின்றேன்..
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்...
* Release Date: 2009
* Runtime: N/A
* Genre: Drama, Thriller
* Starring: Ed Lauter, Jesse Ward, Joseph McKelheer, Cory Knauf ... See all
* Director: Robert Saitzyk
அன்புடன்
ஜாக்கிசேகர்
பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்
0 comments:
Post a Comment