Transformers: Dark of the Moon-2011- டிரான்ஸ்பார்மர்ஸ்/3 திரைவிமர்சனம்.






இவன்கமட்டும் எல்லா நாட்டிலேயும் போய் உட்கார்ந்துகிட்டு பஞ்சாயத்து பண்ணுவானங்க.நம்ம ஊர்ல எப்ப பர்த்தாலும் பஞ்சாயத்து செய்ய எங்களுக்கு மட்டுமே உரிமை இருக்குன்னு சில பேர் நினைக்கறது போல..
உலக அளவுல பஞ்சாயத்து செய்ய எங்கிட்ட மட்டுமே சொம்பும் ஆலமரமும் இருப்பதாக உலக அளவில் உறக்க சொல்லி வருகின்றது... 

எங்க கிட்ட மட்டும்தான் சொம்பு இருக்குன்னு அவுங்க மக்கள்கிட்டயே நிறுபிக்க ஈராக்மேல படையெடுத்து  ஒன்றரை லட்சம் அப்பாவிங்களை சாவடிச்சானுங்க. அந்த நாட்டையே குண்டு போட்டு குப்பை மேடா மாத்தினாங்க...

ஆனா இவன்கநாடு என்னைக்கும் குப்பைகூளம் இல்லாத பளிச்நகரங்கள்தான்...பளிச் தெருக்கள்தான்.. அப்படி சுத்தமாக இருக்கும் ஒரு நாட்டை அடிக்கடி கற்பனையில் நம்ம சென்னை பள்ளிக்கரனை குப்பை மேடு போல  ஆக்கி பாக்கறது ஹாலிவுட்ல் இருக்கும் அத்தனை டைரக்டருக்கும் கை வந்த கலை...

எரிமலையா அவுங்க நாட்டு பூமியல நடு ரோட்டுல வெடிக்கும்..
டூவிஸ்டரா அவுங்க நாட்டு புறநகரை தாக்கும்...
ஏலியனா? மாஸ்கிரகத்துல இருந்து வரும் ராக்கெட் எதுவா இருந்தாலும் அவுங்க நகரத்தையே தாக்கும்...
உலகத்தை அழிக்க எது வந்தாலும் அவுங்க நாட்டு அதிபரே ஹெல்ப் செய்வார்... எப்படி??? இன்டிபண்டன்ஸ் டே படத்துல பிளைட் ஓட்டினாரோ அது போல...


இந்த படத்துலசிதைபடும் நகரம் சிக்காக்கோ....
 ===============


டிரன்ஸ்பார்மர் படத்தின் கதை என்ன??


சத்தியமா இதுக்கு கதை சொன்னா உங்களுக்கு புரியாது... அவ்வளவு ஏன் எனக்கே சொல்லத் தெரியாது..

வெளிகிரகத்து மனிதர்கள்... நம்மளை விட இண்டிலிஜென்ட் உருமாறிகள்
ஒரு குருப் பூமியை அழிக்க நினைக்கின்றது.. ஒரு குருப் உயிர் வாழும் கிரகங்களைகாக்கின்றது அவர்களுக்குள் ஏற்படும் போரில் பூமி கடைவாயில் மாட்டிக்கொண்ட கரித்துண்டு போல அல்லல் படுகின்றது....

பூமியில் இருக்கும் சாம் என்பவனுக்கு எல்லா விஷயமும்  தெரியும்.. அது எப்படி தெரியும்? அதுக்கு நீங்க இதுக்கு முன்னாடி ரெண்டு பாகத்தையும் பார்க்கனும்...? அப்புறம் நிலவு அது இதுன்னு காதில் விழுதே...? அது ஒரு முழ நீளத்துக்கு காதில் பூ சமாச்சாரம்... படத்தை பாருங்க.. பாஸ்....
=====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

படத்தை பற்றிய முதல் செய்தியே கடந்த இரண்டு படத்துல நடிச்ச மேகன் பாக்ஸ் இந்த படத்துல நடிக்கலை என்பதுதான்..

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்த படத்தோட புரோட்யூசர் என்பதே கதாநாயகி மாற்றம் விஷயத்துல அடிபட்டு போயிடுச்சி...

மெகன்பாக்ஸ்கிட்ட கேட்டாங்க ஏன் நீங்க இந்த படத்துல  நடிக்கலை?? என்னை கவர்ச்சியாக நடிக்க சொன்னாங்க அதனால நடிக்கலை... மேல இருக்கற படத்தை விட அப்படி என்ன நடிக்க சொல்லிட்டாருன்னு தெரியலை..


அப்ப மைக்கேல் பே  சொன்னாரு.. உன்னை விட அவுத்து போட்டு விட்டு நடிக்கறவளை புக்  பண்ணறேன்னு சபதம் போட்டு ரோஸி ஹட்டிங்டன்னு ஒரு புள்ளைய கூட்டாந்தாரு....

 அது சொன்ன பேச்சு கேட்டு இருக்கு என்பதை படத்தை பார்த்தால் தெரியும்...

யோவ்... ஜாக்கி இதுதான் சுவாரஸ்யமா??

படத்துல நிறைய மெனக்கெட்டு இருக்காங்க... பட் பார்த்த ஒரு பிலிங் இருப்பதால் ஒரு கட்டத்துக்கு மேல உருமாறிகளை ரசிக்க முடியலை. பட் குழந்தைங்க ரசிக்கலாம்...

எந்திரன் கடைசி 20 நிமிடத்தை சுட்டி டிவி பார்த்த்து போல இருந்த்து என்று சொல்லுவார்கள்.. அது போலதான் இந்த படமும்... இடைவெளைக்கு அப்புறம் நிமிர்ந்து கொஞ்சம் உட்காரலாம்..

மைக்கேல் பே சார்....ஐலன்ட் மாதிரி ஒரு விறு விறுப்பான படத்தை உங்ககிட்ட இருந்து அடுத்த படத்தை எதிர்பார்க்கின்றேன்..

எதுக்கு இந்த படத்தை தமிழ் வெர்ஷனில் பார்ப்பது மிகவும் நல்லது...
==================
படக்குழுவினர் விபரம்...

Directed by Michael Bay
Produced by Don Murphy
Tom DeSanto
Lorenzo di Bonaventura
Ian Bryce
Written by Ehren Kruger
Based on Transformers by
Hasbro
Starring Shia LaBeouf
Josh Duhamel
John Turturro
Tyrese Gibson
Rosie Huntington-Whiteley
Patrick Dempsey
Kevin Dunn
Julie White
John Malkovich
Frances McDormand
Music by Steve Jablonsky
Cinematography Amir Mokri
Editing by Roger Barton
William Goldenberg
Joel Negron
Studio DreamWorks Pictures
Distributed by Paramount Pictures
Release date(s) June 23, 2011 (MIFF
June 29, 2011 (United States
Running time 157 minutes
Country United States
Language English
Budget $195 million
Gross revenue $43,225,329


==========

படத்தின்டிரைலர்..


===================
தியேட்டர் டிஸ்கி...

படத்தை வந்த அன்னைக்கே நைட் செகன்ட் ஷோ சைதை ராஜ் தியேட்டரில் பார்த்தேன்..

பத்து மணிக்கு படம்...  ஒன்பது ஐம்பதுக்கே படத்தை போட்டு விட்டார்கள்... எதுக்குங்க பத்து மணிக்குன்னு அறிவித்து விட்டு, படத்தை எதுக்கு ஒன்பது ஐம்பதுக்கு போட்டிங்கன்னு கேட்டேன்...??

சார்..... படம் பெரிய படம்... அதுக்குதான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி போட்டுட்டோம்....

ஆமாம் அந்த பத்து நிமஷத்துல என்ன ஆட்ட போறிங்கன்னு தெரியலை...???? டைம் மேனேஜ்மன்ட்டுக்கு நம்ம ஆளுங்களை அடிச்சிக்கலே முடியாது...

தியேட்டர் உள்ள போகும் போதே பாக்கெட்டில் சிகரேட், பாக்கு போன்றலை இருக்கின்றதா என்று செக் செய்துதான் தியேட்டர் உள்ளே விடுகின்றார்கள்.

படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே... டார்ச் லைட் எல்லோர் காலுக்கு கீழேயும் அடித்து பான்பராக் போன்றவை போட்டு குதப்பி துப்பி இருக்கின்றார்களா என்று செக் செய்கின்றார்கள்... கீப் இட் அப்.. குட் ஒர்க்....


 எனக்கு பின்னால் கஞ்சா அடித்து விட்டு வந்து இரண்டு பேர் உட்கார்ந்து இருந்தார்கள்.

நாயகி குனியும் போது நிமிரும் போது பயங்கர கமென்ட்... அதில் ஹைலைட்... மச்சி இந்த பொண்ணு செமை கட்டதான்...ஆனா வாய்தான்.......................................... போல இருக்கு என்று சொல்லிவிட்டு சிரியோ சிரி என்று சிரித்தார்கள்

பம்பில் பி... காப்பாற்ற வரும் போது மட்டும் இரண்டு மூன்று பேர் கைதட்டினார்கள்.. எனக்கு தெரிந்து கைதட்டியவர்கள் மட்டுமே முதல் இரண்டு பாகங்களை பார்த்து இருக்க வேண்டும்..
 =========


===================
 பைனல்கிக்..

இந்தபடம் டைம்பாஸ்படம் என்று எழுதிவிட்டு போய்விடலாம்... ஆனால் உழைப்பை பார்க்கும் போது அப்படி எழுத முடியவில்லை.. மேலே மேக்கிக்கை பார்க்கவும்.. இந்த பட்ம் பார்க்கவேண்டியபடம்.
 ====
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..








(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)






EVER YOURS... 











-=============================

4 comments:

  1. ஆனா முதல் இரண்டு பாகத்துக்கு இந்த பாகம் மொக்கைன்னு கேள்விப்பட்டேன்...

    ReplyDelete
  2. மெக்கைன்னு சொல்லக்வடாது.. டைம்பாஸ்படம்னு சொல்லனும்...கடவுள்..

    ReplyDelete
  3. Enna Thalaivare Kudumbathoda , pullai kuttiyoda pakkalama.

    ReplyDelete
  4. Jackie, Its my first visit to ur blog but i have red lot of articles and really i found something interesting here apart from the common fun jokes and chit chats in web. I wish u all the best for ur continuous work.
    Kallakura Jacie

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner