ஆல்பம்..
ஒரு வழியாக மூன்று பேரின் தூக்கு தள்ளிப்போய் விட்டது.. எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து இருக்கின்றார்கள்..
முதல் நாள் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்ட ஜெயலலிதா மறுநாள் சட்டசபையில் தீர்மானம் போட்டார்.. அதுக்கு மத்தியில் ஆள்பவர்கள் சொன்னார்கள். மாநில அரசின் தீர்மானம் எங்களை ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்லுகின்றார்கள்.. இந்த தைரியத்தில்தான் சபையில் தீர்மானம் போட்டார்களா??இருப்பினும் இது குறித்து சுப்ரமணியசாமி சொன்ன ஒரு கருத்தை எல்லோரும் தெரிந்துக்கொள்வது நல்லது..
=============
நல்ல மழைக்காலங்களை சென்னையில் மிஸ் பண்ணிவிட்டேன்..கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தேன். சென்னை ரோடுகள் பல இடங்களில் பல் இளித்து கிடக்கின்றன.. சட்டசபையில் முதல்வர் ஜெ நாங்கள் ஆட்சிக்கு வந்தது சில மாதங்களே ஆகின்றன... இன்னும் மூன்று வருடங்கள் கழித்து தமிழக சாலைகள் எவ்வளவுதரமாக இருக்கின்றன என்று பாருங்கள் என்று வழக்கமான ஸ்டைலில் நம் முதல்வர் பேசி இருக்கின்றார்..
=============
விமான ஸ்லைடு பத்தி இப்போதுதான் எழுதினேன்... சமீபத்தில் இரண்டு இந்தியவுக்கு வந்த விமானங்கள் ஓடுபாதையை விட்டு விலகி ஓடி விபத்துக்குள்ளானது.... ஸ்லைடு பயனை பற்றி தெரிந்து கொண்டீர்களா?
========
புதிய தலைமுறை சேனலின் செய்தி வாசிப்பாளர் சரண்யா எத்தனை முறை பதட்டத்தில் திக்கி செய்தி வாசித்தாலும்,ரசிக்கவே செய்கின்றேன்.
==========
மிக்சர்..
சென்னையில் பிசியான மவுண்ட் ரோட்டில் எல்ஐசியில் இருந்து வரும் போது டிவிஎஸ் அருகே இருக்கும் சிக்னல் பக்கத்தில் இருக்கும் சாலைக்கு நடுவில் இருக்கும் வழி சொல்லும் பெயர் பலகையில் சைதாபேட்டை போர்டுக்கு மேலே ஒரு காக்கை கூடு கட்டிக்கொண்டு இருக்கின்றது..அட சனியன் புடிச்ச காக்கையே உனக்கு வேற இடமே கிடைக்கலையா? நிம்மதியா எங்க ஆளுங்க உன்னை தூங்க கூட விடமாட்டானுங்க...நைட்ல கூட சர்புர்ன்னு வண்டிங்க போய் வர இடம்.. காக்கையே உன் சமத்து..
================
சென்னை வாணிமகால் பக்கத்தில் இருக்கும் ரெசிடென்சி ஓட்டலில் இருக்கும் பால்கனியில் மாலை ஆறு மணிக்கு மேல் புறாக்களின் ராஜ்யம்..அதில் வெள்ளைபுறக்கள் எதுவும் என் கண்ணில் படவில்லை எல்லாம் ஆஷ் கலரில்தான் இருக்கின்றன...
=========
நண்பர் வெட்டிக்காடு ரவியை பெங்களூருவில் சந்தித்தேன். அவரிடம் பேசிய போது மனது நிறைவாக இருந்தது நன்றி ரவி..இரண்டு பேரும் வேலை தேடிக்கொண்டு இருப்பதை சொன்னேன்.. ரெஸ்யூம்களை தந்துவிட்டு வந்தேன்...
லண்டனில் இருந்து நண்பர் கேஷவ் தன் குடும்பத்தினருடன் பெங்களூருவில் என் வீட்டுக்கு வந்தார்...அவரின் மனைவி யாழ்பாண தமிழ் பெண்..சென்னையில் வேளச்சேரியில் வீடுகட்டி இருந்தார்கள்...புதுமனைபுகுவிழாவுக்கு அழைத்து இருந்தார்கள்..அவர்களுக்கு பிடித்த கிப்ட்டை கொடுத்து விட்டு வந்தேன்.. பெங்களுருவில் வாசக நண்பர் ஈரோடு பாலாவை சந்தித்தேன்..மும்பையில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை சொன்னார்.. அதே போல ஹைடெக் கம்யூட்டர் பிரகாஷை சந்தித்தேன். நிறைய வருத்தங்கள் மனதில் இருந்தாலும் இது போலான சந்திப்புகள் என்னை உற்சாகபடுத்துகின்றன...
===============
நேற்று சேத்பட் அருகில் இருக்கும் வேங்ஸ் கிச்சனில் எங்கள் ஊர் தம்பி ராஜ்யை சந்தித்தேன்.இரண்டு பேரும் ஒரு மணிநேரம் 18 நிமிஷம் மதிய உணவை ருசித்தபடி பேசினோம்... எப்படி இவ்வளவு ஆக்யூரிட்டாக சொல்முடிகினறது என்றா? எனது போனில் வேங்ஸ்கிச்சள் வாசலில் நின்று போன் செய்ய தம்பி ராஜ் அந்த காலை கட் செய்யவே இல்லை..ஒருமணிநேரம் பதினெட்டு நிமிஷம் ஏர்ட்டெல் டூ வோடபோன் வெட்டியாக போச்சு..
=============
வெளிநாட்டில் வாழ்பவரா? சென்னையை ரொம்பவே மிஸ் செய்கின்றீர்களா? இந்த வீடியோ ரொம்பவே உங்களை மகிழ்விக்கும். எல்லா போட்டாவும் கொள்ளை அழகு முக்கியமாக விடியலில் வரும் மின்சார ரயில் அற்புதம் பாடலும்தான்..வீடியாவை ரசனையாக தயாரித்த குழுவினருக்கு பாராட்டுகள்..
==========
கூகுள் பஸ்சில் தோழர் மாதவராஜ் எழுதிய இந்த செய்தியை படித்ததும்.. கண்கள் கலங்கி போய் விட்டது.. காலையில் இருந்து மனது நெகிழ்ந்து போய் இருக்கின்றேன்.. இன்னும் இந்த செய்தி மனதில் வந்து கொண்டே இருக்கின்றது.. கட்டுரையில் உதவி செய்து விட்டு, முடிவில் பிளைட் ஏற்றி விட்டு தோழர்கள் கலங்கினார்கள் பாருங்கள் அதுதான் ஹைலைட்...மனிதம் இன்னும் சாகவில்லை..இந்த செய்திக்கு தோழர் வைத்த தலைப்பு...
===
===
அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…
அந்த செய்தி உங்களுக்காக....கீழே..
தோழர்கள் இருவரும் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது பெரும் துயரத்தில் அலைக்கழிந்தவர்களாய் அவர்கள் இருந்திருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவாவுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருந்திருக்கிறது. இருபது வயதையொட்டி இரண்டு பெண்களும், ஒரு பையனும் கூடவே என்ன செய்வதென்று தெரியாமல் பரிதாபமாய்த் தவித்தபடி காட்சியளித்திருக்கிறார்கள். எல்லோர் உடலிலும், தலையிலும் ரத்தக் காயங்களும், மருத்துவக் கட்டுக்களுமாய் இருந்திருக்கின்றன. கொஞ்சம் தள்ளி ஆம்புலன்சில் அவரது அருமை மனைவியின் உடல். ஏர்போர்ட்டில் இருந்தவர்கள் அங்கங்கே நின்று ‘ஐயோ’வென பார்த்துக்கொண்டு மட்டும் இருந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். 30.8.2011 அதிகாலையில் இராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் விபத்து நடந்திருக்கிறது. அங்கிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பெற்று, இறந்த மனைவியின் உடலை வாங்கிக் கொண்டு லக்னோ செல்ல ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். “பைத்தியம் பிடிச்ச மாரி இருக்காங்க. ஒண்ணும் சாப்பிடக்கூட இல்ல சார் அவங்க” என்று சொன்னாராம் டிரைவர்.
பாஷை தெரியாத, பழகிய முகங்கள் அற்ற உலகில் அவர்கள் தங்கள் ஆற்ற முடியாத வலிகளோடு அழக்கூட திராணியற்றவர்களாய் தனித்து விடப்பட்டிருக்கின்றனர். அருகில் சென்று, “நாங்க பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிகிறோம். AIRRBEA ஆட்கள். அர்விந்த சின்ஹா சொன்னார்” என்று சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, எழுந்து நின்றிருக்கிறார் வினோத் ஸ்ரீவத்சவா. கைகளைப் பற்றிக்கொண்டு, அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு கண் அருகே சிதைந்து வீங்கியிருந்திருக்கிறது. அவரது மகள்களும், மகனும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு நிலைகுத்திப்போய் இருந்திருக்கிறார்கள். மகனுக்கு நெற்றிப் பொட்டில் காயம். மூத்த மகளுக்கும் தலையில் காயம். அங்கங்கே ரத்தத் திட்டுக்கள். சுரேஷ்பாபு காண்டீன் சென்று டீக்களும், வடைகளும் வாங்கிக் கொண்டு வந்து, முதலில் இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களால் அந்த வடையை மெல்ல முடியவில்லை. தாடைகளை சரியாக அசைக்க முடியாமல் வலித்திருக்க வேண்டும்.
தங்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணுமே அவர்களுக்கு அப்போது தேவை. “லக்னோவுக்கு போகவேண்டும் ஹெல்ப் செய்யுங்கள்” என்றிருக்கிறார் வினோத். அவரது இரண்டாவது பெண் பூஜா அடிக்கடி ஆம்புலன்ஸ் அருகே சென்று, தனது அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்.
சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். கூட இருப்பவர்கள் யாரென்று கேட்டனர். “நான்கு பேர்” என்று சொல்லி அவர்களை சாமுவேல் அழைத்துக் காட்டியிருக்கிறார். அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர். “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.
ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். ஏர்போர்ட்டுக்குத் திரும்பியபோது மணி பனிரெண்டரையை தாண்டிவிட்டதாம். வழியிலேயே, சாமுவேல் ஜோதிக்குமார் ஏர்லைன்சுக்குப் போன் செய்து, தாங்கள் வருவதாகவும், நான்கு டிக்கெட்டுகள் வேண்டும் என்பதையும் திரும்ப ஒருமுறை நினைவுபடுத்தி இருந்திருக்கிறார்.
சர்டிபிகேட்களை சரிபார்த்த பிறகு, ஏர்லைன்ஸில் சொன்ன டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாயிருந்திருக்கிறது. சென்னக்கு செல்ல மட்டுமே ஏறத்தாழ ரூ.65000! ரம்ஜான் என்றதால் இதர டிக்கெட்டுகள் புக்காகியிருக்க, எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம்எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும், அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார். பிறகு மெல்ல ரூ.60000 போல இருப்பதாகச் சொன்னாராம். அவரது குழந்தைகள் கண்கள் கலங்கி அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள்.
இறந்த அம்மாவின் உடலோடு, இரண்டாவது மகள் பூஜா உடனடியாக லக்னோ செல்வது எனவும், மற்ற மூவரும் அடுத்த ஃபிளைட்டில் டெல்லி சென்று, அங்கிருந்து லக்னோ செல்வது எனவும் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். “நான்கு பேர் வருவதாகச் சொன்னதால்தான் நிலைமை கருதி, விமானத்தை நிறுத்தி வைத்ததாகவும், சொன்னபடி நான்கு பேரும் ஒரே ஃபிளைட்டில் செல்ல வேண்டுமென அதிகாரிகள் பிடிவாதம் பிடிக்க, சாமுவேல் அவர்களோடு கடுமையான வாக்குவாதம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். கூடி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க, கடைசியில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.
இறந்த உடலையும், மற்ற நான்கு பேரையும், அவர்களது சிதறிக்கிடந்த லக்கேஜ்களையும் அதிகாரிகள் சோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். “நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர்.சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்கு மேல் விருந்தினர்கள் செல்ல முடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே. ” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.
சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் வெளியே வந்து காண்டீனில் டீக்குடித்து அமைதியாக நின்றிருக்கிறார்கள். ஒரு விமானம் புறப்பட்டதைப் பார்த்த பிறகு, திருச்சியில் இருந்த எங்களுக்குப் போன் செய்து, “அவர்களை லக்னோ அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டோம். இறந்த அம்மாவின் உடலோடு இரண்டாவது மகள் பூஜாவை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்றுவிட்டது. அடுத்த விமானத்தில் வினோத் ஸ்ரீவத்சவாவும், அவரது மூத்த மகளும், பையனும் செல்ல இருக்கிறார்கள்.” என்று சொல்லியவர், “தோழா! தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனார்.
==================
காத்ரினா கைப்பின் ஷீலாக்கி ஜிவானிக்கு டான்ஸ் மூவ்மென்ட்டு இங்க இருந்து இன்ஸ்பியர் ஆகி இருப்பாங்களோ?? யப்பா ஷகிரா சான்சே இல்லை
=========
பிலாசபி பாண்டி..
வெற்றி பெற்றால் கைதட்டும் பத்து விரலை விட ,நாம் அழுதால் நம் கண்ணீரை துடைக்கும் அந்த ஒரு விரலை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
=======
நான்வெஜ்18+
டீச்சர் கேட்டாங்க.. ரமேஷ், கிளாஸ் நடக்கும்போது என்னடா சிரிச்சிட்டு இருக்கே..?
உங்களோட வலது தோல்பட்டையில ஒரு ப்ரா பட்டை தெரிஞ்சது டீச்சர்..
மூதேவி, வெளிய போடா, ஒரு வாரம் கிளாஸ் பக்கம் வராத..
பக்கத்து மாணவன் சிரித்தான்..
சுரேஷ், நீ ஏன்டா சிரிச்சிட்டு இருக்கே..
ஹ.ஹா..நான் உங்களோட ரெண்டு ப்ரா பட்டையும் பார்த்துட்டேன் டீச்சர்..
நாதாரி...ஓடி போய்டு...ஒரு மாசம் பள்ளிக்கூடம் பக்கம் வந்துடாதே... என்று கத்தி கொண்டிருக்கும் போதே டீச்சர் கையில் இருந்த சாக் பீஸ் கிழே விழுந்தது..
டீச்சர் குனிந்து சாக் பீஸை எடுத்து நிமிர்ந்த போது ஒட்டு மொத்தமாக எல்லா மாணவர்களும் வெளிய கிளம்ப தயாராக நின்றார்கள்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
படித்ததும் கண்ணில் நீர் வருகிறது... நாட்டில் சில பலர் இதுபோல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
ReplyDeleteசாமுவேல், சுரேஷ் போன்ற மனிதர்கள் இந்த நாட்டில் இன்னும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அவசர உலகத்தில் யாருக்கு என்ன ஆனால் என்ன என்று போகும் மனிதர்கள் தான் அதிகம்.
ReplyDeleteஅந்த கருணை உள்ளங்கள் நீண்ட காலம் வாழ வேண்டுகிறோம்.
///கூகுள் பஸ்சில் தோழர் மாதவராஜ் எழுதிய இந்த செய்தியை படித்ததும்.. கண்கள் கலங்கி போய் விட்டது../// உண்மைதான் சார்.. படிக்கும்போதே கண்கள் கலங்குது.. அதோட இந்த மாதிரி கஷ்டப்படுறவங்கள பார்த்தா கண்டிப்பா உதவி பண்ணாம போகக் கூடாதுன்னும் தோணுது..
ReplyDeleteநீங்க எப்படி? நியூஸ்லாம் நோட் பண்ணி வச்சிப்பிங்கள... செம கலெக்ஷன்ஸ்....
ReplyDelete//“நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். //
சரியாக இந்த வரிகளை வாசிக்கும் போது அழுதேன்.... இதை தனி பதிவாய் போட்டு இருக்கலாம்....
//மிக்சர்...//
நானும் அதை பார்த்தேன், ரசித்தேன்...
தோழர்கள் சுரேஷ்பாபு ... சாமுவேல் ஜோதிகுமார் .... பெரிய மனசுகாரங்கனே.... நீண்ட நாளைக்கு அப்புறம் ஒரு நெகுழ்ச்சியான செய்தி...... நல்ல செய்தி......... மனதிற்கினிய செய்தி... நீங்க எந்த விழயத்த வலைபதிவுல பதியணும்னு நல்லா தேர்ந்து எடுக்குறீங்க ........ பகிர்தலுக்கு நன்றிண்ணே :)
ReplyDeleteசாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் தெய்வத்திற்குச் சமமானவர்கள்.
ReplyDeleteசில சமயங்களில், கடவுள் மனித உருவில் வருவதுண்டு....
தோழர்களுக்கு நன்றி... கண்ணிரைக் கட்டுப்படுத்த முடியவில்லை...
நன்றி ஜாக்கி...
Im a regualar follower of your blogs.Very nice composition of news. You could have avoided the 18+ joke this time after such a heart breaking news.
ReplyDeletechennai ivlo azhaga... wow
ReplyDeletekadavul neradiya varamatar enbathu ithan moolam purigirathu.thanks to samuel and suresh
மனிதாபிமானம் மறந்து போன நிலையில் தோழர்கள் சுரேஷ்பாபுவும் சாமுவேலும் செய்த உதவிக்கு கைமாறு இல்லை! நன்றிகள் இந்த மனிதர்களை அறிந்து கொள்ள உதவியதற்கு!
ReplyDeleteThe timely help of Samuel JyothKumar and Suresh Babu are very moving. Thanks for sharing this with us.
ReplyDelete