சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(20/09/2011) செவ்வாய்

ஆல்பம்...

 

மலைப்பிரேதச வாழ் மக்களுக்கு மின் விசிறிக்கு பதில் மின்சார அடுப்பு கொடுக்க முதல்வர் ஜெ  உத்தரவிட்டு இருப்பது வரவேற்ப்புக்கு உரியது...
ஏற்கனவே மலையில் இருக்கும் மக்கள் குளிரில் இருக்கும் போது, அவர்களுக்கு ஏன் மின்விசிறி?? மின்விசிறிக்கு பதில்  அவர்களுக்கு மின் அடுப்பு கொடுப்பது வரவேற்ப்புக்கு உரியது..முதல்வருக்கு நன்றி..

=========

முதலில் மூன்று பேர் தூக்குக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.. என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சட்டசபையில், முதல் நாள் 110 விதியில்  எந்த இடையூரும் இல்லாமல் தான் நினைத்ததை வசித்த நமது முதல்வர், மறுநாள் மக்கள் எதிர்ப்பை பார்த்து விட்டு மூன்று பேருக்கு தூக்கை ரத்து செய்ய தீர்மானம் நிறைவற்றினார்...

அதே போல அறு நாட்களை தொடர்ந்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்கு மக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த போது, நான் எதுவும் செய்ய முடியாது என்றும் மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செவ்வனே செய்து விட்டது என்றும், வழக்கம் போல முந்தைய திமுக ஆட்சியில் தான் தீவிரமாக அணுஉலைபணிகள் நடைபெற்றது என்று எல்லாம் சொல்லி பார்த்தும், கூடங்குளம் மக்கள் கேட்காமல் போகவே........... 

பத்து நாட்களுக்கு மேல் தொடர் உண்ணாவிரதம் போய்கொண்டு இருப்பதால்... இப்போது மத்திய அரசு மக்கள் பயத்தை போக்கிவிட்டு அணுமின் நிலைய பணிகள் மேற்க்கொள்ளவேண்டும் அதுவரை பணிகள் நிறுத்தப்படவேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கின்றார்....கலைஞர் மட்டும் ஆட்சியில் இருந்து இப்படி ஒரு லட்டர் எழுதி இருந்தா வானத்துக்கு பூமிக்கு குதிச்சி இருப்பாங்க...காரணம் அம்மா....
==============
மீன் பிடிக்க தூண்டில் கொடுத்து கற்றுக்கொடுங்கள் இலவசத்தை ஊக்குவிக்காதீர்கள் என்று  போக ஆட்சியில் சமுக தளங்களில் தலைப்பாட அடித்துக்கொண்டார்கள்.. இப்போது அம்மா வந்து இலவசம என்று யாரும் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார்.. ஒரு பய வாய் திறக்கலையே??? அம்மாராக்ஸ்

============

இன்னும் எத்தனை வருசத்துக்குதான் ஏட்டிக்கு போட்டியாக ஜெ செயல்படுவார் என்று தனது வருத்தத்தை தனது அந்திமகாலத்தில் கவலையுடன் தெரிவித்து இருக்கின்றார் முன்னாள் முதல்வர் கலைஞர்... எனக்கு என்னவோ கருணாநிதி மற்றும் ஜெவுக்கு எதாவது ஒரு பர்சனல் வென்ஜன்ஸ் இரண்டு பேருக்குமே இருந்து இருக்கும்னு நினைக்கின்றேன்.

கலைஞர் தனது வயது காரணமா  அனுசரிச்சு போனாலும் அந்தம்மா இவரை விட்டேனா பார் என்ற அளவிலேயே டிரீட் செய்யுது..கலைஞரை தீய சக்தி கருணாநிதி என்று சொன்னவர் தமிழக அரசியலில் ஜெ ஒருவர்தான்.. இன்னைக்கு பொறந்த காலியான்குட்டிங்க, கலைஞரை என்ன என்னவோ சொல்லி திட்டுதுங்க.. அது வேற.. ஆனா ஒரு அரசியல் தலைமையில் இருப்பவர் இப்படி சொல்வது அவர்மட்டும்தான் ...

நானும் இவுங்க ரெண்டு பேருக்கும் அப்படி என்ன வாய்ப்பா வரப்பு தகராறு இருந்து இருக்கும்? என்னதான் பிரச்சனை ரெண்டு பேருக்கும்?? எனக்கு என்னவோ தங்கள் இளைமைகாலங்களில் திரைத்துறையில் இருந்த போது நடந்த  செயல்களுக்கு இன்றுவரை  சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்று மட்டும் எனக்கு புரிகின்றது..அதுக்கு எம்ஜிஆர் கூட ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஒரு மனஸ்தாபம் நடக்காமலும் இருந்து இருக்கலாம்... ஆனால் இந்த அளவுக்கு ஒருவர் மீது வெறுப்பு வர காரணம் என்ன,??? அதுவும் 50 வயதை கடந்து விட்ட நிலையிலும்

சட்டசபை கட்டினா மருத்துவமணை,மெட்ரோரயில்னு சொன்னா மோனோரயில் என்று ஜெ செயல்படுகின்றார்.. உண்மையில் ஜெ சொல்வது போல தீயசக்தி கருணாநிதியாக இருந்தால் எதுக்கு அவர் அறிமுகபடுத்திய மக்கள் நலத்திட்டடங்களை, பேர் மாற்றி இவர் பெயரில் அறிமுகபடுத்த வேண்டும்...முதல்வர் ஜெ அவர்களே.. கருணாநிதி தீய  சக்தியாகவே இருந்து விட்டு போகட்டும்.. நீங்கள் நல்ல சக்தியாக இருந்து பயனுள்ள திட்டங்களை தடைபடாமல் செய்யுங்கள்....



=====================

குஜராத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு சாத்தான் வேதம் ஓதி விட்டு இப்போதுதான் முடிந்து இருக்கின்றது..ஊழல் செய்த அரசியில்வாதிகளை மக்கள் மறந்து விடுவார்கள்.. கேஸ் நடந்து கொண்டு இருக்கும் போதே திரும்பவும் முதல்வராக கூட வராலாம்...ஆனால் மதத்தின் போர்வையில் கலவரத்துக்கு துனை போனவர்களை மக்கள் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டார்கள்..



==================

உங்க வாழ்க்கையில் இது போல காட்சிகளை , பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.. முக்கியமா தமிழ்நாட்டில் வாசிப்பவர்கள்... கடைசி காட்சிகள் பார்க்கும் உங்களுக்கு அசத்தலாய் இருக்கும் என்றால் நேரில்  அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு எப்படி இருந்து இருக்கும்...





==================

மிக்சர்...



மக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி வருகின்றது என்று பதிவாக போட்டதும் தொலைபேசி மற்றும் மெயில்களில் வாழ்த்து தெரிவித்த வாசக நண்பர்களின் அன்பையும்... சக பதிவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்து, அந்த செய்தியை ரீஷேர் செய்து வாழ்த்தும் தெரிவித்த நண்பர்களுக்கு என் நன்றிகள்... பேட்டி ஒளிபரப்பான போது எனது செல்போனில் வாழ்த்துகள் வந்து குவிந்தன..ரொம்ப நாட்களுக்கு பிறகு வாழ்த்து  செய்திகனை படித்து மெல்லிய புன்னகையுடன் வெட்கப்பட்டேன்..மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.. நான் அந்தஅளவுக்கு ஒர்த் இல்லை என்று....

=============

வீடு எங்கும் போர்க்களமாக இருக்கின்றது... முதலில் வீடு போர்க்களமாக இருக்க முதல் காரணம் நான்தான்... வீடு எங்கும் டிவிடி மற்றும் புத்தகங்கள் இரைந்து கிடைக்கும்.. இப்போது என் மகளும் அதில் பங்கு கொண்டு விட்டாள்.. வீடு எங்கும்  விளையாட்டு சாமான்கள்.. மற்றும் மூத்திரதுணிகள் என்று எல்லா இடத்திலும் இரைந்து கிடக்கின்றது.. என்னதான் சுத்தபடுத்தி வீட்டை  வைத்தாலும் ஒரு அரைமணிநேரத்தில் பழைய குருடி கதவை திருடிகதைதான்....





===========

ஒரு முக்கியவேலையாக ஒரு இண்ட்ர்வியூவுக்கு சென்று கொண்டு இருக்கும் போது  சட்டென காலில் சானி அல்லது பீயையோ மிதித்து விட்டால்  உங்கள் நிலை என்னவாக இருக்கும்? அதை எப்படி எதிர்கொள்வீர்கள்..ஆனால் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. அப்படி ஒரு நிலை எனக்கும் சமீபத்தில் வந்தது...

எங்கேயும் எப்போதும் படம் பார்த்து விட்டு திநகரில் நண்பரோடு டீ அருந்தி விட்டு முப்பாத்தம்மன் கோவில் வழியாக ஒரு முக்கிய நபரை சந்திக்க போனேன். ஒரு பெரிய டிரைனேஜ் உடைந்து அதில் இருக்கும் கழிவு நீர் ரோட்டில் ஆறாக ஓடி,வாகனங்கள் அதிகம் சென்று  பெரிய பள்ளத்தை  உருவாக்கி இருந்தன....

அந்த பள்ளத்தை எனது பைக்கில் கடந்த போது வேகமாக வந்த வோல்ஸ்வேகன் கார் என் மீது டிரெய்னேஜ் தண்ணிரை வீசி அடித்தது.. நான் மற்றும்  எனக்கு பின் நடந்து வந்த பையன்  ரெண்டு பேரின் உடை மீதும் கழிவு நீர் அபிஷேகம்...எதிர்பாராத தாக்குதலால் நான் நிலைகுனிந்து போனேன்...திரும்பி பார்த்தால் அதுக்குள் அந்த கார் மறைந்தே போயிவிட்டது... இரண்டு பேர் பைக்கில் போனவர்கள் நின்று எங்கள் இருவரையும் பார்த்து விட்டு சிரித்து விட்டு  போனார்கள்...என் பின்னால் வந்த பையன் அவமானத்தால் கூனி குறுகி போனான்...அந்த இடத்தை விட்டு ஓட்டமும் நடையுமாக கடந்து போனான்.. நான் யாரை பற்றியும் கவலைபடவில்லை... நடந்து விட்டது அதுக்கு என்ன  செய்ய முடியும்?? அந்த நாற்றம் குடலை பிடுங்கியது... இதுக்கே இப்படி இருக்கின்றது..டிரைய்னேஜ் மேன் ஹோலில் பிறர் பார்க்க இதனுள் கழிவு அடைப்பை எடுக்கும் சகமனிதனுக்கு எப்படி இருக்கும் ???? இருபது அடி கடந்து எனக்கு பின்னால் நடந்து வந்த இரண்டு நவநாகரீக ஆண்டிகள் என் நிலை பார்த்து பரிதாப பட்டார்கள்..எதிர்புறத்தில பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் தங்கள்  கர்சிப்பை கொடுத்து முகத்தை துடைத்துக்கொள்ள சொன்னார்கள்.. நான்  அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன் அவர்கள் கர்சிப்பை வாங்க மறுத்தேன்..

என் பைக்கில் முன் சீட்டில் இருந்து துணி  எடுத்து என்னை சுத்தபடுத்திக்கொண்டேன் எனக்கு பெரிய வருத்தம் முதல்நாள்தான் வண்டியை வாட்டர் சர்விஸ் செய்தேன்.. எப்போது நான் வண்டியை வாட்டர் சர்விஸ் செய்தாலும் அன்று மழை வரும்... சரிநாளை காலை வண்டியை கழுவ வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து குளிக்கும் போது, என் உடலில் வழக்கத்துக்கு மாறாக சோப்பை அதிகம் கரைய விட்டேன்..வெளியே சட சடவென சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தால், மழை சோ என்று பெய்ய ஆரம்பித்தது. எனது பைக் தேமே என்று மழை பெய்யும் சுரனை இல்லாமல் நனைந்து கொண்டு இருந்தது...

=============



புதியதலைமுறை செய்திகளில் டீசர் நேரங்களில் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் பேட்டிகளை நான் ரசித்து பார்க்கின்றேன்... மிக முக்கியமாக உணவு சங்கிலி குறித்து அவர் எடுத்து சொல்லிய அந்த சில நிமிடங்கள் செவிட்டில் அறைந்தது போல இருந்தது.. வாழ்த்துகள்.. அந்த பேட்டியை எடுத்த குழுவினருக்கு...



================

ஒரு வாரத்துக்கு முன் ஒரு பெண் செய்தி வாசிப்புக்கு கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.. ஆனால் கடவுள் ஏமாற்றிவிட்டார்...



புதிய தலைமுறை செய்திவாசிப்பாளர் சரண்யா இன்றைக்கு செய்தி வாசிக்கும் போது பதட்டத்தில் எந்த சின்ன இடர்பாடும் இருக்க கூடாது என்று கருமாரி மகமாயி எல்லாரையும் வேண்டிகிட்டு செய்தியை பார்த்தா? கருமம் புடிச்ச கிரிக்கெட் நியூஸ் வாசிக்கும் போது லைட்டா தித்தி பேசிட்டாங்க....கருமாரி மகமாயி உங்க ரெண்டு பேருக்கும் மனசாட்சியே இல்லையா??

==============

ஓப்பனிங்க அங்கு இருக்கின்றது இங்கு இருக்கின்றது என்று பலர்  எனக்கு சொன்னாலும், 50 வயதை கடந்த ஆல் இந்தியா ரேடியோவில்  பணி புரிந்து கொண்டு இருக்கும் கீதப்பிரியன் ஐயா அவர்களை நினைத்து ரொம்ப பெருமையாக இருக்கின்றது...அவர் வேலை இருக்கின்றது என்று மட்டும் சொல்லாமல் அதை பாலோ  பண்ணுவதை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கின்றது.. அவரிடம் அந்த குணத்தை நான் கற்றுக்கொண்டேன்..  சமீபத்தில் சின்ன விபத்தில் காலில் காயம் ஏற்ப்பட்டுவிட்டது... ஐயா விரைவில் குணம் பெற்று வர இறைவனை பிரார்த்திக்கின்றேன்



==================   

ஒரு பட பிரிவியூவில்தான் நண்பர் கேபிள் அவரை அறிமுகபடுத்தினார்.. பெயர் கார்த்திக் நாகராஜன்..53 வயது என்று சொன்னால்தான் நம்ப முடிகின்றது... இளையராஜாவுடன் சிம்பனி புராஜக்ட்டில் பணி புரிந்தவர்....நிறைய இசை குறித்தான விஷயங்களை  பகிர்ந்து கொள்ளுகின்றார்.. இசை குறித்த விஷயங்களில் நான் ஞான சூன்யம்...ஆனால்  அவரிடம் பேசும் போது நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்கின்றேன்...மிக்க நன்றி.. கேபிள் மற்றும்  கார்த்திக்சார்..



============

நன்றாக எங்கள் வீட்டு டிவி ஓடிக்கொண்டு இருந்தது.. இப்போது சிவப்பு நிறம் மட்டும் வருவதில்லை... எப்போதாவது போனால் போகின்றது என்று வந்துதொலைக்கின்றது.. இந்த நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனை.. அதனால் படம் பார்க்கவே பிடிக்க மாட்டேன் என்கின்றது..நிறைய படம் பார்த்து இருக்க வேண்டும்.. மிஸ்சிங்.. எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?? பொதுவாக நான் பச்சை பச்சையாக பேசும் ஆள்.. பச்சை கலர்தான் நியாயப்படி வராமல் இருக்கனும்...



====================



ஏர்டெல் கம்பெனி பேமானிங்க ஒருநாளைக்கு எத்தனை வாட்டிதான், டியர் கஸ்டமர்  எஸ்டிடி ரேட்டை நாங்க ஸ்லாஷ் பண்ணிட்டோம்னு மெசேஜ் அனுப்பறது?? ஒரு தடவை அனுப்பிச்சா பரவாயில்லை டெய்லி ஒரு நாளைக்கு பத்துவாட்டியா அனுப்பறது...??  பரதேசிபசங்க,..,



==================



பிலாசபி பாண்டி...

 வாழ்க்கை போராட்டத்தில் நாம் செய்யும் செய்ல்களை நாமே மறந்துவிடும் வேளையில்,நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நாம் செய்த செயல்கள் அவர்களின் நினைவில் நிற்ப்பதே நமக்கான பெரிய அங்கீகாரம்... இசையமைப்பாளர்,ஜான்வில்லியம்ஸ்
==========



எதிர்பார்ப்பதை விட எதிர்கொள்வதை கற்றுக்கொள்.. ஏனென்றால் இங்கு எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை.. எதிர்கொள்ளும் வாழ்க்கையே நிலைக்கின்றது...

======

நான்வெஜ் 18+



ஒரு பெண்ணோடு டிஷர்ட்டுல முன்னாடி பக்கம் ஒரு எரோப்ளேன் படம் இருந்திச்சி.. ஒரு பய அதை ரொம்ப நேரமா உத்து பார்த்துகிட்டே இருந்தான்..அதை பார்த்துட்டு அந்த பொண்ணு அந்த பயகிட்ட கேட்டா.. ஏன்டா இதுக்கு முன்ன நீ ஏரோப்ளேன் பார்த்ததே இல்லையான்னு கேட்டா.. அதுக்கு அவன் சொன்னான்.. நிறைய ஏரோப்ளேன் பார்த்து இருக்கேன்.. பட் இந்த மாதிரி ஏர்போர்ட் நான் எங்கேயும் பார்த்தது இல்லை...

================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

நினைப்பது அல்ல நீ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

27 comments:

  1. //.மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.. நான் அந்தஅளவுக்கு ஒர்த் இல்லை என்று//


    உங்களூக்குள்ள இப்படி ஒரு தன்னடக்கமா?
    நான் காண்பது என்ன கனவா?

    ReplyDelete
  2. வால் உண்மைதான்.. நம்புங்க...

    ReplyDelete
  3. அண்ணே வணக்கம், ஏர்போர்ட் சூப்பர்

    ReplyDelete
  4. பைக்கில் வரும் போது நீங்கள் கழிவு நீரில் நீராட்டப்பட்டதும், வாட்டர் வாஷ்க்கு விட வேண்டும் என நினைக்க வீட்டிற்கு வந்ததும் மழை பெய்ததும் அழகான சிறுகதை அனுபவம் தந்தது. சபாஷ் தோழா!

    ReplyDelete
  5. DND Do Not Disturb - இதை Activate செய்து விடுங்கள். எந்த பரதேசியும் Call பண்ண மாட்டான். Promo offer தகவல் அனுப்ப மாட்டான்.


    ///ஏர்டெல் கம்பெனி பேமானிங்க ஒருநாளைக்கு எத்தனை வாட்டிதான், டியர் கஸ்டமர் எஸ்டிடி ரேட்டை நாங்க ஸ்லாஷ் பண்ணிட்டோம்னு மெசேஜ் அனுப்பறது?? ஒரு தடவை அனுப்பிச்சா பரவாயில்லை டெய்லி ஒரு நாளைக்கு பத்துவாட்டியா அனுப்பறது...?? பரதேசிபசங்க,..,

    ReplyDelete
  6. /// முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கின்றார்//

    பிரதமருக்கு...

    ReplyDelete
  7. "குஜராத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு சாத்தான் வேதம் ஓதி விட்டு இப்போதுதான் முடிந்து இருக்கின்றது..ஊழல் செய்த அரசியில்வாதிகளை மக்கள் மறந்து விடுவார்கள்.. கேஸ் நடந்து கொண்டு இருக்கும் போதே திரும்பவும் முதல்வராக கூட வராலாம்...ஆனால் மதத்தின் போர்வையில் கலவரத்துக்கு துனை போனவர்களை மக்கள் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டார்கள்"

    200% ITS TRUE.

    ReplyDelete
  8. //கலைஞர் மட்டும் ஆட்சியில் இருந்து இப்படி ஒரு லட்டர் எழுதி இருந்தா வானத்துக்கு பூமிக்கு குதிச்சி இருப்பாங்க//

    எனக்கும் இப்படித் தோணிச்சு! :-)

    //பேட்டி ஒளிபரப்பான போது எனது செல்போனில் வாழ்த்துகள் வந்து குவிந்தன.//

    அலுவலகம் இருந்ததால் பார்க்க முடியவில்லை. வாழ்த்துச்செய்தி அனுப்ப நினைத்தும் பணிப்பளு காரணமாக மறந்துவிட்டேன்.

    வீடியோ பதிவு செய்து வைத்திருந்தால், யூ-ட்யூபில் தரவேற்றலாமே?

    //வீடு எங்கும் விளையாட்டு சாமான்கள்..//

    பெருமிதம் தொனிக்கிறதே!
    குட்டிக்கு வாழ்த்துகள் ஜாக்கி! :-)

    ReplyDelete
  9. metro train project oru nalla thittam...epothan purinjikuvangalo theriala...

    ReplyDelete
  10. Jackie,
    Kalakal as usual. Athu yepdi jackiekku mattum ponnunga mattumae help seithu?

    ReplyDelete
  11. நான் ஒன்று சொல்லவா? நான் கூட பாதாள சாக்கடை தொட்டியில் ஒருவாட்டி விழுந்தேன், ஆனால் அதன் பிந்தான் என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது, எனவே விரைவில் எதிர்பாருங்கள்!

    ReplyDelete
  12. ///ஏர்டெல் கம்பெனி பேமானிங்க ஒருநாளைக்கு எத்தனை வாட்டிதான், டியர் கஸ்டமர் எஸ்டிடி ரேட்டை நாங்க ஸ்லாஷ் பண்ணிட்டோம்னு மெசேஜ் அனுப்பறது?? ஒரு தடவை அனுப்பிச்சா பரவாயில்லை டெய்லி ஒரு நாளைக்கு பத்துவாட்டியா அனுப்பறது...?? பரதேசிபசங்க,..,/////////

    SAME BLOOD :(

    ReplyDelete
  13. உங்கள் எழுதும் ஸ்டைல் சூப்பர் , நீங்கள் எழுத்து உலகில் மிகப்பெரிய மனிதராக வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. //ஆனால் மதத்தின் போர்வையில் கலவரத்துக்கு துனை போனவர்களை மக்கள் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டார்கள்.//
    கலவரத்திற்கு பின் தான் இரண்டு (மூன்றா?) தேர்தலில் மோடி பெரு வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்று, மக்கள் கலவரத்தையும் மறந்து விடுகிறார்கள். இல்லையேல், மோடி அதற்கு காரணம் இல்லை!

    ReplyDelete
  15. டியர் ஜாக்.கி...

    சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் - இந்த வாரம் பல்சுவை..
    அருமை..

    அம்மாவில். ஆரம்பித்து..பெண்ணில் முடித்தது..

    முரண்டு பிடிப்பதும்..பின் பின்வாங்குவதும்... மக்கள் ஆட்சியின் வெற்றி..

    உன்னை..நினைத்தவுடன்..உருகி ஊற்றும்..எனதன்பு.. ---> glacier collapse

    மக்கள் தொலைகாட்சியில் உங்கள் பேட்டி..முடிந்தால் லிங்க் தாருங்கள் - இதற்கெல்லாம் உங்களுக்கு பாராட்டு இல்லை.. காரணம் இதெல்லாம் படிக்கட்டுகள் நீங்கள் அடையகூடிய மாபெரும் வெற்றிக்கு..

    வெற்றியின் சுவை தொட்டு.. உங்கள் கண்கள் கலங்கும் போது.. உங்களை தோள் சுமக்க..நாங்கள் இருக்கிறோம்.. Don't worry..Be Happy and be stay on the line....
    -------------->
    "ரொம்ப நாட்களுக்கு பிறகு வாழ்த்து செய்திகனை படித்து மெல்லிய புன்னகையுடன் வெட்கப்பட்டேன்..மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.. நான் அந்தஅளவுக்கு ஒர்த் இல்லை என்று...."

    ---> உண்மை தான் உங்களை தவிர வேறு யார் சொல்வார் இப்படி.. - இமையின் அருமை.. கண்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
    --------------->
    "என்னதான் சுத்தபடுத்தி வீட்டை வைத்தாலும் ஒரு அரைமணிநேரத்தில் பழைய குருடி கதவை திருடிகதைதான்...."
    ----> அன்பு யாழினிக்கு அப்பாவுக்கு அதிகம் வேலை வைக்காதே.. ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டும் கலைத்து போடு..
    --------------->
    "...அப்படி ஒரு நிலை எனக்கும் சமீபத்தில் வந்தது..."


    எந்த மனிதனும் அசிங்கத்தையும், அவமானத்தையும் வெளியில் சொல்ல மாட்டான்..மறக்க மட்டுமே முயற்சிப்பான்..நீங்கள் மட்டுமே.. அதில் விதி விலக்கு.. இந்த ஒன்று மட்டும் தான் உங்களை இத்தனை உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது.. yes u r a real Man..

    --------------->

    "..அதை பார்த்துட்டு அந்த பொண்ணு அந்த பயகிட்ட கேட்டா.. ஏன்டா இதுக்கு முன்ன நீ ஏரோப்ளேன் பார்த்ததே இல்லையான்னு கேட்டா.. அதுக்கு அவன் சொன்னான்.. நிறைய ஏரோப்ளேன் பார்த்து இருக்கேன்.. பட் இந்த மாதிரி ஏர்போர்ட் நான் எங்கேயும் பார்த்தது இல்லை..."

    பாஸ்...உலகத்தின் ஒட்டு மொத்த தமிழர்களும் ஒருமித்து சொல்லும் ஒரு வார்த்தை.." -

    " ஜாக்கி ஒரு சிறந்த Pilot என்று..."



    என்றும் அன்புடன்..

    NTR.

    ReplyDelete
  16. gujarat mudalvarai sathan endru solli neengalum
    secularvathi ayittinga... ungalukku entha
    minority vote thevaipadhu....
    abvpchandran

    ReplyDelete
  17. நிறைய தகவல்கள் இலவசமாக இங்கு தான் கிடைக்கும். ஒவ்வோன்னும் ஒரு விதம்... அரசியல் மேட்டர் சூப்பர்..

    ReplyDelete
  18. Sorry to hear about your bike incident. If I were in your situation, I would be chasing the car. At least you had the sensibility to let it go.

    I think it is time for you to get a new TV.

    ReplyDelete
  19. மக்கள் தொலைக்காட்சியில் பேட்டியளித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே...

    நீங்கள் இன்னும் புகழ் பெறவேண்டும்....

    ReplyDelete
  20. \\குஜராத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு சாத்தான் வேதம் ஓதி விட்டு இப்போதுதான் முடிந்து இருக்கின்றது..ஊழல் செய்த அரசியில்வாதிகளை மக்கள் மறந்து விடுவார்கள்.. கேஸ் நடந்து கொண்டு இருக்கும் போதே திரும்பவும் முதல்வராக கூட வராலாம்...ஆனால் மதத்தின் போர்வையில் கலவரத்துக்கு துனை போனவர்களை மக்கள் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டார்கள்..//

    உங்களை ஒரு அறிவாளி என்று நினைத்திருந்தேன்.. ஆனால் நீ ஒரு முழு முண்டம் என்று இப்போதான் தெரிகிறது.

    ReplyDelete
  21. இந்த வார சான்வேஜ் & நான்வெஜ் சூப்பர் அண்ணே.

    ReplyDelete
  22. Super... Super...

    -S.kumar

    ReplyDelete
  23. நான்வெஜ் 18+ ......சம கலக்கல்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner