எப்படி வெகு நாட்களுக்கு பிறகு திருச்சி சென்றேனோ? அது போலத்தான் கும்பகோணமும்..
சில வருடங்களுக்கு முன் திருநாகேஸ்வரத்தில் நடந்த என் மனைவியின் அத்தை பையயனுக்கு பூனுல் போடும் விழாவுக்கு சென்றேன்.. அதன் பிறகு இப்போதுதான் போனேன்..தடுக்கி விழுந்தா கோவில் வாசலில்தான் விழ வேண்டி இருக்கின்றது.. அவ்வளவு கோவில்கள்.. இவ்வளவு கோவில்கள் பத்தாது என்று ரோட்டின் நடுவில் கூட கோவில்கள் இருக்கின்றன..
நிறைய கோவில்களின் குளங்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி காட்சி அளிக்கின்றன... நாம் எந்த அளவுக்கு பழமையானவர்களோ அந்த அளவுக்கு பழமையை நாஸ்தி செய்ய நம்ம ஆட்களை போல யாராலும்முடியாது..ஒரு காலத்தில் அந்த குளங்களின் படித்துறையை எத்தனை பேர் பயண்படுத்தி இருப்பார்கள்... அந்த காலத்தில் கும்பகோணத்தில் இருந்தவர்கள் டைம்மெஷினில் வந்தார்கள் என்றால் ஹார்ட் அட்டாக்கே வந்து விடும்...
கார் ஓட்டி வந்த காரணத்தால் உடல் அசதி காரணமாக வெளியே எங்கும் நான் போகவில்லை... அர்ஜுன் மற்றும் சிவசங்கரன் என இரண்டு பேர் போன் செய்து பேசினார்கள்.. சனிக்கிழமை இரவு என்னை சந்திக்க வருவதாக சொல்லியவர்கள்.. முக்கிய வேலை வந்து விட்டதால் மதுரைக்கு போகின்றோம் மன்னிக்கவும் என்று தகவல் சொல்லிவிட்டு போனார்கள்...
திருச்சி அளவுக்கு பிகர்கள் வறட்சி கும்பகோணத்தில் இல்லை... அங்கொன்ரும் இங்கொன்ருமாக ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட்டுகளை பார்க்க முடிகின்றது.. சில பெண்கள் அசத்தலாய் இருந்தார்கள்..
பழைமையான நகரம் என்பதால் குறுகிய சாலைகள்... அதில் இருபுறமும் இருசக்கர வாகனங்கள்... அதில் பேருந்து சென்று வருகின்றது.. உலகத்தில் சிறப்பாக ஓட்டுனர் விருது வழங்க யாராவது உத்தேசித்தால் அதை கும்பகோணம் மற்றும் மாயவரம் பகுதியில் பேருந்து ஓட்டும் ஓட்டுனர்களுக்கு கொடுக்கலாம்...
திருநாகேஸ்வரம் உப்பிலி அப்பன் கோவிலுக்கு போகும் ஒழக்கு வழியில் அவ்வளவு பெரிய பேருந்தை வளைத்து திருப்பி வெளியே எடுத்து வருவது சாதாரண விஷயம் இல்லை.இரு பக்கமும் இருசக்கர வாகனங்கள் வேறு.... அப்படியே காரை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு பர்சேஸ் செய்யும் மேல்தட்டு வர்கம்... இதையும் மீறி பயணிகளுடன் உள்ளே நுழைந்து வெளியே வரும் பேருந்தை இயக்கும் கும்பகோண பகுதி பேருந்து ஓட்டுனர்கள் திறமையானவர்கள்..
அரசு ஜுவல்லர்ஸ் கும்பகோணத்தின் பெரிய நகைகடை என்ற நினைக்கின்றேன். நிறைய இடத்தில் விளம்பரத்தை காண முடிகின்றது. நிறைய இடங்களில் பார்க்கிங் போர்டு விளம்பரத்துக்கு அதிகம் செலவிட்டு இருக்கின்றார்கள்...
சில இடங்களில் வெள்ளி சனி ஞாயிறு... சில இடங்களில் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய நாட்களில் மட்டும் மாலை நேரத்தில் நிறுத்த வேண்டிய இடங்களை குறிப்பிட்டு இருக்கின்றார்கள்....
18ஆம் நூற்றாண்டில் தொழில் தொடங்கிய பல நிறுவணங்களின் பழைய கட்டிடங்களை காண முடிகின்றது...
பெரிய ஓட்டல்களில் விட்டு விடுங்கள் கும்பகோணத்தில், சின்ன சின்ன ஓட்டல்களில் டிபன் சாப்பிடும் போது சாப்பிட்ட இலையை எடுத்து போட வேண்டும் என்று சொல்லுகின்றார்கள்.. சாப்பிட்டு விட்டு எழுந்து இருக்கும் போதே சொல்லாமல் கை கழுவி வாய் துடைத்து பில் எவ்வளவு என்று பர்ஸ் பிரிக்கும் போது, சாப்பிட்ட இலையை எடுக்க சொல்கின்றார்கள்....
நான் சாப்பிட்ட இலையை எடுக்க எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் சாப்பிட்ட இலையை எடுக்கவும் என்று போர்டு வைத்தால் நான் எடுத்து போட்டு இருப்பேன் என்று சொன்னேன்... பதினைந்து வருசமா எழுதாமதான் இருக்கோம்... எல்லாரும் எடுத்து போட்டுட்டு போறாங்க.. நீங்க தான் கேள்வி கேட்கறிங்க..? என்றார்.. நான் சொன்னேன் பதினைந்து வருசம் கடை நடத்தற நீ எதுக்கு விலைபட்டியல் எழுதி வச்சி இருக்கே என்றேன்.. வரவன் அத்தனை பேரும் சாப்பிட்டு விட்டு நினைச்ச காசை குடுத்திட்டு போயிட்டான்னா?? அதுக்குதானே எழுதி வைக்கற....கும்பகோணத்துகாரனுக்கு தெரியும் உன் ஓட்டலில் சாப்பிட்ட எடுத்து போடனும்னு எனக்கு எப்படி தெரியும்?? நான் வெளியூர் எனக்கு எப்படி தெரியும்... சாப்பிட்ட இலையை எடுக்கவும் எழுதி இருந்தா எடுத்து போட்டு விட போறேன் என்றேன்... அவர் கடைசி வரைக்கும் ஒத்துக்கவேயில்லை...அதனால் நான் இலையை எடுக்கவேயில்லை...
கும்பகோணம் மடத்து வீதியில் முருகன் கபே கடைக்கு எதிரில் விக்னேஷ்வர் சலூன் இருக்கின்றது... அந்த கடை சிகை திருத்தும் நண்பரின் பெயர் முகிலன்.... ஷேவ் பண்ண சொன்னேன்... சன்சே இல்லை...அப்படி ஒரு வேலைக்காரனை நான் பார்த்ததே இல்லை எப்படியும்... ஒரு 50ரூபாய் ஷேவ் செய்ய கேட்பார் என்று நினைத்து இருந்தேன்... பட் இருபது ரூபாய்கேட்டார்... அவரின் தொழில் டெடிகேஷனுக்கு கூடுதலாக இருபது ரூபாய் கொடுத்தேன்... காசி இண்டர்நேஷனலில்தான் ரூம்.. பக்கத்தில் காசிதியேட்டர்... அந்த தியேட்டரில் மர்டர் பார்ட் டூ ஓடிக்கொண்டு இருந்தது..
கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கும் நான் போகவில்லை....வேறு ஒருநாளில் போய்க்கொள்வோம்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

//உலகத்தில் சிறப்பாக ஓட்டுனர் விருது வழங்க யாராவது உத்தேசித்தால் அதை கும்பகோணம் மற்றும் மாயவரம் பகுதியில் பேருந்து ஓட்டும் ஓட்டுனர்களுக்கு கொடுக்கலாம்...//
ReplyDeleteromba correct.. athu pola kumbakonam to thiruvarur root drivers'ukum kudukalam..antha road's la appadi oru valivu, nelivu , sulivu ellam mari mari varum....
//அதனால் நான் இலையை எடுக்கவேயில்லை...
ReplyDelete//
எஞ்சியிருக்கும் முதலாளித்துவ மன நிலையோ, நாம சாப்பிட்டதை நாம எடுப்பது ஒண்ணும் தப்பு இல்லையே, யாரோ ஒரு வேலையாள் எடுக்கனும் என்று எதிர்க்கிறது முதலாளித்துவ மனநிலை, மாற்றிக் கொள்ளுங்கள் ஜாக்கி. இன்னொரு முறை கைகழுவிட்டால் போச்சு, ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆய் போனால் இரண்டு முறை கழுவுவது போலத்தானே. இங்கேயாவது மனுசங்க சாப்பிட்ட எச்சிலையை மனுசங்களே எடுக்கவிடுலைன்னு நீங்க அதை பெருமையாகத்தான் எழுதி இருக்கனும்.
நீங்க சிங்கப்பூருக்கு வரும் போது 'சாந்தி' ரெஸ்டாரண்டுக்கு கூட்டிப் போகிறேன். இங்கேயும் சாப்பிட்ட இலையை எடுக்கும் பழக்கம் உள்ளது, போர்டெல்லாம் வைத்திருக்க மாட்டார்கள்.
எங்க ஊர பத்தி எழுதிட்டு, ஒரு போட்டோ கூட போடம இருந்தா எப்படி,
ReplyDelete// பெரிய ஓட்டல்களில் விட்டு விடுங்கள் கும்பகோணத்தில், சின்ன சின்ன ஓட்டல்களில் டிபன் சாப்பிடும் போது சாப்பிட்ட இலையை எடுத்து போட வேண்டும் என்று சொல்லுகின்றார்கள்.. சாப்பிட்டு விட்டு எழுந்து இருக்கும் போதே சொல்லாமல் கை கழுவி வாய் துடைத்து பில் எவ்வளவு என்று பர்ஸ் பிரிக்கும் போது, சாப்பிட்ட இலையை எடுக்க சொல்கின்றார்கள் //
இந்த கொடுமைய ரொம்ப நாளா சகிச்சிட்டு இருக்கோம்
கும்பகோணம்...
ReplyDeleteஒரு அருமையான பகிர்வு.
//திருச்சி அளவுக்கு பிகர்கள் வறட்சி கும்பகோணத்தில் இல்லை... அங்கொன்ரும் இங்கொன்ருமாக ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட்டுகளை பார்க்க முடிகின்றது..
ReplyDeleteஇதனை வன்மையாக கண்டிக்கிறேன் , காலேஜ் ரோடு , ஜோசெப் காலேஜ் அருகில் இருக்கும் காயத்ரி டீ கடை வாசலில் தம் அடிக்கும் வாலிபர்களை கேட்டு பாருங்கள் ஜாக்கி .
கும்பகோணம்...
ReplyDeleteஒரு அருமையான பகிர்வு.
நான் சாப்பிட்ட இலையை எடுக்க எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் சாப்பிட்ட இலையை எடுக்கவும் என்று போர்டு வைத்தால் நான் எடுத்து போட்டு இருப்பேன் என்று சொன்னேன்...---///
ReplyDeleteஅன்பின் கோவி என்னிடம் முதாளித்துவம் அது இது என்று ஜல்லி அடிக்க வேண்டாம்... சென்னை சாகர் விகார் ஓட்டலில் எச்சில் பிளேட்டை அலம்பியவன் நான்... மேல நான் எழுதிய வரியை படிக்காமல் சும்மா சாடுவது எனக்கு உடன்பாடு இல்லை...
சாப்பிட்ட இலையை எடுக்கவும் என்று போர்டு வைப்பது என்பது தமிழ்நாட்டில் பல ஓட்டல்களில் வழக்கத்தில் உள்ளது...முக்கால் வாசி ஓட்டல்களில் சாப்பிட்ட இலையை எடுக்க வேண்டாம்.. அப்படித்தான்தமிர்நாட்டு வழக்கம் . உடகே முதலாளித்துவம் அதுன்னு சொல்லறிங்க.. நான் சாப்பிட்ட இலையை எடுப்பதல் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி இருப்பதை கவனிக்கவும்..
இரண்டு வாட்டி ஆய் போனால் நிச்சயம் கழுவுவேன்.. ஆனால் சூத்தில் கை வைத்துக்கொண்டு செம்பு தேட மாட்டேன்...
சிங்கை நான் வந்தாலும் போர்டு இல்லாத ஓட்டலில் நான் சாப்பிட மாட்டேன்...
முருகவேல் இந்த கொடுமையை ரொம்ப நாளா சகிச்சிக்கிட்டு இருக்கோம்னு சொல்லிடாதிங்க.. அப்புறம் நீங்களும் முதலாளித்துவ லிஸ்ட்டில் சேர்க்கபடுவிர்கள்...
ReplyDeleteமுருகவேல் நான் இந்த டிரிப்பில் கேமரா எடுத்து போனாலும் எங்கயும் கேமரா எடுக்கவில்லை..
கும்ப கோணத்துல கோவில்தானே அதிகம் ...நவ நாகரீக மங்கைகளுமா...
ReplyDeleteநல்ல பகிர்வு, நீங்க இன்னும் தான் இருந்திங்கணா அர்ச்சனா ஹோட்டல் போங்க, காசி ல இருந்து கொஞ்ச தூரம் தான். மங்கள விலாஸ் போய் கடப்பா சாப்பிடுங்க. மறக்காம பஸ் ஸ்டான்ட்ல் இருக்கும் வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ் ஸ்டால்லில் அசோகா அல்வா மறக்காம வாங்கிகோங்க, இன்னும் நிறைய ஸ்பெஷல் இருக்கு. ட்ரை பண்ணுங்க
ReplyDeleteInteresting post. Thank you for sharing.
ReplyDeleteநல்ல பதிவு அண்ணன்...வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇலையில் சாப்பிட ஆசையை கிளப்பிறீங்க...
நீங்க சிங்கப்பூருக்கு வரும் போது 'சாந்தி' ரெஸ்டாரண்டுக்கு கூட்டிப் போகிறேன். இங்கேயும் சாப்பிட்ட இலையை எடுக்கும் பழக்கம் உள்ளது, போர்டெல்லாம் வைத்திருக்க மாட்டார்க
ReplyDelete/// gokkmakka engae annae singai vara naathee illathavarnu kutthikaaturiya? onakku irukku dee appu
நல்ல பதிவுங்க....
ReplyDeleteதிருச்சி அளவுக்கு பிகர்கள் வறட்சி கும்பகோணத்தில் இல்லை... அங்கொன்ரும் இங்கொன்ருமாக ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட்டுகளை பார்க்க முடிகின்றது.. சில பெண்கள் அசத்தலாய் இருந்தார்கள்..
ReplyDeleteHello boss neinga konjam ladis colg,govt mens colg,idhaya colg, arasu eng colg, annai colg etc... anga poi paruinga.... figure ilanu solathinga... konjam neram bus stand la wait pani paringa apo puriyum... kumbakonam is temple city so kovil neriya irukum.
கும்பகோணத்தை பற்றி இன்னும் நிறைய எழுதலாம்... நானும் சிலவற்றை பகிர்ந்திருக்கிறேன். மாயா, கார்த்தி சொன்னதை மனசில வைச்சிக்குங்க... வெள்ளிக்கிழமைகளில் நாகேஸ்வரன் கோவிலுக்கு போய் பாருங்க...
ReplyDeleteNeengal Coimbatore (Kovai) poganum
ReplyDeleteThamil nattil ulla KOLLAIYAR boomi athu.
Pechil mattum mariyathai....
Auto fare, College Fees, Hospital charges
Rent ellathilum Kollai.
Keralathil erunthu poyi padikkum manavar parents
padum kastum niraiya.
Coimbatore peyarai Colliyarroor enru marranum
Pathikkapatta oru Parent naan.
nanraaka thoonkivittu oriru idangalai paarththuvittu pathivu pottirukkireerkal!aamam,sanikkizhamai 8.30 vandikku 2 train tkt ullathu enru pathivu potten,pathivaiye kaanome!
ReplyDeleteRespected Jackie sekar,
ReplyDeleteYou have a good tamil skill and your blog is really good.
One request.
Please avoid using ugly words in the blog.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று
ஜாக்கி தெளிவாக சொல்லி இருந்தும்.. முதலாளித்துவம்னு சொல்றது.. டூமச். போர்டு வைக்காத.அந்த மாங்கா அவ்வளவு ஆர்கியு..பண்ணும்போது.. ஜாக்கி சார் செய்தது சரியே.. அனேகமாக மங்களாம்பிகா ஒட்டலாக இருக்கும் என்று நினைக்கிறேன். :)
ReplyDelete//CrazyBugger said...
ReplyDeleteநீங்க சிங்கப்பூருக்கு வரும் போது 'சாந்தி' ரெஸ்டாரண்டுக்கு கூட்டிப் போகிறேன். இங்கேயும் சாப்பிட்ட இலையை எடுக்கும் பழக்கம் உள்ளது, போர்டெல்லாம் வைத்திருக்க மாட்டார்க
/// gokkmakka engae annae singai vara naathee illathavarnu kutthikaaturiya? onakku irukku dee appu//
ஜாக்கி இது போன்ற பின்னூட்டம்பெல்லாம் எப்படி அனுமதிக்கிறார் என்று தெரியவில்லை, இந்த மட சாம்பிராணி நினைப்பது போல் நான் நினைக்கவில்லை, ஒருவேளை இந்த மட சாம்பிராணி அந்த எண்ணம் கொண்டதாக இருக்கும் போல்.
ஜாக்கி, கேபிள் சங்கரைப் போல் வெகு விரைவில் சிங்கப்பூர் வருவார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு, அதனால் தான் 'நீங்கள் வரும் போது' என்று நம்பிக்கையை சேர்த்து எழுதி இருக்கிறேன், இந்த மட சாம்பிராணி சொல்வது போ நினைத்திருந்தால், 'நீங்கள் ஒரு வேளை வந்தால்' என்று ஐயப்பாடாக எழுதி இருப்பேன்.
என்னை ஒருமையில் அழைக்கிறவனை நானும் ஒருமையில் அழைப்பேன். அது தான் மரியாதை
அன்பின் கோவி என் மீதான பாசத்துக்கு மிக்க நன்றி... அது ஒரு காமெடிக்கு யாரோ ஒருத்தன் சொல்லி இருக்கான்னு அனுமதிச்சேன்...நீங்க வருத்தம் கொள்ள வேண்டாம்.. அது கூட என்னை திட்டியதுதான்...என் மீதான உங்கள் அன்பை நான் அறிவேன்.. மிக்க நன்றி... அதனால் நீங்கள் வருத்தம் அடைந்து இருந்தால் நானும் வருந்துகின்றேன்.. நீங்க சொன்ன பதம் எனக்கு புரிந்தது.. மற்றபடி யார் எப்படி சொன்னால் என்ன-? ஏற்றி வீட்டால் என்ன??
ReplyDeleteபிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.