The Crimson Rivers-2000 /உலகசினிமா/பிரெஞ்/ கொலைக்கார பல்கலைக்கழகம்.


இந்த படம் ஆர் ரேட்டிங் திரைப்படம்..கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.
==========
உலகில்  சாலை விபத்துகள் அதிகம்  நடைபெறும் நாடுகளில் மூன்றாவது இடத்தில்  நாம் இருக்கின்றோம்..
சாலை விபத்துகளில் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதில் 13 ஆயிரத்து 700 பேர் தமிழ் நாட்டில் மட்டும் இறந்துள்ளனர். இது இந்தியாவின் சாலை விபத்து சாவுகளில் பத்து சதவீதம் ஆகும்..ஆனால்1981 ல் இருந்து2000 ஆண்டு வரை சராசரியாக இருபது வருடத்தில் சாலை விபத்தில் இறந்து போனவர்கள் மொத்தமே 287 பேர்தான் என்றால் நம்பமுடிகின்றதா? அப்படி ஒரு நாடு எங்கு இருக்கின்றது என்று ஒரு ஆர்வம் நடக்கு இயல்பாய் எழுவது இயற்கையே....Guernon என்று அழைக்கப்படும்  இந்த இடம் பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் ஆல்ப்ஸ் மலை சிகரத்துக்கு பக்கத்தில் இருக்கின்றது..சார் 287 பேர்தான் 20 வருஷத்துல சாவரான்னா கொடுத்து வச்ச ஊர்சார் அது என்று கூட நீங்கள் நினைக்கலாம்... ஆனால் அப்படி சாதாரண ஊர் அதுவல்ல...இரவு பத்து மணிக்கு உங்கள் மனைவி ..ஐயோ பால் தீர்ந்து போயிடுச்சி... சீக்கரம் பக்கத்து கடை சாத்தறதுக்குள்ள ஒரு ஆரோக்கியா பால் பாக்கெட்  வாங்கி கொண்டு வாங்க என்று சொல்லிகின்றாள் என்று வைத்துக்கொள்ளுங்கள்..நம்ம ஊர் போல உடனே சட்டையை போட்டுக்கொண்டு போய் பால் வாங்கி வந்து விட முடியாது...விரைச்சிக்கினு செத்து போயிடுவிங்க...

வெளியே போவனும்னா கால் மணிநேரத்துக்கு டிரஸ் மாட்டிகிட்டு கிளம்புனும்... அதனாலதான் அங்க மக்கள் தொகை எல்லாம் ரொம்ப குறைவு.. நம்ம ஊர்ல அதிகம்..ஆனாலும் ஜனத்தொகையை  குறைக்க கொலைகள் நடக்கின்றன...அதுவும் கொடுர கொலைகள்..=========== 
The Crimson Rivers-2000 /உலகசினிமா/பிரெஞ்/ படத்தின் கதை என்ன??பிரானஸ் தேசத்தின் ஆல்ப்ஸ் சிகரத்துக்கு அருகில் இருக்கும் Guernon  நகரத்தில் கொடூர கொலைகள் நடக்கின்றன... கொடூரம் என்றால் ரொம்ப கொடூரம்.. கை கால்கள்  கட்டபட்டு எங்கு எங்கு எல்லாம்காயபடுத்தினால் வலி இருக்குமோ அங்கு எல்லாட் உடலில் வெட்டி,  உயிர் போகாமல் வேதனையில் சிக்கிதவிக்கவைத்து இறக்க வைக்கும்  சைக்கோவிடம் சிக்கி இறக்கின்றார்கள்.. பத்து நிமிடம் இருபது நிமிடம் என்றால் கூட பராவாயில்லை....


ஐந்து மணிநேர தொட்ர் சித்தரவதை...பனி மழை பொழியும் நகரத்தில் உடம்பில் ஓட்டு துணியில்லாமல் இந்த சித்தரவதைகளை தாங்க வேண்டும்...உயிரோடு இருக்கும் போதே இரண்டு கைகள் வெட்டி எடுத்து விட்டு கண்களையும் பிடுங்கி விட்டு,உயிர் போனதும் பெரிய பனி மலைசிகரத்தின் பள்ளத்தாக்கில் போட்டு விடுகின்றான். Guernon ஊரில்  இருக்கும்  பல்கலைகழகத்தில் நூலகத்தில் வேலை பார்க்கும் நபர்கள்தான் கொடூரகொலைக்கு இலக்குஆகின்றார்கள்.. ஏன் கொலை செய்யபடுகின்றார்கள்   என்பதை கண்டு பிடிக்க டிடெக்ட்டிவ் Pierre Niemans (Jean Reno) மற்றும் Max Kerkerian (Vincent Cassel) அந்த கொலைக்காரன் யார் என்று கண்டுபிடிக்க தேடி அலைகின்றர்கள்.... கொலைக்காரன் யார் என்று தெரிந்து கொள்ள திரையில் இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் ==============படத்தின் சுவாரஸ்யங்களில் சில..இந்த படம் ஒரு பிரெஞ் நாவலின் திரைவடிவம்... நாவலில் வசூல் செக்கை போடு போட, இந்த நாவலுக்கு  திரைக்கதை அமைத்தால் இன்னும் லாபம் பார்க்கலாம் என்று நினைத்து திரைக்கதை அமைத்து 16 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு, 60 கோடி வரை சம்பாதித்து கொடுத்த படம்...இந்த படம்  2000 ஆயிரம் ஆண்டில் வெளியிடபட்டது... இதன் இரண்டாம் பாகம் 2004ல் வெளிவந்தது..இந்த படம் செக்கையான சஸ்பென்ஸ் சைக்காலிஜி திரில்லர்....கொலையாளி  யார் என்பதுதான் தேடல் என்பதால் ஆட்டோமேட்டிக்காக  யார் கொலையாளி என்ற ஆர்வமும் நம்முள் வந்து உட்கார்ந்து கொள்ளும்......

படத்தின் லோக்கேஷன்கள் எல்லாம் சான்சே இல்லை... பனி சிகரத்தில் ஆறுகள், ஓடி ஓடி குகைகள் ஆக இருக்கும் இடங்களில் எல்லாம் படபிடிப்பு நடத்தி இருக்கின்றார்கள்..படபபிடிப்பில் நிறைய ரிஸ்க் எடுத்து இருக்கின்றார்கள்.

முதல் காட்சியில் பார்வையாளனுக்கு எங்கு கொலைசெய்யப்பட்ட உடல் கண்டு எடுக்கபட்டது என்று  சொல்லும் காட்சிக்கு கேமரா டிராவல் அகும் இடங்கள் சாதாரன ரசிகனுக்கு வாய்பிளக்க வைக்கும்.... 
 
ஒவ்வொரு தடய்த்தை தேடி டிடெக்டிவ் பாத்திரத்தில் அலட்டிக்கொள்ளாமல் நடித்து இருக்கும் ஜேன் ரீனோ மனிதர் பட்டையை கிளப்புகின்றார்....

இரண்டாவது கொலைசெய்யப்பட்டு கண்டு எடுக்கபட்ட சடலத்துக்கு கண் இருப்பதாக நினைத்துக்கொண்டு இருக்கும் போது தடயத்தை தேடும் போது எல்லோருக்கும் கிடைப்பது எதிர்பாராத அதிர்ச்சி...
கிளைமாக்ஸ் யூகிக்க முடிந்தாலும் சின்ன டுவிஸ்ட்டும் கொலைக்கான காரணங்களும் நமக்கு வியப்பில் ஆழ்த்தும்.....================

இந்த படம் பெற்ற விருதுகள்..


The Crimson Rivers was nominated for five César Awards: Best Director, Best Cinematography, Best Music, Best Editing, and Best Sound.It also received one European Film Awards nomination for Best Director and two nominations for Best Actor (Jean Reno and Vincent Cassel).It was also nominated for the Golden Seashell at the San Sebastián International Film Festival.

================படத்தின் டிரைலர்...

===============

படக்குழுவினர் விபரம்Directed by     Mathieu Kassovitz

Produced by    Alain Goldman

Written by      Jean-Christophe Grangé

Mathieu Kassovitz

Starring          Jean Reno

Vincent Cassel

Music by         Bruno Coulais

Cinematography        Thierry Arbogast

Editing by       Maryline Monthieux

Distributed by             TriStar Pictures (USA)

Release date(s)            France 27 September 2000

US 29 June 2001

Running time 106 minutes

Country          France

Language        French

Budget             16 060 000

Box office        26 692 510


=========

பைனல்கிக்
 


இந்த படம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்.. பரபரப்பான திரைக்கதைக்காக இந்த படத்தை பார்க்கவேண்டும்.. அருமையான லோக்கேஷன்களுக்காகவும் பார்க்கலாம்..


======பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ......
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

12 comments:

 1. Jackie... I've seen this movie and it'll struck us every time we watch. Great movie...

  ReplyDelete
 2. சரி, சரி, இப்பவே அலிபாய் கிட்ட கேட்டு வாங்கிப் பார்த்துடறேன். அருமையான விமர்சனம் பாஸ்!

  ReplyDelete
 3. பார்க்க வேண்டிய படம்தான்.

  ReplyDelete
 4. இதுபோல படங்கள் உடனுக்குடன் தமிழ் மொழிபெயர்ப்பில் வந்தால் நன்றாக இருக்கும்!

  பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 5. உங்கள் விமர்சனம் படிக்க படிக்க தான், பிற நாட்டு சினிமாக்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம எழுகிறது.. நன்றி திரு.ஜாக்கி அவர்களே..

  ReplyDelete
 6. உங்கள் விமர்சனங்கள் படிக்கும் போதுதான். உலக சினிமாக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணம ஏற்படுகிறது.. நன்றி திரு.ஜாக்கி அவர்களே..

  ReplyDelete
 7. இந்த (The Crimson Rivers) படத்தின் விமர்சனமே படத்தை முழுமையாக பார்த்த திருப்த்தியாக இருந்தது....நன்றி ஜாக்கி அவர்களே.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner