அனானிகளின் தொல்லை அதிகமாயிட்டது...அனானிகளை நான் ஒரு போதும் பொருட்படுத்துவதில்லை..
இருந்தாலும நமக்கு நேரும் விஷயத்தை பொதுவாய் சொல்ல வேண்டும் அல்லவா? அதனால்தான்...இந்த பதிவு.... தன் சுயத்தை மறைத்து விட்டு கருத்து சொல்லும் யாரையும் நான் மதிப்பதில்லை... நான் சுயத்தோடு வருகின்றேன் எனக்கு பதில் சொல்லுங்கள் என்றால் எனக்கு சுயத்தோடு வருபவர்களோடு பேச அல்லது கருத்து சொல்ல நான் விரும்ப வேண்டும் அல்லவா?? என்ன ஜாக்கி வரவர சுயசொறிதல் அதிகமாயிட்டது...???பெரிய பெரிய பத்திகளில் திட்டுகின்றார்கள்...வேலை மெனக்கெட்டு எப்படி எழுதுகின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை..பட் அப்படி திட்டும் அளவுக்கு வளர்ந்ததே பெரிய விஷயம்தான்...
வரும் மெயிலை படித்து விட்டு கொஞ்சம் பிசிர் தட்டினாலும் மார்க் ஆஸ் ஸ்பேம் கொடுத்து விடுகின்றேன்...அதனால அடுத்து அதுங்க பத்தி பத்தியா எழுதறது என் பார்வைக்கே வருவதில்லை.....
நான் என்ன உலகை திருத்தவந்த ரட்சகன் என்று என்னைக்காவது சொல்லி இருக்கேனா?... போகிற போக்கில் சுயசொறிதல் சுயசொறிதல் என்று சொன்னால் என்ன அர்த்தம் ?என்று எனக்கு தெரியவில்லை...
நான் முன்னாடியே சொல்லிட்டேன்...எனக்கு என்ன தொனுதோ அதை எழுதுவேன்... பிடிச்சா படி இல்லைய்யா பொத்திகிட்டு போயிட்டோ இரு....சுயசொறிதல் அதிகமாகிவிட்டது... ஆமா எனக்கு சொறியனும்னா நான் தான் சொறிஞ்சிக்கினும் நீயா வந்து சொறிஞ்சி விடுவடா பண்ணாடை.............
சரி... சுயசொறிதலுக்கு ஒரு பதிவே போடுவோம்... எவன் கேட்கறான்னு பார்ப்போம்...இன்னும் சுயசொறிதல் நிறையவே இருக்கும் படிச்சி வயிறு எரிஞ்சி போடா பண்ணாடை.........ஆனாலும் எனக்காக மெனக்கெடறபாரு அந்த அளவுக்கு என் மேல வெறித்தனமான ரசிகரா நீ இருப்பது எனக்கு பெருமையே.......
========================
சுயசொறிதல்...
ஆயிரம் பேர் நல்லா இருக்கு என்று சொல்லட்டும் உங்கள் பிளாக் அற்புதம் என்று பாராட்டு சொல்லட்டும்... நேற்று கூட டிவிடி நண்பருக்கு வாங்கி கொடுக்க பர்மாபஜாருக்கு போன போது ஒரு கஸ்ட்ம்ஸ் ஆபிசர் டிவிடி வாங்க வந்து என்னை பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்துவிட்டு பிரியா இருக்கும் போது சொல்லுங்க.. நாம மீட் பண்ணுவோம் என்று சொன்னார்...அது வேறு விஷயம்...என் பதிவை தொடாந்து வாசித்து விட்டு அடிக்கடி போன் செய்து பாராட்டும் எனது பால்ய நண்பன் லட்சுமிநாரயணனின் பாராட்டு வெகு சந்தோஷத்தை கொடுக்கும்....ஜாக்கி என்னதான் நானே பிளாக் எழுதினாலும் இவ்வளவு போலட்டா நான் எழுத வாய்ப்பே இல்லை என்று சொல்லுவான்.....
ஆனாலும் என் ஊர்காரர் ஒருவர் பாராட்டுவது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்... அப்படி நான் சுற்றி திரிந்த தெருக்களில் சுற்றி திரிந்த யாரோ ஒரு நபர் எனக்கு கடிதம் எழுதி பாராட்டும் போது கிடைக்கும் சுகமே சுகம்...
அமெரிக்காவில் நடந்து போகும் போது ஒருவர் தமிழ் பேசுவதை பார்த்து விட்டு நீங்க தமிழரா என்று கேட்டு விட்டு சினேகம் கொள்வதை போன்ற சந்தோஷம்.. இது....
============================== =======
ஜாக்கி சேகர் அவர்களுக்கு,
வணக்கம்...
என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ...
கடந்த சில நாட்கள் தாங்கள் ..தங்களது ப்ளோகில் எழுதவில்லை...
தொடர்ந்து எதனை முறை உங்கள் ப்ளாக் அப்டேட் செய்து உள்ளீர்களா ?
என பார்த்து இருப்பேன்...
சிறிய வயதில் ..மண்டையில் படிப்பு ஏறாத காரணத்தால்
தந்தையிடம் அடி வாங்கிய நாட்கள்....அவர் அதற்காக வேதனை பட்ட நாட்கள்..
கடைசி வரை ஏற வில்லை...Fr. Arulappan அவர்களிடம் படித்தேன். ம்ம்மம்மம்ம்ம்ம்
தேறவில்லை.
எனது பள்ளி வாழ்க்கையே ....பெருமாள் கோவில் தெரு..போடி செட்டி தெரு..
கம்மியாம்பெட் ...சரஸ்வதி நகர்.....இவளவுதான்.
ஊர் சுற்றியவை...கடலூர் முழுக்க!
படிக்க வில்லை. இருபினும்...எப்படியோ ...நேர்மையான முறையில் சமுகத்தில்
அச்சு தொழில் மூலம் சம்பாதித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்.
இருப்பினும்...இளமை காலத்தில் ...செய்த தவறுகளை ...நினது பார்க்கிறேன்...
கவலை இல்லாத நாட்களாய் போயின..
ஆனால் இன்றும் வருந்துகிறேன்...ஏன் படிக்கவில்லை.
தாய் தந்தையருக்கு நல்ல பிள்ளையாய் இல்லையே என்று...என்ன செய்ய ?
படிப்பே பிடிக்கவில்லை....இன்று அதே எழுத்தே பிழைபாகி போய் விட்டது. ..
இது வரை வாழ்கையில் பெரிய சாதனை எதனையும் புரியவில்லை....
படிக்கமால் இந்த கணினியை நானே கற்று கொண்டதை தவிர ....
இன்று Computer பைத்தியம்...
படிப்பு தான் வாழ்கையா ? இல்லை படித்திருந்தால் இன்னும் மேலே வந்திருக்கலாம்...
இக்கரைக்கு அக்கறை பச்சை தானே...(Old Dialogue)
ok...
தாங்கள் கடலூரில் இருந்து சென்னையில் இப்படி ஒரு ப்ளாக் எழுதுகிறீர்கள்....இவளவு ரசிகர்கள் ..
மிக பெருமையை உள்ளது...சந்தோஷ படுகிறேன்..
இன்னும் கடலூர் Develop ஆக வேண்டும்.. அப்படியே தான் உள்ளது...மிக வருத்தமாய் உள்ளது.
நிறைய எழுத ஆசை..இருந்தாலும்..உங்க அளவுக்கு வராது....
தொடர்ந்து நிறைய எழதுங்கள்....தினமும் ....
என்றும் உங்கள்
- அப்பாஜி
௯௪௪௩௫ ௩௭௫௫௭
குறிப்பு: அச்சு தொழிலில் இருந்து கொண்டு இவளவு தப்பாய் டைப் செய்கிறானே !
என நினைகிறீர்கள ...ச்..ச். சும்மா....உங்கள் ஸ்டைலில் எழதி பார்தேன்...
============
ஜாக்கி சேகர் அவர்களுக்கு,
வணக்கம்.
2009 வருடத்தில் தங்களது site-ஐ சேமித்து வைத்திருந்தேன்.
மறந்து விட்டேன் வேலையில்....
இப்பொழுது சில மாதங்களாக படிக்கிறேன்.
சொல்ல வார்த்தைகள் இல்லை.
மிக
மிக
இயல்பாக எழுதுகிறீர்கள்.
எல்லாவற்றிலும் கடைசி 4 வரிகள் `நச்'
வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.
உங்கள் வாசகன்
அப்பாஜி
--===================
அடப்பாவி அப்பாஜி ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணறேன்னுதான் எல்லாரும் வருத்து எடுக்கறாங்கன்னா.. அதை என் ஸ்டைல்னு வேற சொல்லறிங்க.. வௌங்கிடும்...அப்பாஜி எனக்கு போன் செய்யுங்கள்...9840229629......
நேற்று கூட நமது ஊர்காரர் ராஜ் என்பர் போன் செய்தார்... அவரின் அப்பா கடலூர் நியூசினிமா அருகே ஆட்டோமோபைல் ஷாப் வைத்து இருந்தவராம்...தற்போது சென்னை அண்ணாநகரில் வசிக்கின்றார்.. இதே கடலூரில் இருந்து என்னை திட்டி வந்த மெயில்கள் அதிகம் இருக்கின்றன....என்னை நக்கல் விட்டவர்கள் ஏராளம்...அப்பாஜி அருளப்பன் சாமியாரிடம் நீங்கள் படித்தீர்கள்... நான் லாரான்ஸ் பாதரிடம் படித்தேன்....அதுக்காக ஒரு பழைய போட்டோ நம் பள்ளி நினைவுக்காக...
அப்பிஜி அதில் நான் எங்க இருக்கேன்னு கண்டுபிடிக்க எனக்கே நேரம் தேவைப்பட்டது...உங்களுக்கு தெரிந்த கடலூர் நண்பர்கள் யாராவது இருக்கின்றார்களா என்று பாருங்கள்.. லாரன்ஸ் பாதர்...மற்றும் தமிழ் ஐயா செல்வராஜ் உடன்... படத்தை கிளிக்கி பார்க்கவும்...
புனிதவளனார் மேல் நிலைப்பள்ளி,கம்பியம்பேட்டை, திருப்பதிரிபுலியூர்...கடலூர்...2 ஆண்டு 1990
=====================================================
சில நண்பர்கள் உங்களை பாராட்டி வந்த மெயிலை மட்டும்தான் வெளியிடுகின்றீர்கள் ஏன் திட்டி வந்த மெயிலை போட மாட்டேன்கின்றீர்கள் என்று உணர்ச்சி வசப்பட்டு ஒரு நண்பர் கேட்டு இருந்தார்....
உங்க வீட்டு நடு ஹாலுக்கு வந்து உங்களை ங்கோத்தா கொம்மான்னு திட்டினா நீ வேனா வாய பொத்திகிட்டு போவலாம்... அந்த பெருந்தன்மை உங்க கிட்ட இருக்கும்... என் வீட்டு வாசலுக்கு வந்து திட்டினாலே எட்டி நடுமார்ல உதைக்கிற ரகம்நான்.. அதனால் எதை வெளியிடனும் எதை வெளியிடக்கூடாதுன்னு எனக்கு தெரியும்.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் # நான் பதிவச் சொன்னேன்! :))
ReplyDeleteஅண்ணா , திமிரு எடுத்து அலையறவன் ஊருக்குள நிறைய பேர் இருக்காங்க , அதுக்கெல்லாம் நம்ம பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
ReplyDeleteCool down!
ReplyDeleteCool down!
Cool down!
முதல் வரிசையில் இடது ஓரத்தில் இருப்பவர் நீங்களா?
ReplyDeleteநடு வரிசையில், right to left, இரண்டாவது ஆள்தானே நீங்கள்?
ReplyDeleteபோட்டோ-ல நிற்கிர முதல் வரிசையில் இடது பக்கமிருந்து மூணாவதா நிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்
ReplyDeleteஅன்பின் ஜாக்...கி..
ReplyDeleteஅனானிகள் என்பவர்கள் முகமூடி மனிதர்கள்.. அவர்களை பற்றி நீங்கள் பேசி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்.. இது என்னை போன்ற உங்கள் நலம் நாடும் உள்ளங்கள் கருத்து.
சிகப்பு கம்பள வரவேற்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது.. அதனால் இந்த கறுப்பு ஆடுகள்..கவலைபடுகிறது.. வளர்ச்சி என்பது ஒன்றில் இருந்து நூறுக்கு செல்வது.. நீங்கள் ஏற்கனவே நூற்றுக்கு மேல்... அப்புறம் ஏன்..?
I think you have already reached the success..so don't think about them.. and please do think about us .. and keep do writing....
வேலை பளுவிலும், கவலையிலும் உங்கள் எழுத்தை வாசிக்க நேரம் கிடைக்காதா என்று ஏங்கும் உள்ளங்கள் அதிகம்.. (அடியேனும் ஒருவன்.)
ஒரு முறை உம் வலை பக்கம் வந்து வாசித்து, பழைய பதிவுகளையும் வாசித்து தான் வெளியே செல்லும் எத்தனையோ உள்ளங்கள் அதிகம்..
புதிய பதிவு எப்போ எப்போ என்று ரெப்ரெஷ் செய்யும் உள்ளங்கள் இருக்கும் போது.. என் இந்த அனானிகள் பற்றிய கவலை..?
<------------------------------->
"ஆனாலும் எனக்காக மெனக்கெடறபாரு அந்த அளவுக்கு என் மேல வெறித்தனமான ரசிகரா நீ இருப்பது எனக்கு பெருமையே......."
- உண்மை மன்னியுங்கள் அவர்களை..
<------------------------------->
"குறிப்பு: அச்சு தொழிலில் இருந்து கொண்டு இவளவு தப்பாய் டைப் செய்கிறானே !
என நினைகிறீர்கள ...ச்..ச். சும்மா....உங்கள் ஸ்டைலில் எழதி பார்தேன்..."
- செம நச்...
<-------------------------------->
அப்புறம் அந்த போட்டோ...
"அப்பிஜி அதில் நான் எங்க இருக்கேன்னு கண்டுபிடிக்க எனக்கே நேரம் தேவைப்பட்டது..."
உங்களுக்கே அதிகம் நேரம் என்றால் எங்களுக்கு..
சரி.. அந்த போடோக்கு கீழே இருக்கும் அந்த பெயர் லிஸ்ட் எங்கே.. இப்படி எல்லாம் எங்கள சுத்தல்ல விட கூடாது..
But i guess you are at third Row..second from Right... (Am i right..)
Ok..lot of wishes..
bye
NTR.
விட்டு தள்ளுங்க, இதையெல்லாம் மண்டையில போட்டுக்காதீங்க
ReplyDeleteஅனானி ..க்காக.. இப்படி .. சுனாமி .. ஆகலாமா ??!!!
ReplyDeleteஅனானி ..க்காக.. இப்படி .. சுனாமி .. ஆகலாமா ??!!!
ReplyDeleteதொடர்ந்து எதனை முறை உங்கள் ப்ளாக் அப்டேட் செய்து உள்ளீர்களா ?
ReplyDeleteஎன பார்த்து இருப்பேன்...//
நானும் தான்.
அண்ணே கூல்டோவ்ன் அவன் அவன் என்ன சொன்னாலும் நான் பாலோவ் பண்றது
what ever u say my reaction is Proooooh itha than nan seiyuren,
inimel ungalayum konjam falow panuwen
ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்களுக்கு இந்த தளத்தில் இடம் இல்லை என்று புரிகிறது. மற்றபடி எந்த ஒரு தனிமனித தாக்குதல்களையும் நான் வரவேற்பதில்லை. எனக்கு பிளாக் செட்டிங்ஸ் அப்டேட் செய்வது தெரியாததால் நான் உங்களுக்கு அனானியாக தெரிகிறேன். எனது கருத்துக்களுக்கு பதில் கூற நேரம் எடுத்து அதை தனி பதிவாகவே தந்த உங்களுக்கு நன்றி.. இனிமேலும் நான் உங்கள் தளத்தின் வாசகன் தான். ஆனால் எதிர் கருத்துக்கள் எதுவும் உங்களை வந்தடையாது.. நன்றி.
ReplyDeleteநண்பரே அந்த எச்சரிக்கை உங்களுக்கானது அல்ல.. அது வேற நபர்களுக்கானது.....அனானிகள் எனக்கு நிறைய பேர் வருகின்றார்கள்...நீங்கள் புதியவர் இது பழம்தின்று கொட்டை போட்ட தைரியமற்ற புலிகளுக்கு...உங்களுக்கானது என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் அதுக்கு நான் என்ன செய்யமுடியும்..???
ReplyDeleteஅனானி ஒரு சுனாமி தான்
ReplyDeleteமச்சி,
ReplyDeleteஅனானி மேட்டர் : மத்தவங்க மாதிரி லூஸ்ல விடுன்னு சொல்ல மாட்டேன், அப்பப்ப செவுட்டுல அறையறா மாதிரி செஞ்சிக்கிட்டேதான் இருக்கணும் இவனுங்களுக்கு, தொடரவும். இவை உன்னை பாதிக்காதுன்னு தெரியும்.
போட்டோவில் நீ : நடு வரிசை (கீழிருந்தும் மேலிருந்தும் மூன்றாவது) வலது பக்கத்திலிருந்து ரெண்டாவதா நிக்கற குடாக்குதானே நீ?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
உங்கள் பாசத்துக்கு மிக்க நன்றி...போட்டோவில் நடு வரிசையில் வலமிருந்து இரண்டாவது ஆள்....மிக்ச்சரியாக சொன்ன நண்பர்கள்.. ராஜ சுந்தரராஜன் மற்றும் என்டிஆர் , ஸ்ரீராம் போன்றவர்கள் சரியாக சொல்லி இருக்கின்றார்கள்..கமேன்ட ரிலிஸ் செய்யும் முன் சொன்ன...என்டிஆர் மற்றும் ராஜசுந்தரத்திற்க்கு ஸ் பெஷல் நன்றி.. கமென்ட் பார்க்காது சொன்ன ஸ்ரீக்கும்
ReplyDeleteபிரீயா விடுண்ணே....
ReplyDeleteஉங்களுக்கு அனானி மெயில் பண்ணியவர் / கமெண்ட் போட்டவர் அமெரிக்காவில் இருக்கிறாராம். அதற்காக தான் ஹில்லாரி கிளிண்டன் தமிழகம் வந்து ஒபாமா சார்ப்பில் அம்மாகிடா மன்னிப்பு கேட்டுகிட்டாங்களாம் ..
தொடர்ந்து எழுதுங்க ...வாழ்த்துக்கள் . keep smiling enjoy living
(இரட்டை நாக்கு) உலகம்
ReplyDeleteஉன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்
தன்னம்பிக்கை தளரவிடாதே
இரட்டைப்பேச்சு பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே.
ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது
இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமே லழகரை வரச்சொல் என்றது
குறுந்தொகை கம்பன் கொட்டி முழங்கினேன்
குண்டுச்சட்டியில் குதிரை என்றது
எலியட் நெருடா எல்லம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது
எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி வ்ழியுது என்றது
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது
மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்
படித்த திமிர் பணிவில்லை என்றது
மூத்தவர் வந்தந்தும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல ‘காக்கா’ என்றது உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது
விரல்நகத் தளவு வீமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது
மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் வீழ்ந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக் காரன் தள்ளிநில் என்றது
பகையை கண்டு பைய நகர்ந்தேன்
பயந்துவிட்டான் பாவம் என்றது
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கிவிட்டதா மிருகம் என்றது
பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது
கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியா கஞ்சன் என்றது
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது
மங்கைய ரிடையே மெளனம் காத்தேன்
கவிஞன் என்ற கர்வம் என்றது
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்
கண்களைக் கவனி காமம் என்றது
விருதுகள் கழுத்தில் வீழக்கண்டேன்
குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது
திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
ஐயோ புகழுக் கலைகிறான் என்றது
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது
அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்
உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உனது செவிகள் மூடுதல் சுலபம்
- நன்றி: வைரமுத்து (தமிழுக்கு நிறம் உண்டு)
சத்தியமாய் முழுமையாய் படிக்கவே இல்லை ..புதுப்பதிவை எதிர்பார்த்து ஏமாற்றம்....
ReplyDeleteஇதையெல்லாம் கண்டுக்காமல் உங்கள் பணி தொடர்க.போற்றலும் துற்றலும் போகட்டும்........
ReplyDeletesir kolaikira naaigal kolachiteythaan irukum athalaam kandukathinga....just ignore them
ReplyDeleteஅனானிகளை கண்டுபிடிக்க IP adress trace செய்யும் சாஃப்ட்வேர்கள் உண்டு. அதை முயற்சி செய்யுங்கள். நானும் என் நண்பனும் உங்களை கலாய்ச்சா நேரடியா பேரைப் போட்டு கலாய்ப்போம், லொள்ளு சபா மாதிரி! :-) நான் போட்ட பதில் மெயிலுக்கு நீங்க பதிலே அனுப்பலையே! :-( என்னால முடின்சா உதவி பண்றேன்.
ReplyDeleteஅனேகமாக இது உங்களது 998-வது பதிவு என்று நினைக்கிறேன்!!!உங்களிடமிருந்து ஆயிரமாவது பதிவை எதிர்நோக்கும் வேளையில் இப்படியொரு(அனானிகள்) பதிவு....விடுங்க தல...என்னை போல பலரும் பணி நேரத்தில் ரிலாக்ஸ் ஆவது உங்கள் காக்டெயில் பதிவு மூலமாகதான்.....அந்த மாதிரி சொம்புகளுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை... ...தொடர்ந்து எழுதவும் !!!!! அப்புறம் ஆயிரமாவது பதிவிற்கு ADV வாழ்த்துக்கள்!!!பதிவுலகிலும், கலைப்பணியிலும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteமன்னிக்கவும் ஜாக்கி. எனது கமெண்ட் வராததையடுத்து என்னையும் அனானி லிஸ்டில் சேர்த்துவிட்டீர்கள் என தவறாக நினைத்துவிட்டேன்.
ReplyDeleteஉங்களது உலக சினிமா விமர்சனமும், சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்-ல் வாசகருக்கு மிகவும் பரிச்சயமான மொழி நடையும் யாவருக்குமே பிடிக்கும். உங்களை பாராட்டி வரும் கடிதங்களை வெளியிடுவதே, உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்துவிட்டு அப்படியே செல்லாமல் உங்களுக்காக நேரம் ஒதுக்கி கடிதம் எழுதும் வாசகருக்கு நீங்கள் செலுத்தும் மரியாதை. இதில் சுயசொறிதல் என்ற வார்த்தையே கேவலமாக இருக்கிறது. ஒருவர் உங்களை கோபப்படுத்துவதற்காக அப்படி சொல்லும்போது நீங்கள் கோபப்பட்டால் அவர்தானே நினைத்ததை சாதிக்கிறார். இவர்களின் வாதங்களை புறக்கணிப்பதே மன அமைதி தரும் என்பது எனது எண்ணம்.
அட்வைஸ் பண்ணுவது சுலபம்.. அவனவனுக்கு வந்தால்தான் தெரியும் என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் பேசுவது கேட்கிறது...லூஸ்ல விடுங்க பாஸ்....