Mankatha (2011)/மங்காத்தா.. அஜீத்தின் வெற்றி...

அஜீத்தை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. எந்த திரை உலக பின்புலமும் இல்லாமல் தமிழ் திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்...
திரை உள் அரசியலால் அவர் முதுகில் குத்து வாங்கிய போது எல்லாம் துவண்டு விடாமல் ஜெயித்து காட்டுவேன் என்று இன்று வரை வைராக்கியமாக போராடுபவர்...

தனது இயல்பை யாருக்காவும் அவர் விட்டுக்கொடுத்தது இல்லை...தான் எடுத்த  நிலைப்பாட்டில் அவர் கடைசிவரை உறுதியாக இருப்பவர்.. அஜீத்திடம் ஒரு மேன்லிநஸ் இருக்கும்....

ஒரு சில அஜீத் படங்கள்  பார்த்து எனக்கு டைப்பாய்டு ஜுரமே வந்து இருக்கின்றது... எல்லாம் முதல் நாளே போய் பார்த்து  நொந்து இருக்கின்றேன். அப்படி பார்த்த படங்கள்...ஆஞ்சநேயலு,ஜனா,ரெட் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.


15 வருடங்களுக்கு முன் அந்த இளைஞனை பார்த்த போது  அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் வெகுளித்தனமாக இருக்கும். சில நேரங்களில்  அவருடைய பேச்சு அவ்வளவு ஸ்திரத்தன்மையாக இருக்காது. நிறைய தோல்விகள்.... என்னசெய்வது என்று தெரியாத தவித்த கணங்கள்.. ஆனால் தனக்கு என்று இன்று ஒரு ஆளுமையை அவர் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றார்.. அவர் மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு..
==========

மங்காத்தா படத்தின் கதை என்ன??வினாயக் (அஜீத்) ஆறுமாதம் சஸ்பெண்டில் இருக்கும் போலிஸ் ஆபிசர்.. எதுக்கு சார் சஸ்பெண்ட்ல இருக்காரு?? இருங்கப்பா சும்மா  நை நைன்னுதொல்லை பண்ணிகிட்டு, ஒரு புளோவுல கதையை சொல்லிடறேன்...

ஆங்.. எங்க விட்டேன்...??

ஒரு புளோவுல கதையை சொல்லடறேன்...

ம்...500 கோடி ரூபாய் டி20  கிரிக்கெட் மேட்ச்சுக்கு சூதாட்ட பணமா மும்பைக்கு டாலர்ல வருது... அந்த பணத்தை கொள்ளை அடிக்க  அஜீத் திட்டம் போடுறார்....


சார் சார்... அவர் போலிஸ்ன்னு சொன்னிங்க...இப்ப கொள்ளை அடிக்கறார்ன்னு வேற சொல்லறிங்க...??

யோவ் புளோ போயிடும்.. சொம்ம்மானாச்சுக்கும் டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருக்காதே பிரிஞ்சிதா??

அதே பணத்தை நாலுபேர் கொண்ட சின்ன பசங்க கொண்ட டீம் திருட திட்டம் போடறாங்க..அஜீத் அவனுங்களை பார்ட்னராக்கி அந்த பணத்தை கொள்ளை அடிக்கறார்...


சார் அவர் தனியாவே கொள்ளை அடிக்கலாமே? அவர் ஹீரோ ஆச்சே??


டேய் ஒரு தபா சொன்னா நீ கேட்க மாட்டியா? சும்மா  நொய்யி நொய்யின்னு உசிரை எடுத்துகிட்டு....


ஏன்டா  நான் தெரியாமதான் கேக்கறேன்..பல்லவன்ல ஒரு பர்சை அடிக்கறதுக்கே மூன்று பேர் இருக்கற டீம் இருந்தாதான்... அந்த மிஷன் சக்சஸ் ஆகும்.... 500 கோடியை கொள்ளை அடிக்கறதுன்னா சும்மாவா??


கொள்ளை அடிச்சிடறாங்க..


இந்த பணம் வந்த விஷயம் சிபிஜக்கு தெரிஞ்சி அவுங்க துரத்தராங்க...

டாலர்ல இருக்கறதால பணத்தை சட்டுன்னு கொள்ளை அடிச்சவங்களால் பிரிச்சிக்கவேற முடியலை..

பணத்தை பறி கொடுத்த பாம்பே புக்கிங்க மற்றும் நிழல் உலக தாதா எல்லாரும் தொரத்தராங்க...


ஆனா இதுக்கு நடுவுல கொள்ளை அடித்த பணத்தை கானோம்.. யார் எடுத்து இருப்பாங்க..?

சார் எதுக்கு சார் அஜீத்தை ஆறு மாசம் சஸ்பெண்ட் பண்ணறாங்க..

போடாங் கொய்யால அதை போய் தியேட்டர்ல பார்த்து தெரிஞ்சிக்கோ..

============

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...அஜித்தின் 50 வது படம்... நிறைய எதிர்பார்ப்புகள்...படத்தை இயக்குவது விளையாட்டு பையன் வெங்கட் பிரபு இப்படி இண்டஸ்டரி முழுவதும் பேச்சு இருந்தது... ஆனால்  எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்..


அஜீத் தான் ஒரு பெரிய ஹீரோ என்ற நினைப்பை கழட்டி வைத்து விட்டு வெங்கட் பிரபு டீம் இடம்  தன்னை ஒப்படைத்து இருக்கின்றார்.. அந்த நம்பிக்கைக்கு நல்ல பலன்..

பில்லா இரண்டாவது பாகத்தில் நடித்த போது அந்த நெகட்டிவ் ஸ்டைல் பிடித்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். மனிதர் பூந்து விளையாடி இருக்கின்றார்..வில்லன் கெட்டப் நன்றாகவே இருக்கின்றதுஅதனால்தான் சவுண்ட் சென்னசார் கட் செய்து, 98 பிரேம்வில் தேவிடியா முண்டை என்று சொல்ல முடிகின்றது. ஓசியன்11 என்ற ஆங்கில படத்தின் கதையை சுட்டு எடுக்கின்றார்கள் என்று ஒருவாரத்துக்கு முன் ஒரு பேச்சு இருந்தது...எதையாவது அடித்து விட்டு தன்னை அறிவு ஜீவியாக தன்னை நினைத்துக்கொள்ள வைப்பது இணையத்தில்  ஒன்றும் புதிது அல்ல... யாராவது சொல்லலாம் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் சிறு பகுதியை இந்த படத்தில் உபயோக படுத்தி இருக்கின்றார்கள் என்று........


பெரியநட்சத்திரபட்டாளம்...திரிஷா,அர்ஜுன்,ஆண்ட்டிரியா,ஜெயபிரகாஷ்,பிரேம் மற்றும் சென்னை28 என நட்சத்திர பட்டாளம்..நீண்டு கொண்டே போய்க்கொண்டு இருக்கின்றது....அஜீத் தனக்கு 40 வயது ஆகப்போகின்றது என்று மார்தட்டி  சொல்லுகின்றார்.. அந்த தில்லுக்கே அஜீத்தை ரசிக்கலாம்..

முதல்பாடலில்  அஜீத் தனது சின்ன தொப்பையோடு விளையாடு மங்காத்தா பாட்டில் புடலங்காயை சீவூவது போல ஒரு ஸ்டெப் போடுகின்றார் பாருங்கள்.. தியேட்டர் அதகளமாகின்றது...


திரிஷாவும் இந்த படத்தில் நடித்து இருக்கின்றார்...திரிஷாவின் கைகளையும், கால்களையும் சக்தி சரவணணின் கேமரா குளோசப்பில் காண்பிக்கும் போது வயது முதிர்வு அதில் தெரிகின்றது...


ஆண்ட்ரியா.. நடித்து இருக்கின்றார்... அவரின் மிக்கிமவுஸ் பல் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.ஆனால் நாலு சீனில் வருவதைதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


அஞ்சலி நடித்து இருக்கின்றார்.. நன்றாகவும் இருக்கின்றார்...வெங்கட் பிரபு டீமில் வைபவ் மட்டும் கொடுத்து வைத்தவர் போல....லட்சுமிராய் நன்றாக நடித்து இருக்கின்றார்.. காட்டியும் இருக்கின்றார்.. தன் திறமை முழுவதையும்.. ஆனால்  இந்திய சென்சார் போர்டு ஏன் இருக்கின்றது என்ற  கோபம் லட்சுமிராய் அணிந்து இருந்த பிகினிகளுக்கு இருக்கின்றது..நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அர்ஜுன் எவிஎம்மின் சங்கர் குரு படத்தில் நடித்தார்.. இன்னும் போலிசாக  நடித்துக்கொண்டு இருக்கின்றார்...இந்த படத்திலேயும் போலிசாக நடித்து இருக்கின்றார்...ரிட்டயர்மென்ட ஸ்டேஜில் இருக்கின்றார்..

அஜீத் கெட்டவன்...

ரொம்ப கெட்டவன்..

கடைசியில் மாறுவது போல எல்லாம் திரைக்கதை அமைக்காமல் இருந்தமைக்கு மிக்க நன்றி..

இடைவேளைக்கு முன் அஜீத் போடும் பிளான் செமை... அதில் பிரேம்ஜி அமரன் பார்ட் கலகல..

சின்ன சிரிப்புகளை  வெங்கட் பிரபு டயலாக்கில் வைத்து இருக்கின்றார்.. பிரேம்ஜி அமரனை பார்த்தது உனக்குதான் பரிதாப பர்பாமன்ஸ் வரலையே என்று நக்கல் விடுவது நன்றாக இருக்கின்றது...அஜீத் பிளான் போடுவதாக காட்டும் அந்த மாண்டேஜ் ஷார்ட்ஸ் எல்லாம் அருமை..

சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் பல காட்சிகள் அருமை..முக்கியமாக அந்த மாண்டேஜ் ஷாட்ஸ்..படத்தின் பெரிய குறை... யுவனின் பாடல்கள்..


படத்தின் கடைசி டைட்டில் கார்டு ஷாட்டுகளை மிஸ்  செய்யவேண்டாம்..

என்னை போலவே  வெங்கட் பிரபுவுக்கு சரக்கு அதிகமாகி மறுநாள் தலைவலித்து இருக்க வேண்டும்..அந்த வேதனையை படம் மழுக்க காட்சியாக வைத்து இருக்கின்றார்.


படம் கன்பார்ம் ஆனதும் டிரைலர் வெளியிட்ட படம்.

 =================

படக்குழுவினர் விபரம்..

 Directed by     Venkat Prabhu
Produced by     Dhayanidhi Alagiri
Vivek Rathnavel
Screenplay by     Venkat Prabhu
Story by     Venkat Prabhu
Starring     Ajith Kumar
Arjun
Trisha Krishnan
Vaibhav Reddy
Premji Amaren
Mahat Raghavendra
Ashwin Kakumanu
Lakshmi Rai
Andrea Jeremiah
Anjali
Music by     Yuvan Shankar Raja
Cinematography     Sakthi Saravanan
Editing by     Praveen K. L.
N. B. Srikanth
Studio     Cloud Nine Movies
Distributed by     Sun Pictures
Radaan Mediaworks
Ayngaran International
Release date(s)     August 31, 2011 (Worldwide)
Running time     149 minutes
Country     India
Language     Tamil

 ==========

படத்தின் டிரைலர்
 ================

தியேட்டர் டிஸ்கி...

சென்னை உதயத்தில் புதன் கிழமை முதல் நாள் முதல் காலை ஒன்பது மணி காட்சி பார்த்தேன்..

அஜீத் என்ட்ரியின் போது தியேட்டர் அதகளபட்டது.. சின்ன பசங்கள் குதித்தால் பராவாயில்லை.. 40 வயதை கடந்த ஒருவர் சீட்டில் இருந்து எழுந்து, எழுந்து அஜீத் வரும் போது எல்லாம் குதித்தது.. அஜீத் என்ட்ரியை விட அற்புதம்.

பைனல் டைட்டில்  கார்டு முழுமையாக போடாமல் பாதியிலே கட் செய்து விட்டார்கள்.. அப்படி என்ன மயிறு டைம் சேவ் செய்ய போறாங்களோ??

டிஜிட்டலில் படம் பார்த்து விட்டு பிலிமில் படம் பார்ப்பது கொடுமையாக இருந்தது..

சவுண்ட் சரியில்லை...

படத்தை விட்டு வெளிய வரும் போது அடுத்த  காட்சிக்கு காத்திருந்த ரசிகர்கள் அனைவர் கண்களிலும் படம் எப்படி என்ற கேள்வி தொங்கி நிற்க்க.. படம் பார்த்து விட்டு வெளியே சென்றவர்கள்  காட்டு கத்தல் கத்த அந்த உற்சாகங்கள் வெளியே செல்போன் கேமராவில் படம் பிடித்து கொண்டு இருந்தார்கள்.
=========

பைனல்கிக்.

இந்த படம் அஜீத்தின் 50வது படம்...தல தறுதலையாகமல் தப்பித்து விட்டார்...படத்தின் சண்டைகாட்சி நீளத்தை குறைத்து இருந்தாலே இன்னும் படம் சிறப்பாக இருந்து இருக்கும்.. இந்த படம் பார்க்கவேண்டியபடம்.. சன்பிக்சர்ஸ்க்கு அடுத்த வெற்றி..

============== 
anna,


i'm arun from krishnagiri.pls write the review for "MANGATHA".we'r waiting for your review.......

--
Antony Arockia Nathan
[ "I CAN" ]


===========
மிக்க சந்தோஷமா ஆரோக்கிய நாதன்..?? 
===
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

18 comments:

 1. மங்காத்தா பத்தி இதுவரைக்கும் குறைஞ்சது ஒரு பத்து review படிச்சுடேன், ஆனா நீங்க மட்டும் தனி வழில எழுதறீங்க... எப்படி உங்களா மட்டும் முடியுது... அருமையான பதிவு....

  ReplyDelete
 2. மங்கத்தா ரிலீஸ் மாதிரி உங்களோட விமர்சனம் எப்போ வரும்னு எதிர் பார்த்துகிட்டே இருந்தேன் .... விமர்சனம் அருமை .... நன்றி ஜாக்கி.

  ReplyDelete
 3. supperb boss நான் தலயோட big fan இது வரைக்கும் மூணு தடவை படத்தை பார்த்துட்டேன்.... விமர்சனம் எழுதிறோம்ன்னு ஒருசிலர் பண்ற அலப்பறை தாங்க முடியல படம் வர்றதுக்கு முன்னமே அதோட காப்பி இதோட காப்பின்னு அறிக்கைவிட்டு என்னை ரொம்ப கடுப்பேத்திட்டாங்க இது வரைக்கும் வேற எந்த மங்காத்தா விமர்சனமும் படிக்கல்ல ஏன்னா மடத்தனமா ஏதாச்சும் எழுதி வச்சு irritate பண்ணுவானுக...... ரொம்ப நன்றி பாஸ் நியாயமான விமர்சனத்துக்கு.......

  பாஸ் எனக்கு உங்க மேல சின்ன வருத்தம் தெய்வத்திருமகளுக்கு நீங்க விமர்சனம் எழுதாததும் ஏன் எழுதலைன்னு நான் கேட்டதுக்கு நீங்க சொன்ன பதிலும்......eeeeeeeeeeeeee

  ReplyDelete
 4. அருமையான விமர்சனம்.
  விமர்சனத்துக்கு நன்றி,

  சே.குமார்.
  http://vayalaan.blogspot.com

  ReplyDelete
 5. thalaiva enge indha vaara sandwich, non veg??

  ReplyDelete
 6. படம் பிலிமிலேயே எடுக்கப்பட்ட படம் ஜாக்கி.. டிஜிட்டலில் இல்லை.

  ReplyDelete
 7. தங்கள் விமர்சனத்துக்கு நன்றி.

  ReplyDelete
 8. ###ஒரு சில அஜீத் படங்கள் பார்த்து எனக்கு டைப்பாய்டு ஜுரமே வந்து இருக்கின்றது... எல்லாம் முதல் நாளே போய் பார்த்து நொந்து இருக்கின்றேன். அப்படி பார்த்த படங்கள்...ஆஞ்சநேயலு,ஜனா,ரெட் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.###
  same blood sir.....
  3days eathana thadava sir unga page vanthu pakkurathu intha vemarsanathukku... review super

  ReplyDelete
 9. எப்படா இவரு 'மங்காத்தா' படத்தை பத்தி விமர்சனம் பண்ணுவாருன்னு காத்துகிட்டிருந்தேன். சூப்பர் பதிவை எழுதி 'தல' ரசிகர்களை குஷி படுத்திடிங்க.

  ReplyDelete
 10. //ஆஞ்சநேயலு,ஜனா,ரெட் போன்ற//


  'ஆஞ்சநேயலு'வா? அது தெலுங்குல ரவி தேஜா நடிச்ச படம் அண்ணா. தல நடிச்சது 'ஆஞ்சநேயா'.

  ReplyDelete
 11. அண்ணா உங்கா விமர்சனத்துக்கா காத்துஇருந்தேன்.................

  ReplyDelete
 12. Kodumai...Thala padam parthu thalaivaliye vandhathu :)

  ReplyDelete
 13. Thank you very much for your review about our thala's "Mankatha". It is very pleasant to hear from you that this film is too good. Thala rockzzzzzzzzzz.

  ReplyDelete
 14. //ஆஞ்சநேயலு,ஜனா,ரெட் போன்ற//


  \\'ஆஞ்சநேயலு'வா? அது தெலுங்குல ரவி தேஜா நடிச்ச படம் அண்ணா. தல நடிச்சது 'ஆஞ்சநேயா'.\\

  இப்பொ ரொம்ப முக்கியம்

  ReplyDelete
 15. suppper review pa...././
  i watched it on 31st here in SriLanka..../.
  I was squeezed by the crowd here..././
  Ur review gave another show..../
  keep continuing..././
  -AnoJan

  ReplyDelete
 16. Ajith Mankaatha Polla Nalla Padam Pannna Vendum, I am Waiting Billa II, Machi Open the Pattel Super Dance Ajith Sir

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner