Dookudu/2011(தூகுடு) தெலுங்கு சினிமா விமர்சனம்..




நெடுநாளைக்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வெளிவந்து இருக்கும் படம் து’குடு…
அதீதிக்கு பின்பு மகேஷின் படங்கள் எதுவும் சொல்லிக்கொள்வது போல இல்லை என்பதே நிதர்சன உண்மை.. சிலர் அதீதி படமே பெயிலியர்தான் என்று  கொடி பிடிப்பவர்களும் உண்டு.. எனக்கு இதுக்கு முந்தைய படமான கலேஜா கூட எனக்கு  பிடித்து இருந்தது… சார்.. அப்ப இந்த படம்…??? முழுசா படிங்கப்பா…
============ 
தூகுடு படத்தின் கதை என்ன??


சங்கர் நாரயணன் (பிரகாஷ்ராஜ்) பார் போற்றும் நல்லவர்… அவர் ஒரு எம்எல்ஏ… எல்லாருக்கும் நல்லது செய்யறார்.. அந்த ஊரே அவரை கொண்டடுகின்றார்கள்.. சார் இந்த காலத்துல எம்எல்ஏ எப்படி நல்லவனா இருக்க முடியும்?? யோவ் சினிமா கதையாஇது.. அதனால இருக்கலாம்னு வச்சுக்கோ..அவரை அவரது எதிரிகள் கொலை செய்ய முயற்ச்சிக்கிறாங்க.. அதுல அவரு தப்பிச்சிட்டாலும்,, உலகுக்கு அவர் செத்துட்டுதா பொய்யா செய்தி பரப்பிடுறாங்க…அவரோட மகன் அஜய் (மகேஷ்பாபு) வளர்ந்து ஐபிஎஸ்  ஆகி தன் அப்பாவை கொல்ல முயற்ச்சித்தவங்களை பழி வாக்குவதே கதை என்றாலும் நிறைய லாஜிக் ஓட்டையோடு சொல்லி இருக்கின்றார்கள்..அது என்ன என்பதை திரையில் பாருங்கள்.
=========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில….

பிரேமுக்கு பிரேம் மகேஷ்பாபு மிளிர்கின்றார்..யாருக்கா படம் பார்க்க வருகின்றார்கள்?? மகேஷ்பாபுவுக்காக.. ரைட் அப்ப அவரை எல்லா பிரேம்லயும் காட்டறோம் என்று டைரக்டரும் சீனு வைட்லாவும் கேமராமேன் கேவி குகனும் சத்தியம்  பண்ணி விட்டு வந்து ஷாட் எடுத்து போலவே இருக்கின்றது…

இந்த படத்தை  வெற்றிப்படமாக ஆக்கியே தீருவேன் என்று உழைக்கும் போது,பதட்டத்தில் சில இடங்களில் நம்மை அறியாமல் சொதப்புவுமே.. அது போல பல இடங்களில் சொதப்பியது காட்சிகளில் தெரிகின்றது…

மகேஷ்பாபுவை பார்த்தால் பொறாமையாக இருக்கின்றது… அவ்வளவு இளமையாக இருக்கின்றார்…

பானா காத்தாடி, மாஸ்க்கோவின் காவேரி போன்ற ஆவரேஜ் தமிழ் படங்களில் தலைகாட்டியவர் சமந்தா..தெலுங்கு பக்கம் போய்..பிருந்தாவத்தில் ஜுனியர் என்டிஆர் ஜோடி… இப்போது மகேஷ்பாபுவுடன் ஜோடி என அவரது வளர்ச்சி புருவத்தை உயர்த்துகின்றது…இந்த படத்தில் படம் முழுக்க மகேஷ் இருப்பதால்.. இரண்டு பாடல்களில் மட்டும் தன் திறமையை காட்டி இருக்கின்றார்.. லேசாக சின்ன தொப்பை போட்டு இருக்கின்றார்..தொப்புளில் மணி போல ஒரு சமாச்சாரத்தை மாட்டிக்கொண்டு வெறுப்பு ஏற்றுகின்றார்…தெலுங்கு கலர் கலர் காஸ்ட்டுயூம்களில் ஆட்டம் போடும் அந்த கடைசி பாடல் மட்டுமே கேட்கும் ரகம்.

படத்தில் என்னை நிமிர்ந்து உட்கார வைச்சது ஒரு பாடல்..அந்த பாடல் ஒரு கிளப் ஐட்டம் சாங்.. டிக்கி மட்டும் ஆட்டுவது போல ஒரு சாங்.. பாம்பே மாடல்களை வைத்து அந்த சாங்கை எடுத்து இருக்கின்றார்கள்… அந்த மூவ்மென்டுகள் ரசிக்க வைக்கின்றன..

பிரம்மானந்தமும் நாராயணவாவும் வரும் காட்சிகளில் வயிற்றை பதம் பார்க்கவைக்கின்றார்கள்..முக்கியமாக நாராயணா டயலாக் சொல்லி விட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்வது சான்சே இல்லை.. போக்கிரி டயலாக்கை சொல்வது.. மற்ற நடிகர்கள் போல இமிடேட் செய்வது.. முக்கியமாக எந்திரன் ரஜினி போல இமிடேட் செய்வது அதகளம்…
வழக்கம் போல குணச்சித்திர நடிப்புக்கு பிரகாஷ்ராஜ் நல்ல தேர்வு…

இஸ்தான்புல்லில் எல்லாம் கதை பயணிக்கின்றது...ஓடு போட்ட வீடுகளுக்கு மேல் ஒரு ஒற்றையடி பாதை போல ஒரு சிமென்ட் கட்டை கட்டி இருப்பதை ஏதோ ஒரு ஆங்கில படத்தில் பாத்து இருக்கேன்.. ஆனால் அந்த படம் எந்த படம் என்று நினைவுக்கு வந்து தொலையமாட்டேங்குது...

இந்த படம்அக்மார்க் டிபிகல் தெலுங்குபடம்…லாஜிக் சுத்தமாக இல்லை.. ஆயிரம்தான் மகேஷ்பாபு மாஸ் ஹீரோன்னாலும் ஹைதராபாத்தில் டைனோசரோடு சண்டை  போடுகின்றார் என்று சொன்னால் யார்தான் நம்புவது..



======
படக்குழுவினர் விபரம்

Directed by Srinu Vaitla
Produced by Ram Achanta
Written by Gopimohan
Starring Mahesh Babu
Samantha
Abhimanyu Singh
Kota Srinivasa Rao
Vennela Kishore
Chandramohan
Music by Thaman
Editing by M. R. Varma
Release date(s) September 23, 2011[1]
Country India
Language Telugu
===========

பைனல்கிக்..

எனக்கு மகேஷ்பாபு பிடிக்கும் அதனால் பார்த்தேன்...மகேஷ்பாபு விசிறிகள் படத்தை ஒருமுறை பார்க்கலாம் மற்றவர்கள்.. அது உங்கள் இஷ்ட்டம்..டியர் மகேஷ்பாபு பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்.. டைம்பாஸ் படத்தின் கேட்டகிரியில் கூட இந்த படத்தை வைக்க முடியவில்லை....சார் எனக்கு எப்படி இருந்தாலும் மகேஷ் ஸ்டைல் பிடிக்கும் சார்.. அப்ப போய் பாருங்க.. செமையா இருக்கார்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

நினைப்பது அல்ல நீ...
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

  1. //ஓடு போட்ட வீடுகளுக்கு மேல் ஒரு ஒற்றையடி பாதை போல ஒரு சிமென்ட் கட்டை கட்டி இருப்பதை ஏதோ ஒரு ஆங்கில படத்தில் பாத்து இருக்கேன்//

    That film is "The International"

    ReplyDelete
  2. // அவரது வளர்ச்சி புருவத்தை உயர்த்துகின்றது… //

    புருவத்தை மட்டுமா...

    ReplyDelete
  3. mahesh ku kaga than naanum paarthen. padam onnum solra mathiri illa . BUT , Mahesh ooda dialogue delivery nachh..

    ReplyDelete
  4. //பிரேமுக்கு பிரேம் மகேஷ்பாபு மிளிர்கின்றார்..யாருக்கா படம் பார்க்கவருகின்றார்கள்?? மகேஷ்பாபுவுக்காக.. ரைட் அப்ப அவரை எல்லாபிரேம்லயும் காட்டறோம் என்று டைரக்டரும் சீனு வைட்லாவும்கேமராமேன் கேவி குகனும் சத்தியம் பண்ணி விட்டு வந்து ஷாட்எடுத்து போலவே இருக்கின்றது…//
    அவருதானே சார் ஹீரோ? வேற யார காட்ட முடியும்?!

    //படத்தில் என்னை நிமிர்ந்து உட்கார வைச்சது ஒரு பாடல்..அந்த பாடல் ஒரு கிளப் ஐட்டம் சாங்.. டிக்கி மட்டும் ஆட்டுவது போல ஒரு சாங்.//
    டிக்கி-ஆ? அப்டின்னா என்னங்கணா?!

    உங்களுக்கும் சினிமா பிடிக்கும் என்பதால்...இதோ சில குறிப்புகள்

    http://apdipodu.blogspot.com/2011/09/blog-post_23.html
    http://apdipodu.blogspot.com/2011/08/1_31.html

    -பருப்பு ஆசிரியன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner