சென்னை சாலைகளில் நகர மறுக்கும் எருமைகள்...
ஊர்ல ஒருத்தன் ரோட்டில் போகின்றான்... அவனை பேர் சொல்லி அழைக்கின்றோம்..
ஆனாலும் அவன் திரும்பிக்கூட பார்க்கவில்லை... எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை என்றால் இரண்டு விதமாக சொல்லுவார்கள்...

காட்டு கத்து கத்தியும் ஓத்தா எந்த ரியாக்ஷனும் இல்லாமல் செனப்பன்னி போல எனக்கின்னான்னு போறான் பாரு என்று சொல்லுவார்கள்..


அப்படியும் கோவம் அதிகரித்தால்...இத்தனை பேர் நாய் போல கத்திகிட்டு இருக்கோம்.. எருமைமாட்டு சூத்துல மழை பேய்ஞ்சா போல போறான் பாரு என்று சொல்லுவார்கள்....
எந்த பரபரப்போ அல்லது எந்த ரியாக்ஷனும் இல்லாத விஷயத்துக்கு எருமையை வம்புக்கு இழுந்து விடுவார்கள்..

ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக எருமைகள் கிராஸ் செய்யும் போது அதை நீங்கள் உணர்ந்து இருக்கலாம்.
ஆனால் எருமைகளுக்கு ஐந்து அறிவுதான்... அவைகள் அப்படித்தான்.. ஆனால் மனிதன் அப்படி இல்லை???

ஆனால் சென்னை சாலைகளில் ஏன் தமிழக சாலைகளில் எருமைகளை போலத்தான் சாலையில் நடக்கின்றான்..ரோட்டினை கடக்கின்றான்...

இது என்ன மனோபாவம்?? இது  எப்போதில் இருந்து வந்து நம்மவர்களிடம் குடி கொண்டது என்று தெரியவில்லை...
சாலையில் ஓரமாக நடக்க வேண்டும் என்ற அந்த அடிப்படை பண்பு எப்படி நம்மிடம் மிஸ் ஆகியது என்று தெரியவில்லை...அதை விட ஒரு எண்ணம் நம்மவர்களிடம் அதிகம் இருக்கின்றது.. முக்கியமான நடந்து போகும் அத்தனை பேரிடத்திலும்...

ஓத்தா மோதிட்டு எங்க போயிட போறான்....என்ற மனோபாவம்.. சாதாரண இரு சக்கர வாகனங்களிடம் இந்த மனநிலை இருந்தால் பரவாயில்லை... கார் பேருந்து போன்ற வாகனங்களிடம்  நடந்து போகின்றவர்கள் போட்டிக்கு போவதுதான் கொடுமை...

ஜாக்கி சார்... நடை பாதைபுல்லா கடைகளை வச்சிட்டு அவன் என்ன தலைமேலையா பாதசாரி நடக்க முடியும்?? 
ரோட்டில்தான் நடப்பான்...உண்மைதான் ஆனால் பிளாட்பாரத்தில் கடைகள் இல்லாவிட்டாலும் காலியாக இருக்கும் பிளாட்பாரத்தில் நடப்பது 2 சதவீதம் பேர்தான்.....என்பதை தெரிவித்துக்கொன்கின்றேன்...


சென்னையில் அட்டாச்சிடு பாத்ரூம் இருக்கும் பெட்ரூம் வாழ்க்கையை பலர் அனுபவித்து இருக்கலாம்.....அதாவது தூங்கி  சோம்பல் முறித்து எதை பற்றியும் கவலைபடாமல் பெட்டில் இருந்து எழுந்து பாத்ரூம் போலோம் அல்லவா? அது போல சென்னை பனகல் பார்க் பிரமாண்டமாய் சரவணாஸ்டோர் எதிரில் சாலையை கடப்பவர்களை பாருங்கள்.. பல வாகனங்கள் கடக்கும் சாலையை நாம் கடக்கின்றோம் என்ற  பயமே இல்லாமல் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் சாலையை  கடக்கும் கூத்து உலகில் வேறு  எந்த நாட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது...

வண்டி மோதிடுமே என்ற பயமே இல்லாமல் எப்படி இவர்களால் நடக்க முடிகின்றது என்றால்??? அதான் நடந்து போறோமே??? பொறுமையாதான் போயேன்.... மோதிட்டா?? மோதிட்டு எங்க போயிட போறான்???

ஜாக்கி சும்மா கூவலாதிங்க.. நம்ம மக்கள் எல்லாம் அப்படி இல்லை?,


ஒருசவால் விடுறேன்...உஙகளுக்கு டென்ஷன், பிபி, சமயத்துல ஹார்ட் அட்டாக் கூட வருவதை நீங்கள் உணர வேண்டும் எனறால்...சென்னை மாநகர பேருந்தில் டிக்கெட் எடுத்து டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் இருக்கு சிங்கிள் சீட்டில்  உட்கார்ந்து பாருங்கள்...

 முக்கியமா வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தில் வண்டி உள்ளே போய் வெளிவருவதற்க்குள் மாநகர டிரைவர்கள் படும் பாட்டை நினைத்தால் கண்ணீர் வந்து விடும்... பயணிகள் நிற்க்கவேண்டிய பிளாட்பாரத்தில் யாருமே நிற்க்காமல் பேருந்து வந்து போகும் பாதையில் நின்று கதை பேசுவது, கடலை போடுவது என்று இருக்கின்றார்கள்...

 அதை விட கொடுமை... பிளாட்பாரத்தில் நடக்காமல் அவ்வளவு பெரிய பேருந்து வருகின்றதே என்ற பயம் இல்லாமல் எருமைமாட்டு  போல் ஆடி அசைந்து நடக்கும் கொடுமை வேறு எங்கேயும் பார்க்க முடியாது-....40 வயதுக்கு மேல் மாநகர பேருந்து டிரைவர்கள் இதய செக்கப் செய்துகொள்வது நல்லது...

பேருந்து ஓட்டிக்கொண்டு இருக்கும் போதே டிரைவர் மரடைப்பால் மரணம் என்று படிக்கும் போது.. இந்த மாதிரி நாள்புல்லா பேருந்து ஓட்டினா எல்லா இதய வியாதியும் வரும்....

ஹாரன் அடிச்சியும் நகரமாட்டேங்கிறாங்க அதுதான் கொடுமை.. பாரின்ல
ஹாரன் அடிக்காம வண்டி ஓட்டுவாங்கன்னு பெருமையா சொல்லுவாங்க... இந்தியாவுல அதிவும் தமிழநாட்டுல ஹாரன் அடிக்காம சென்னை தாம்பரத்துல இருந்து பாரிஸ்கார்னர் போயிட சொல்லு...ங்கோத்தா சொத்தையே எழுதி வைக்கின்றேன்.... நிச்சயம்  மாநகர பேருந்து டிரைவர்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே பரிதாபத்துக்கு உரியவர்கள்.இந்த எருமை கூட்டத்தில் நானும் அவ்வப்போது இருந்து இருக்கின்றேன்... அதாவது பிளாட்பாரத்தில் நடக்காமல் சாலையில் நடந்து அப்புறம் ஹாரன் சத்தம் கேட்டு பிளாட்பாரத்தில் ஏறி நடந்து இருக்கின்றேன்...ஆனால் ஒரு போதும் சாலையை ஆட்டாச்சிடு பாத்ரூமுக்கு கையில் பிடிச்சிக்கினு போவது போல சாலையை கிராஸ் செய்தது இல்லை-....

சமீபத்தில் ஆனந்தவிகடனில் ஒரு டுவிட் பார்த்தேன்...  இரு சக்கர வாகனத்தை ஓட்டும் ஆண்ட்டிகளுக்கு வலையும் போது கை காட்டி விட்டாலோ அல்லது இண்டிகேட்டர் போட்டு விட்டாலோ பின்னால் வேகமாக வரும் ராக்கெட் கூட நின்று விடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று யாரோ ஒரு நண்பர் எழுதி இருந்தார்...இதுதான் நிதர்சன உண்மை...


பாண்டிபஜார் மற்றும் பனகல் பக்கம் ஷாப்பிங்  செய்ய வரும்   பெண்கள் கூட்டம் அவர்கள் நினைத்த இடத்தில் சாலையை கடப்பதும் அதுவும் வேகமாக நடக்கமால் ஸ்டைலாக நடந்து சாலையை கடக்கும் கொடுமை சென்னையில் மட்டுமே...

அதை விட கூட்டமாக நண்பர்களோடு வரும் பெண்களில் ஐந்து பேர் சாலையை கடக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்... அதில் மூன்று பேர் சாலையை பரபரப்பாக கடப்பார்கள்..அதில் இரண்டு பேர் சாலையை பரபரப்பாக கடந்த பெண்களை பார்த்து நக்கலாக சிரித்தபடி ஸ்டைலாக சாலையை கடப்பார்கள்... அவர்கள் ரொம்பவும் தைரியசாலிகளாமாம். பரபரப்பாய் சாலையை கடந்த பெண்கள் லூசுகளாம்..


 அப்படி ஸ்டைலாக...... வேண்டும் என்றே சாலையை கடக்கும்  அலட்டல்   பெண்களையும் ஆண்களையும் பார்க்கும் போது ஊரில் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வரும் எருமை மாட்டு......................

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS... 
================

=====================

19 comments:

 1. நல்ல பகிர்வு. மக்களே யோகிங்க

  ReplyDelete
 2. மஸ்கட்டில் நடந்த ஒரு நகைச்சுவையான உண்மை சம்பவம். ஒரு இந்தியன் (சேட்டன்) ஒரு பரப்பரபான சாலையை கடக்க முற்ப்பட்டான். எப்படியோ பாதி தூரம் வந்துவிட்டான். அடுத்த பாதி போக முடியவில்லை. நடுவில் நின்றுகொண்டிருந்தான். உடனே போலிஸ் வந்து அவனை பாதுகாப்பாக அடுத்த கரைக்கு அழைத்து சென்றது. அவனும் அவர்களுக்கு நன்றி சொல்லி செல்ல முற்ப்பட்டபோது அப்படியே குண்டுகட்டாக தூக்கிகொண்டு போய் சிறையில் போட்டு விட்டார்கள். ஒரு நாளுக்கு அப்புறம் தான் வெளியே வந்தான்.

  பெண்கள் எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரிதான். அங்கு எருமை மாடு, இங்கு ஒட்டகம் என்று சொல்லுவோம் அவ்வளவுதான் வித்தியாசம்.

  ReplyDelete
 3. மூணு, நாலு பேரா போறப்ப ரோட்ட அளந்துகிட்டு போவாங்க பாருங்க.....

  ReplyDelete
 4. this was torturing me for a long time. what you said is 100% correct. particularly in chennai city. ஓத்தா மோதிட்டு எங்க போயிட போறான்....என்ற மனோபாவம்.. this is the truth. the mentality of people has changed. if any person hit by a vehicle (bike or car) the surrounding people immediately beating the driver without asking any questions and who was wrong. that is the main reason people are walking like this.

  ReplyDelete
 5. சத்தியமான உண்மை ஜாக்கி. நான் தினமும் தாம்பரத்திலிருந்து மந்தவெளி வந்து செல்கிறேன். உங்களது ட்ரேட் மார்க் வார்த்தையான ஓத்தா என்ற சொல்லையே நான் வண்டி ஓட்டும்போது மட்டும்தான் உபயோகப்படுத்திகிறேன். இந்த விஷயத்தில் நம் சென்னை மக்கள் வெறும் மாக்களே...

  ReplyDelete
 6. சார், உங்க கருத்துடன் உடன் படவும் மறுதளிக்கவும் செய்கிறேன். நான் வெளிநாட்டில் (US)பணி புரிகிறேன். இங்கே மக்கள் அனைவரும் நடை பாதையை முறையாக உபயோகிக்கின்றனர். இது மிகவும் பிசியாக உள்ள இடங்களுக்கு பொருந்தும். ஆனால் இந்த நாட்டு சட்ட படி, மற்ற எல்லா இடங்களிலும் நடப்பவர்களுக்கு முன்னுரிமை. நாம் சாலையை கிராஸ் செய்ய நிற்கும் போது, கண்டிப்பாக வாகனங்கள் நமக்காக "yield" செய்ய வேண்டும். மேலும் 99% பேர் Yield செய்து நம்மை போக விட்ட பின்னரே செல்கின்றனர். அதுவும் நம்மை பார்த்த உடனே அவர்கள் வண்டியை நிறுத்தி நம்மை போக அனுமதிக்கும் பாங்கு வேறு எங்கும் காண முடியாது.

  ReplyDelete
 7. பலருடைய ஆதங்கத்தை உங்க ’ஷ்டைல்’லே எழுதியிருக்கீங்க!

  ஒரு வாட்டி அண்ணா நகர் ஆர்ச் சிக்னல்லே ஆம்புலன்ஸுக்குக் கூட வழிவிடாம குறுக்கே புகுந்து போன டூ-வீலர் பேமானிங்களைக் கண்கூடா பார்த்தேன்.

  ஆற்காட்டு ரோட்டுலே பிளாட்பாரத்துலே வண்டியோட்டிட்டுப் போற பன்னாடைங்களையும் பார்த்திருக்கேன்.

  அதே மாதிரி, என்னமோ அவங்க தாத்தா போட்ட ரோடு மாதிரி செல்போன் பேசிட்டு அரட்டையடிச்சிட்டு, ஸ்லோ மோஷன்லே ரோட்டைக் கிராஸ் பண்ணுற பல எருமைங்களையும் தினமும் பார்க்கிறேன்.

  சென்னைச் சாலைகளிலே மொத்தத்துலே ரொம்பக் கம்மியாத்தான் மனிசங்களைப் பார்க்க முடியுது.

  ReplyDelete
 8. மூணு நாலு பொம்பள பசங்க ரோட்டுல பேரலல்-ஆ போயிட்டு இருந்தாங்க அவங்க மேல மோதாம இருக்க விலகினதுல எதிரே வந்த கார் சைடு ரீவ்யூ மிர்ரர் என்னோட கார் ரீவ்யூ மிர்ரர்-ல மோதி தூள் தூள். இது நடந்தது பிஸியான நகரமில்லை. சீசன் இல்லாத குற்றால சாலையில். ரோடே தங்களதுன்னு நினைப்பு. ஜாக்கி பாஷையில் திட்டிட்டு வந்தேன்

  மக்கள் என்னைக்கு திருந்துவாங்களோ ???

  ReplyDelete
 9. ஓத்தா மோதிட்டு எங்க போயிட போறான்....என்ற மனோபாவம்..

  மிக சரியான வாதம்.. இந்த மாதிரி எருமைகள் ரோட்டுலதான் எதுலயாவது அடிபடும்ம்.
  இவர்களீன் அலட்சியத்தால் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளேன்

  ReplyDelete
 10. ஜாக்கி,நீங்களும் சென்னை சாலைகளை பல முறை எழுதிவருகிறீர்கள்...சத்தியமாக சொல்கிறேன், நம்முடைய வாழ்நாளில் சென்னைவாசிகள் முழுமையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.யார் வந்தாலும் மாற்ற முடியாத அளவுக்கு நமது நகர விரிவாக்க அமைப்பு போய்விட்டது.One way என்ற Concept பல இடங்களில் போய்விட்டது அல்லது செயல்படுத்தப்படவில்லை.

  ReplyDelete
 11. what happened to my tamil font? Any how, you r vry correct. People especially at Chennai are not traffic rule conscious. And if any accident takes place, for the fault of Cyclist, the Motor Bikewala is punished by these people, for the fault of M/Bike, the owner of the Car is punished. Always the small vehicles are supported blindly. What to do too much population too much crowd everwhere. Cant help. We have to adjust and go on our way. Otherwise we will have BP/Tension. Because no authority there to listen any complaint and to take action rather the complaintant will be looked upon fool

  ReplyDelete
 12. கொஞ்சம் வடசென்னை ஏரியா வந்து பாருங்க இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் டிராபிக் இருக்கு. இன்னைக்கு தண்டையார்பேட்ல இருந்து ராயபுரம் ஜிஏ ரோடு வழியா வந்தேன். 2கிலோ மீட்டர் தான் இருக்கும் 30min ஆச்சு அதும் நைட் எட்டு மணிக்கு மேல :( ...

  ReplyDelete
 13. சேகர் உங்களுக்கு தெரியும் தானே?

  சென்னை தூய தமிழ் வார்த்தைகளைப் போலவே இப்போது சர்வ புழக்கத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளைப் போல இராமநாதபுர மாவட்ட சுற்றியுள்ள அத்தனை மக்களும் ஒரு மோசமான வார்த்தையை இயல்பாக பய்ன்படுத்துவாங்க. படித்தவன் படிக்காதவன் என்று எல்லாருமே பயன்படுத்தும் இரத்தத்தோடு கலந்து போனது. இப்போது கூட எனக்கு உச்சக்கட்ட கோபத்தில் வருவதைப் போல பழைய நண்பர்கள் அழைத்துப் பேசும் பேச ஆரம்பிக்கும் போது சந்தோஷமாகக் கூட அது தான் வாயில பட்டுன்னு வருது.

  ஆனால் இந்த கட்டுரையைப் படித்து உங்களை கட்டிப்பிடித்து பாராட்ட வேண்டும் போலுள்ளது. அந்த வார்த்தை என்னன்னு ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நானும் ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிபவர்களைப் பற்றி அதிகம் யோசிப்பதுண்டு. முறைப்படி இவர்களுக்குத்தான் ஆசிரியர்களை விட அரசாங்கம் அதிக சலுகைகள் சம்பளம் கொடுக்க வேண்டும்.

  நம்ம மக்களுக்கு சுதந்திரம் என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் எப்போது தெரிய வரும்?

  நம்ம கொள்ளுப் பேரன் காலத்தில் 50 சதவிகிதம் தெரியவரலாம்.

  விடுங்க அப்ப உங்க தளத்திற்கு மத்த யாரு வருவாங்களோ இல்லையோ உங்க பேரனுங்க பாருடா நம்ம தாத்தா என்ன போடு போட்டுருக்காரு அவங்க நண்பர்கள்கிட்ட சொல்லக்கூடும்.

  ஒவ்வொருத்தரும் ஜெய்ஜாக்கின்னு உங்களை உசுப்பேத்துறாங்களோன்னு நினைப்பேன். ஆனால் அதில் உண்மையும் இருக்கும்.

  ReplyDelete
 14. itharkku makkalai kurai solli pirayosanamillai,arasu kadumayana nadavadikai edukkanum illaiendral entha mattramum earpadathu

  ReplyDelete
 15. jaki chennila matum thanu nenikathinga madurila atha veda kodumaya itukum

  ReplyDelete
 16. இதற்கு மக்களை குற்றம் சொல்லி பயன் இல்லை,அரசு போக்குவரத்து விதிகளை கடுமயாக்கி மீருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேன்டும்

  ReplyDelete
 17. there is another type of buffelows who ride bicycle...they ride in the middile of the road never give way for motorcycle...even if you horn they wont give way ...echa ilaigal....i have seen a guy riding a motorcycle died on spot just bcoz a bicycle rider pushed him on other side of the road and ran over by a truck...i have even seen jaywalkers buffelows died on road who was hit by a motor cycle....senseles vila madhu magangal

  ReplyDelete
 18. my stratergies for those buffellows is to horn continuously non stop if anyone tries to cross infront of me bike....it work ....never go off from your path bcoz of buffellows...it cause severe accidents from other vehicles.....i have seen bikers dieing bcoz of this buffelowas

  ReplyDelete
 19. For the people who say in western countries pedestrians should be respected , i would like to say this even in western countries you can cross the road only at designated places , if you cross just like that police can book you for Jay Walk.

  When Iam waiting in my bike for red signal most of the people behind me presses the horn continuously , What term can we use for those baskars . They dont even bother about the people who are crossing the road or the vehicles coming in the opposite direction . I dont know when iam going to hit by the vehicle behind me for waiting at red signal . Whatever happens i will wait till the signal shows green. Why dont the police book these people who jump signals instead of stopping drivers at corners and useless places.

  Everybody should consider this "If you give respect to others , others will respect you"

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner