As Good as It Gets-1997 /உலகசினிமா/அமெரிக்கா/மனநலம் குன்றிய எழுத்தாளனின் காதல்..



ஆக்ஷன் அல்லாத ஆங்கில படங்களை பார்க்க ஒரு மூட் வேண்டும்..



சும்மா மூட் அது இதுன்னு இந்த டாக்கால்ட்டி வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம் வாத்தியரே?




யோவ் டொயான் உண்மையைதான் சொல்லறேன்..படங்களில் ஆக்ஷன் இல்லைன்னா ரொம்ப உன்னிப்பா டயலாக்கை கவனிக்கனும் அப்பதான் அந்த படத்தை ரசிக்க முடியும்..

நமக்கு தாய்மொழி ஆங்கிலம் அல்ல.. அதனால் அது போல படங்கள் பார்க்க மூட் கண்டிப்பாக வேண்டும்.இப்பதான் பார்க்க  பார்க்க ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பிச்சி இருக்கு... அதுக்குதான் அப்படி சொன்னேன்...



நிறைய முறை இந்த படத்தை பாருங்க ரொம்ப அற்புதமான படம் என்று என் கையில் டிவிடி கொடுத்த போது எல்லாம், அதனை வாங்க மறுத்து இருக்கின்றேன்... எப்படி இன் டு த வைல்ட் படம் என் கைக்கு வந்து அந்த டிவிடியை பார்க்காமல் தவிர்த்து விட்டு,ஒரு நாள் பார்த்து விட்டு ச்சே இத்தனை நாள் இந்த படத்தை எப்படி மிஸ் செய்தோம்? என்று வருத்தப்பட்டேனோ.. (இன் டு த வைல்டூ படத்தின் விமர்சனத்தை  வாசிக்க...)அது போலத்தான் இந்த படத்தை பார்த்ததும் வருத்தப்பட்டேன்...



சென்னையில் வடபழனி போலிஸ் ஸ்டேஷன் எதிரில் இருக்கும் சிம்ரன் ஆப்பக்கடையில்தான் பெண் சர்வர்களை பார்த்தேன்...சரி சிம்ரன் ஆப்பக்கடைக்கு சாப்பிட போனால் என்னவெல்லாம் எடுத்து போவீர்கள்...?? பர்ஸ்  மட்டும்தானே...? சாப்பிட ஸ்பூன் , போர்க் சமாச்சாரங்கள் எடுத்து போனால்  உங்களை எப்படி  பார்ப்பார்கள்...? சரி அது கூட பராவாயில்லை.. அது உங்கள் உரிமை...எனக்கு டெய்லி சர்வ் செய்யும் அதே  பெண்தான் எனக்கு சர்வராக வரவேண்டும் என்று நீங்கள் அடம் பிடித்தால் சிம்ரன் ஓட்டல் நிர்வாகம் எதிரில் இருக்கும் போலிஸ் ஸ்டேஷன் ஏட்டய்யாவிடம் மதிய பிரியாணி பொட்டலத்தை கையில் கொடுத்து, கண்ணை காட்டினால் உங்கள் உடம்பு தோல் பிய்ந்து போகும்...செஞ்சோற்றுக்கடன்.....
அப்படி ஒரு நடுத்தர வயதைகடந்தவனின் கதைதான் இந்த படம்...







பெரிதாக காமத்தை பற்றிய யோசிப்போ, கவனமோ இல்லாத போது, மெல்லிய பேச்சு மற்றும் சீண்டல்கள் மூலம், காமம் உடலில் வந்து புகுந்து கொண்டு, சர சரவென தீர்வை நோக்கி காட்டு யானையின் வெறியோடு பயணிக்குமே அது போலான படம்தான்...அஸ் குட் அஸ் இட் கெட்ஸ்... as good as it gets



============

As Good as It Gets-1997 /உலகசினிமா/அமெரிக்கா படத்தின் கதை என்ன??




மெல்வின் ஊடால்(Jack Nicholson) ஒரு ரைட்டர்...ஆனா அவருக்கு ஒரு குறை.. Obsessive–compulsive disorder ஆல் பாதிக்கபட்டவர்..

சார் அப்படின்னா என்ன?

நான் என்ன டாக்டரா?விரிவா சொல்ல...?

ஒரே வேலையை  நிறைய  வாட்டி  செய்யறது...சுத்தம் சுத்தம் எல்லாத்திலேயும் சுத்தமாக இருக்கவேண்டும். கையை கழுவனும்னா அதை பத்து வாட்டி செய்யறது...

டெய்லி ஒரு ஓட்டலில் போய் மெல்வின் சாப்பிடுவார்... ஆனாலும் அங்கயும் தினமும் பிரச்சனை பண்ணுவார்... அதனால் இந்த ஆள் இம்சையை பொறுத்துகிட்டு ஆர்டர் எடுக்கற  வெயிட்ரஸ்... கரோல்(Helen Hunt)மட்டுமே...

தினமும் இந்த ஆள் செய்யற சேட்டையெல்லாம் பொறுத்துக்கும் பெண்மணி...அவளுக்கு ஒரு மகன்.. அவனுக்கும் ஆஸ்துமா..கரோல் தன் மகன் மற்றும் அம்மாவோட தனியா வாழ்த்துகிட்டு இருக்கா....நம்ம தலைவர் மெல்வின் வசிக்கும் அப்பார்ட்மென்ட் பக்கத்து வீட்டுகாரர்கள் கூட அவருக்கு இணக்கம் கிடையாது  சண்டைதான்.. பக்கத்து வீட்டுல ஒரு ஆர்ட்டிஸ்ட் சைமன்(Greg Kinnear) அவன் ஒரு கே டேஸ்ட் ஆள்.. 

அவன்வீட்டுக்கு வரும் ஒரு திருட்டு கும்பல் அவனை செக்கையா மொத்திட்டு போயிடுச்சு... அப்ப அவனுக்கு மெல்வின் உதவுகின்றார்.. கரோல் ஓட்டல் வேலையை விட்டு விட்டு தன் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு ஓட்டலில் வேலை  செய்கின்றாள்.. அவளை தேடி மெல்வின் போகும் போதுதான் அவள் மகனுக்கு  ஆஸ்த்துமா என்று தெரிந்து உதவி செய்கின்றார்.. சாதாரண ஓட்டல் வெயிட்டரஸ் குழந்தைக்கு எதுக்கு ஹெல்ப்  செய்னும்...? எப்படியும் படுக்கத்தான்  கூப்பிடுவான்.. அதனால் மிட் நைட்ல ஓடி வந்து உன் கூட ஒரு போதும் நான் படுக்க போவதில்லை என்று கரோல் மெலிவினிடம் சொல்ல..சைமன் ,கரோல், மெல்வின் சூழ்நிலைகாரணமாக ஒரு புள்ளியில் இணைகின்றார்கள்.. எந்த மிட்நைட்டில் நான் உன்னுடன் படுக்கமாட்டேன் என்று கரோல் மெல்வினிடம் சொன்னாளோ? அதே கரோல் எப்படி நம்ம ரைட்டர் மெல்வினிடம் மனதை பறிக்கொடுக்கின்றாள் என்பதை திரையில் பார்த்து ரசியுங்கள்..



================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..





விருதுகள் வாங்கவும் நடிப்பில் பர்பாமென்சில் இந்த உலகத்தில் பிச்சி உதறவும் கடவுள்  படைத்த படைப்பு ஜாக் நிக்கல்சன். மனிதர் பிச்சி உதறுகின்றார்.....



நாயை பிடிக்கவில்லை என்று முதல் காட்சியில் காட்டி விட்டு அதன் பிறகு நாயோடு இணக்கம் ஆவது அருமையான கவிதையான காட்சிகள்..



கரோல் அந்த ஓட்டலில் இல்லை என்றதும் பதற்றமாவதும் அந்த ஓட்டலை விட்டு போகும் போது எல்லோரும் கைதட்டுவதும் அவர் இதுவரை கொடுத்த இம்சை மொத்தமாக விடைபெறுவதாக நினைத்து கைத்தட்டுவது செமை....



கரோலை தேடி நீ அந்த  ஓட்டலில் இல்லாத காரணத்தால நான் இன்னும் சாப்பிடவில்லை என்று மெல்வின் கரோலிடம் சொல்வது அழகு...





தேங்ஸ் நோட் பேப்பரில்  எழுதி கொடுக்கவும் என்று சொன்ன பிறகு...23 பக்க்ததுக்கு மேல் எழுதுவதும் அம்மாவிடம் கான்சியஸ்க்கு ஸ்பெல் கேட்டு பதட்டபட்டு எழுதுவதும், அதை மெல்வினடம் கொடுக்கும் போது, அதை படிக்காமல் தவிர்க்க அதை அப்படியே உணர்வுகளோடு மெல்வினடமே படித்து காட்டுவது என Helen Hunt தனது கதாபாத்திரத்தில் பிச்சி பின்னி எடுத்து இருக்கின்றார்... எனக்கு ஹெலனோட  உழக்கு வாய் ரொம்பவே பிடித்து விட்டது..




Helen Hunt 1997ல் பண்ணிய பர்பமென்சில் மயங்கி அந்த பெண்மணியோடு சில நிமிடங்கள் கற்பனையில் அவரோடு காதல் கொண்டேன்...காமம் எனக்கு பல நேரம் அழகினால் ஏற்படுவதில்லை...கேரக்டர்களின் உணர்வினால் ஏற்படுத்துவது.. அந்த வகையில் Helen Hunt சான்சே இல்லாமல் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து இருக்கின்றார்...





சிகப்பு டிரஸ்சில் மெல்வினோடு ஹோட்டலுக்கு போய் மெல்ல அருகில் அமர்ந்து மெல்வின் பேசிக்கொண்டு இருக்கும் போது உதட்டு அருகில் முகத்தை வைத்துக்கொண்டு பேசும் அந்த பர்பாமென்ஸ்  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் படிகட்டில் மம்முட்டி ஜஸ்வர்யராய் இரண்டு பேரும் பேசும் காட்சியை நினைவுபடுத்தியது...

எல்லோருக்கும் சர்வ் செய்யும் பெண்மணிக்கு அவளுக்கு ஒருவன் சர்வ் செய்யும் காட்சியில் ஹெலனோட நடிப்பும் சின்ன சின்ன ரியாக்ஷனும் அருமை....



சைமன் தன் சோக கதையை கரோலிடம் சொல்லும் போது எங்க செண்டிமென்ட்டில் கரோலை சைமன் கவிழ்த்து விடுவானோ என்று பின்சீட்டில் உட்கார்ந்து மெல்வின் டென்ஷன் ஆவதும்  விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சிகள்..



சைமன் உன்னை வரையலாமா? என்று கேட்டு விட்டு அவளை வரைவதும் சைமனின் பிளாஷ் பேக் கதையும் ஹாலிவுட் படங்களில் மட்டும் சாத்தியம்..முதலில் கரோல் குளிக்க உடை அவிழ்த்து பாத் டாப்புக்கு போகும் போது உன்னை வரைகின்றேன். என்று சைமன் சொல்ல முதலில் மறுத்து பின்பு சைமன்.. உன் கழுத்தும்  உன் தோலின் நிறமும் வாவ் என்று பாராட்ட.. பின்பு கரோலியே பின்பக்கம் புட்டம் வரை சைமன் ஓவியம் வரைவதற்க்காக உடை நெகிழ்த்துவது... வாவ்..

உலகின் 500 மிகச்சிறந்த படங்களை வெளியிட்ட எம்பயர் பத்திரிக்கை இந்த படத்துக்கு 149 வது இடத்தை கொடுத்து இருக்கின்றது...

ஜாக் மற்றும் ஹெலன் இருவருக்கும் சிறந்த நடிகர் நடிகைக்கான அக்காடமி விருது இந்த படத்துக்கு கிடைத்தது.





மூன்றே மூன்று மெயின்  கேரக்டர்கள். அவர்கள்  மூன்று பேருக்கும் தனிமைதான் பெரும் பிரச்சனை சாய்ந்து கொள்ள தோள் கிடைக்க வெளியே எங்கேயும் அலைய தேவையில்லை நம் அருகிலேயே இருக்கின்றது  தேடினால்  நிச்சயம் கிடைக்கும் என்பதை நகைச்சுவையோடு இயக்குனர் James L. Brooks  காட்சி படுத்தி இருக்கின்றார்.....
 இயக்குனரோடு ஜாக் நிக்கல்சன்...

 =========



படம் பெற்ற விருதுகள்..



Academy Awards       Best Actor in a Leading Role             Jack Nicholson            Won



Best Actress in a Leading Role          Helen Hunt     Won



Best Actor in a Supporting Role         Greg Kinnear Nominated



Best Editing    Richard Marks            Nominated



Best Picture     James L. Brooks, Bridget Johnson and Kristi Zea     Nominated



Best Original Score – Musical or Comedy     Hans Zimmer Nominated



Best Screenplay – Original     Mark Andrus and James L. Brooks    Nominated



ALMA Awards          Outstanding Actress in a Film            Lupe Ontiveros Nominated





Chlotrudis Awards     Best Actress in a Leading Role          Helen Hunt     Nominated



Czech Lions    Best Foreign Language Film   James L. Brooks          Nominated



GLAAD Media Awards         Outstanding Film – Wide Release      Nominated



Golden Globe Awards Best Actor in a Leading Role – Musical or Comedy           JackNicholson             Won





Best Actress in a Leading Role – Musical or Comedy           Helen Hunt     Won



Best Actor in a Supporting Role         Greg Kinnear Nominated



Best Director   James L. Brooks          Nominated



Best Film – Musical or Comedy         Won



Best Screenplay          Mark Andrus and James L. Brooks    Nominated



MTV Movie Awards Best Performance – Female    Helen Hunt     Nominated



Satellite Awards         Best Actor in a Leading Role – Musical or Comedy Jack Nicholson            Won



Best Actress in a Leading Role – Musical or Comedy           Helen Hunt     Won



Best Actor in a Supporting Role – Musical or Comedy         Cuba Gooding, Jr.       Nominated Greg Kinnear             Nominated



Best Actress in a Supporting Role – Musical or Comedy      Shirley Knight             Nominated



Best Film – Musical or Comedy         James L. Brooks, Bridget Johnson and Kristi Zea     Won



Guild   Category         Recipients and nominees        Result



American Cinema Editors       Best Edited Film         Richard Marks            Nominated

Casting Society of America    Best Casting – Comedy Film Francine Maisler          Nominated



Directors Guild of America    Outstanding Directing – Motion Pictures       James L. Brooks          Nominated



Motion Picture Sound Editors            Best Sound Editing – Music (Domestic and Foreign)            Nominated



Producers Guild of America   Motion Picture Producer of the Year             James L. Brooks, Bridget Johnson and Kristi Zea        Nominated



Screen Actors Guild   Outstanding Actor in a Leading Role            Jack Nicholson            Won



Outstanding Actor in a Supporting Role        Greg Kinnear Nominated



Outstanding Actress in a Leading Role          Helen Hunt     Won

Writers Guild of America       Best Screenplay – Written Directly for the Screen     Mark Andrus and James L. Brooks



======================

படத்தின் டிரைலர்..








=============================



படக்குழுவினர் விபரம்..



Directed by     James L. Brooks

Produced by    James L. Brooks

Bridget Johnson

Kristi Zea

Laura Ziskin (executive)

Screenplay by Mark Andrus

James L. Brooks

Story by          Mark Andrus

Starring           Jack Nicholson

Helen Hunt

Greg Kinnear

Cuba Gooding, Jr.

Shirley Knight

Skeet Ulrich

Yeardley Smith

Lupe Ontiveros

Music by         Hans Zimmer

Cinematography          John Bailey

Editing by       Richard Marks

Studio             Gracie Films

Distributed by             TriStar Pictures

Release date(s)            December 25, 1997

Running time 139 minutes

Country           United States

Language        English

Budget            $50 million

Box office       $314,178,011

===============



பைனல்கிக்..



இதுவரை இந்த படத்தை தவற விட்டு இருந்தால் இந்த படத்தை உடனே பார்த்து விடுங்கள்... வாழ்வில் நீங்கள்தவறவே விடக்கூடாத படம் இது....மேலுள்ள விருதுகள் சாட்சி இந்த படத்தின் பெருமையை சொல்ல.... கண்டிப்பாக பார்த்தே பார்த்தே பார்த்தே தீரவேண்டியபடம் இது..

=============


சோனி பிக்ஸ் மற்றும் கேபிள்...


=====

நேற்று காலை சோனிபிக்சில்  இந்த படம் ஒளிபரப்பானது..கொஞ்சநேரத்தில் இந்த படத்தின் கேரக்டர்களின் மேல் காதல்  கொண்டு, ஒன்னுக்கு வந்தாலும் அடக்கிக்கொண்டு படத்தின் பிரேக்கில் போய் விட்டு வராலாம் என்று உணர்ச்சிவசப்பட்டு படத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது கேபிள் மக்கார் பண்ண ஆரம்பித்தது...    
சீரியல் ஆரம்பிக்கும் முன் லைனை  சரிசெய்ய காலையிலேயே களத்தில் குதித்து விட்டது எனக்கு புரிந்து விட்டது..



இண்டிரஸ்ட்டாக பிட்டு படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது கதவை தட்டி சார் அக்குவாகார்டு வாட்டர்பியூரிபையர் வேனுமா என்று கேட்பவனை, மனதுக்குள் திட்டியும், பொங்கென்று மூக்கில் குத்த வேண்டும் என்று ஒரு கோபம் வருமே, அது போல எங்க ஏரியா கேபிள்காரங்கமேல எனக்கு கோபம்  கோபமாக வந்தது....

ஆனா ஒன்னு இந்தியாவில் ஒளிபரப்பாகும் எந்த சேனலிலும் ஆங்கிலபடங்கள் பார்க்க கூடாது என்று முடிவு எடுத்து விட்டேன்.. ஓமன  பெண்ணே  பாட்டில் திரிஷாவுக்கு, அத்தனை உதட்டு முத்தம் சிம்பு கொடுப்பதை நாளெல்லாம் காட்டுகின்றார்கள்..ஆனால் ஆங்கில படத்தில் முத்தம் கொடுப்பதை கூட கட் செய்து விடுகின்றார்கள்... போடாங்....



இந்த படம் சென்னை மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது..9003184500





=====================


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ..
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS... 

7 comments:

  1. மிக நல்ல விமர்சனம். படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

    ReplyDelete
  2. உங்களுடைய பதிவுகள் எவ்வளவு ஆருமை என்று மற்ற பதிவுகளை படிக்கும் (http://ta.indli.com/) பொழுது தான் தெறித்துகொண்டேன்() .

    மீண்டும் ஒரு ஆரும்யான பதிவு ...

    நான் தினமும்
    உங்கள் பதிவினை படிபதரிகாக open பண்ணுவதை விட .....
    நீங்கள் எபோது பதிவு post பண்ணுவர்கள் பார்பதுதான் அதிகம் ..

    நன்றி

    //கவிதையான காட்சிகள்

    அப்படி என்றால் என்ன ?

    ReplyDelete
  3. Sir,

    Super review, This kind of writing is god gift only... Am reading several blogs. but you are the best...

    ReplyDelete
  4. cheeni kum padathirku inspiration intha padam thaan.

    cablesankar.

    ReplyDelete
  5. cable TV-karangale..ippadithan..naan ungala sollala cable sankar sir !

    ReplyDelete
  6. dear jackie
    wonderful film. yes definitely a movie to watch no no enjoy and understand great movie.
    itharkku inaiyaga innoru padam neengal avasiyam paarka vendum endru naan virumbuvathu
    "DEPARTURES" japanese film won oscar. do not do not do not never miss it.
    this is one of my favourite movies. spellbound is the right word for this film i am very much pleased with the film and its content in all departments. almost a year ago i saw this film at a film society club in chennai. i was astonished what a presentation almost comparatively speaking equally good to "spring summer fall winter and spring" of kim ki duk. somekind of zen meditation way of film making.
    action virumbiyana ungalai kooda intha padam appadiye katti pottu vidum. superb film.
    paarka: worldcinemafan.blogspot.com vimarsanam
    nandri anbudan
    sundar g

    ReplyDelete
  7. தலைவா , நானும் இங்கிலிஷ் படம் எல்லாம் பார்கிறேன் , ஒரு படத்தோட வசனமும் / கதையும் புரியமாட்டுது . உங்களுக்கு எப்படித்தான் எல்லா படத்தோட கதையும் புரிகிறதோ .

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner