கால ஓட்டத்தில் காணமல் போனவை. ஒயர் கூடைகள்...






கருப்பு, வெள்ளை , சிவப்பு, பச்சை. நீலம் என்று  அந்த ஒயர்கள். பல வண்ணங்களில் கிடைக்கும்...
கடலூரில் இருக்கு பன்னலால், பிக்கானேர் போன்ற சேட்டுகள் நடத்தும் பேன்சி ஸ்டோர்களில் ஒயர்கள் கிடைக்கும்... சேட்டுகள் சென்னையில் பாரிசில் இருக்கும் என்என்சி  போஸ் ரோட்டில் இருக்கும் மொத்த கொள்முதல் கடைகளில் வாங்கி கடலூரில் அசலுக்கு மேல் ஒரு டீ வாங்கி குடிக்கும் லாபத்துக்கு விற்ப்பார்கள்..


காலையில் கடை திறந்த்தும் ஒரு நீட்டமான கோல் வைத்துக்கொண்டு ,அந்த கலர் ஒயர்களை கடைக்கு வெளியே  இருக்கும் கொக்கிகளில் மாட்டி விடுவார்கள்.. எங்களிடம் பல்வேறு கலர்களில் ஒயர்கள் இருக்கின்றது என்று விளம்பர படுத்தவே....கலர் கலராக அவைகள் ஓவல் ஷேப்புகள் காற்றில் அவைகள் அசைந்தாடும்..


இப்போது போல் அப்போது எல்லாம் டிராவலர்ஸ் பேக் அதிகம் புழக்கத்தில் கிராமத்தில் இல்லா காலம் அது.. எல்லாத்துக்கும்  இந்த ஒயர் கூடைகள்தான் பயண்பாட்டில் இருக்கும்....

வெளியூர் போகனுமா? கணவனுக்கு குழந்தைக்கு சாப்பாடு எடுத்து போகனுமா? காய்கறி வாங்கனுமா? என்று எல்லா விதத்திலும் ஒயர்கூடைகள்  வாழ்வின் ஓட்டங்களில் நீங்கமற நிறைந்து இருக்கும்... என்ன.. இரவு நேரங்களில் பேருந்தில் பயணிக்கும் போது அசதியில்  தூங்கிவிட்டடால் ஒயர்  பேக்கில் இருக்கும் பொருட்கள் கவிழ்ந்து கொள்ளும் காரணம் ஒயர்பேக்கில் ஜிப் எல்லாம் இல்லை..பேகில் இருக்கும் பெருட்கள்   வெளியே   தெரியாமல் இருக்க பெரிய புடவையை மேலே வைத்து பேக் செய்வார்கள்...


எல்லோர் வீட்டிலும் வயதுக்கு வரும் பெண்களுக்கு கட்டாயம் ஒயர் கூடை பின்னக் கற்றுக்கொடுத்து விடுவார்கள்.... அது ஒரு கைத்தொழிலாக கருதிய காலம் அது...


இப்போது உள்ள பெண்கள் பலருக்கு  எப்படி பின்னுவது என்று தெரிய வாய்பில்லை...எங்கள் வீட்டுக்கு அருகில் யார் போட்ட கூடை மிக அழகாக இருக்கின்றது என்று ஒரு பெரிய  போட்டியே நடக்கும்... ஒரு பூவை கூடையின்  பக்கவாட்டில் போட்டு விட்டால் அடுத்த வீட்டு பெண் ஒரு மானை போடுவார்.. அடுத்தவர் யானை என்று தங்கள் திறமைகளை  நிரூபிப்பார்கள்.. என்ன யானை மற்றும் மான்களை கஷ்டப்பட்டு ஆம் இது மாணாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகிக்க நிரம்ப கஷ்டப்படுவது போல இருக்கும்....அதை வைத்தே அந்த பை பின்னிய அக்காக்களை பெரியவர்கள் கிண்டல் செய்வார்கள்... அந்த உழைப்பு கேலியாக போய் விட்டதே என்று நாள் பூராவும் அழுத அக்காக்களை நான் அறிவேன்.



ஒயர்களில் சொஸ்த்திக் பிராண்ட் ரொம்ப பேமஸ்... அதுதான் ரொம்ப குவாலிட்டி என்று என் அம்மா ரொம்பவும் நம்புவாள்.. ஒரு முறை  மாற்றி வாங்கி போய் விட்டேன்..எதிர்காலத்தில் நீ உருப்பட சான்சே இல்லை.. ஜூட்டிகையே இல்லை என்று ஓ ராமா என்று என் அம்மா புலம்ப ஆரம்பித்து விட்டாள்.



மிக அழகாய் முத்து முத்துதாக சின்ன சின்ன சதுரமாக ஒரு புள்ளியில் தோன்றும் அந்த ஒயர் கூடைகள்..  மெல்ல மெல்ல விரிவடையும் போதும் ஒரு பை தோற்றத்துக்கு வரும்  வரை ஸ்டிப் இல்லாமல் கொல கொல என்று இருக்கும்...பை தோற்றத்தை அடையும் போது அவைகள் மகிப்பெரிதாய் வலு பெறும்



மான், மயில், யானை , ஆர்ட்டின் போன்ற படங்கள் எல்லாம் ஒயர் கூடையின் பக்க வாட்டில் வரும்...ஒரு பேக் 50லிருந்து 100 வரைக்கு விலை போகும்...

பெரும்பாலும் சாப்பாடு எடுத்து போக ஏற்றப்பை எனக்கு தெரிந்து அதுதான்... என்ன.... அதில் சாம்பார் ஊற்றிக்கொண்டாலோ அல்லது தயிர் ஊற்றிக்கொண்டாலோ.. உடனே தண்ணீரில் அலசி வெயிலில் காயவைத்து விட வேண்டும்.. இல்லையென்றால் கப்பு தாங்கது....

அம்மா காசநோய் பிடியில் மருத்தவமனையில் இருந்து போது வீட்டில் இருந்து அவளுக்கு சோறு எடுத்து போக அவள் பின்னிய ஓயர் கூடைகள்தான் பெரும் உதவியாக இருந்தன..

 சென்னை போன்ற பெருநகரங்களில் பால் வாங்க  காய்கறி வாங்க சின்னதாக ஓயர் கூடைகள் பார்த்தது நினைவுக்கு வருகின்றது.. வெகு சில வயது முதிர்ந்த ஆட்களின் கைகளில் இப்போதும் ஒயர்கூடைகளை பார்க்க முடிகின்றது..

என் அம்மா முன்பணம் ஏதும் வாங்காமல், காசு போட்டு ஸ்வஸ்த்திக் கம்பெனி ஒயர் வாங்கி, கஷ்டப்பட்டு பின்னிய ஒயர் பேகை ஒரு பெண்மணி இரண்டு நாள் கழித்து மீதம் ஐம்பது தருகின்றேன் என்று வாங்கி போனார்..

ஒரு வாரம் ஆகியும் பணம் கேட்டதற்கு தரவில்லை..  முதல் வாரத்தில் அது நொட்டை இது நொட்டை என்று சொன்னார்.. இரண்டாம் வாரத்தில் கைப்பிடி பிரிந்து விட்டது என்று கதை சொன்னார்.. சரி கொடுங்கள் சரி செய்து தருகின்றோம் என்று ஆம்மா சொல்லியும், அதுக்கு அந்த ஐம்பது ரூபாய் சரியா போச்சின்னு அம்மாகிட்ட  சொல்லிவிட்டார்...

அம்மா அதன் பிறகு ஏதும் கேட்கவில்லை..மவுனமாக  ஒரு சிரிப்பை உதிர்ந்து விட்டு வந்துவிட்டார்...

நான் அந்த பெண்மணியிடம் இருந்து 50ரூபாய் வாங்காமல் ஓயமாட்டேன் என்று நான் சூளுரைத்துக்கொண்டு இருந்தேன். அம்மா அதட்டினார்... அமைதியாக இருக்க சொன்னார்...

இரண்டு வாரம் கழித்து எங்களிடம் பணத்தை  ஏமாற்றி பேக் வாங்கி போன  பெண்மணி, டிவிஎஸ் பிப்டியில் மறந்து சைடில் மாட்டி சென்றதால், சைலன்சரில்  ஒயர் பேக் பட்டு பொசுங்கி போய்விட்டது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது.....

ஜெயா அக்கா.. நீங்க புதுசா கொடுத்த பேக் பொசுங்கிடுச்சி இதை எதுனா செய்ய முடியுமா? என்றார்.. அதுக்கு அம்மா சொன்னார்.. எனக்கு ஒயர் பேக் பின்னவே தெரியாது என்று... ஆனால் அம்மா சிரிக்காமல் சொன்னார்....



பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்



நினைப்பது அல்ல நீ......
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

18 comments:

  1. கலக்கல் பதிவு.இப்போதும் பாவனையில் உள்ளன வீட்டே மூன்று கூடை உள்ளது.ஊரில் சைக்கிளில் போகும்போது சாரம்,சேர்ட்டோடு கூடையை ஹேண்டிலில் மாட்டி கொண்டுதான் எங்கும் செல்வது காணி,சந்தை,கோவில்

    ReplyDelete
  2. நல்ல பதிவு அண்ணே.

    ReplyDelete
  3. //இப்போது உள்ள பெண்கள் பலருக்கு எப்படி பின்னுவது என்று தெரிய வாய்பில்லை..//

    ஓயர் கூடைகள் மட்டும் இல்ல .. தங்களது கூந்தலையும் தான் ...
    சிலருக்கு பின்னும் ஆளவுக்கு முடியே இல்லை அது வேறு ..... :

    //ஜெயா அக்கா.. நீங்க புதுசா கொடுத்த பேக் பொசுங்கிடுச்சி இதை எதுனா செய்ய முடியுமா? என்றார்.. அதுக்கு அம்மா சொன்னார்.. எனக்கு ஒயர் பேக் பின்னவே தெரியாது என்று... ஆனால் அம்மா சிரிக்காமல் சொன்னார்....//

    அம்மா பின்னிட்டாங்க போங்க...

    நீங்களும் தான் jackie..

    Thanks for Sharing(remembering)

    ReplyDelete
  4. //இப்போது உள்ள பெண்கள் பலருக்கு எப்படி பின்னுவது என்று தெரிய வாய்பில்லை.//

    ஜாக்கி,

    தலை பின்னவே தெரியாது.இதில் கூடை எல்லாம் எப்படி முடியும்

    ReplyDelete
  5. // பேகில் இருக்கும் பெருட்கள் வெளியே தெரியாமல் இருக்க பெரிய புடவையை மேலே வைத்து பேக் செய்வார்கள்..//
    நானும் இதை கவனித்து இருக்கிறேன். நல்ல பதிவு.

    ReplyDelete
  6. பொக்கிஷப்பதிவு. மறந்து போன அடையாளங்களை பற்றி தாங்கள் மேலும் எழுதுவீர்கள் என காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. ரொம்ப அருமையான பதிவு ஜாக்கி

    ReplyDelete
  8. ஒரு வயர் கூடை பதிவானதே !!! இருந்தாலும் பழைய காலத்தை நினைவூட்டி விட்டீர்கள். விடுமுறையின் பெரிய பொழுது போக்கே அது தானே.

    ReplyDelete
  9. ஒயர் கூடையைப் போல் சின்ன பிளாஸ்டிக் மணிகளை வைத்து மணிபர்ஸ் செய்வார்கள். என் அம்மா அப்படி ஏராளமான மணிபர்ஸ் செய்து பகுதி நேரமாக சம்பாதித்தார். இப்போது அதில் ஒன்றுகூட என்னிடம் இல்லை. அம்மாவால் இப்போது செய்துதரவும் முடியாது. என்ன செய்ய... காலம்!

    ReplyDelete
  10. பலவகை நிற நூல்களில் crochet ஊசியைப் பயன்படுத்தி சுருக்குப்பை, கைப்பை, துண்டு, மேசை விரிப்பு போன்றவற்றைச் செய்த என் அம்மாவின் நினைவு வந்தது.

    ReplyDelete
  11. கலக்கல் பதிவு ஜக்கி

    ReplyDelete
  12. பழைய நினைவுகளைத் தூண்டிய நல்ல பதிவு.

    ReplyDelete
  13. நான் இன்னமும் சுவஸ்திக் வயர் கட்டு கட்டா வாங்கி குடுத்துகிட்டு தான் இருக்கென் எங்கம்மாவுக்கும், என் மனைவிக்கும்.......

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner