சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(26/09/2011) திங்கள்


நடந்த கோர விபத்தின் படங்களை கட்டினாலேசின்ன குழந்தை கூட சொல்லிவிடும்..விபத்தில் முப்பது பேருக்கு மேல் இறந்து போய் இருப்பார்கள் என்று.. ஆனால் அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்நது போனவர்கள்.. வெறும் பத்து பேர் தான் என்று ரயில்வே நிர்வாகம் பொய் கணக்கு கொடுத்து இருக்கின்றது..
உயிரை கொடுத்த அப்பாவிகளுக்கு கிடைக்கவேண்டிய நிவாரணதொகையை கூட கொடுக்கவிடாமல் செய்யும் இந்த ஈனப்பொழப்பு ஏன்.. முழுவதும் நனைந்து விட்டது.. அப்புறம் எதுக்கு முக்காடு…???? 
இறந்த அப்பாவிகளுக்கு நீங்கள் எதும் செய்யப்போவிதில்லை..ஆனால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த பாதக செயலை செய்த எவனும் நல்லகதிக்கு போகப்போவிதில்லை…. வேறு என்ன ஒரு சாமான்யன் செய்து விட முடியும்

=========

ஒருவேளை சட்டசபை தேர்தலில் திமுக தோற்றுப்போனால் என்ன நடக்கும் என்று  நான் யோசித்து பார்த்தேன்.. இப்படி ரைட் ராயலாக கலைஞரிடம் உட்கார்ந்து சீட் கேட்பது போல் தமிழ்நாட்டில் எந்த கூட்டனி கட்சியும் அம்மாவிடம் கேட்க முடியாது என்று நன்றாகவே தெரியும்…  கூட்டனி கட்சிகளுக்கு இப்படி அம்மா கிரிஸ் தடவும் அந்த நாட்களுக்காக காத்து இருந்தேன்….அம்மா ராக்ஸ்இது போலான விஷயத்துல அந்த அம்மாவை அடிச்சக்கவே முடியாது

======

தனித்தெலுங்கான பிரச்சனை மழைக்கால விறகு அடுப்பு போல நன்றாக எரிந்து ,பிறகு புகை மட்டும் கசிந்து, திடிர் என்று பக் என்று தீப்பிடுக்குமே அது போல தெலுங்கான பிரச்சனை ஓயாமல் தீப்பிடுத்து எரிந்து  கொண்டு இருக்கின்றது.. தனித்தெலுங்கான கொடுத்தால் ஹைதராபாத்தை கொடுத்து விடும் நிலை இருப்பதால் கொடுக்க மறுக்கின்றார்களோ???

================
நடிகர் ஜாக்கி நடித்த சில கமர்சியல் விளம்பரங்கள்
 ============
வாழ்த்துகள்..

பதிவுலகில் பல வருடங்களாக பின்னுட்டங்கள் போட்டு புதியவர்களை உற்சாகப்படுத்தும்..துளசிகோபால் அவர்களுக்கு 60 ஆம் ஆண்டு மணிவிழா வாழ்த்துகள்..

=============

மிக்சர்..
காதலிச்ச போதும் சரி, கல்யாணம் பண்ண புதுசுலயும்.. சின்னதா எங்கயாவது இடிச்சிக்கிட்டாலோ...அல்லது சமைக்கும் போது கையை சுட்டுகிட்டாலோ நீ பதறன பதட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்து போய் இருக்கேன்..இப்ப உன் பொண்ணு வந்த்துக்கு அப்புறம், முந்தநாள் பால் பாத்திரத்திலே சுட்டுக்கிட்டேன்..ஒரு வாட்டி காயத்தை பார்துட்டு பார்த்து செய்யக்கூடாதான்னு சொல்லிட்டு போனவன்தான்..இரண்டு நாள் ஆச்சி அந்த காயம் என்னவாச்சின்னு கேட்டும், பார்த்தும்...ஆனா உன் பொண்ணு அழுதா மட்டும் கலங்கி அடிச்சி ஓடியாந்து என்ன ஆச்சு? என்ன ஆச்சுன்னு பதறிகிட்டு இருக்கே....எப்படிய்யா இந்த ஆம்பளைங்க எல்லாம் அப்படியே ஒரு நாள்ல மாறிடுறிங்க...என்று சொல்லிவிட்டு என் மனைவி என் முகத்தையே பார்த்தாள்..நான் ஏதாவது சொல்லுவேன் என்று??இப்போதும் நான் ஏதும் பதில் பேசவில்லை..ஆனால் ஒன்று சொன்னாள்.. அதுதான் கவலையாக இருக்கின்றது.. அடுத்த வாட்டி கால் சுளுக்கிகிச்சி கை சுளுக்கிகிச்சின்னு என்கிட்ட வருவ இல்லை... வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி வருதுன்னு பாரு...ச்சே எத்தனை நாள் கழிச்சி வருதுன்னு பாரு என்கின்றாள். 

குறிப்பு.. (இது சீரியஸ் எல்லாம் இல்லை ஜாலியா சொன்னது..)
===========
 புகழ் வந்து விட்டாலே , அது கொடுக்கும் போதையினால் முகம் மற்றும் உடல் செமையாக மாறி விடுகின்றது. பேர் அண்டு லவ்லி போடாமலே முகம் பளபளப்பாய் மாறிவிடுகின்றது…ஏர்டெல் சூப்பர் சிங்கரில் பைனலுக்கு வந்த பூஜா ஒரு வருடத்துக்கு முன் போட்டிக்கு எப்படி வந்தார்கள்.. எப்படி பாடினார் என்று விஜய் டிவியில் காட்டினார்கள்…இந்த ஒரு வருடத்தில் பூஜா செமை பிளசன்டாக மாறி இருக்கின்றார்… ஜாக்கி அப்படி எல்லாம் இல்லை, மனதை சந்தோஷமாவச்சிக்கிட்டாலே… உடம்பும் முகமும் பொலிவு பெறும் என்று நீங்க சொல்லலாம்…. நீங்க சொல்லறது உண்மைதான் ஆனால் புகழோடு கிடைக்கும் சதோஷத்தினால் ஒருவர் எப்படி பளிச் என்று மாறிவிடுவார் என்பதற்க்கு பூஜா நல்ல உதாரணம்…….. ஏம்பா என்னை யாரவது நடிக்கவோ பாடவோ கூப்பிடுங்களேன்பா………..நம்ம மூஞ்சியும் பொலிவு பெறுதான்னு பார்க்கிறேன்
============


சாய் சரனுக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கரில் முதல் பரிசு கிடைத்ததில் எனக்கு சந்தோஷமே இல்லை.. காரணம் மற்றவர்கள் ஜெயித்த போது இதே சாய்சரன் மூஞ்சை தூக்கி மோட்டுவாளையில் வைத்துக்கொள்ளுவான்...ஆனால் மற்றவர்களுக்கு பரிசு கிடைத்தால் மகிழும் சந்தோஷுக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே....

=========

தரமணி எஸ்ஆர்பி டூல் பேருந்து நிறுத்ததில் இருந்து வௌச்சேரி போவதற்க்குள் சாலை எங்கும் மரணக்குழிகள் வியாபித்து இருக்கின்றன...பாவம் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல நண்பர்களே நான்கு வாருடங்களாக அந்த சாலையை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. இப்போதுதான்  ஒரு பக்கத்தை போட்டு இருக்கின்றார்கள்.. மறு பக்கத்தை எப்போது போட்டு முடிக்க போகின்றார்கள்  என்று தெரியவில்லை...ஓஎம் ஆரில் இருந்து வேலை முடித்து  இரவு ஆறு மணிக்கு மேல் பல வாகன ஓட்டிகள் கண்டபடி திட்டிக்கொண்டு போகின்றார்கள்..என்னைக்குதான்யா ரெடி செய்விங்க??

========================

சென்னையில் சாலைகளில் பள்ளம் இல்லாத  சாலைகளை  என்று எந்த சாலையும் சொல்ல முடியாது.. ஆனால் மவுண்ட் ரோட்,கோபாலபுரம், போயஸ்கார்டன், கடற்கரை சாலை,கொரட்டூர்,பெசன்ட்நகர், போர்ட்கிளப், ஆழ்வார் பேட்.  போன்ற இடங்களில் சாலைகளில் எந்த பள்ளம் இருந்தாலும் உடனே சரி செய்து விடுகின்றார்கள்...அங்கே வாழ்பவர்கள் மட்டும்தான்   நெய்யில் பொறித்தவர்கள் போலும்...

=========================

சென்னை சாலைகளில் பல இடங்களில் ஏற்ப்பட்டு இருக்கும் பள்ளங்களை நெடுஞ்சாலைதுறை இதுவரை பல இடங்களில் எதுவும்  செய்யவில்லை.. சாலை பக்கம் கடை வைத்து இருக்கும் அக்கம் பக்கம் கடைக்காரர்கள்.. பெரும் பள்ளங்களை பக்கத்தில் இருக்கும்  செங்கல் மற்றும் கருங்கற்களை போட்டு பள்ளத்தை நிரப்புகின்றார்கள்.. நெடுஞ்சாலைதுறைக்கு அனேக வேலைகள் இருக்கின்றன.. அவர்கள் கடுமையான உழைப்பாளிகள்..

=======================

சென்னை ஆட்டோ டிரைவர்கள் மீது எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.. அவர்கள் பெங்களூர் போல மீட்டர்  போட்டு ஓட்ட வேண்டும்.. ஆனால் சென்னை ஆட்டோவாலாக்கள் செய்வதில்லை.. ஆனால் பெரும்பாலான சென்னை சாலை விபத்துகளில் முதல் உதவி செய்பவர்கள் அவர்கள்தான்...அதே போல சாலையில் சட்டென ஏற்படும் டிராபிக்கை அவர்கள் திடிர் போக்குவரத்து காவலர்கள் போல மாறி சரி  செய்வதை பாக்கும் போது அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சல்யூட்.....
============

காதலிச்ச போதும் சரி, கல்யாணம் பண்ண புதுசுலயும்.. சின்னதா எங்கயாவது இடிச்சிக்கிட்டாலோ...அல்லது சமைக்கும் போது கையை சுட்டுகிட்டாலோ நீ பதறன பதட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்து போய் இருக்கேன்..இப்ப உன் பொண்ணு வந்த்துக்கு அப்புறம், முந்தநாள் பால் பாத்திரத்திலே சுட்டுக்கிட்டேன்..ஒரு வாட்டி காயத்தை பார்துட்டு பார்த்து செய்யக்கூடாதான்னு சொல்லிட்டு போனவன்தான்..இரண்டு நாள் ஆச்சி அந்த காயம் என்னவாச்சின்னு கேட்டும், பார்த்தும்...ஆனா உன் பொண்ணு அழுதா மட்டும் கலங்கி அடிச்சி ஓடியாந்து என்ன ஆச்சு? என்ன ஆச்சுன்னு பதறிகிட்டு இருக்கே....எப்படிய்யா இந்த ஆம்பளைங்க எல்லாம் அப்படியே ஒரு நாள்ல மாறிடுறிங்க...என்று சொல்லிவிட்டு என் மனைவி என் முகத்தையே பார்த்தாள்..நான் ஏதாவது சொல்லுவேன் என்று??இப்போதும் நான் ஏதும் பதில் பேசவில்லை..ஆனால் ஒன்று சொன்னாள்.. அதுதான் கவலையாக இருக்கின்றது.. அடுத்த வாட்டி கால் சுளுக்கிகிச்சி கை சுளுக்கிகிச்சின்னு என்கிட்ட வருவ இல்லை... வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி வருதுன்னு பாரு...ச்சே எத்தனை நாள் கழிச்சி வருதுன்னு பாரு என்கின்றாள்.

==================

என்னடா நாமகூடத்தான் பைக்ல போறோம் போலிஸ் அங்கிள் நம்மளை செக் பண்ணாம பெரிய பெரிய பைக்கா பார்த்து நிறுத்தி செக் பண்ணுறாங்களே.. பயல்க எல்லாம் மவுண்ட் ரோட்ல ரேஸ் விட்ட பார்ட்டிங்களான்ன கொழம்பி போயிட்டேன்.. அப்பாலிக்கா அந்த டவுட் கிளியர் ஆயிடுச்சி... என்னன்னா  பெரிய பெரிய பைக்ல போய்தான் செயின் ஸ்நாச்சிங் பண்ணறானுங்க பய புள்ளைங்க... அதான் காரணம்..தப்பு செய்யாம பெரிய வண்டி வச்சி இருக்கும் பயபுள்ளைங்க எல்லாம் பேப்பர் எல்லாம் எடுத்து  வச்சிக்கோங்க.. உசாரய்யா உசாரு...

=============

உலகத்தில் பெரிய பாவம் செய்தவர்கள் மடிப்பாக்கம் பொன்னியம்ன் கோவிலில் இருந்து புழுதிவாக்கம் பேருந்து நிலையம் செல்பவர்கள்தான்.. அவ்வளவு அற்புதமான ரோடுகள். இன்னும் பெரிய பாவம் செய்தவர்கள் பாலய்யா கார்டனில் இருந்து புழுதிவாக்கம் பேருந்து நிலையம் செல்பவர்கள்தான்...இன்னும் மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம்..

======================
சமீபத்தில் தமிழ் திரைஉலகை கலக்கும் மயக்கம் என்ன டிரைலர் உங்களுக்காக....
ஏய் எதுக்குடி என்ன பார்த்தன்னு தனுஷ் கேட்பது செமை.. அவர் வேற போட்டோகிராபர் போல.. பார்ப்போம்..
 =========

வேலை வேண்டும்.... நண்பர்களே விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்..

யாழினிக்குஆறுமாதம் ஆகிவிட்டது... இப்போதுதான் மனைவி வேலைக்கு போக  விண்ணப்பங்கள் போட ஆரம்பித்து இருக்கின்றாள்.. பெங்களுர் மற்றும் சென்னையில் இருக்கும் பிபிஓ நண்பர்கள்.. கீழே இருக்கும் என் மனனைவி புரோபைலுக்கு எதாவது ஓப்பனிங் இருந்தால் அவசியம் சொல்லவும்...

Experineces : 7+ years in BPO – Finance Accounts Payable

Level :-M03 equivalent to Team leader as individual performer

Current CTC :- 3.95 lacs

Expected CTC :- 5.5 lacs (negotiable)

Location – Bangalore if not in chennai will be fine

எனது 09840229629  எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்...பெங்களுராக இருந்தால் மிக சௌகர்யம்...

======================

எனது கசீன்  பரத்தும் வேலை  தேடிக்கொண்டு இருக்கின்றான்... வேலைவாய்ப்புகள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்..Experinece : 1+ year

Level :- Marketing Manager

Expected Role :- Pre sales in marketing or marketing head

Current CTC :- 6 lacs

Expected CTC :-  8 – 10 lacs

Location :- Chennai

செல்..98400 61495

================================100 படத்தை கடந்து போவது தமிழ் திரைவுலகில் சகஜமான ஒரு விஷயம்தான்.. ஆனால் இன்டர் நேஷனல் லெவலில் 100 படங்களை தாண்டுவது பெரிய விஷயம்.. சாதாரணமாக நடிப்பது மட்டும் இல்லாமல் இயக்கம்,புரொட்யூசர்,ஸ்டண்ட்கொரியோகிராபர்,பாடகர் என பல அவதாரங்களை எடுத்தவர் ஆசியாவின் நிரந்தர சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான். அவரது 100வது படம்.. படத்தின் பெயர் 1911..அவரே இந்த படத்தை தயாரித்தும் இயக்கி இருக்கின்றார்... படத்துக்கு வெயிட்டிங்... உங்களுக்கா டிரைலர்...

===========

கார் விற்பனைக்கு..
நண்பர் பாலாவின் கார் விற்ப்பனைக்கு விபரங்கள் கீழே...Hi Guys,

Car available for sale.

Chevrolet Optra Magnum 2.0 LT Diesel top end model.
Power of 121 PS
Average mileage of 14 kmpl.
Climate control, ABS, dual airbags, Upsized tyres.
Diamond White colour. Well maintained.
Done 70,000 km. No maintenance issues.

Only serviced by the company- Sundaram Motors, Chennai. Completed 50,000 km recommended major service like replacement of timing belts and belt bearings etc.
Renewed insurance last week, valid till Sep 2012.
New car onroad price is approximately Rs. 12,00,000 with accessories.

Any interested potential buyers mail me separately. Photos ofthe car attached.

Regards,

Bala.


நண்பரின் கார்.. ஏழரை லட்சம்... புதிய கார் 12 லட்சம் கார் வேண்டுவோர் எனது எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்..98402 29629
=========
மகுடேஸ்வரனின் கவிதையை நண்பர் நேசமித்ரன் தனது பஸ்சில் போட்டு இருந்தார்... அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கின்றேன். உங்கள் கருத்து  என்ன??

தலைப்பு...
பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்
========
பேசாமல் நாமும்

பெண்ணாகவே பிறந்திருக்கலாம்

வயதானால் வழுக்கை விழாது

நகரத்தில்

நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும்

தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை

சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும்

எப்பொழுதும் நம் செல்பேசி

பயன்பாட்டிலேயே இருக்கும்

சடங்கானால்

சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள்

நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள்

கல்யாணம், மருதாணி, நலங்கு,

பட்டுப்புடவை, வளைகாப்பு என

அநேக தருணங்களில்

நாயகியாகி அமர்ந்திருக்கலாம்

காமக் கவிதை எழுதினால்

இலக்கிய உலகமே திடுக்கிடும்

கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம்

மூத்த இலக்கியவாதி

திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு

நம்மை அழைத்துப்போய்

கடல் பார் என்று காட்டுவார்

இந்தக் காட்சி உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்பார்

முகப்புத்தகத்தில்

எவனையும் கவிழ்க்கலாம்

எவனாவது ஒருவன்

நமக்கு தாஜ்மஹால் கட்டுவான்

கிழவியாயிருந்தாலும் ஒருவன்

அருநெல்லிக்கனி தருவான்

ஒன்பதாம் வகுப்பே படித்திருந்தாலும்

கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்

மதுரையை எரிக்கலாம்

கூந்தல் வாசம் குறித்து ஐயமெழுப்பி

ஆண்டவனையே அலைக்கழிக்கலாம்

நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்

டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும்

அரச விவகார அதிகாரியானால்

பத்திரிகைகள் பின்னாலேயே ஓடிவரும்

நம் வலைப்பூவில்

நிறைய வண்டுகள் திரியும்

திடீரென்று நம் புத்தகம்

எஸ்கிமோக்களின் மொழியில் பெயர்க்கப்படும்

யார் அமைச்சராக வேண்டும் என்பதை

நாம் முடிவு செய்யலாம்

பேசாமல் நாமும்

பெண்ணாகவே பிறந்திருக்கலாம், இல்லையா ?

- மகுடேசுவரன்

================

பிலாசபி பாண்டி


வாழ்க்கை போராட்டத்தில் நாம் செய்யும் செய்ல்களை நாமே மறந்துவிடும் வேளையில்,நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நாம் செய்த செயல்கள் அவர்களின் நினைவில் நிற்ப்பதே நமக்கான பெரிய அங்கீகாரம்... இசையமைப்பாளர்,ஜான்வில்லியம்ஸ்==============

நான்வெஜ் 18+
அசதியில் தூங்கி  கொண்டு இருப்பவனை தாங்கிப்பிடிக்கவும்...அதிகமா ஆடறவனை அடக்கி ஆளவும்...ஒரு ரியல் ஹீரோ வந்து விட்டான்.. அவன்தான் ராம்ராஜ் ஜட்டிகள்.

=======

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

 ===========

நினைப்பது அல்ல நீ...
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

12 comments:

 1. பலவிடயங்களையும் ஓரு கதம்ப மாலையாக தொடுத்தவிதம் TOP இடையிடையே விளம்பரங்களா? ம்...... பிஸ்னஸ் தெரிந்தவர்தான்

  ReplyDelete
 2. ஜாக்கி, அண்ணியை TCS(eServe) / SCOPE-ல் முயற்சி செய்யச் சொல்லுங்கள்.

  ReplyDelete
 3. Pls search here for suitable openings
  http://careers.wipro.com/wbpo/

  ReplyDelete
 4. ///அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்நது போனவர்கள்.. வெறும் பத்து பேர் தான் என்று ரயில்வே நிர்வாகம் பொய் கணக்கு கொடுத்து இருக்கின்றது..///

  10 பேர் என்று சொல்வதற்காவது அவர்களுக்கு கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறதே

  =========

  ///அம்மா ராக்ஸ்… இது போலான விஷயத்துல அந்த அம்மாவை அடிச்சக்கவே முடியாது…///

  நோ கமெண்ட்ஸ்

  ======

  //தனித்தெலுங்கான கொடுத்தால் ஹைதராபாத்தை கொடுத்து விடும் நிலை இருப்பதால் கொடுக்க மறுக்கின்றார்களோ???//

  வரும்போது ஒன்னும் கொண்டு வரலை... போகும்போதும் ஒன்னும் கொண்டு போக போறதில்ல... இடையிலதான் எவ்வளவு பிரச்சினை...

  ================
  ///நடிகர் ஜாக்கி நடித்த சில கமர்சியல் விளம்பரங்கள்///

  ஜாக்கி விளம்பரம்லாம் கூட நடித்திருக்கிறாரா?? மேட்டர் புதுசு

  ============
  ///பதிவுலகில் பல வருடங்களாக பின்னுட்டங்கள் போட்டு புதியவர்களை உற்சாகப்படுத்தும்..துளசிகோபால் அவர்களுக்கு 60 ஆம் ஆண்டு மணிவிழா வாழ்த்துகள்..//

  என்னுடைய வாழ்த்துக்களும் ஐயா...

  =============

  ////மிக்சர்..
  அடுத்த வாட்டி கால் சுளுக்கிகிச்சி கை சுளுக்கிகிச்சின்னு என்கிட்ட வருவ இல்லை... வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி வருதுன்னு பாரு...ச்சே எத்தனை நாள் கழிச்சி வருதுன்னு பாரு என்கின்றாள். /////

  //////குறிப்பு.. (இது சீரியஸ் எல்லாம் இல்லை ஜாலியா சொன்னது..)//////

  நீங்க சீரியஸா சொன்னாலும் ஜாலியா சொன்னாலும் நிஜம் இதுதான்... மனைவியை விடவும் பிள்ளைக்கு ஒன்று என்றாலும் உள்ளம் கொஞ்சம் அதிகமாக துடிக்கத்தான் செய்கிறது


  ===========
  ///ஒரு வருடத்தில் பூஜா செமை பிளசன்டாக மாறி இருக்கின்றார்…

  ஏம்பா என்னை யாரவது நடிக்கவோ பாடவோ கூப்பிடுங்களேன்பா………..நம்ம மூஞ்சியும் பொலிவு பெறுதான்னு பார்க்கிறேன்///

  அடுத்த சூப்பர் சிங்கர் ரெடி

  ============

  ///சாய் சரனுக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கரில் முதல் பரிசு கிடைத்ததில் எனக்கு சந்தோஷமே இல்லை..

  மற்றவர்களுக்கு பரிசு கிடைத்தால் மகிழும் சந்தோஷுக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே....//

  கிட்டத்தட்ட எல்லோரும் நோட் செய்திருக்கும் பாய்ண்ட் இது...

  இரண்டுமே குணாதிசயம் சம்பந்தப்பட்டது.... சாய் சரணோ அல்லது சந்தோஷோ இருவரும் எந்த கல்லூரிக்கும் சென்று இப்படிப்பட்ட குணாதிசயத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.. உடம்பில் இருக்கும் ஜீன்களின் லீலைகள் அது.


  =========

  ///தரமணி எஸ்ஆர்பி டூல் பேருந்து நிறுத்ததில் இருந்து வௌச்சேரி போவதற்க்குள் சாலை எங்கும் மரணக்குழிகள் வியாபித்து இருக்கின்றன...////

  இதெல்லாம் இல்லைன்னா இதை நீங்க எப்படி சென்னைன்னு அழைக்க முடியும் :)  =======================

  ///அதே போல சாலையில் சட்டென ஏற்படும் டிராபிக்கை அவர்கள் திடிர் போக்குவரத்து காவலர்கள் போல மாறி சரி செய்வதை பாக்கும் போது அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சல்யூட்.....//

  அட... ஆட்டோ டிரைவர்களின் மறுபக்கம்.... ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான்
  ============

  ///காதலிச்ச போதும் சரி, கல்யாணம் பண்ண புதுசுலயும்.. ///

  ஏற்கெனவே சொன்ன அதே மேட்டர்,,,, என்ன ஒன்ஸ்மோரா??
  ==================

  ///தப்பு செய்யாம பெரிய வண்டி வச்சி இருக்கும் பயபுள்ளைங்க எல்லாம் பேப்பர் எல்லாம் எடுத்து வச்சிக்கோங்க.. உசாரய்யா உசாரு...///

  எல்லோருமே உசாரா இருந்துக்கிட்டா நல்லதுதான்

  =============

  ////சமீபத்தில் தமிழ் திரைஉலகை கலக்கும் மயக்கம் என்ன டிரைலர் உங்களுக்காக....////

  டிரைலர் கலக்கட்டும்... படம் கலக்குமா??

  =========

  ////வேலை வேண்டும்.... நண்பர்களே விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்..

  யாழினிக்குஆறுமாதம் ஆகிவிட்டது... இப்போதுதான் மனைவி வேலைக்கு போக விண்ணப்பங்கள் போட ஆரம்பித்து இருக்கின்றாள்..

  எனது கசீன் பரத்தும் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றான்... வேலைவாய்ப்புகள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்..///

  இருவருக்கும் விருப்பம் போல் விரைவில் வேலை கிடைக்க என் வாழ்த்துக்கள்

  ================================

  நிரந்தர சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான். அவரது 100வது படம்.. படத்தின் பெயர் 1911..

  சூப்பர்... ஜாக்கிசான் ரியல் ஹீரோ.. அவரின் 100 வது படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ===========
  ///நண்பர் பாலாவின் கார் விற்ப்பனைக்கு////

  நானும் என் நண்பர்களிடம் தெரிவிக்கிறேன்.

  =========
  /////மகுடேஸ்வரனின் கவிதையை நண்பர் நேசமித்ரன் தனது பஸ்சில் போட்டு இருந்தார்...

  தலைப்பு...
  பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்////

  நிஜமாவே கவிதை மிக அழகு... கவிதை படிக்கிறவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறது அதின் கருத்துக்களை.. வாழ்த்துக்கள் நண்பருக்கு
  ========

  //பிலாசபி பாண்டி//

  நல்ல தத்துவம்

  ==============

  //நான்வெஜ் 18+//

  செம மொக்க.....

  =======

  ReplyDelete
 5. Nice long post.
  Best wishes to your wife and cousin with their job search.

  ReplyDelete
 6. ஜாக்கி சானின் 100 வது பட அறிமுகம் சூப்பர்.

  ReplyDelete
 7. நமக்கு இந்த marketting துறையை பற்றி தெரியாது... ஆனால் Amba Research-ல் இப்போது வேலை இருப்பதாக கேள்விப்பட்டேன்... அண்ணிக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் (http://www.ambaresearch.com/careers) சென்று பணிக்கு விண்ணபிக்கலாம்...

  ReplyDelete
 8. சாண்ட்விஸ் நான்வெஜ்ல கலந்து விளையாடியிருக்கீங்க...

  ReplyDelete
 9. அன்பிற்கினிய ஜாக்கி சேகர் ! கவிதையைப் பற்றிய உங்கள் கருத்து என்னவென்று சொல்லவே இல்லையே... அதுதானே இங்கே முக்கியம் ?
  :)

  ReplyDelete
 10. "வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி வருதுன்னு பாரு...ச்சே எத்தனை நாள் கழிச்சி வருதுன்னு பாரு என்கின்றாள்" :))

  ReplyDelete
 11. என்னோட ஜிமெயில் idக்கு resume அனுப்புங்க. நான் எங்க ஆபீஸ்ல try பண்றேன்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner