மினிசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 17/07/2011 ஞாயிறு


ஆல்பம்...

புதிய ஆட்சி  வந்ததும் மக்கள் ஏதோ ஒரு விஷயத்தில் சாதித்து விட்ட உணர்வுக்கு வந்தார்கள்.. காரணம் முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல்.....
ஆனால் புதிய ஆட்சி தமிழகத்தில் வந்த உடன் எல்லா குடும்பத்தையும் பாதிக்கும் வகையில் அன்பு பரிசாக சமச்சீர் கல்வி குழப்படியால் மாணவர்கள் எதை படிப்பது என்ற கேள்வியோடு குழப்பத்தில் இருக்கின்றார்கள்..புதிய அரசின் அன்பு பரிசு..... அதுக்கு அடுத்த பரிசு 14 பர்சென்ட் வாட் வரி....100ரூபாய்க்கு சோறு தின்னா 14 ரூபாய்க்கு வரி கட்டவேண்டும்...அதுக்கு அடுத்த பரிசுக்கும் தமிழகம் ரெடியாகி கொண்டு இருக்கின்றது... அதுதான் மின்கட்டண உயர்வு...கெட் ரெடி பீப்பிள்ஸ்.......
================
விபத்து செய்திகள் வருத்தம் தருபவைதான் என்றாலும் நேற்று குரோம்பேட் ரயில் நிலையத்தில் செல்போன் பேசியபடி ரயில் ரோட்டை கிராஸ் செய்த ஒரு பெண் ரயில் மோதி இறந்து போய் இருக்கின்றாள்... அவளோடு நடந்து சென்ற இன்னோரு பொண்ணுக்கு கால் துண்டாகி இருக்கின்றது...இந்த விபத்து செய்தியை கேட்ட போது எங்கே போய் முட்டிக்கொள்வது..
======

சென்னையில் கடந்த திமுக ஆட்சியில் இரண்டு பூங்காக்கள் மிக நேர்த்தியாக பராமரிக்க பட்டன.. ஒன்று அசோக் பில்லர் அருகே  கோகுலம் பார்க் அருகே இருக்கும் பூங்கா.. மற்றது சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் பூங்கா இரண்டுமே மேட்ரோ ரயில் வழித்தடத்தில் மாட்டி சின்னா பின்னமாக ஆகிவிட்டன... தம்பி ரோஸ்விக் சிங்கையில் இருந்து வந்த போது அங்கேதான் சநதித்தோம் இப்போது ரோஸ்வீக் வந்து அதை பார்த்தால் மயக்கமே அவனுக்கு வந்தாலும் ஆச்சர்யபடதேவையில்லை...
===========
மிக்சர்.

நான் வாங்கிய பல்புகள்..

ஒய்எம்ஆட்ஸ் என்ற நிறுவனத்தின் விளம்பரங்கள் எனது தளத்தில் வெளியிட்டு இருந்தேன்...300 டாலர்கள் அனுப்புவதாக சொல்லி இருந்தார்கள்.. அதை வைத்து சில குடும்ப செலவுகளை  செய்ய தீர்மாணித்து இருந்தேன்...அந்தக் கம்பெனியே இழுத்து மூடி எனக்கு மட்டும் அல்ல என்னை போன்று உலகம் உள்ள  பலருக்கு பல்ப் கொடுத்து விட்டார்கள்..என்ன கொடுமை சரவணன் இது..


=============

பல்லாவரம் கவுல் பஜார் வழியாக என் வீட்டுக்கு வர முடியும்... சென்னைக்கு வரும் பல விமானங்கள், மிக தாழ்வாக பறக்கும் இடம் அது.. காரணம் பக்கத்தில் சென்னை ஏர்போர்ட்டின் ரன்வே அங்கேதான் இருக்கின்றது.. விமானத்தில் நான் இதுவரை பயணம் செய்யாத காரணத்தால் எனக்கு அதன் மீதான ஈர்ப்பு, ஒரு இளம் பெண்ணின் மீது இருக்கும் ஈர்ப்பு போல் இருந்து கொண்டே இருக்கின்றது...

இருப்பினும் ஒரு கழுகு போல அது இறங்கும் அழகை எனது கேமராவில் படம் பிடிக்கவேண்டிய ஆசையின் காரணமாக அந்த  வழியாக கைலி கட்டிக்கொண்டு கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு இருக்கும் ஒரு ஆளை பார்த்தேன். பார்க்கும் பார்வையில் அந்த ஆளிடம் குசும்பனின் குசும்பபை பார்த்தேன் இருந்தாலும் அவனிடம்.... எந்த நேரத்துல பிளைட் அதிகமாக இந்த இடத்தில் ஏறும்? இறங்கும்? என்று நான் கேட்க... அதுக்கு அவன் சிம்பிளாக ஒரு பதில் சொன்னான்....பைலட் கிளம்பற நேரத்தை பொறுத்தது என்று சொன்னான்...செமை பல்ப்பை வாங்கி கொண்டு அவனிடம் மேற்க்கொண்டு எதும் பேசாமல்  வந்தேன்..
==================


பல்புகள் வாங்கனாலும் சில சந்தோஷ நிகழ்வுகள் நடந்தன...இந்த பூமியின் பந்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நண்பர் அவர்... பெயர் வெளியிட  வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்..எனக்கு சரியான நேரத்தில் எனக்கு  உதவி செய்தார்... நன்றி  நண்பா...அதே போல வேறு ஒரு நண்பர் அனுப்பிய பாட்டில்  ஒன்று மிக நீண்ட பயணத்துக்கு பிறகு என்னை வந்தடைந்தது .. நன்றி நண்பனே.

=======================
போன வாரத்தில் கடிதத்தின் வாயிலாக ஈரோட்டில் இருக்கும் ராகவி என்ற 15 வயது  பிளட்கேன்சர் பெண்ணுக்கு உதவி  கேட்டு இருந்தேன்..உதவி செய்ய இரண்டு மூன்று பேர் போன் செய்து இருக்கின்றார்கள்...உதவி கிடைத்ததும் அந்த பெண்ணின் பெற்றோர்கள் சொல்கின்றேன் என்று சொன்னார்கள்... பார்ப்போம்..கிடைத்தால் சந்தோஷமே...
================
இந்தவார புகைபடம்

இந்தபடம் புதுக்கோட்டை அருகே எடுத்தது.. ஒரு சித்தன் தனது உதவியாளருடன் யாரோ ஒருவரின் குடும்ப நிகழ்ச்சிக்கு மைக் செட் கட்டப்போகும் தருனம்........எனது கிளிக்...

=============
பிலாசபி பாண்டி....

உண்மையான தூய அன்பினை புரிந்து கொள்ள மிக அழகான சந்தர்பம்தான் பிரிவு.........

===============
நான்வெஜ்18+

லேடிஸ் ஹாஸ்டலில் பெண்கள் குளித்துக்கொண்டு இருக்கும் போது தீப்பிடித்துக்கொண்டது...ஒரு மணிநேரம் கழித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை  தீயனைப்பு வீரர்கள் அனைத்தார்கள்..3 மணி நேரம் கழித்துதான் தீயனைப்பு வீரர்களின் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது....

=============


பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS... 

 

=============

4 comments:

  1. was expecting your write up about yesterday's meet

    ReplyDelete
  2. புதிய அரசின் அன்பு பரிசு......... விக்கலுக்கு வெஷத்த எடுத்து குடிசிட்டாங்களே தமிழ்நாட்டு மக்க !

    ReplyDelete
  3. அப்படி என்னதான் பேசுவாங்களோ .....அதுவும் ரயில் வருகிற நேரம் கூட தெரியாமல் ...எனக்கும் ஒரு சம்பவம் ...http://kovaineram.blogspot.com/2011/07/blog-post_12.html

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner