Monday, September 12, 2011

எதிர்ப்பார்த்து காத்து இருக்கும் படம்….அந்த படத்தின் டிரைலரை சில நாட்களாக விரும்பி பார்க்கின்றேன்.டிரைலர் அப்படி என்ன இருக்க முடியும்? என்று உங்கள் மனதில் எழும் கேள்வி நியாயம்தான்.
என்னவோ அந்த படத்தின் டிரைலர் எனக்கு ரொம்ப பிடித்தமாய் இருக்கின்றது..
சமீபத்தில் அந்த படத்தில் இருந்து வெளியான ஒரு பாடலை பார்த்தேன்.. சட்டென நெஞ்சில் ஒட்டிக்கொண்டது... பாடல் வரிகள் இரண்டாம் பட்ச்சம் என்றாலும்.. காட்சி அமைப்புகள் அற்புதம் என்பேன்.. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு  சென்னை அழகை உள்ளது உள்ளபடி காட்டி இருக்கின்றது.. டெய்லி சென்னையில் நாம் கடக்கும் இடங்களை மிகைபடுத்தாமல் காட்சி படுத்தி இருக்கின்றார்க்ள்..


அந்த படம் எங்கேயும் எப்போதும்... பாடல் கோவிந்தா கோவிந்தா சாங்...
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையின் அழகை இந்த படத்தில் பார்க்கின்றேன்.. நல்ல கேமரா கோணங்கள்... இயக்குனர் முருகதாஸ் மற்றும் ஹாலிவுட் படநிறுவனம்
தமிழகத்தில் இருந்து வரும் ஒரு தென்மாவட்டத்து பெண்ணின் பார்வையில் சென்னையின் இயக்கமும் அதன் நாகரீகமும் எப்படி அவளது பார்வையில் வேறுபடுகின்றது என்று சின்ன சின்ன ஷாட்டுகளில் கவிதையாக உணர்த்துகின்றார்கள்..
 வெகு இயல்பாய் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கைகுலுக்கி பேசுவதே ஆச்சர்யமாக பார்த்து வியக்கும் பெண்ணின் பார்வைகள் காட்சிபடுத்தி இருக்கின்றார்கள்...

 ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் சென்னையில் வசிக்கும் பெண்களின் பாலியல் சீண்டல்களை மிக கவிதையாக காட்சிபடுத்தி இருக்கின்றார்கள்..

முதலில் ஆண் பக்கத்தில் உட்கார யோசித்து விட்டு அப்புறம் சென்னையின் கூட்ட நெரிசலுக்கு சகித்துக்கொண்டு பயணிப்பது சின்ன ஷேர் ஆட்டோ  குலுக்கலுக்கு கூட பெண்ணை பிராண்டுவதும் அவள் வீல் என்று கத்துவதும் சூப்பர்.
 மிக டைட்டாக உடை அணியும் சென்னை பெண்களை பார்த்து தனது உடையை டைட்டாகவும் சின்ன தொப்பையை உள்பக்கம் இழுத்துக்கொண்டும் பேகை தோளில் மாட்டிநடக்கும்  அந்த காட்சியும் அந்த பெண்ணும் செமை கியூட்...நாடோடிகள் படத்தில் சசிகுமாருக்கு முறைபெண்ணாக வரும் அனன்யாதான் அந்த பெண்.. அந்த சுட்டி விழிகள்.. சான்சே இல்லை.

பழைய ஷேர் ஆட்டோவில் இருந்து புதிய மேக்சிகேப் ஷேர் ஆட்டோவரை காட்சிபடுத்தி இருக்கின்றார்கள்..மேக்சிகப் ஷேர் ஆட்டோக்களில் முடிந்தவரை இடிமன்னர்களிடம் இருந்து தப்பிக்கலாம்..
 ஒரு பெண் பிராதெரியும் படி உடை அணிந்து ஷேர் ஆட்டோவில் பயணிக்க அதை அனன்யா அந்த பெண்ணிடம் சுட்டிக்காட்ட அதுக்கு அந்த பெண்..
ஐ திங்...
ஷீ இஸ் பிரம் வில்லேஜ்..
டெல்லிங் ரப்பிஷ் அபவுட் மை இன்னர்....
 என்று போனில் தன் நண்பியிடம் அந்த சென்னை நாகரீக பெண் சொல்ல அதுக்கு நம்ம ஆள்..
ஹலோ ஐயம் கம்ளிட் பிஈ .. வித் 92 பர்சன்டேஜ்.. ஐநோ இங்கிலிஷ் என்று சொல்வது அழகோ அழகு...
அந்த கோவிந்தா பாடலும் சில காட்சிகளும்   உங்களுக்காக..நிச்சயம் ரசிப்பீர்கள்
=====
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

நினைப்பது அல்ல...
நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

9 comments:

 1. இந்த பதிவை விமர்சிக்க வார்த்தைகள் இல்லை.
  Tooo...... Good.

  ReplyDelete
 2. நானும் அந்த பாடல் காட்சியை ரசித்து பார்த்தேன்..... படம் எப்படி இருக்குமோ ? தெரியலையே ! ! !!

  ReplyDelete
 3. படத்திற்கு விமர்சனம் என்பது தாண்டி, டிரைலருக்கே விமர்சனமா?! பார்க்கவேண்டும் டிரைலரை....

  ReplyDelete
 4. அண்ணே பாட்டு ரொம்ப நல்லா இருக்கு படம் ரிலிஸ் ஆனதும் கண்டிப்பா பாக்கணும்.

  ReplyDelete
 5. விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு.....படம் ரிலிஸ் ஆனதும் கண்டிப்பா பாக்கணும்.

  ReplyDelete
 6. நானும் அந்த பாடலைப் பார்த்தேன். நல்லாவே இருக்கு. அனுமார் சிகரட் பிடிக்கும் சீன அருமை

  ReplyDelete
 7. அன்பின் ஜாக்.கி...

  எங்கேயும் எப்போதும்...
  டிரைலர் விமர்சனம் - உங்களை போலவே..
  அருமை..
  எதிர்பார்த்திருக்கும்...உள்ளம்..
  எப்போது வரும் என்று...
  ஒரு..பாடலில் இவ்வளவு விஷயங்கள்..
  விபரமாய் சொன்னதற்கு..
  விரிவான நன்றி..
  சமீபத்தில் டிவியில்..இந்த படம் பற்றி..உரையாடல் கண்டேன்..மீண்டும்..உங்கள் விமர்சனம்..
  படம்..வந்தால்..உங்களுக்கும் ஒரு டிக்கெட் பார்சல்..

  அன்புடன்..
  NTR

  ReplyDelete
 8. நிச்சயம் பார்க்க வேண்டிய படம் தான்.. முக்கியமாக காதலியை கூட்டி சென்றால் நமக்கு பாராட்டு நிச்சயம்.. ஆனா நா ரொம்ப நல்லவன் என தெரிவித்து கொள்கிறேன்....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner