Hall Pass-2011-கணவனுக்கு மனைவி கொடுக்கும் அன்பு பரிசு..



டைம்பாஸ் படம் எழுதலைன்னு நண்பர்களுக்கு பெரிய வருத்தம்...டைம்பாஸ்படங்கள் ஒன்று கொலை படங்களாக இருக்கும் அல்லது செக்ஸ் காமெடி படங்களாக இருக்கும்..
அது போல படங்கள் சமீபத்தில் அதிகம் பார்க்கவில்லை என்பதே உண்மை.
ஹால்பாஸ்ன்னு ஒரு படம் பார்த்தேன்... நல்ல செக்ஸ் காமெடி படம்தான்...


============
Hall Pass-2011/ஹால்பாஸ் படத்தின் கதை என்ன??

கான்செப்ட் ரொம்ப சிம்பிள்


கல்யாணத்துக்கு அப்புறம்   நிறைய பெண்கள் மீது காதலும் காமமும் வரும் ரிக் (ஓவல்வில்சன்) க்கு, மனைவி சொல்லுகின்றாள்.. இப்படி பொம்பளை பொம்பளைன்னு அலையறியே...போ ஒரு வாரம்  யாரு கூட வேனா படுத்துக்கோ.. என்னவேனா செஞ்சுகிக்கோ.. ஆனா ஒரு வாரம்தான் டைம்..

நான் எந்த  கேள்வியும் கேட்கமாட்டேன்  சென்று வா....என்று உங்கள் மனைவி சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்.?.ஐ ஜாலி என்று வெளியே  சொல்லாவிட்டாலும் மனதிலாவது நினைக்கமாட்டீர்களா? என்ன?? ஆனால் அந்த முடிவை கணவன் எடுக்கவில்லை மனைவிதான் சொல்லுகின்றாள்..அந்த சந்தோஷ செய்தியை தனது நண்பன் பிரிட் (ஜேசன்) இடம் சொல்லுகின்றான்.. பிரிட் தன் மனைவியுடம்  கெஞ்சி குத்தாடி ஒரு வாரம் பர்மிஷன் வாங்கி விடுகின்றான்..
அந்த ஒரு வாரத்தில் இரண்டு நண்பர்கள் அவர்களின்  மனைவிமார்களை பிரிந்து இருக்கின்றார்கள்...அதே போலத்தான் மனைவிமார்களும்..இந்த ஒரு வாரத்தில் இந்த இரண்டு கப்புள் வாழ்க்கையில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றம்தான் இந்த படத்தின் கதை...

யோவ் அது எல்லாம் இருக்கட்டும்.. இந்த ஹால்பாஸ் அப்படின்னா அர்த்தம் என்ன???

ஒரு  வாரம் எங்கேடாவது கெட்டு ஒழின்னு உங்ககிட்ட தாலிக்கட்டிகிட்ட  பொண்டாட்டி தண்ணி தெளிச்சி ஒரு வாரத்துக்கு விட்டா  அதுக்கு பேருதான் ஹால்பாஸ்...
==============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த மாதிரி லோ பட்ஜெட் படங்களை எடுத்து காசை அள்ளும் ஹாலிவுட்டின்  சகோதர இயக்குனர்கள் obby & Peter Farrelly க்கு இது போலான படங்கள் சர்வசாதாரணம்

படத்தில் ஆரம்பத்தில் இருந்து  முடிவு வரை டபுள் மீனிங் காமெடி  ..ச் சே சிங்கிள் மீனிங் செக்ஸ் கமெடிதான்...

ஓவல் வில்சன் மற்றும் ஜேசன் இரண்டு  பேரும்  எப்போது பார்த்தாலும் பெண்களை பற்றியே பேச்சு இருக்க.. அது ஒரு கெஸ்ட் வீட்டில் இருக்கும் வெப்கேமில் மட்டும் இடத்தில் சிக்கல் ஆரம்பிக்கின்றது..


ஓவன் வில்சனுக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள்... ஜேசனுக்கு பிள்ளைகள் இல்லை..

மனைவி வீட்டில் இருக்கும் போது வீட்டுக்கு வெளியே காரில் கண்ணை முடிக்கொண்டு இசை கேட்பது போல கைமுட்டி அடிப்பதும்.. அந்த வழியாக செல்லும் போலிசிடம் மாட்டிக்கொள்வதும் சிரித்து  மாளாத விஷயங்கள்...

இன்னும் நிறைய சொல்லலாம்.. பட் பார்க்கும் போது சுவாரஸ்யம்  போய் விடும் என்பதால் இத்தோடு நான் நிறுத்திபையிங்......

 ===========

படத்தின் டிரைலர்...



========

படக்குழுவினர் விபரம்
Directed by     Bobby & Peter Farrelly
Produced by     Charles B. Wessler
Bradley Thomas
Benjamin Waisbren
Bobby & Peter Farrelly
J.B. Rogers
Mark Charpentier
Screenplay by     Bobby & Peter Farrelly
Pete Jones
Kevin Barnett
Story by     Pete Jones
Starring     Owen Wilson
Jason Sudeikis
Jenna Fischer
Christina Applegate
Stephen Merchant
Joy Behar
Alexandra Daddario
Nicky Whelan
Music by     Jeff Toyne
Cinematography     Matthew F. Leonetti
Editing by     Sam Seig
Studio     New Line Cinema
Conundrum Entertainment
Distributed by     Warner Bros.
Release date(s)     February 25, 2011
Running time     109 mins.
Country     United States
Language     English
Budget     $36 million[1]
Box office     $83,160,734[2]

===========
இந்த சீனுக்கு மட்டும் நீங்க சிரிக்கலைன்னா  நீங்க இந்த படம் பார்க்க லாக்கி இல்லாதாவர்..


======
பைனல்கிக்.......
இந்த படம் டைம்பாஸ்படம்.. கையில ஒரு பெக்கை வச்சிகிட்டு இந்த படத்தை பார்த்தா இன்னும் விழுந்து விழுந்து  சிரிப்பிங்க....படத்தை அறிமுகம் செய்த இளையகவிக்கு நன்றி..சென்னை மூவிஸ் நவ் டிவிடி கடையில் இந்த படம் கிடைக்கின்றது..

=======
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

நினைப்பது அல்ல நீ .......
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

6 comments:

  1. படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன் ...
    ஆம் HALL PASS ஒரு TIME PASS படம்.
    இருந்தாலும் உங்கள் பதிவை படிக்கும்போது மேலும் சுவாரசியம் கூடுகிறது ...

    //இந்த சீனுக்கு மட்டும் நீங்க சிரிக்கலைன்னா நீங்க இந்த படம் பார்க்க லாக்கி இல்லாதாவர்..

    உண்மைதான் ... இதன் தொடரிசியாக வரும் அணைத்து சீன்களும் செம காமெடி ராகம் தான்.

    ReplyDelete
  2. நான் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. விமர்சனம் படித்த பின்னர், பார்க்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  3. மிதமான கவர்ச்சி கலந்த காமெடிகள் எப்போதுமே ரசிக்க வைப்பவை. அவசியம் பார்க்கிறேன்...

    ReplyDelete
  4. American Pie V: Naked mile, also has the same story.

    ReplyDelete
  5. We tried to get this DVD player in recognized DVD library's in Coimbatore but still the demand continues... but we wont give up until we see this movie.. If any one knows were to get this orginal DVD in Coimbatore, do inform us @ kkshyam23@gmail.com

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner