என்ன வாழ்க்கைடா இது..


மேலுள்ள தலைப்பு சமீபத்தில் பல தமிழ் திரைப்படங்களை பார்க்கின்றவர்களுக்கு நன்றாக தெரியும்.  வானம் படத்தில் சிம்பு  சொல்லும் டயலாக் வாக்கியம்..
இந்த வாக்கியத்தை வாழ்க்கையின் பல நேரங்களில் நாம் உச்சரித்து இருக்கின்றோம்.. அல்லது நாம் வாழும் வாழ்க்கை ஒரே ஒரு நாளிலாவது சொல்ல வைத்து அழகு பார்க்கும்..

வாழ்க்கையின் அடிப்படை சுவாரஸ்யமே அடுத்த கட்ட ஆச்சர்யங்களை உள்ளடக்கியதுதான்.. அந்த ஆச்சர்யம்  ஒன்று சந்தோஷம் அல்லது துக்கமாக இருக்கலாம்...
சில வருடங்களுக்கு முன் அம்பத்தூர் பாடி ரோட்டில் பத்து நிமிடத்துக்கு முன் வீட்டில் பாய் சொல்லி டூவிலரில் வேலைக்கு கிளம்பிய மனைவி லாரி ஆக்சிடன்டில் இறந்து போய் இருக்க, தலை நசுங்கியஅவரின் மனைவி பினத்தின் அருகே பித்து பிடித்து இருப்பது போல, நடு ரோட்டில் உட்கார்ந்து இருந்த ஒரு அப்பாவி கணவனின் போட்டோவை மாலைமலர் வெளியிட்டு இருந்தது ..
அந்த போட்டோவை பார்த்த பிறகு இரண்டு நாட்களுக்கு அது பற்றிய நினைவாகவே இருந்தது..ஓத்தா என்ன வாழ்க்கைடா இது என்று...?? 
  போனவாரம் கூட வட இந்திய குடும்பத்துடன் இராமேஸ்வரம் செல்லும் போது ஏற்ப்பட்ட விபத்தில் மனைவியை இழந்து,மனைவி பினத்துடன், சொந்த ஊருக்கு போகமுடியாமல், இரண்டு மகள் மற்றும் ஒரு பையனுடன் நடுவழியில் நின்ற நண்பருக்கு சில தோழர்கள் உதவியதையும் பகிர்ந்து இருந்தேன்.. அது போலத்தான் வாழ்க்கை...

முன்பு லட்டரி தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்து போது தந்தியில் மாதத்துக்கு ஒருவராவதுஏழமை நிலையில் இருக்கும் ஒரு கூலி தொழிலாளிக்கு  கோடி விழுந்து ஒரு  நாளில் கோடிஸ்வரபிம்பம் கிடைத்து விடும்.. அது போல சந்தோஷ நிகழ்வுகளையும் நாம் பார்த்து இருக்கின்றோம்..

மதுரையில் மிக ஏழ்மை நிலையில் இருந்த வடிவேலு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது எல்லாம்  என்ன வாழ்க்கைடா வகை ரகம்தான்...வடிவேலு நினைக்கின்றார்களோ இல்லையோ அறிமுகபடுத்திய ராஜ்கிரன் மற்றும்இயக்குனர் உதயகுமார் நினைத்து பார்க்க வாய்ப்பு இருக்கின்றது..



ஒரு வருடத்துக்கு முன் கலைஞர் மகள்  கனி மொழி.. ஆட்சியில் இருக்கும் முதல்வரின் மகளான தான் திகார் சிறையில் இருப்போம் என்று நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்..நேற்று கூட யாஹு நிறுவனத்தின் சிஇஓவை வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றார்கள்.. இது போல நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்...

எல்லார் வாழ்க்கையிலும் சின்னதும் பெரிதுமாக இது போல சம்பவங்கள் நடக்காமல் இருக்காது...

 வாழ்க்கை எதிர்பாராத ஆச்சர்ய பக்கங்களை தன்னுள் புதைத்து வைத்து இருக்கின்றது...நாம்தான் அது தெரியாமல் ஆடிக்கொண்டு இருக்கின்றோம்.. அப்படி சில நிகழ்வுகள் நம் மனதில் சுற்றிக்கொண்டு இருக்கும் அப்படி ஒரு நிகழ்வை நான் இங்கே பதிவு செய்கின்றேன்.

அந்த மனிதர் மிகப்பெரிய இடத்தில் இருந்தார்.. ஊடக உலகில் அனைவரும்  அறியப்படும் நபராக அவர் இருந்தார்..18 வருட சாம்ராஜ்ய நிறுவனத்தில் அவரும் ஒரு அசைக்க முடியாத சக்தி.. 
அவர் பேச்சுக்கு அந்த நிறுவனம் கொடுத்த மரியாதை..தமிழ் ஊடகங்களில்  அவர் பெயரை சொல்லி அவரின் நண்பர் நான் என்று சொல்லுவதை பலர் பெருமையாக  என்னிடம் சொல்லி இருக்கின்றார்கள்..

தமிழ்சினிமாவில்  அவரின் பேரை உபயோகபடுத்தி பலர் ஆதாயம் கண்டார்கள். படத்தையோ அல்லது பாடலையோ தமிழ்சினிமாவில் வெளியிடும் நிகழ்ச்சிக்கு அவர் வந்தால் அவர் பேரை சொல்லி தன்னை அவரின் மிக நெருங்கிய நண்பராக  காட்டிக்கொண்ட பல தமிழ் நடிகை நடிகர்களை எல்லோருக்கும் தெரியும்.

பாடல் வெளியீட்டு  அவர் விழாவுக்கு வந்தால் அவர் பெயரை மேடையில் பேசுபவர்கள் தவறாமல் உச்சரிக்கும் அளவுக்கு அவரின் பெயர் ரொம்பவும், பிரபலம்.. 

அவரின் மழ மழ ஷேவ்   செய்த முகத்தினையும்  சங்கோஜ சிரிப்பினையும் அவ்வப்போது காட்டுவார்கள்..அவரும் செம பிரஸ்க்காக இருப்பார்.. 

போனவருடத்தில்தான் அவர் பெயர் சைதாப்போட்டைஹோட்டலில் நடந்த  பிரச்சனையில் அடிப்பட்டது..அவரின் பல கிசுகிசுக்கள்  பத்திரிகையில் இலைமறை காய்மறைவாக எழுதுவார்கள்...

தமிழகத்தில்  ஆட்சி மாற்றம் நடந்தது...சினிமா தயாரிப்பாளர்களிடம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை மற்றும் கொடுக்க வேண்டிய பணத்தை மோசடி செய்தார் என்று  அவரின் மீது குற்றச்சாட்டுக்கு அவரை கைது செய்தார்கள்....

எந்த ஊடகங்களில் அவர்  ரொம்ப பிரிஸ்க்காக தவிர்க்க முடியாத  சக்தியாக வலம் வந்தாரோ? அதே ஊடகத்தில் இரண்டு வாரத்தாடியோடு பளிச்  சிரிப்பு இல்லாமல் காணப்பட்டார்..
இரண்டு நாட்களுக்கு முன் அவரின் நண்பரை போலிஸ் அடித்து உதைத்த காட்சியை பார்த்து விட்டு செய்வதறியாது அதே ஊடகத்தில் அவர் அழுவதை காட்டிய போதும்.. அந்த அழுகையை பத்திரிக்கைகள்  போட்டு போட்டு பிளாஷ் அடித்து படம் பிடிக்கையில் அவர் எது பற்றியும் பிரஞ்சை இன்றி அழுதுக்கொண்டு இருந்தார்... 

அவர் சன்டிவியின் முன்னாள் சிஇஓ ஊடககாரர்களால் சாக்ஸ் என்று செல்லமாக அழைக்கபட்ட ஹன்ஸ்சக்சேனா... சினிமா பட அதிபர்களை மிரட்டியதாகவும், மோசடி செய்ததாகவும் சன் ‌‌பி‌க்ச‌ர்‌ஸ் தலைமை ‌நி‌ர்வா‌கி சக்சேனா மீதான குற்றச்சாட்டு.. இந்த குற்றச்சாட்டு பற்றி நான் எந்த கருத்தும் சொல்வது இந்த பதிவின் நோக்கமல்ல...

தமிழ்சினிமா மற்றும் தமிழ் ஊடகங்களில் ஒரு ஜாம்பவனாக இருந்த  சாக்ஸ் அதே ஊடகத்தில் கையறு நிலையில் இருப்பதை பார்க்கும் போது வாழ்க்கை என்பது ஒரு நொடியில் புரட்டி போடும் என்பதை பதிந்து இருக்கின்றேன்.வாழ்வில் மாற்றம் மற்றுமே மாறாதது என்று புரியவைத்த நிகழ்வு அது..

ஓத்தா என்ன வாழ்க்கைடா இது...


நினைப்பது அல்ல நீ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

19 comments:

  1. தினகரன் பத்திரிக்கையில் சாக்சேனா அழுதவாறு இருப்பதை பார்த்தபோது கொஞ்சம் பரிதாபமாகதான் இருந்தது, இப்படி பரிதாபம் எழவேண்டுமென்றுதான் தினகரன் அந்த புகைபடத்தை வெளியியிட்டிருந்ததோ!

    ReplyDelete
  2. இதை அவர் புரிந்து கொள்ளாததே இந்த வீழ்ச்சிக்கு காரணம். அல்லக்கை அல்லக்கைதான் என்பதை புரிந்து கொள்ளாதது அதை விட பெரிய காரணம்

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  3. நல்ல நேரத்தில் நல்ல பதிவு...
    --
    ச. இராஜசிம்மன்
    9962879268

    ReplyDelete
  4. தினகரன் தனது விளம்பர உத்தியை மீண்டும் கையாண்டுள்ளது... சாக்ஸ் அழுதவாறு உள்ள போட்டோவை போட வேறு என்ன காரணம் இருக்கமுடியும்.. அவர்களை பொறுத்தவரை அது ஒரு சென்ஷேசனல் ந்யூஸ்...

    ReplyDelete
  5. இதை! இதை! இதை தான் ..நாங்கள் உணர்கிறோம் .......
    அருமையான எழுத்து நடை ...
    மனம் நிகிலும் ...
    நல்ல கருத்துகள் ...
    ஜாக்கி நான் உங்கள் ரசிகன் @ நண்பன் .
    யானைக்குட்டி ..

    ReplyDelete
  6. Nejamaave naan avara paartha udan naan yosicha visayathai thaan neenga eluthi irukeenga jackie.Aanaanapatta thiyagaraja bagavathar tamilin first superstar varumayila thaan iranthaarunnu padichen. but ippa saxenavai paarkum pothu athu thaan ninavukku varuthu.

    ReplyDelete
  7. Nejamaave naan avara paartha udan naan yosicha visayathai thaan neenga eluthi irukeenga jackie.Aanaanapatta thiyagaraja bagavathar tamilin first superstar varumayila thaan iranthaarunnu padichen. but ippa saxs a paarkum pothu athu thaan ninavukku varuthu.

    ReplyDelete
  8. எப்படி ஜாக்கி,
    சின்ன விஷத்தை கூட, இப்படி திரைக்கதை மாதிரி சுவாரசியமா எழுதறீங்க...?

    மிக்க நன்று...!

    ReplyDelete
  9. //வாழ்க்கை எதிர்பாராத ஆச்சர்ய பக்கங்களை தன்னுள் புதைத்து வைத்து இருக்கின்றது...நாம்தான் அது தெரியாமல் ஆடிக்கொண்டு இருக்கின்றோம்..//

    இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
    ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே- பருத்தவுடல்
    நமதென்று நாமிருக்க நாய் நரிகள் பேய்கழுகு
    தமதென்று தாமிருக்கும் காண்

    எப்போதோ பட்டினத்தார் சொல்லிவிட்டார்! :-)

    ReplyDelete
  10. என்ன வாழ்க்கைடா இது.

    ஓத்தா..

    ReplyDelete
  11. .வடிவேலு நினைக்கின்றார்களோ இல்லையோ அறிமுகபடுத்திய ராஜ்கிரன் மற்றும்இயக்குனர் உதயகுமார் ///PURIYALIY RASAVIN MANASILE IYAKKUNAR KASTHOORIRAJA THANA

    ReplyDelete
  12. அண்ணன்,
    உங்கள் வெற்றியே உங்கள் பதிவுகளில் அடிநாதமாக ஓடும் வாழ்வின் தத்துவம்தான்..ஆனால் சக்சேனா -வின் அழுகையில் எந்த வாழ்வியல் தத்துவமும் இல்லை..அவர் அழுததை பார்த்தபோது எனக்கும் தோன்றியது ..எப்படி வாழ்ந்த மனிதன்?..மீடியாவில் தெரியும் என்று தெரிந்தே அழுகிறானே என்று...

    ஆனால் நீங்களும் நானும் மதிக்கும் எந்த தத்துவதும் தெரியாத புரியாத சிறு மனிதர் அவர்..தெரு சண்டைக்கு ஒரு ஓட்டலை நொறுக்கிய நல்லவர்..எத்தனையோ மனிதர்களை பணத்துக்காக ஒழித்துக்கட்டிய மனிதர்.மமதை ஒன்றே வாழ்க்கை என நினைத்தவர்..என்ன வாழ்க்கைடா இது? போன்ற சொற்றொடர்களை இவருக்கு உபயோகிக்க வேண்டாம்...

    'நிறங்களின் உலகம் ' என்றொரு கதை..ரெண்டு ருபாய் கூலிக்காக பொரிகடலை வறுக்கும் மனிதனின்/ குடும்பத்தின் கதை..தேனீ பஸ் ஸ்டாண்டில் பழக்கடை வைத்திருக்கும் கண் பார்வை இல்லாத 'தேனி சீருடையான்' அவர்களின் கதை..என்ன வாழ்க்கைடா இது? என்ற சொற்றொடரை இந்த கதை விளக்குவதுபோல் வேறெதுவும் விளக்கி விட முடியாது..முடிந்தால் படிக்கவும்...

    ReplyDelete
  13. வணக்கம்,
    உண்மைதான் வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ஒரு அதிசயத்தை உள்ளடக்கியுள்ளது.

    ReplyDelete
  14. வாழ்க்கையின் விளையாட்டை அருமையான உதாரணத்துடன் விளக்கினீர்கள் நன்றி!

    ReplyDelete
  15. என்ன வாழ்க்கைடா இது... எனக்கும் பல நேரங்களில் தோன்றும்.. ஆனால் மகிழ்ச்சி ஒன்றை மட்டுமே எதிர் பார்த்து ஓட்ட முடியாத வண்டிக்கு பேர் தான் வாழ்க்கை.. அங்க அங்க பள்ளம் மேடு இருக்கதான் செய்யும்...

    ReplyDelete
  16. saxena sir ....ippadithaan antha checkers hotelkaranum azhuthu irupaan...oru ponnu veeta ranakalam akiningaley ...ipdithaan antha ponnum azhuthu irukum

    regards
    gonzalez

    ReplyDelete
  17. dear Jackie sekar
    migavum arumaiana nadai sila kalangalaga thaan naan blogs padithu varugiren. cableji blog thaan naan migavum rasithu padippen .. atharkku piragu ungal blog padithu varugiren. nandraga irukkirathu ungal nadai. melum migavum dhairyamana urai nadai. ithu en blog naan manathil pattathai thaan ezhutheven endra ungal ennam enakku migavum pidikkarathu varthaigal naam satharnamaka pesum pothu ubayogapaduthum varthaigal iruppathil magizchi utharanathirukku "otha"
    kalakkungal sekar avargalae

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner