The Housemaid (2010 film) உலகசினிமா/சவுத்கொரியா... வேலைக்கார பெண்ணின் காதல்..










இந்த படம் ஆர் ரேட்டிங் திரைப்படம்..  கண்டிப்பாக வயதுக்கு வந்தோருக்கானது...



ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன...தற்கொலைகள் சாதாரணமானவை அல்ல..
அது மரணத்தை துச்சமாக மதிக்கும் ஒருவனின் வாழ்வியல் விடுதலைக்கான மாற்று வழி..



திருப்பூரில் கடந்த ஆறுமாத்தில் மட்டும்300க்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.. நிறைய காரணங்கள் இருக்கலாம்..ஒவ்வோரு மரணத்துக்கு பின்னும் நிறைய வலிகள் வேதனைகள் இருக்கின்றன. வெளியே சொல்ல முடியாத கதைகள் இருக்கின்றன..நம்பமுடியாத திருப்பு முனைகள் அடங்கி இருக்கின்றன.



இன்றைய தினசரிகளை எடுத்து புரட்டினால்  பெண்கள் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் ஒரு நாளைக்கு ஒன்று இரண்டாவது கண்ணில் சிக்கும்... அதில்  பெரும்பாலும் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சொல்லும்.. ஆனால் உண்மை வேறு.. கணவனின் கொடுமை,மாமியார் நாத்தனார் கொடுமை, கர்பமாக்கி கைவிட்ட காதலன்,ரத்த உறவுகளின் மீதான காதல் என்று அந்த தற்கொலைக்கதைகளை அடுக்கிகொண்டே போகலாம்.



காமம் பொதுவானது..அது ஏழை பணக்காரன் என்று பாகுபாடு காட்டியதில்லை..ஆனால் ஒரு பணக்கார குடும்பம் காமத்தினால் காதலினால் ஏற்படும் சிக்கலை ஒரு போதும் பெருதுபடுத்துவதில்லை..ஆனால் நடுத்தர குடும்பம் அப்படி அல்ல..அதை விட விளம்புநிலை மனிதர்கள்... தங்கள் உயிரையே கொடுத்து விடுவார்கள்..


அப்படி அடுத்த வேலை சோத்துக்கு கஷ்டப்படும்,  அப்பா இல்லாத ஏழ்மை குடும்பத்தில் வசிக்கும் வயதுக்கு வந்த பெண், வறுமை சூழல் காரணமாக ஒரு செல்வந்தர் வீட்டுக்கு  வேலைக்கு போய், ஹவுஸ்ஓனரின் காம இச்சைக்கு பலியாகி அவள்  என்னவாகின்றாள் என்பதே இந்த படத்தில் சொல்ல வருகின்றார்கள்..

=============

தி ஹவுஸ்மெயிட் படத்தின் கதை என்ன??



Eun-yi வறுமை குடும்பத்தில் உழலும் ஏழைப்பெண்.. அப்பா இல்லை.. அம்மா மட்டும்தான்.. பெரிய பண்ணகார செல்வந்தர் Hoon அவனது மனைவி ஹாரா..ஹாரா கர்பமாக இருக்கின்றார்..நாமி என்ற ஆறு வயது பெண்குழந்தை இருக்கின்றது.. அதே வீடடில் வேலை 20 வருடம் வேலை செய்யும் வேலைக்கார ஆயாவிடம் உதவிக்கு ஒரு பெண் வேண்டும் என்று சொல்ல  அந்த பாட்டி Eun-yi வேலைக்கு  சேர்க்கின்றாள். மனைவி நிறைமாத கர்பினி காம இச்சைக்கு வழக்கம் போல தமிழ்சினிமாவில் மச்சினி பலியாவாள்.. இந்த படத்தில் வேலைக்கார பெண் Eun-yi  அதனால் அவள் கர்பமாகின்றாள்  அவளின் முடிவு என்ன என்பதை திரையில் பாருங்கள்..


===============


படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


படம் முழுக்க  ஏழு பேர்தான்... முதல்  காட்சியில் தற்கொலை செய்த கொள்ளும் பெண்ணை காட்டும் போது மட்டும்தான் ஜனசந்தடி ஆனால் அதுக்கு பிறகு படத்தில் பெரும் பாலும் இந்த ஏழே கதாபாத்திரங்கள்தான்...



இந்த படம் 1960 ல் வெளிவந்த படத்தின் ரிமேக்...


செல்வந்தர் வீடு என்பதற்கு சின்ன ஆறுவயது பெண் பள்ளி விட்டு வீடு வரும்  போது அந்த சின்ன பெண்ணின் அலட்டலில் தெரிந்து விடுகின்றது பணக்காரத்தனம் என்றால் என்னவென்று... அதாவது இருபது வருடம் அந்த வீட்டில் வேலை செய்யும் பாட்டிக்கே அதுதான் நிலைமை...



ஆனால் அந்த சிறும நாமி  Eun-yi வோடு நட்பாய் ஒட்டிக்கொள்கின்றாள்..




இப்படி ஒரு பணக்கார வாழ்க்கை, இது போலான அழகான குழந்தை நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று வறுமையில் வாடும் வயதுப்பெண் நினைப்பது இயல்பு அல்லவா அதனை காட்சிகளில் இயக்குனர் சொல்லிய விதம் கவிதை.


எல்லா காட்சிகளும் மிக கவிதையாக மெனக்கெட்டு எடுத்து இருக்கின்றார்கள்..



20 வருடங்களாக வேலைக்காரியாக  இருக்கும் பெண்மணியின் நடிப்பும் அந்த பெண்ணின் தீர்க்கமான பார்வையும் அருமை.. அதுமட்டும் அல்ல.. அந்த வீட்டில் நடக்கும் சின்ன சின்ன மூவ்களை கவனிப்பது அற்புதம்...




நிறைமாத கர்பினியோடு ஹாரா தன் கணவன் ஹுன்னோடு உறவு கொள்வதும் அவளால் முடியாமல்,கணவன் தன்னை வெறுத்து விட்டு யாரோடாவது உறவு கொள்வானோ? என்ற அந்த பயத்தில், கணவனுக்கு வாய்புணர்ச்சி  செய்வதும் பெண்களின் அடிப்படை பயத்தையும், ஆண் சார்ந்த இந்த சமுக வாழ்க்கையை துறக்க  இயலாத பயத்தையும் காட்டுகின்றது.




வென்னீர் குளியல் முடித்து அவள் அறையில் சும்மா இருக்கும் Eun-yiயை செல்வந்தர் ஹுன் அவளை தொடுவதும்... மறுப்பு சொல்வதா வேண்டாமா என்று குழம்புவதும்,உள்ளே காமம் புரண்டாலும் அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் மரியாதை நிமித்தமாக விழிப்பது என அந்த நொடியில் அந்த பெண்ணின் தவிப்பை  காட்சிபடுத்தி இருப்பது செமை.....


தன்னோடு வேலைக்கரியாக பணியுரியும் பெண்ணின் பழக்க மாறுதல்களை கவனிக்க ஆரம்பித்த உடன் அவளை பாலோ  செய்வதும் ஒரு இரவில் இரண் பேரும் உறவு கொள்ளும் போது கிழவி முகத்தில் கொடுக்கும் எக்ஸ்பிரஷனும்.. அறையில் பேசும் பேச்சுகளை கேட்டு விழிப்பதும்... 

உதாரணமாக  உறவின் உச்சத்தில் விந்தை பீச்சுவேன் என்று ஹுன் சொல்ல அதுக்கு Eun-yi வேண்டாம் என்று பயத்தோடு சொல்ல...சட்டென கிழவிக்கு மிட் ஷாட்டில் சரி உன் வாயை காட்டு என்பதாக டயலாக் கழிவி வேட்கபதும் பார்வையாளன் கேட்பதுமாக காட்சி படுத்தி இருந்தாலும் வேற ஒரு டுவிஸ்ட் வைத்து இருப்பது எதிர்பார்க்காத ஒன்று..



லஸ்தர் விளக்கை துடைத்து கொண்டு இருப்பவளை வேண்டும் என்றே தள்ளி விடுவது , குழந்தையை களைக்க  சொல்வது என்று  அவளை படுத்தி எடுப்பதும்,  ஹாரா அவள் என் வயறிற்றில் இருக்கும் குழந்தையை அப்படி  பார்த்து கொள்கின்றாள்.. அதனால் அவள் வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க சம்மதிக்கமாட்டாள் என்று சொல்வது சிறப்பு..



Eun-yi கேட்பது எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என் குழந்தையோடு என்னை வாழ விடுங்கள் என்பது தான் ஆனால் அவள் எடுக்கும் முடிவு தமிழகத்தில் சில பெண்கள் எடுக்கும் முடிவுதான்..



இந்த படம் 2010ல் நடந்த, கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கு பெற்று ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது....

 =============

படக்குழுவினர் விபரம்.


இயக்குனர் Im Sang-soo தனது குழுவினருடன்..
 ======

Directed by     Im Sang-soo

Produced by    Jason Chae

Screenplay by Im Sang-soo

Starring           Jeon Do-yeon

Lee Jung-jae

Music by         Kim Hong-jip

Cinematography          Lee Hyung-deok

Editing by       Lee Eun-soo

Studio             Mirovision

Distributed by             Sidus FNH

Release date(s)            May 13, 2010

Running time 107 minutes

Country           South Korea

Language        Korean

Admissions     2,289,270 (South Korea)

Gross revenue             17 billion won (South Korea)

 =========
 படத்தின் டிரைலர்




===========
பைனல்கிக்.

இந்த படம்  பார்த்தே தீர வேண்டிய படம்... வசதி இல்லை என்றகாரணத்தால் ஆசாபாசங்கள் இல்லை என்று சொல்லி விட முடியாது..காதல், காமம், பொருளாசை போன்றவை எல்லோருக்கும் பொதவானது என்பதை வலியூறுத்தும் படம்... இந்த படம்  சென்னை முவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது. செல் 9003184500

=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

2 comments:

  1. //கணவனின் கொடுமை,மாமியார் நாத்தனார் கொடுமை, கர்பமாக்கி கைவிட்ட காதலன்,ரத்த உறவுகளின் மீதான காதல் என்று அந்த தற்கொலைக்கதைகளை அடுக்கிகொண்டே போகலாம்.//

    இது போன்ற நிகழ்வுக்கு பத்திரிக்கையாளர்கள் தங்களின் மனிதாபிமானத்தை காட்டுகின்றனர்.. அவர்களுக்கு உண்மை தெரிந்து இருந்தும் அதை வெளியிடுவது இல்லை...

    ReplyDelete
  2. உங்களின் முயற்சியில் இந்த படம் பலரை சென்று அடைந்துவிடும்... உங்களின் தேடல் இன்னும் சிறப்புர வாழ்த்துகள் சார்...இந்த படத்தை நான் பார்ப்பேனா என்ரது சந்தேகம் தான்... மன்னித்துக்கொள்ளவும்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner