வெற்றி...வெற்றி....மைதிலிக்கு கல்விக்கான உதவி கிட்டியது..





நானும் நண்பர் நித்யாவும் மைதிலி  வீட்டில் அவர் மாமாவையும்  அழைத்து மைதிலியிடம் பணத்தை கொடுக்கும் முன்... இந்த பணம் காலேஜ் பீஸ் கட்ட போயிடும் இல்லை..?

அப்படி பிரச்சனைன்னா நாங்களே போய் காலேஜில் கட்டிவிடுகின்றோம் என்று சொன்னேன். காரணம் மைதிலி அம்மா சித்தாள் வேலைக்கு போய் இருந்தார்கள். வீட்டில் மாமா மட்டும் இருந்தார்.. ஒருவேளை அவருக்கு குடிப்பழக்கம் இருந்து,மைதிலியிடம் கொடுத்த பணத்தை அந்த பிள்ளையிடம் இருந்து வாங்கி சென்று விட்டால்?? (அதுக்குதான் நிறைய சினிமா பார்க்ககூடாது...புத்தி எப்படி போகுது பாரு??) 
இல்லை சார் அப்படி எல்லாம் இல்லை சார் என்று மைதிலி சொன்னார்..அதன் பிறகு பணத்தை கொடுத்து விட்டு ஆல் த பெஸ்ட்

நல்லா படிம்மா என்று சொல்லி விட்டு கிளம்பினோம்.. ...

ஜாக்கி சார் அடுத்த வருசம் என்று மைதிலி இழுக்கும் போது பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.. 

ஏதோ ஒரு குருட்டு தைரியம்... ஆனால் இன்று காலையில் இருந்து போன் கால்கள். மெயில்கள்.. முக்கியமாக சிட்னியில் இருந்து பக்கிரிசாமி என்பவர் என்னை தொடர்பு கொண்டார்..அவருக்கு வயது 50..அந்த பெண்ணை பற்றி தகவல் கொடுத்தால் உதவ தயாராக இருப்பதாக சொன்னார்.. ஜெயமோகன் தளத்தில் உங்களை ஒருமுறை குறிப்பிட்டதில் இருந்து தொடர்ந்து வாசித்து வருகின்றேன்...தொடர்ந்து எழுதுங்கள்..உங்களுக்கு எந்த உதவி தேவையென்றாலும் தயங்காமல் சொல்லுங்கள் என்று சொன்னார்.. அவரிடம் பேசியது என் அண்ணடம் பேசியது போல இருந்தது..  அவரிடம் போஸ்ட் போட்ட பத்தாவது நிமிடமேஅந்த பெண்ணுக்கு உதவி கிடைத்து விட்டது என்று சொன்னேன்..

நேற்று இரவு போஸ்ட் போட்ட பத்தாவது நிமிடம் எனது நண்பர் பாஸ்டன் ஸ்ரீராம் போன் செய்தான்...எடுத்ததுமே இப்படித்தான் ஆரம்பித்தான்..


டேய் என்கிட்ட ஏன் இந்த விஷயத்தை சொல்லலை-?

எந்த விஷயத்தை மச்சி??

மைதிலி விஷயத்தை? எப்படி இந்த செய்தியை மிஸ் செஞ்சேன்னு தெரியலை...ஏதோ டென்ஷன்...சரி இப்பயும்  ஒன்னும் குறைஞ்சி போவலை.... அந்த பொண்ணுக்கு நாளைக்கு காலையில் போன் செஞ்சி இன்னும் மூன்று வருட படிப்பு செலவை நான் ஏற்க்கின்றேன் என்று சொல்... அதுமட்டும் அல்ல..அதன் பிறகு அவள் விருப்பபட்டு எம்இ படிக்க ஆசைபட்டால் அந்த இரண்டு வருட படிப்பு செலவும் என்னுடையது என்றான்...

ஏற்கனவே ஸ்ரீராம் தமிழ்நாட்டில் பலபிள்ளைகளின் கல்வி செலவை ஏற்று இருக்கின்றான்..அவன்  சென்னை வரும் போது அந்த பிள்ளைகள்  அவனை சந்திப்பார்கள்..இது எல்லாம் தெரிந்தாலும் நான் அவனிடம் இந்த உதவியை கேட்கவில்லை.. காரணம் அவன் பாஸ்டனில் சொத்தமாக வீடு வாங்க முயற்சித்து பணத்துக்கு அலைந்து கொண்டு இருந்த விஷயம் எனக்கு தெரியும் என்பது ஒரு காரணம்....

மச்சி நீயே வீடு வாங்க கஷ்டப்படுற இந்த நேரத்துல எதுக்கு உன்கிட்ட கேட்கறதுன்னு அதுமட்டும் அல்ல நீ நிறைய பிள்ளைங்க படிப்பு செலவ வேற  பார்க்கற அதனால உன்கிட்ட சொல்லலை என்றேன்.. இருந்தாலும் பணத்துக்கு என்ன செய்வடா என்றேன்...?



ங்கோத்தா இந்த உதவியை கூட படிக்கறபுள்ளைக்கு செய்யலைன்னா அப்புறம் என்ன மயித்துக்குடா இருக்கோம் ...

(ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட அவன் பேச்சு இப்படித்தான் இருக்கும்..)


கொஞ்ச நேரத்தில் ஸ்ரீ சாட்டுக்கு வந்தான்..

மச்சி படிப்புக்காக சக்சஸ்புல்லா பிச்சை எடுத்துட்டேன்..

இன்னாடா  சொல்லற...???

இல்லை மச்சி மைதிலி இந்த மூனு வருச படிப்பு மற்றும் எம்இ படிக்க இருக்கும் செலவை.. நானும் நண்பர் க.ராமசாமியும் ஷேர் பண்ணிக்கபோறோம் என்று சொன்னான்...



ஸ்ரீராம் எனக்கு மெயிலில் அனுப்பிய விஷயம் கீழே..





நீ எதுவும் எழுதிவிடுவதற்கு முன்னால் சொல்லிடறேன்: I don't want to take undue credit. 



நான் தனியா மைதிலிக்கு உதவி செய்யப் போவதில்லை, க ராமசாமியும் இணைந்துதான் செய்யப் போறேன், நானும் அவரும் சேர்ந்து அவள் படிப்பு செலவுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம். அப்பெணிடமிருந்து நான் எதிர்பார்ப்பவை



1. 80 % குறையாமல் மதிப்பெண் ஒவ்வொரு முறையும். 



2. பணம் தேவைப் படுவதற்கு ஒரு மாதம் முன்னர் தகவல்



3. அவள் சம்பாதிக்க ஆரம்பித்தப்புறம், குடும்பத்தை முதலில் நல்ல நிலைமைக்கு கொண்டு வரட்டும், அதுக்கப்புறம் ஏதாவது ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ கல்விக்கு பொருளதவி செய்ய உத்தரவாதம். 



இவற்றை அவளுக்கு விளக்கி விட்டு அவள் படிச்சு முடிக்கும் வரை உதவி செய்ய ஜாக்கி, ஸ்ரீராம், ராமசாமி அண்ணன்கள் இருக்கோம்னு சொல்லிடு. 

--
Regards

Sriram
Boston, USA

இதுதான் ஸ்ரீராம் மெயிலில்  சொன்ன விஷயம்....



அடுத்த வருட மைதிலி படிப்பு செலவுக்கு எனது பெங்களுர் நண்பர்கள்.. டக்கிலா மாதேஷ்மற்றும் ராம் இரண்டு பேரையும்தான் நான் நம்பி இருந்தேன்.அவர்கள் ஒரு இமைகள்  என்ற தன்னார்வ  தொண்டு நிறுவனம் நடத்தி, அதன் மூலம் கல்வி உதவிகள் செய்து வருகின்றார்கள்.. அதனால் அவர்களிடம்தான்  நான் பெங்களூரில் இருக்கும் போது மைதிலிக்காக அடுத்த வருடத்துக்கு உதவி கேட்டு இருந்தேன்..
ஆனால் அவளுக்கு எல்லா வருடத்துக்கும் உதவிதொகை சட்டென கிடைக்கும் என்று நான்  எதிர்ப்பார்க்கவில்லை..ஸ்ரீராம் தொடர்பு கொண்டு மெயிலிலும் போனிலும் சொன்னதும் நான் ரொம்பவே நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்..

நண்பர் ஸ்ரீராம் மற்றும் நண்பர் க.ராமசாமி இரண்டு பேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

ஹலோ மைதிலியா??

 சார் நல்லா இருக்கிங்களா?

நான் அனுப்பிய ரெசிப்ட் உங்களுக்கு கிடைச்சிடுச்சா-?

கிடைச்சிடுச்சி மைதிலி..ஒரு சந்தோஷ செய்தி.. எனது அமெரிக்கா வாழ் நண்பர்கள் பாஸ்டன் ஸ்ரீராம் மற்றும் க.ராமசாமி இரண்டு பேரும் உன் படிப்பு செலவை ஏத்துக்கிட்டாங்க என்றேன்.. ஸ்ரீராம் எனக்கு மெயிலில் அனுப்பிய விஷயத்தை சொன்னேன்..

ஜாக்கிசார்.. நான் என்ன சொல்லறதுன்னே தெரியலை ரொம்ப நன்றிசார்..ரொம்ப ரொம்ப நன்றிசார்..இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். உங்க பிரண்ட்ஸ்க்கு எனது நன்றிகளை  என் சார்பா தெரிவிச்சிடுங்க என்று சொன்னார்...

ஆகவே நண்பர்களே,உதவி செய்ய விருப்பபட்டு மெயில் அனுப்பிய வாசக நண்பர்கள்..மற்றும் போனில் தொடர்பு கொண்ட வாசக நண்பர்கள்.  அத்தனை பேருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன்..

மீண்டும் இந்த பதிவின் தலைப்பை படிக்கவும்..

==============

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

குறிப்பு......

மைதிலியிடம் ஸ்ரீராம் மற்றும் க.ராமசாமி சொன்ன தகவல்களை சொல்லி உனது  எண்ணை எனது நண்பர் ஸ்ரீராம் மற்றும் க.ராமசாமியிடம்கொடுக்கின்றேன்..  அவர்கள் உன்னிடம் இன்னும் விரிவாய் பேசுவார்கள்..என்று மைதிலியிடம் சொல்லி இருக்கின்றேன்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

23 comments:

  1. It is truly nice of பாஸ்டன் ஸ்ரீராம் மற்றும் க.ராமசாமி to help her. Good conditions for availing her stipend. :-)
    Keep up the good work, Jackie.

    ReplyDelete
  2. ஜாக்கிசார்.. நான் என்ன சொல்லறதுன்னே தெரியலை ரொம்ப நன்றிசார்..ரொம்ப ரொம்ப நன்றிசார்..இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். உங்க பிரண்ட்ஸ்க்கு எனது நன்றிகளை என் சார்பா தெரிவிச்சிடுங்க என்று சொன்னார்...

    ReplyDelete
  3. nalla muyarchi thodarattum.......vazhthukkal

    ReplyDelete
  4. bro am readin your blog since few months.. realllyy happie for her and happy to see such ppl around u....continue your good work bro.. long live :)

    ReplyDelete
  5. Incredible help by boston sriram and you.Thank you

    ReplyDelete
  6. Very Good Jackie. Wonderful..
    Great work... You and your friends.

    You guys are living a meaningful life!!!

    ReplyDelete
  7. ஜாக்கி, இதை நான் உதவியாகக் கருதவில்லை - என் சமூகக் கடமையாகவே கருதுகிறேன்.
    சம்பாதிப்பதில் 25-30 % வருமானவரி கட்டுவதைப் போல இதுவும் ஒரு கடமை. ஒண்ணாவது முதல் பத்தாவது ஓசில படிச்ச நான் இப்ப வசதியில்லாத, நல்லா படிக்கிற பசங்களுக்கு ஃபீஸ் கட்டுவதன் மூலம் கடனடைக்கிறேன், அவ்வளவே.

    விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிடக் கூடாதென்பதற்காகத்தான் 80% மார்க் எல்லாம்.

    ஒரு போன் பண்ணிக் கேட்டவுடன் யோசிக்காம ராமசாமி பணம் கொடுக்க ஒத்துக் கொண்டது பெரிய விஷயம். உருவத்தில் மட்டுமல்லாமல் உள்ளத்திலும் பெரிய மனுஷன் என்று நிரூபித்துவிட்டார்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  8. அன்பான ஜாக்கி,
    நாலு பேருக்கு நல்லது நடக்க உங்களின் பதிவுகள் காரணமாக இருக்கிறது என்பதை நினைத்து நீங்கள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. nalla eru nanba un nalla manathugu allam nallatha nadagum

    ReplyDelete
  10. என்ன மாதிரி ஆளு சார் நீங்க... நீங்க ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமா? ரொம்ப ரொம்ப இயல்பா... சான்ஸே இல்ல போங்க... வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்... கல்விக்கு உதவும் அனைத்து உள்ளங்களுக்கும்...

    ReplyDelete
  11. Hi Jackie,
    Good initiative! Keep them coming!

    Have a nice day
    Sri

    ReplyDelete
  12. மிக்க நன்றி நண்பர்களே... உங்கள் ஆசிக்கு....
    ஸ்ரீ நீ சொல்வதை ஒத்துக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  13. பா.ஸ்ரீ , ஜாக்கி இங்க பதில் போடறதே எனக்கு கூச்சமாதான் இருக்கு.. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்னு முன்னோர்கள் சொல்லிருக்காங்க இல்லயா... நம்ம தொடர்ச்சியா இத பண்ணினோம்னா ஏழைகள இல்லாம போகும் இல்லயா ஒரு நாள்.. ஏதோ என்னயால முடிஞ்ச ஒரு சிறு துறும்பு.. நன்றி உங்கள் இருவருக்கும்.. இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே.... இறைவன் அருளோடு...

    ReplyDelete
  14. Mr. Sriram, Mr. Ramaswamy & Mr. Jacki....GREAT WORK

    ReplyDelete
  15. பணமிருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை...
    குணமிருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை...

    இங்கே இரண்டும் கொண்ட மனிதர்கள் இரண்டு பேரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே....

    என்ன சொல்ல முடியும் எங்களால் உங்களுக்கு.. வாழ்த்துக்களைத் தவிர.....

    ReplyDelete
  16. Hats off to Jackie, Sriram, Ramasamy and others!!

    ReplyDelete
  17. Appajiraman Lakshminarayanan ✆ ponne12@gmail.com to bcc: me

    show details 6:36 PM (10 hours ago)

    சரியான நேரத்தில் நிறைவான உதவி பெற்று தந்து உள்ளீர்கள்.....கடவுளின் ஆசி தங்கள் குடுமபத்துக்கு இருக்கிறது..

    ( கமெண்ட்ஸ் போடா நேரம் இருப்பது இல்லை ...ஜாக்கி )

    ReplyDelete
  18. அன்பின் ஜாக்கி,,

    என்ன சொல்வதென்று தெரியவில்லை.எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.

    சிலர் ஸ்ரீராமை பாஸ்டன் பண்பாளர் என்று என்ன அர்த்ததில் சொன்னார்களோ என்று தெரியாது.ஆனால் உண்மையிலே அவர் பண்பாளர் என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.திரு.இராமசாமி அவர்களுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. ஜாக்கிசார்.. நான் என்ன சொல்லறதுன்னே தெரியலை ரொம்ப நன்றிசார்..ரொம்ப ரொம்ப நன்றிசார்..இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். உங்க பிரண்ட்ஸ்க்கு எனது நன்றி. 10000000000000000000000000000000000 Same words from my end

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner