முக்கியகுறிப்பு...
இந்த பதிவு முழுக்க முழுக்க சுயசொறிதல்...இந்த பதிவில் பெரிய சுவாரஸ்யம் எல்லாம் இல்லை... முக்கிய வேலை இருப்பின் அதை பார்க்கவும்...ஒரு சில புதிய பதிவு எழுதும் நண்பர்களுக்கு வேண்டுமானால் இது உதவியாய் இருக்கலாம்....மற்றபடி எந்த சுவாரஸ்யமும் இதில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை...
நான் ஒரு பக்கா லோக்கலான ஆள்...ஊரில் கைலியை மடித்து கட்டி எட்டி நடுமாரில் உதைத்து போட்ட சண்டைகள் ஏராளம்....
எழுத்தாளர் பாலகுமாரன்கதைகள் படிக்க ஆரம்பித்த உடன் ஒரு நிதானம் வந்தது... மனதோடு பேச ஆரம்பித்தேன்.... இந்த கோபம் இப்போது தேவையா? என்று எனக்கு நானே கேட்டு விட்டு அந்த கோபத்தை புறம் தள்ள ஆரம்பித்தேன்......நான் ஒரளவுக்கு கோபம் இல்லாமல் இருக்க...பாலகுமாரன் என்ற எழுத்தாளர்தான் காரணம்... அதே போல் அவரின் எல்லா கருத்துக்களும் எனக்கு ஏற்புடையது அல்ல....அவருக்கு நன்றிகள்...அவரைபற்றி நான் எழுதிய பதிவுக்கு இங்கு கிளிக்கவும்...
காலேஜில் வேலைக்கு போனதுக்கு பிறகுதான் என் கோபங்கள் மிகவும் மட்டுபடுத்தபட்டன...மனைவியோடு பைக்கில்போகும் போது ஏற்பட்ட சின்ன இடிப்பு தகராறில் ஓட ஓட விரட்டி உதைத்தது....
மியட் மருத்துவமனை எதிரில் மனைவியோடு பைக்கில் போக ஒரு கார்காரன் இடிப்பது போல் வந்து கட் அடித்த விட்டு போக நான் விழுந்து விடுவது போல் இருக்க... அதன்பின் விரட்டி ரோட்டில் பைக் நிறுத்தி காரை விட்டு டிரைவரை இறங்க வைத்து இழுத்து போட்டு உதைத்து இரண்டு பேரின் சட்டையெல்லாம் கிழிந்து, ரோட்டில் அடித்துக்கொண்டு நந்தம்பாக்கம் போலிஸ் நிலையம் சென்றது எல்லாம் தனிகதை...அந்த டிரைவரிடம் லைசென்ஸ் இல்லாமல் அவன் மாட்டி.. அதி வேகமாக கார் ஓட்டியது என அவன் மீது காவல் துறை வழக்கு பதிந்தது எல்லாம் தனிக்கதை...
நிறைய முன் கோபம் வரும்..... என் மனைவி வந்த பிறகு..... கோபத்தில் மலையேறிய சாமி எல்லாம் மலை இறங்கி கொண்டு இருக்கின்றது...ஒரு நிதானத்தை கொடுத்து இருக்கின்றது...இன்னும் பதிவுலகில் வந்த பிறகு இன்னும் றிறைய நிதானத்தை கொடுத்து இருக்கின்றது.....
என்னதான் நேரில் பேசுவது போல் எப்போதும் இருக்காது நாம் எழுதுகின்ற எழுத்து.. நாம் ஒன்றை சொல்லி இருப்போம்... அது வேறு ஒன்றாக புரிந்து கொள்ளபடும்...ஹவுஸ்கீப்பிங் கிரிஜா என்று ஒரு கதை எழுதி இருந்தேன்... அதில் கிரிஜா கருப்பாக இருந்தாலும் பார்பதற்கு பாந்தமாக இருப்பாள் என்று எழுதி இருந்தேன்...
ஒரு பின்னுட்டத்தில் ஒரு நண்பர்... கருப்புன்னா உங்களுக்கு கேவலமா? என்று எழுதி இருந்தார்... நிறைய மூளை சுடு உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்....அவர்களை புறக்கனிப்பதே நல்லது...பதில் சொல்லி பெரியாளக ஆக்க வேண்டாம்...
நிறைய கடிதங்கள் பாராட்டி வருகின்றன... சில கடிதங்கள் திட்டி வருகின்றன... மென்மையாய் புன்னகையை உதட்டில் வைத்து அதை படித்து விட்டு கடந்து போக முடிகின்றது...ஆனால் நிறைய பேர் என்னோடு வாழ்கின்றார்கள்...என்பது தெரிந்து நான் சந்தோஷத்தில் இருக்கின்றேன்...நம் ரசனையோடு பலர் பொருந்தி போகின்றார்கள் என்பதே சந்தோஷம்தானே...எப்போதுமே என்னை ஒரு யோக்கிய சிகாமணியாக என்னை நிலைநிறுத்திக்கொண்டதே இல்லை...
எல்லா இடத்தலும் நான் கடந்த வந்த பாதையை அவ்வப்போது சொல்லிவவருவத்ற்கு மிக முக்கியகாரணம்.. எந்த இடத்திலும் எனக்கு கொம்பு முளைக்ககூடாது என்பதே...அப்படி எனக்கு முளைத்தாலும் அதை வெட்டி விடுவதில் தீவிரமாக இருக்கின்றேன்
பொதுமக்கள் மற்றும் அரசுக்கு எதிரான கோபத்தை முன்னிறுத்தி எனது பதிவுகள் கோபமாக பதிய பட்டு இருக்கும்... ஆனால் எந்த தனிநபரையும் கூடுமானவரை திட்டியதில்லை... எந்த பதிவரையும் நீ அப்படி எழுதவில்லை இப்படி எழுதவில்லை என்று சொன்னதில்லை...
அதிகமான மொக்கையில் கலந்து கொண்டதில்லை... ஒரு சில விளக்கபதிவுகளை தவிர்த்து பெரிசாய் எதிர்வினை செய்தது இல்லை...அந்த நேரத்துக்கு ஒரு படத்தை பற்றி எழுதி விட்டு போகலாம்...நன்றாக எழுதி இருந்தால் படித்து பார்த்து ஒரு பின்னுட்டம் ஓட்டு அவ்வளவுதான்...
அதே போல் ஒருவரை பிடிக்கவில்லை.. அவரோடு எனக்கு உடன்பாடு இல்லை என்றால் அந்த பக்கமே திரும்பவே மாட்டேன்...புறக்கனிப்பு மட்டுமே அதற்கு சரியான தீர்வு....கம்யூட்டர் திறந்தால் ஒரு உலகம்... திறக்கவில்லை என்றால் வேறு ஒரு உலகம்... பிளாக் எழுதினாலும் எழுதாவிட்டாலும் என் வீட்டில் உலை கொதிக்கும்... இது ஒரு பகுதி நேர பகிர்தல்...
ஒரு ஆங்கில படத்தை பற்றி எழுதும் போது அதில் அந்த நடிகையின் நனைந்த உடையில் அரைநிர்வானம் அப்பட்டமாக தெரிய... அந்த படத்தை போட்டு விட்டேன்...ஒரு பெண்மணியிடம் இருந்து ஒரு போன்...தயவு செய்து அது போலான படத்தை ஹைடு பண்ணி போடுங்க.. ஆபிஸ்ல நாலு அம்பளைங்க இருக்கும் போது கொஞ்சம் சங்கடமாக இருப்பதாக சொல்ல.. அப்போதுதான் அதன் நியாயம் உணர்ந்து அது போலான படங்கள் ஹைடில் போடுகின்றேன்...
அப்போது எல்லாம் பிளாக் என்பது சேவல்பண்ணைதான் என்று தப்பாக நினைத்தகாலம் அது....
அப்புறம் ஏஜேரஜினி என்ற கணனி துறை நண்பரும் அதே கருத்தை சொன்ன போது...அவர் சொன்னார் உங்கள் தளத்தை அறிமுகபடுத்தியதே எங்கள் அலுவலக பெண்மணி ஒருவர் என்றும் உங்கள் சாண்ட்விச் ஜோக்ழுகளின் விசிறி அவர் என்றும் சொன்னார்...அப்போதுதான் நிறைய பெண்கள் என் வலையை படிக்கின்றார்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது....
பதிவுலகம்இது ஒரு நேரவிழுங்கி... உங்கள் நேரத்தை நைசாக பிடிங்கி கொள்ளும்...இந்த உலகத்தின் மிகப்பெரிய போதை என்னவென்றால்... என்ன எழுதி இருந்தாலும்.. போஸ்ட் போட்ட அடுத்த நொடியே உலகத்தின் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பின்னுட்டம் வந்து விடும்....
முதலில் அப்படி வருவதை எதிர்பார்த்து ரசித்தவன்நான்... அதனால் பெரும்பாண்மையான நேரத்தை வலையுலகத்தில் கழித்து இருக்கின்றேன்.... காலையில் ஆன் செய்த கம்ப்யூட்டரை மதியம் 3 மணிக்கு அனைத்து விட்டு 3 மணிக்கு மேல்தான் சாப்பிட்டு இருக்கின்றேன்....
இப்போதெல்லாம் பதிவு போட்டு விட்டு சிஸ்டத்தை அப் செய்து விட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுகின்றேன்... கல்லூரியில் வேலை செய்த போது கிடைத்த நேரங்கள் போல் இப்போது சினிமாவுக்கு போன பிறகு நேரம் கிடைப்பதில்லை...இருந்தும் தொடர்ந்து இந்த உலகில் பயணிக்கின்றேன்...அதனால்தான் பின்னுட்டத்துக்கு உடனுக்கு உடன் பதில் போடுவதில்லை....நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்....
புதிய பதிவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன்....நீங்கள் உங்களுக்கு தோனியதை உண்மையாய் எழுதுங்கள்...இலக்கியதரம் என்பது முக்கியம் அல்ல...ஓட்டு வரவில்லை பின்னுட்டம் வரவில்லை என்று வருத்தம் கொள்ள வேண்டாம்... நீங்கள் உண்மையாக எழுதினால் அதுதானாகவே வரும்....உலகில் நிறைய விஷயம் நடக்கும் எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.. உங்களுக்கு எது பாதித்ததோ அதை எழுதுங்கள்....
ஓட்டு போடுங்கள் என்று கடைசியில் சொல்ல ஒரு காரணம் இருக்கின்றது ஏதோ ஒரு ஞாபகத்தில் அந்த இடத்தை கடக்கலாம்..பிடித்து இருந்தால் போடுங்கள் என்று சொல்ல உரிமை இருக்கின்றது....எல்லாருமே ஒரு சின்ன அங்கீகாரத்துக்காகதான் ஏங்கி கிடக்காங்க இல்லையா?... ஓட்டு என்பது அங்கீகாரம்.... அவ்வளவுதான்...
சிலர் என்னிடம் சிலவிஷயங்களில் கோபபட்டு இனி உங்கள் தளம்பக்கமே வரமாட்டேன் என்று சொன்னார்கள்.. மிக்க மகிழ்ச்சி... எல்லோரையும் எப்போதும் யாராலும் திருப்திபடுத்த முடியாது...நீ அதை எழுத வில்லை.. இதை எழுதவில்லை... அப்படியா? நீங்கள் எழுதுங்கள்...
ஒரு சில விஷயத்துக்கு உங்கள் பார்வை என்ன என்பது போன்றும்... உங்கள் கருத்து என்ன என்பது போன்ற மெயில்கள் தினசரி வருகின்றன... நண்பர்களே அப்படி எல்லாத்துலயும் கருத்து சொல்லும் கந்தசாமி இல்லை நான்...
நீங்கள் ஒரு பதிவுக்கு நிறைய நேரம் செலவிட்டு பதிவு எழுதி இருப்பிங்க.. ஆனா அதற்கு எந்த ரெஸ்பான்சும் இருக்காது...ஆனாகொஞ்சம் அலட்சியமா எழுதி இருப்பிங்க.. ஆனா அதை தூக்கி வச்சி கொண்டாடிடுவாங்க... உங்களுக்கே ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்....
நேற்று தண்டோரா அலுவலகத்தில் ஸ்ரீதர் என்ற மதுரைகார நண்பரை சந்தித்தேன்.. அப்போது அவர் உங்கள் எழுத்துக்கள் உலக படங்கள் பிடிக்கும் என்றும் உங்கள் தளத்தை பதிவர் கார்த்திகை பாண்டியன்... ஜாக்கி நன்றாக எழுதுவார் வாசித்து பாருங்கள் என்று அறிமுகபடுத்தியதாக சொல்ல...எனக்கு ஆச்சர்யம் யார் யாரோ இந்த வலையை யாரிடமோ பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்...
முகம் தெரியாதவர்கள் பின்னுட்டம் போடுவார்கள்..அனானியாய் வந்து கமென்ட் போடுவார்கள்... அனுமதிக்காதீர்கள்...விலாசத்தோடு வரட்டும் கருத்தை சொல்லட்டும்... சிலர் திட்டுவதற்கு என்றே பிளாக் அல்லது மெயில் ஆரம்பித்து திட்டுவார்கள்...இரண்டு பதிவு போட்டு விட்டு வந்து நியாயம் சொல்லுவார்கள்...
இந்த சென்னைக்கு நடந்து வந்தேன்.. அப்புறம் சைக்கிள் வாங்கினேன் அப்புறம் பைக்... அதனால் நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை...
நான் இப்போதெல்லாம் வலையுலகில் அதிக நேரம் எடுத்துக்கொள்வது இல்லை... வந்து படிக்கும் போது பார்க்கும் போது பின்னுட்டம்இட்டு ஓட்டு இடுவதோடு சரி...
ஒரு நல்ல படம் எழுத நிறைய குப்பைபடம் பார்க்கின்றேன்...நிறைய படம் பார்க்கின்றேன்.. அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்... எந்த படத்தையும் ரொம்ப மொசம் என்று சொன்னது இல்லை...

அதை பற்றி எழுதுவதும் இல்லை..பிட்டு படத்தை தவிர எந்த படத்தையும் டவுன் லேர்ட் செய்து பார்த்தது இல்லை...எல்லாம் டிவிடியில்தான்...உலகபடவிழாக்களில் பல படங்கள் பார்க்கின்றேன்...
ஒரு விமர்சனம் படத்தை பார்க்கவேண்டும் என்ற உணர்வை தூண்ட வேண்டும்....முடிவுகளை சொல்வது படத்தினை பார்க்கும் போது அந்த படம் மனதில் ஒட்டாமல் போய்விடும்.....
குறிப்பு...
மேலுள்ள முதல்படம் காலை தூக்கி பைட் பண்ணுவது போலான புகைபடம்.. வடபழனியில் உள்ள ஸ்டுடியோவில் ஒரு பிறந்தநாளின் போது நண்பர் ஒருவர் எடுத்தார்... எதாவது போஸ் கொடு என்று சொன்ன போது காட்டுபயலுக்கு இப்படித்தான் போஸ் கொடுக்க தெரிந்தது... அவர் தலையில் அடித்துக்கொண்டு எடுத்தார்.. அதே படத்தை நண்பர் போட்டோ ஷாப் செய்து கொடுத்தார்...
அடுத்தபதிவு பதிவுலகில் பெற்றவை......
அன்புடன்
ஜாக்கிசேகர்
பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்