சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(15/09/2011) வியாழன்

ஆல்பம்

தமிழர்களுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.. ஒன்று சேர்ந்து போராடும் குணம் இப்போதுதான் வந்து இருக்கின்றது..மகிழ்ச்சியாக இருக்கின்றது...இது தொடர வேண்டும்...==============

5 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்..கூடங்குளம் பகுதி மக்கள்.. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.... அப்பகுதி மக்களை தவிர வேறுயாரும் பெரிதாய் இது குறித்து அதிகம் அளட்டிக்கொள்ளவில்லை.சுயநலம் காரணமாக கூட இருக்கலாம்.. இந்த மேட்டர் தும்பை விட்டு வாலை பிடிக்கும் செயல்தான்...முதலில் வரும் முன் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை...அணுமின் நிலையம் முக்கால்வாசிவேலை முடிந்து விட்டது..இப்போது எதிர்த்தால் அரசு அந்த பேராட்டத்தை ஒடுக்கவே நினைக்கும்..அதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றது.. அல்லது கவலை கொள்ளாமல் இருக்கின்றது.. நான்  தெரியாமல் கேட்கின்றேன்.தமிழ்நாட்டில் எதுக்கு இரண்டு அணுஉலை?கல்பாக்கம் ஒன்னு போதாதா? இங்க இருந்து கரண்டு எல்லாம் எடுத்துக்குவானுங்க... தண்ணி கேட்டா மட்டும் பக்கத்து ஸ்டேட்காரனுங்க வழிச்சிகிட்டு தேய்ப்பானுங்க.. நாமளும் இறையாண்மை அது இதுன்னு காரணம் சொல்லிகிட்டு மனசை தேத்திக்க வேண்டியதுதான்..ஜப்பான்ல நடந்தது போல அணு விபத்து இந்தியாவில் நடந்தால், எந்த மயிரான் எக்கேடு கெட்டு போனா எனக்கு என்ன? என்பது போலத்தான் நமது அரசுகள் செயல்படும்...அதனால்தான் இப்போது பயத்தில் கூடங்குளம் மக்கள் போராட்டத்தில் குதித்து இருகின்றார்கள்..ஹலோ ஜாக்கி சார்.. ஒரு அரசு எப்படி தன் மக்களை தொங்கலில் விடும்...நம்ம நாடு ஜனநாயகநாடுசார் என்று சொல்பவரா நீங்கள்..?? போபால் விஷவாயு வரலாறு உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கின்றேன்.

 ===============

முதலில் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு ஜான்பாண்டியன் அஞ்சலி செய்ய வரவிடாமல் தடுத்து நிறுத்தப்படடார் என்ற செய்தியை கேட்டுதான் சாலைமறியலில் ஈடுபட்டு, பரமக்குடியில் கலவரம் ஆரம்பித்து இருக்கின்றது...
கூட்டம் சேர சேர போலிஸ் அவர்களிடம் கெஞ்சி இருக்கின்றது..ஆனால் ரயில் டிராக்கில் இருக்கும் சரளை கல்லை போலிஸ்மீது எறிய, சாதாரணமாகவே போலிஸ் மிருகபலத்துடனும் மிருக கோபத்தோடு இருக்கும் போது அவர்களை கற்களால் தாக்கி அதிகாரிகளின் மற்றும் சகபோலிஸ்காரரின் ரத்தங்களை பார்த்தால் அவர்களுக்கு எந்த அளவுக்கு கோபம் வரும் ?..
சாதாரண விசாரனைகைதியையே போட்டு தாக்குவார்கள்..மிருகபலத்தோடு, அரசு ஆதரவும் கிடைத்து விட்டு, மதமும் பிடித்தால் கேட்கவும் வேண்டுமோ??பரமக்குடி கலவரத்தை அடக்க ஏழு பேர் பலியானார்கள்.... துப்பாக்கி சூடு காலுக்கு கீழாக நடத்தி இருக்கலாம்.. எல்லாம் மார்பில் குண்டு பாய்ந்து இறந்து போய் இருக்கின்றார்கள் அப்பாவிகள்..
ஒருவர் போலிஸ் அடித்த தடியடியில் அடிபட்டே இறந்து போய் இருக்கின்றார்...அந்த மரணம் கொடுமையிலும் கொடுமை...இப்பதான் மூவரின் தூக்குதண்டனைக்கு எதிராக மொத்த தமிழகமும் பொங்கியது.. அதற்குள் இந்த சனியன் புடிச்ச சாதிச்சண்டை மீண்டும் தலை தூக்கி இருப்பது கொடுமையிலும் கொடுமை..

===============

தினமும் செய்திகளை பார்க்கவே பயமாக இருக்கின்றது...எதாவது ஒரு கோர விபத்து நடந்துகொண்டு இருக்கின்றது..சித்தேரி ரயில் சம்பவ சோகம் கொடுமையிலும் கொடுமை. பத்து பேர் பலி என்று அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றார்கள்.. ஆனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமோ என்று தோன்றுகின்றது...இறந்த போனவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திபோம்..

=========

மிக்சர்..

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை திமுக கழட்டி விட்டு இருக்கின்றது.. இதையே  சட்டசபை தேர்தலில் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, காங்கிரஸ் 60 சீட்டுகள் கேட்ட போது, சுதாரித்து இருந்து இருந்தால் அட்லீஸ்ட் கவுரவமாக எதிர்கட்சிதலைவர் அந்தஸ்த்தையாவது பெற்று இருக்கலாம்... டூலேட்

=============


எங்கு போக்குவரத்து  நெரிசல் சென்னையில் காணப்பட்டாலும் சபையரில் இருந்து தாராப்பூர் டவர் வரை மவுன்ட் ரோட்டில் டிராபிக் இருக்கவே இருக்காது.. இப்போது டிராபிக் ஆகின்றது என்ன என்று பார்த்தால் மெட்ரோவுக்கு நடு ரோட்டில் பாதி இடத்தை பப்பரக்கே என்று பிடித்து டிராபிக்கை ஸ்தம்பிக்க வைக்கின்றார்கள்..
 (ராஜ் வீடியோ விஷன் சிக்னல் அருகில் நடு ரோட்டில் மெட்ரோபணி அதனால் மவுன்ட் ரோட்டில் டிராபிக்)

==========

நாளை வெள்ளிக்கிழமை  சென்னை சத்தியம் தியேட்டரில் 12,30மணி ஷோ நானும் நண்பர் நித்யாவும் எங்கேயும் எப்போதும் படத்துக்கு போறோமே... கோவிந்தா கோவிந்தா பாட்டுக்காகவே...

 என் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள்..படுக்கையில் யாழினி உருண்டு கொண்டு இருந்தால்.. நான் தரையில் உட்கார்ந்து கொண்டு யாழினியை வரச்சொல்லி கை ஆட்டி சைகை செய்ய....தஞ்சாவூர் பெரிய கோவில் கட்ட உச்சிக்கு சாரம் அமைத்து, யானைகள் மூலம் பெரிய பெரிய கற்களை அங்குலம் அங்குலமாக நகர்த்தி உச்சிக்கு கொண்டு சென்றார்களே அது போல எனது மகள் அங்குலம் அங்குலமாக கடுமையாக முயற்சித்து, முன்நோக்கி நகர்ந்து என்னை வந்து  தொட்டு தன் பொக்கை வாய்சிரிப்பை உதிர்த்தால்  பாருங்கள்... அந்த கணம் வாழ்வில் மிக ரம்யமான தருணம்...=========

சந்திப்புகள்..

சீனியர் பதிவர்கள்.. செந்தழல் ரவி,வரஉடையான்,பாலபாரதி,அப்துல்லா லக்கி மற்றும் அதிஷா, மணிஜி, நான் உட்பட  எல்லோரும்  வடபழனி சிம்ரன் ஆப்பக்கடையில் சந்தித்தோம்.. மணிஜி இரண்டு மணிஜியாக இருந்தார்..மணிஜி இப்படி ஒரு  வெறித்தனமான ரசிகராக எனக்கு இருப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..ஒரு 100 முறைக்கு மேல் ஜாக்கி ஜாக்கி என்று பேசிக்கொண்டே இருந்தார்..எனக்கு செமையான ஆச்சர்யம் துவிர இலக்கியவாசிப்புக்கொண்ட மணிஜி போன்றவர்கள் என்னை பற்றியே பேசிக்கொண்டு இருப்பது சந்தோஷமாக இருந்தது...ரவி அழைக்கின்றார் என்று அழைப்பு விட்டதும் மணிஜிதான். நன்றி மணிஜி..
( எனக்கு மிக அருகில் எனது வாசகர் மணிஜி வெள்ளை சட்டை அணிந்து வெள்ளைமனதுடன்)
செந்தழல் ரவியை முதல் முறையாக சந்திக்கின்றேன்....நான ஏதோ அந்த ஜெர்க்கின் போட்டு இருக்கும் போட்டோவை எல்லாம் பார்த்து விட்டு பெரிதாய் எதிர்பார்த்து போனேன் பிளஸ் டூ மாணவன் போல இருந்தார்...

=======

சென்னையில் இரண்டு   சாப்ட்வேர் நிறுவனங்கள் வைத்து நடத்தும். வாசக நண்பர் கோபி என்னை சந்திக்க அழைப்பு விடுத்தார்.. தியாகராய நகர் சபா எதிரில் இருக்கும் சதர்ன் கிரைஸ்ட் பாரில் சந்தித்தோம்..கேபிளையும் என்னையும் சந்திக்க ஆவல் என்றும் பிறகு ஒருநாளில் கேபிளை சந்திப்பேன் என்று சொன்னார்..லக்கியை தொட்ர்நது வாசிக்கின்றேன்.. எப்படி மறுதலித்து பேசி வாதாடலாம் என்ற அவர் பதிவை படித்து கற்றுக்கொள்கின்றேன் என்று சொன்னார்..பாரில் இருக்கும் எல்லோருடைய பெயரையும்  பெயர் சொல்லி அழைத்தார்..எல்லோரையும் தன் வீட்டு விசேஷத்துக்கு அழைத்த அளவுக்கு அவர்கள் என் நண்பர்கள் என்று சொன்னார்..அந்த  பந்தா இல்லாத எளிமைக்கு நான் ரசிகன்..அவர்களும் அப்படியே நடந்து கொண்டார்கள். அதன்பிறகு அங்கு இருந்து தலைப்பாகட்டியில்  சாப்பிடலாம் என்றார்.. அவரது அக்கார்டு காரில் சென்றோம்...ஆனால் நான் ஏதாவது கையேந்தியில் சாப்பிடலாமா? என்றேன்.அவரது டிரைவரையும் சாப்பிட அழைத்தார்.. பாண்டிபசார் கிருஷ்ணா ஸ்வீட்டுக்கு பின்புறம் இருக்கும் கையேந்திபவனில் என் விருப்பத்துக்காக பொடி தோசை சாப்பிட்டோம்...அவர் அங்கு வந்ததும் இரண்டு மூன்று போலிஸ்முகங்கள் அவரை  சந்தித்தார்கள்..பவ்யமானார்கள்..எல்லாரும் பிக் ஷாட்.. நல்ல சந்திப்பு மிக்க நன்றி   கோபி..

======================

இந்தவாரகடிதம்.


 அன்புள்ள ஜாக்கி

எப்படி இருக்கீங்க? குழந்தை  எப்படி இருக்காங்க? 

ரொம்ப நாளா உங்களுக்கு மெயில் பண்ணனும்னு நினைத்திருக்கிறேன். ஆனால் சும்மா எதுவும் விஷயம் இல்லாமல் எழுத முடியலை என்னால். 


இப்போதான் ராகவி பற்றி படித்தேன். எப்படி உங்களின் அந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட பதிவை படிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள் உங்களுக்கு. இந்த வயதில் இந்த நோய் ... மனதை பிரட்டுது. அதே நோய் உள்ள ஒரு மூன்று வயது பையனின் தந்தை நான். இது சம்பந்தமா இன்னும் நிறைய விஷயம் உங்களுக்கு எழுதணும். ஆனால் சில நாள்கள் ஆகும் அதை எழுத..(என்னுடைய வேலை பளுதான் அதற்க்கு காரணம்). அதனால் முதலில் சொல்ல வந்த ஒரே ஒரு முக்கியமான விஷயத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன்.


இந்த நோய்க்கு சரியான மற்றும் செலவு குறைவான சிகிச்சை திருவனந்தபுரம் Reginoal Cancer Center இல் தான் கிடைக்கும். என்னுடைய மகனுக்கு அங்கேதான் சிகிச்சை செய்தோம். இவர்களின் ஏழ்மையை நிருபிக்கும் சான்று இருந்தால் அனேகமாக ரொம்ப மிகச் சிறிய பணத்தில் நல்ல சிகிச்சை பெற முடியும். இதை அவர்களுக்கு தெரிய படுத்தவும். எதுவும் விபரம் வேணுமென்றால் எனக்கு .................... என்ற மொபைலில் ஒரு மிஸ் கால் கொடுக்க சொல்லவும்.


எனக்கு தெரிந்தவரை இந்த நோய் சினிமாவில் மட்டும்தான் இதற்குமுன் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போ நிறைய கேள்விபடுகிறோம்... ஏன் என்று தெரியவில்லை. இன்னும் நிறைய எழுத ஆசை.. ஆனால் நேரம் இல்லை. விரைவில் மீண்டும் ...


அன்புடன்

.....................

Note : (தயவு செய்து என்னுடைய பெயர் உங்கள் பதிவில் இடம் பெறவேண்டாம். இது என் குழந்தையின் எதிர்காலத்திற்காக...)

===========
நண்பருக்கு.. நிச்சயம் உங்கள் என் ராகவி பெற்றோருக்கு கொடுத்து விட்டேன்.அவர்கள் தேவை என்றால் உங்களை தொடர்பு கொள்வார்கள்..மிக்க நன்றி நண்பா...உங்கள் குழந்தை விரைவில் குணம் பெற  எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்..
==========
பிலாசபி பாண்டி..

ஒரு பொன் மொழி சொல்லட்டுமா?? கொய்யல..தங்கம் தமிழ்நாட்டுல விக்கற விலைக்கு ஒரு பொன் மொழி வேற கேக்குதா?? ஓடு ஓடிப்போயிடு....

============
 அமலா பாலின் ரசிகர்களுக்காக.....மட்டும்.. யாரோ ஒருவர் பஸ்சில் இந்த பெண்ணுக்கு மட்டும் ஓனம் வாழ்த்து சொல்லி இருந்தார்...
=========
மிக மிக அற்புதமான கோரியோ கிராப் இந்த சாங்... தொலைகாட்சியில் இந்த பாடல் ஓடினால் அந்த பெண்ணின் மூவ்மென்டுக்கு நின்று ரசித்து விட்டு செல்வது என் வழக்கம். சான்சே இல்லை... அந்த பெண்ணின் பெயர் தெரியவில்லை... அதே போல அந்த பெண்ணுக்கு பெரிய குளோஸ்அப் எல்லாம் இருக்காது...
 ==========

நான்வெஜ் 18+

ஒரு பெண் டாக்டரிம் செல்கின்றாள்.. தான் ரொம்ப வீக்காக இருப்பதால் டாக்டர் அட்வைஸ் கேட்டு,  உடம்பை செக்சியாக வைத்துக்கொள்ளலாம் என்று டாக்டரிடம் அட்வைஸ் கேட்கின்றாள்..அவர் அன்று மவுன விரதம் என்பதால் அவரும் பிரிஸ்கிரிப்ஷன் ஒன்றை எழுதிக் கொடுக்கின்றார்.. அதை பாலோ செய்தால் உடம்பு இன்னும் இளைத்து அவளுக்கு எயிட்ஸ் வந்து விடுகின்றது...

DAILY USE VARIEY  MEALS  என்று எழுதிக்கொடுப்பதுக்கு பதில் DAILY USE VARIETY  MALES  என்று எழுதிக்கொடுத்ததால் வந்த வினை.


 ========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


நினைப்பது அல்ல நீ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

9 comments:

 1. Dear Jackie,

  Comments on your today's post.

  "சென்னையில் இரண்டு சாப்ட்வேர் நிறுவனங்கள் வைத்து நடத்தும். வாசக நண்பர் கோபி என்னை சந்திக்க அழைப்பு விடுத்தார்" - Rendu companylayum naan partner. that's all. Naan thaan nadathurennu yennoda partners padichaa thappaa ninaipaanga. Matrapadi padhivu super. Nandrigal pala. Meendum sandhipom.

  ~Gopi

  ReplyDelete
 2. மறந்துட்டேன்.. நண்பர் கோபி..

  ReplyDelete
 3. //.மணிஜி இப்படி ஒரு வெறித்தனமான ரசிகராக எனக்கு இருப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.//

  மணிஜீ மட்டும் தானா உங்கள் வெறித்தனமான ரசிகர், அகில உலகமும் அப்படி தானே இருகிறது!

  ReplyDelete
 4. போங்க பாஸ்.. இப்போ எல்லாம் சாண்வெஜ் அண்டு நான்வெஜ் சீக்கிரம் படிச்சு முடிகிற மாதிரி ஒரு பீலிங்க்ஸ்.... ரொம்ப குறைவா பதிவு இடுரீங்கலோ..... எனக்கு தோணிச்சு கேட்டுட்டேன்...

  ReplyDelete
 5. nice jackie sir..am ur fan..asusual u rock..

  ReplyDelete
 6. Gr8 to visit UR Blog Daily. I'm expecting More...

  ReplyDelete
 7. nice post thala sikkiram veettuku varen thala mannichirunga velai athigam athan ore oor suthikkittu irukkiren

  ReplyDelete
 8. வால்பையன் said...

  //.மணிஜி இப்படி ஒரு வெறித்தனமான ரசிகராக எனக்கு இருப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.//

  மணிஜீ மட்டும் தானா உங்கள் வெறித்தனமான ரசிகர், அகில உலகமும் அப்படி தானே இருகிறது!  நானும் இதை பகிர்ந்து கொள்கிறேன்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner