ஆல்பம்....
அடடே இப்படி ஒரு திறமையானவர் நம்மிடத்தில் இருந்தது நமக்கு தெரியாமல் போய் விட்டதே...??? ச்சே என்ன கொடுமை இது?
இலங்கை மீது பொருளாதார தடை வேண்டும் என்றும் அவர்கள் போர்க்குற்றங்களை வெளிபடுத்தியும், பனி,புயல், மழை என்று போராட்டங்களை புலம் பெயர் தமிழர்கள் முன்னின்று நடத்தி, உலக நாடுகளை தங்கள் மண் மீது நடந்த விஷயத்தை உலகறிய செய்ய என்ன என்னவோ போராட்டங்களை நடத்தினார்கள்...ஹிலாரிகிளின்டனை முதல்நாள் நமது முதல்வர் ஜெவை சந்திக்கின்றார்...ச்சே அவர் எங்கே சத்தித்தார்....ஹிலாரிதான் ஜெவை சந்தித்தார்.....வரலாறு முக்கியம் அல்லவா?? உடனே மறுநாளே பொருளாதாரதடையை அமேரிக்கா இலங்கை மீது விதிக்கின்றது...ச்சே என்ன பாஸ்ட்...நம்ம இந்திய பிரஜை ஒருவர் சொல்லுவதை. மறுநாளே அமேரிக்கா கேட்பதை நினைத்தால் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கின்றது... இப்படி ஒரு மனிதர் நம்மிடத்தில் இருக்கின்றார் என்பதை நினைக்கும் போதும், ரொம்ப பெருமையாக இருக்கின்றது....ஜெவின் ஆதரவு நாளேடு மற்றும் சலன ஊடகங்கள் இந்த செய்தியை திரும்ப திரும்ப நேற்று முழுவதும் வெளியிட்டுக்கொண்டு இருந்தன..ஈழத்தமிழர்களே கவலை வேண்டாம்... உங்கள் வாழ்வில் விரைவில் வசந்தம் பிறக்க இருக்கின்றது....எனக்கே அந்த நம்பிக்கை வந்து விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்... ஹிலாரியை சந்தித்தஉடன் பொருளாதாரதடை வந்தது போல நேற்றில் இருந்து ஜெ ஆதரவு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை பார்த்தால் விரைவில் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் ஏர்போர்ஸ் ஒன் வந்து நின்று ஒபாமா அப்பாயிண்ட்மென்ட் கேட்டு ஜெவை பார்க்க காத்து இருந்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை...கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரம் போல இருப்பேன் என்று பீளா விட்ட கலைஞரை விட இவர் இருந்து இருந்தால் நான்காம் கட்ட போரில் விடுதலைபுலிகள் வென்று இருப்பார்கள்... போரில் மக்கள் இறந்து போய் இருக்க மாட்டார்கள்...தனி ஈழம் மலர்ந்து இருக்கும்.... ச்சே....
============================
நீதிமன்றத்தின் உத்தரவை ஜெ அரசு கேலிக்கூத்தாக கருதிக்கொண்டு இருக்கின்றது.. சுப்ரீம் கோர்ட் தடை கொடுக்க முடியாது என்று சொல்லியும்,இன்னும் எந்த இடத்தில் சமச்சீர்கல்விக்கு தடை வாங்க முடியும் என்று கிரகம் கிரகமாக வேறு ஏதாவது உச்சநீதிமன்றம் இருக்குமா? என்று ஜெ அரசு முயற்சித்து கொண்டு இருக்கின்றது...... ஜெ ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும்... வெறும் 5 வருடம்தான் முதலைமைச்சர் பதவிகாலம் என்பதை அடிக்கடி மறந்து போய் விடுகின்றார்..திரும்பவும் மக்களிடம் வந்து நிற்க்க வேண்டும்.. ஆனால் நீதிபதிகள் அப்படி அல்ல....
======================================
இன்று சம்சீர் கல்விக்கு புள்ளி விபரங்கள் கொடுக்கும் பல பேரை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகின்றது..எலக்ஷனுக்கு முன்னே ஒரு வருடத்துக்கு முன் திமுக அரசால் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கொண்டு வந்த போது எந்த புள்ளி விபரத்தையும் நான் பார்க்கவில்லை..... அப்போது ஒரு மயிரானும் வாய் திறக்கவில்லை...இப்படி பட்ட புள்ளிவிபரங்களை, அப்போது பிளாக் உலகத்திலும் நான் பார்க்கவில்லை... இந்த கல்விக்கு எதிராக மனு செய்தவர்கள் எல்லோரும் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள்... காரணம் அவர்கள் வியாபாரிகள்...அதனால் வேறு பாட்டை காட்ட எதிர் குரல் கொடுத்து கொண்டு இருந்தார்கள்... ஆட்சிக்கு வந்து 3 நாளில் சமச்சீர் கல்வி பற்றிய முடிவு அரசு எடுத்தவுடன், புள்ளிவிபரங்களை அள்ளி வீசி விடுகின்றார்கள்....போனவருசம் திமுக ஆட்சியில் அறிமுகபடுத்தும் போதே அள்ளி வீசி இருந்தால் மெச்சி இருப்பேன்.. அதை விடுத்து ஜெ சொல்லிவிட்டார் என்றதும் அது தப்பு என்று வாதாடுபவர்களை என்னவென்று சொல்லுவது... இந்த பதில் எனக்கு கடிதம் எழுதிய நண்பருக்கு புரியவே... பெயர் வேண்டாம்..
========================================
ஆளும் கட்சியின் தொடர் நிலமோசடி கேஸ் மூலம் திமுக கூடாரம் கலகலத்து கிடக்கின்றது... சிலர் மீது காழ்புணர்ச்சி காரணமாகவும், எதிர்கட்சி பழிவாங்கும் மனோபாவத்தினாலும் கஞ்சா மற்றும் நிலமோசடி கேஸ் போடுவதை மறக்காத அதே வேளையில்... இந்த ஆட்சியோடு நாம் அடுத்து வரப்போவதில்லை... கலைஞர் முதுமை காரணமாக எதுவும் நடக்கலாம் என்ற பயத்தின் காரணமாக நிறையவே ஆசைப்பட்டு, நிறையவே விளையாடி இருக்கின்றார்கள் திமுகாகாரர்கள்... முக்கிய அமைச்சர்கள் மேல் நிலமோசடி மற்றும் பல குற்றாசாட்டுகளில் மாட்டி இருக்கின்றார்கள்... எந்த நேரத்திலும் கைது என்ற நிலையில் பயத்தில் இருக்கின்றார்கள் முன்னாள் அமைச்சர்கள்... பயம் இல்லாத ஒரே முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் மட்டும்தான்......
============
கோவையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கின்றது..25 தீர்மானம் வரை நிறைவேற்றி இருக்கின்றார்கள்...
திமுகவுக்கு வாக்களித்த ஒரு கோடியே 45 லட்சம் மக்களுக்கு நன்றி...
பொய் வழக்கு போடும் அதிமுக வுக்கு கண்டனம்
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை...
கல்வியை சீரழிக்கும் அதிமுக அரசுக்கு கண்டனம் ...
தலைமைசெயலக மாற்றத்திக்கு கண்டனம்..
என்று நீள்கின்றது....
===========================
இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு படு தோல்வி...========================
ஒரு தனிமனிதனின் கொலை வெறி 80 பேருக்கு மேல் பலரின் உயிரை பறித்து இருக்கின்றது...இப்போதுதான் நார்வேயில் குண்டு வெடித்து அதன் பீதியில் இருந்து இளைப்பாறும் வேளையில் ஒரு இளைஞர் பாசறை கூட்டம் ஒன்று நடத்தி இருக்கின்றார்கள்..அந்த கூட்டத்தில் புகுந்த ஒரு இளைஞன் ஒருவன் சராமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் என்பதுக்கு மேற்பட்டவர்கள் இறந்து போய் இருக்கின்றார்கள்....உயிர் பயத்தில் தங்களை காத்துக்கொள்ள பக்கத்தில் இருந்த கடலில் குதித்த இருக்கின்றார்கள் .. அதனால் இன்னும் உயிர் இழப்பு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றார்கள்...இந்த முறை தீவிரவாதி கிருஸ்துவர்...இதை எழுத காரணம்...திவீரவாதி என்றதும் ஒரு சாரரை நினைவுபடுத்துவதை தவிர்க்கவே..
===============
இப்போதுதான் சீனாவின் புல்லட் ரயிலை பற்றி புகழ் பேசி முடிக்க கூட இல்லை.. அதற்குள் அந்த புல்லட் ரயில் நின்று கொண்டு இருந்த ரயிலில் மோதி முப்பத்திஎழு பேர் வரை இறந்து போய் இருக்கின்றார்கள்...என்ன கொடுமை சரவணன் இது..
========================
மிக்சர்
ரமேஷ் , சுரேஷ் என்று சொல்லிக்கொண்டு குதிரையில் செல்லும் பைவ் ஸ்டார் விளம்பரம் எரிச்சலை தருகின்றது... அதே போல முனி பார்ட்டு டூ படத்தின் விளம்பரத்தில் ரத்தக்ககளரியாக வரும் பெண்மணி அடிக்கடி வந்த கொண்டே இருப்பது......
ஆனால் நான் ரசித்த மற்றும் ஒரு விளம்பரம்...மீட்டர் மேல ஏதாவது போட்டு கொடுங்க என்று கேட்கும் போது அந்த பெண்மணி பர்சில் இருக்கும் பழைய மொபலை ஆட்டோ முட்டரின் மீது வைத்து விட்டு செல்ல.. ஆட்டோ டிரைவர் இது என்னதிது இது என்று கேட்கும் போது திரும்பி பார்க்காமல் நடக்கும் பெண்மணி வெளிபடுத்தும் ரியாக்ஷன் அற்புதம்.. இது யூனிவர்சல் மொபைல் கடை விளம்பரம்.. அந்த பெண்மணி. யுத்தம்செய்யில் நடித்தவர் பெயரை மறந்து தொலைத்து விட்டேன்.
================
பேஸ்புக்கில் தினமும் 10 பிரண்ட் ரெக்வெஸ்ங்ட வருகின்றது...அதில் பல பேர் தங்கள் புரோபலை மறைத்து விட்டு வெறும் ஒரு பெயர் ஒரு கார்ட்டுன் போட்டோ போட்டுககொண்டூ தங்களை பற்றிய சுயத்தை மறைத்து கொண்டு வருகின்றனர்...முன்பு எல்லாத்தையும் அக்செப்ட் செய்து கொண்டு இருந்தேன் .. இப்போது அப்படி இல்லை... அதே போல களையும் எடுக்க வேண்டும் போல...பார்ப்போம்..
==========================
ஒரு நண்பர் ஒரு பின்னுட்டம் போட்டு இருந்தார்..அதில் நான் புரோபைலோடு இருக்கின்றேன் தைரியம் இருந்தால் என் கமென்ட்டை வெளியடுங்கள் என்று சொல்லி இருந்தார்... நம்ம தைரியத்தை பத்தி பேசறாரே அவர் என்ன தைரியமா இருக்காரான்னு போய் பார்த்தேன்.. ஒரு பேர்...ஒரு வேலை இருக்கும் ஊர்... இதுதான் வெளிப்படையான புரோபைலாம்.. அட தேவுடா... நான் என் போட்டோ, போன் நம்பர், மெயில் அட்ரஸ் மொதக்கொண்டு கொடுத்து இருக்கேனே?? அப்ப என்னிது புரோபைலே இல்லியா? ஏம்பா நான் சரியா பேசறனா?? பொதுவா ஒன்னு சொல்லறேன்... நீங்கள் ரசிப்பது போல, நீங்கள் நினைப்பது போல எழுத என்னால் முடியாது... அதுக்கு நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்...
===================
இணையத்தில் முக்கியமாக கூகுள் பஸ்சில், படித்த காலேஜ் மற்றும் தாங்கள் குழந்தையாக இருந்த புகைபடங்களை பகிர்ந்து கொண்டு அசத்திக்கொண்டு இருந்தார்கள்...நம்ம சார்பா நம்ம போட்டோவையும போட்டு விட்டேன்.. அது உங்கள் பார்வைக்கு.....
விகல்பமில்லா ஒரு கணத்தில் அப்பாவி ஜாக்கிசேகர்...
===================================
ஆழ்வார்திருநகர் மெகாமார்ட் வரை சிக்னல் வரை டிராபிக்... வடபழனிக்கு போக முடியவில்லை....விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டர் இப்போது பேம் நேஷனல் என்றும் அதில் சந்திரா மால் என்ற மாலும் வந்து விட்டது... அதனால் டிராபிக் என்று நினைத்தேன்... ஆனால் எதிரில் இருக்கும் இரண்டு பாதள சாக்கடை மேன் ஹோல்கள் உடைத்துக்கொண்டு பெரிய பள்ளட் உருவாகி அந்த பக்கம் எல்லா கார்களின் அடிப்பாகத்தையும் ஒரு பதம் பார்த்துக்கொண்டு இருந்தது.. ஒரு வாரமாக அப்படியேதான் இருக்கின்றது... இன்னும் சரி செய்யவில்லை..பைக்காரவங்க ரோட்டு ஓரமா போய் லைட்டா தப்பிச்சிடறாங்க...ஆனா கார் வச்சிறக்கறவன் அந்த பக்கம் கிராஸ் பண்ணும் போது பர் பர்னு அவுங்க காரோடு பாடி ரோட்டுல உரசும் போது புலம்பிகிட்டே போறாங்க... என்ன செய்ய??
இந்த வார கடிதம்
========
அன்புள்ள ஜாக்கி அவர்களுக்கு,
நான் ஒருவாசகன் துபாயில் இருந்து , திருச்சி என் ஊர்: நல்ல பதிவு : நானும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாய் உங்களையும் கேபிள் சங்கர் அவர்களையும் படித்து வருகிறேன். நல்ல திறமைசாலிகள்.வாழ்த்துக்கள்.
ராம்குமார்
துபாய்
===============
நன்றி... ராம்குமார்...
============================
jackiesekar.com
Site report about jackiesekar.com. Its server hosted IP address is.............. jackiesekar.com currently has a pagerank 2 and we estimate it receives about 18,000 unique visitors per day. Its current Alexa global ranking is #61,941. jackiesekar.com earns the owner approximately $68 USD each day and has the estimated overall value of $73,913 USD. This report was last updated
Domain Name:jackiesekar.com
IP address:..........................
Alexa Rank:#61,941
Google Pagerank:
Daily visitors:18,000
Daily pageviews:32,400
Daily Ads Revenue:$68
Search engine %:4%
Bounce %:65%
Time on Site:3.99667 seconds
===============================
இந்த செய்தியை அனுப்பிய அப்பாஜிலட்சுமி நாராயணனுக்குஎனது நன்றிகள்.....68 டாலர் மட்டும் டெய்லி எனக்கு இதுல சொன்னது போல வந்தா.... டெய்லி மூணு மணிநேரத்துக்கு எழுமணிநேரத்துக்கு இணையத்துலே கெடப்பேன்...ஒரு நாள் கூட விடாம டெய்லி எழுதிகிட்டே இருப்பேன்.. ஒரு சின்ன தன்னம்பிக்கை உருவாக நினைவு படுத்திய அப்பாஜிக்கு
மிக்க நன்றி....
=================
பிலாசாபி பாண்டி
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கின்றாள் என்பது பொய்.. வெற்றி பெற்ற ஆணுக்கு பின்னே பெண் வந்து நின்றுக்கொள்கின்றாள் என்பதே உண்மை...
==================================
நான்வெஜ்18+
ஜோக்...1
திடிர்னு ஒரு வாரத்துக்கு முன்ன இருந்து என் பேன்டிஸ்லயே சூசூ போயிடறேன்.. ரொம்ப கஷ்டமா இருக்கு.... சின்னவயசுல இருந்து நடந்தாலும் பிரச்சனை இல்லை...மனசை தேத்திக்கலாம்.. பட்..இந்த வயசுல இப்படி இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. டாக்டர்... நீங்கதான் இந்த பிராப்ளத்தை கீயூர் செய்யனும்.... சரி அப்படியா? டிரஸ் முழுசா ரிமூவ் பண்ணிட்டு அந்த நிலைக்கண்ணாடி முன்ன தலைகீழா நில்லுங்க.. என்றதும் மறு பேச்சு பேசாமல் அதே போல் அந்த கண்ணாடி கிட்ட போய் தலைக்கீழா அந்த பெண்மணி நிக்க... டாக்டர் நேரா போய் தலைகிழா நிக்கற அந்த பெண்ணோட மேட்டா பாயின்ட் கிட்ட தன் தாடையை வச்சி பார்த்துட்டு.. ஓகே டிரஸ் போட்டுக்குங்க என்றார்...மாத்திரை எழுதி கொடுத்தார்... நைட்டு தூங்க போகும் முன் ஒருமுறை சூசூ போயிட்டு போய் படுங்க.. என்றார்... அவ்வளதானா? ஆமாம்.. தப்பா நினைச்சிக்கலைன்னா ஒன்னு கேட்கட்டுமா?? சொல்லுங்க.. எதுக்கு என்னை தலைகீழா கண்ணாடி முன்னே நிற்க்க சொல்லி அங்க உஙக தாடைய வச்சி பாத்திங்க...
எனக்கு பொண்ணு பார்க்க போறேன்... இதுவரை தாடி வச்சதில்லை... வச்சா எப்படி இருக்கும்னு செக் பண்ணேன்...
டாக்டர்.. யூ யூ யூ.....
===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
===============
//முனி பார்ட்டு டூ படத்தின் விளம்பரத்தில் ரத்தக்ககளரியாக வரும் பெண்மணி
ReplyDelete-- அது ராகவா லாரன்ஸ் தான்னு நெனைக்கிறேன் தல..
யுத்தம் செய் படத்துல நடிச்சவங்க பேரு லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
ReplyDeleteneenga j ya nakkal adikiringala parattaringalanu puriyalaye...
ReplyDeleteசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் .super..
ReplyDelete//ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கின்றாள் என்பது பொய்.. வெற்றி பெற்ற ஆணுக்கு பின்னே பெண் வந்து நின்றுக்கொள்கின்றாள் என்பதே உண்மை...// இந்த டைலாக் ஏற்கன்வே வினய் சதா நடிச்ச படத்தில வந்திருச்சு. படம் பேர் தான் ஞாபகம் வரல
ReplyDeleteDear Friend,
ReplyDelete...இந்த முறை தீவிரவாதி கிருஸ்துவர்...இதை எழுத காரணம்...திவீரவாதி என்றதும் ஒரு சாரரை நினைவுபடுத்துவதை தவிர்க்கவே..
U understood our feeling well...
Thank u.
Sheik Mujibur Rahman.
hi பிலாசபி ..unga phylashapy ellam nan fb la potu ran para wailla thane .....nalla cmnts kidaikudhu
ReplyDeletehi pandi unga phyloshphy ellam nan fb la poduran para illa thane
ReplyDeleteசாண்ட் விச் நல்லாயிருந்திச்சு,வாழ்த்துக்கள்!அந்தப் பொண்ணு சூ,சூ போறது நின்னுடிச்சா?
ReplyDeletehello boss did JJ madam told that she responsible for aids cut to sri lanka...
ReplyDeleteit was channel 4 videos is the reason for this.
your lovingly
gonzalez.
http://funny-indian-pics.blogspot.com/
////இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு படு தோல்வி...//
ReplyDeleteமுற்றிலும் பிழையான தகவல்.... இந்திய தொலைகாதி பத்திரிகைகளை நம்பாதீர்கள்...
unga facebook ID ennathu ? konjam enaku kudungalen cht pananum ungaloda
ReplyDeleteJackie,
ReplyDeleteNeat picture of your infancy. Thanks for sharing.
US government does not take action just because TN Chief Minister or even India's CM asked for it. They do their due diligence before making any announcement.
The impression you had got is nothing but a political propaganda from AIADMK.
That said, I am glad that something good is happening for our kins in Sri Lanka.
முதலில் ஜெயலலிதா வாயில் இருந்து ஈழம் என்ற வார்த்தை வரட்டும் பார்க்கலாம்
ReplyDeleteசும்மா டயலாக் உடாதிங்க அண்ணா. நேற்று கோவை பொதுக்குழுவில் ஈழ தமிழர்களுக்கு தனி நாடு, கச்சத்தீவு மீட்பு பற்றி தீர்மானம் நிறைவேற்றி உள்ள திமுக வை பார்த்து கேட்க வேண்டியதுதானே? 7 வருஷமா மத்திய ஆட்சி பங்கு, 5 வருஷமா மாநில ஆட்சில புடுங்காததை இன்னிக்கு தீர்மானம் போடாட்டி என்னன்னு கேளுங்களேன்.
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி..
ReplyDeleteதமிழ் உதயன் அந்த டகால்ட்டி விட்ட காரணத்தால்தான் கலைஞரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க மக்கள்.. ஆனா அதுக்கா கலைஞர் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று நீங்கள் சொன்னால் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை..
கருத்துக்களுக்கு பதில் சொல்ல தெரியாமல், புரொபைலில் பேர் இல்லை, ஊர் இல்லை, வேலை இல்லை என்று சொல்வது சப்பை கட்டு கட்டுவது போல் உள்ளது. நீங்கள் எனக்கு பிடித்தது போல் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கமென்ட் பாக்ஸ் என்று ஒன்றை வைத்துவிட்டு அதில் என்னை பாராட்டும் கமென்ட்களை மட்டுமே வெளியிடுவேன் என்று சொல்வது உங்கள் சுயத்தை காட்டுகிறது. இப்போது எனது புரொபைலை அப்டேட் செய்து இருக்கிறேன். உங்கள் reaction எதிர்பார்த்து..
ReplyDeleteகருத்துக்களுக்கு பதில் சொல்ல தெரியாமல், புரொபைலில் பேர் இல்லை, ஊர் இல்லை, வேலை இல்லை என்று சொல்வது சப்பை கட்டு கட்டுவது போல் உள்ளது. //
ReplyDeleteஅமாங்க.. இப்ப வந்திங்க இல்ரைல பதில் சொல்லறன் இல்லை அப்படித்தான்...நீங்க யாருன்னே வெளிகாட்டிக்கவே பயம்னா உங்க கருத்துக்கு நான் ஏன் மதிப்பு கொடுக்கனும்????
நீங்கள் எனக்கு பிடித்தது போல் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கமென்ட் பாக்ஸ் என்று ஒன்றை வைத்துவிட்டு அதில் என்னை பாராட்டும் கமென்ட்களை மட்டுமே வெளியிடுவேன் என்று சொல்வது உங்கள் சுயத்தை காட்டுகிறது. இப்போது எனது புரொபைலை அப்டேட் செய்து இருக்கிறேன். உங்கள் reaction எதிர்பார்த்து..//
ReplyDeleteஇதுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...பட் பரோபலோடு வந்த காரணத்தால் பதில்..//
இந்த கமென்ட் பாக்ஸ் என் பதிவுக்கு உங்கள் பதில் என்ன என்பதை நான் அறிந்து கொள்ளவே... அதில் எதை வெளியிடுவது, எதைவெளியிடக்கூடாது என்பது என் விருப்பமே...
எல்லாத்துக்கு என்னால் பதில் சொல்லமுடியாது...எனக்கு நேரம் இருப்பின் பதில் அளிப்பேன்// இப்படி தெயிவா சொன்னபிறகும் கேள்வி கேட்டா ?? என்ன அர்த்தம்...
//hayyram said...
ReplyDelete//ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கின்றாள் என்பது பொய்.. வெற்றி பெற்ற ஆணுக்கு பின்னே பெண் வந்து நின்றுக்கொள்கின்றாள் என்பதே உண்மை...// இந்த டைலாக் ஏற்கன்வே வினய் சதா நடிச்ச படத்தில வந்திருச்சு. படம் பேர் தான் ஞாபகம் வரல..//
அந்த படம் "உன்னாலே உன்னாலே"
//Pradeep said...
////இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு படு தோல்வி...//
முற்றிலும் பிழையான தகவல்.... இந்திய தொலைகாதி பத்திரிகைகளை நம்பாதீர்கள்...//
20 தேர்தல் தொகுதிகளில் 18 தொகுதிகளில் இரண்டாம் காந்தி ராஜபக்சே தோல்வி அடைந்துள்ளார்.அப்படிஎன்றால் அது படு தோல்வி இல்லாம...?
//அதே போல களையும் எடுக்க வேண்டும் போல...பார்ப்போம்..//
ReplyDeleteஇந்த களை எடுப்பில் என்னை எடுக்காமல் இருக்க வேண்டிகிறேன் ...
Srinivasan M
"விகல்பமில்லா ஒரு கணத்தில் அப்பாவி ஜாக்கிசேகர்..."
ReplyDeleteஒரு திருத்தம்...
விகல்பமில்லா ஒரு கணத்தில் ஜட்டி போடாத அப்பாவி ஜாக்கிசேகர்..." - ஹா ஹா ..ஆனாலும் அழகு..
Loves ur all posting Jackie. The thing is first our government(central and state) dont bother about the common mans lives. Peoples are till now talking about srilankan tamils but nothing is happening. Even our government does not cares about its own citizens attacked by srilankan navy.
ReplyDeleteGreat India & integrity India.