ஜாக்கிரதை,சென்னை சங்கம் தியேட்டர், டிராபிக் போலிஸ்..
முக்கியமாக சென்னைவாசிகள்,  சென்னை இருசக்கர வாகன ஓட்டிகள், சென்னை சினிமாரசிகர்களுக்கான எச்சரிக்கை இது...
உலகில் எந்த மனிதனும் வீட்டை விட்டு வேலைக்கு காலையில் கிளம்பும் போது, பர்சில் பணம் எடுத்துக்கொண்டு செல்வது வழக்கம்... அப்படி இல்லை என்றால்  அப்பா கொடுப்பார், அம்மா கொடுப்பார், அல்லது மனைவி கொடுப்பார்...இன்னும் நிறைய மனிதர்கள் சென்னையில் மாதக்கடைசியில் பைக்கில் பயணம் செய்யும் போது வெறும் பத்துரூபாயை பர்சில் வைத்துக்கொண்டு பயணம் செய்கின்றார்கள்..உலகில் எந்த வேலை  செய்பவராக  இருந்தாலும் காலையில் வேலைக்கு கிளம்பும் போது பர்சில் கொஞ்சமாவது பணம் எடுத்துக்கொண்டு கிளம்புவது வழக்கம்.. ஆனால்  சென்னை டிராபிக் போலிசில் வேலை செய்தால் போதும், வெறும் சட்டையை உதறி போட்டுக்கொண்டு வேலைக்கு வரலாம்..அரைமணிநேரத்தில் 100வீருந்து ஆயிரம் வரை ரூபாய்களை சம்பாதித்து விடலாம்...பர்சில் பணம் வைத்துக்கொண்டு வீட்டில் இருந்து கிளம்பும்  நேர்மையான  சென்னை டிராபிக் போலிசாரும் உண்டு...

சங்கம் தியேட்டர் எல்லா   சென்னைவாசிகளுக்கும் தெரியும்தானே.. அதன் முகப்பு தெற்கு திசை நோக்கி இருக்கும்...அதன் இடது பக்கத்தில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கும்.. அதுக்கு பக்கத்தில் ஒரு ரோடு வரும்.... அந்த சாலையில்  கெல்லிசில் இருந்து வரும்  வாகனங்கள் அந்த வழியாக வரும்... அது ஒரு ஒன்வே... அந்த வழியாக வந்தால் சங்கம் தியேட்டர் போக வேண்டும் என்றால் ஒரு அரைகிலோமீட்டர் பயணித்து ஒரு யூ டேர்ன் எடுத்து சங்கம் தியேட்டர் வர வேண்டும்....சங்கம் தியேட்டரில் படம்  முடிந்து வெளியே வரும் வாகனங்கள் அந்த வழியாகதான் வரும்...நான் மோட்ச்சத்தில் கவ்பாய் ஏலியன்ஸ் படம் பார்த்து விட்டு, வெள்ளிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு, அந்த வழியாக வந்தேன்... சங்கம் தியேட்டருக்கு பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல்  போட்டுக்கொண்டு இருக்கும் போதுதான் பொறி தட்டியது..மணி 3 மணிதான் ஆகின்றது... அதனால் சங்கத்தில் வெப்பம் படத்துக்கு டிக்கெட் இருந்தால் படம் பார்த்து விட்டு போய் விடலாம் என்று சட்டென நினைத்தேன்... பெட்ரோல் பங்க்கும் சங்கம் தியேட்டருக்கும் இருக்கும் இடைவெளி ஒரு மதில் சுவர்தான்..  வெறும் ஐந்து அடிதான்...தியேட்டரில் டிக்கெட் கொடுத்து கொண்டு இருந்தார்கள்... எப்படியும் ஒரு அரைகிலோமீட்டர் பைக்கில் ரவுண்ட் அடித்து வந்து டிக்கெட் இல்லை என்று சொல்லுவதை கேட்பதை விட, ஐந்து அடியில் போய் பார்த்து விட்டு வீட்டுக்கு போகலாம் என்று முடிவு செய்து விட்டு டிராபிக் போலிஸ் இருக்கின்றாரா? என்று பார்த்து விட்டு வண்டியை கிளப்பினேன்...ஐந்து அடியில் இரண்டு அடி கடந்து இருப்பேன்.ரோட்டில் இறங்கினேன்..அங்கு நின்று இருந்த,  ஆட்டோவில்  இருந்து மறைந்து இருந்து குரங்கு போல குதித்தார் ஒரு டிராபிக் போலிஸ்....

சார் இது ஒன்வே...தெரியும் சார்...அப்புறம் ஏன் வந்திங்க...ஒரு மதில் சுவரை கடக்க உங்க  ஒன்வே சட்டம் ரொம்ப கடுமையா இருக்கும்னு நான் நினைக்கவில்லை...இங்க கூடத்தான் சிக்னல் பக்கத்துல நோ பார்க்கிங்.... ஆனா ஆட்டோ நிக்குது இல்லையா அது போலத்தான் என்றேன்...என்ன வேலை செய்யறிங்க...கேமராமேனா இருக்கேன்..சார் அந்த பக்கம் சார்ஜென்ட் இருக்கின்றார்...எதாவது  நீங்களாக பார்த்து செய்து விட்டு போங்க....நான் பர்ஸ்  பிரித்தேன் 150ரூபாய்தான் இருந்தது...வீட்டுக்கு போய் சாப்பிட்டால் 50ரூபாய் மிச்சமாகுன்னு நினைச்ச , அந்த  50ரூபாயை அவர் சொன்னது போல பார்த்து செய்து விட்டு, பைக் ஸ்டார்ட் செய்தேன்..... பல் இளித்தார்...இப்போது அதே கடுமையான சட்டம் தியேட்டருக்கும், டெரோல் பங்குக்கும் இருந்த  அந்த மதில் சுவர் இடைவெளியான 5 அடியை தாண்ட, அடிக்கு பத்துரூபாய் வீதம் ரூபாய் 50 வாங்கி கொண்டு அனுமதித்தது...தியேட்டரில் டிக்கெட் இல்லை...போலிஸ் 50ரூபாய் ஆட்டையை போட்ட போது பார்த்துக்கொண்டு இருந்த  ஆட்டோக்காரர், என்னிடம் வந்தார்...இரண்டு மணி  நேரத்தில் இந்த தேவிடியாபையன் இதுவரை 1500ரூபாய்க்கு மேல சம்பாதித்து இருப்பான் சார்... முக்கியமா..ஷோ டைமுக்கு அவசரமா தியேட்டருக்கு வருபவர்கள்தான் இந்த ஆளின் இலக்கு... முக்கியமாக காதலியோடு வரும் பசங்களை மிரட்டி ஒன்வேயில் வந்த காரணத்தால் ஸ்டேஷனுக்கு வண்டியை எடுத்து போய் விடுவோம் என்று மிரட்டி  பணத்தை பிடிங்கி கொண்டு இருப்பதுதான் அந்த ஆளின்  வேலை என்று அந்த ஆட்டோக்காரர் புலம்பினார்......ஆட்டோ உள்ளேயோ அல்லது அட்டோவுக்கு பின்னாடி பகுதியில் மறைந்து இருந்து கொண்டு வண்டியை பிடிப்பதுதான் அந்த போலிஸ்காரர் ஸ்டைலாம்..இன்னோரு போலிஸ்காரர் வெயிலில் நின்று சிக்னல் அருகில் நின்று வாகனங்களை முறைபடுத்திகொண்டு இருந்தார்... ரெண்டு பேருக்கும் வரும் பணத்தில் பங்கு கண்டிப்பாக இருக்கும்...

இந்த பதிவை படித்து விட்டு  சில அக்மார்க் யோக்கிய ஒழுக்க சீலர்கள்..........


ஜாக்கி 5 அடியா இருந்தாலும், பத்து அடியா இருந்தாலும்  ஒன்வேயில்  போய் சட்டத்தை மீறி இருக்கிங்க..லஞ்சம் வேற கொடுத்து இருக்கிங்க.... என்று  சொல்லலாம்...அவர்கள் அப்படியே வாழ வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..அவர்களுக்கு சென்னையில் மெரினாவில் கண்ணகி சிலைக்கு பக்கத்தில் சிலை வைக்க இடம் தேர்வாகிக் கொண்டு இருக்கின்றது...நான் அந்த  அளவுக்கு உங்களை போல அக்மார்க் யோக்கியமானவன் அல்ல.... சென்னையில்  குறைந்த பட்ச நேர்மையோடு வாழும் சராசரி மனிதன்.....

=============
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

குறிப்பு 
இந்த கட்டுரையின் நோக்கம்.. அவசரம் ஆர்வம் காரணமாக சங்கம் தியேட்டருக்கு அப்படி போய் மாட்டிக்கொள்ளதீர்கள் என்பதே.. ஊதற சங்கை ஊதியாகிவிட்டது.. மகனே உன் சமத்து..


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...


14 comments:

 1. ஜாக்கி 5 அடியா இருந்தாலும், பத்து அடியா இருந்தாலும் ஒன்வேயில் போய் சட்டத்தை மீறி இருக்கிங்க..லஞ்சம் வேற கொடுத்து இருக்கிங்க.... என்று சொல்லலாம்...அவர்கள் அப்படியே வாழ வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..அவர்களுக்கு சென்னையில் மெரினாவில் கண்ணகி சிலைக்கு பக்கத்தில் சிலை வைக்க இடம் தேர்வாகிக் கொண்டு இருக்கின்றது...///

  adra sakka anaami kalukku sema adi boss.....

  ReplyDelete
 2. ஜாக்கி 5 அடியா இருந்தாலும், பத்து அடியா இருந்தாலும் ஒன்வேயில் போய் சட்டத்தை மீறி இருக்கிங்க..லஞ்சம் வேற கொடுத்து இருக்கிங்க -
  எல்லா தப்பும் உங்க மேலதான்..

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 3. பாஸ் உங்களுக்கு எல்லாம் பரவால்லை இங்க ஸ்ரீலங்கால ட்ராபிக் போலிஸ் கைல மாட்டினா குறைஞ்சது 500/= கொடுக்கணும்.... ஹெல்மட் இல்லாம வந்தா,ஹெட் லைட் போட மறந்தா, இப்பிடி சின்ன தப்புகளுக்குத்தான் 500/= one way, no parking, u turn க்கு எல்லாம் கண்டிப்பா 1000 /= கொடுக்கணும் இல்லைனா அவ்வளவுதான்.... ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட என் லைசன்ச புடுங்கிட்டான் பட் நான் பணம் கொடுக்கல்ல courtல fine கட்டித்தான் லைசன்ஸ்ச எடுக்கணும்..... ஸ்ரீ லங்கால ஒரு ட்ராபிக் போலீஸ் ஒருநாளைக்கு 15,000 ரூபாய்க்கு மேல லஞ்சமா வாங்கிறாங்க பாஸ்....... எங்களோட compare பண்ணும் போது உங்க ட்ராபிக் போலீஸ் எவ்வளவோ பரவால்லை......

  ReplyDelete
 4. \\நான் அந்த அளவுக்கு உங்களை போல அக்மார்க் யோக்கியமானவன் அல்ல.... சென்னையில் குறைந்த பட்ச நேர்மையோடு வாழும் சராசரி மனிதன்.....\\
  உண்மைதான் எல்லோரும் அந்தந்த சந்தர்ப்பங்களில் நமது மனம் என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் நாம் செய்கிறோம்.இதில் மாட்டிக்கிரவங்க அயோகியர்களுமில்லை ,எஸ்கேப் ஆவரங்க ஒழுக்க சீலர்களும் இல்லை

  ReplyDelete
 5. hmmmm, just remembered anniyan dialogue " 5 பைசா திருடுறது தப்பா ???? அஞ்சு அஞ்சு பேரா 5 பைசா திருடுறது தப்பா ????? அஞ்சு அஞ்சு பேரா அஞ்சு வருஷம் 5 பைசா திருடுறது தப்பா ?????? "

  ReplyDelete
 6. ஐன்பது ரூபாய் அல்ல... இரண்டு ரூபாய் கொடுத்தாலும் நம்ம போலீஸ் பல் இளித்து சலாம் போடும்.

  ReplyDelete
 7. kuwait la 10 varushama vandi otteren idhuvai oru paisa lanjam koduthadhu illai vidumurai il india vandhal kodukka neridum lanjam vangum naygaluku sollikolvadhu wife or daughter vittu sambadhi

  ReplyDelete
 8. ஜாக்கி 5 அடியா இருந்தாலும், பத்து அடியா இருந்தாலும் ஒன்வேயில் போய் சட்டத்தை மீறி இருக்கிங்க..லஞ்சம் வேற கொடுத்து இருக்கிங்க.... என்று சொல்லலாம்...அவர்கள் அப்படியே வாழ வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..அவர்களுக்கு சென்னையில் மெரினாவில் கண்ணகி சிலைக்கு பக்கத்தில் சிலை வைக்க இடம் தேர்வாகிக் கொண்டு இருக்கின்றது...  நான் அந்த அளவுக்கு உங்களை போல அக்மார்க் யோக்கியமானவன் அல்ல.... சென்னையில் குறைந்த பட்ச நேர்மையோடு வாழும் சராசரி மனிதன்.....

  என்ன தான் நேர்மையானவன் என்றாலும் நீரும் ஒரு சராசரி மனிதன்தானே

  இதே நீர் ஒரு அரசியல் வாதியாக இருந்திருந்தாலோ அல்லது குறைந்தபட்சம் ஒரு கீழ்மட்ட அரசியல்வாதியின் பேரை சொல்லி இருந்தால் கூட பேசாமல் அந்த தானாக்காரர் விட்டிருப்பார்

  ஒன்று சட்டத்தை எந்த நேரத்திலும் மதிக்கணும் அல்லது வளைக்க தயாராக இருக்கணும்

  ReplyDelete
 9. சார்.. 50௦ ரூபாய் ரொம்ப அதிகம்.. 10 ரூபாய் போதும்... நானும் என் friend-ம் கோடம்பாக்கம் bridge பக்கத்துல ஒரு தடவை கொடுத்தோம் .அதையும் வாங்கிட்டான்.. அத வாங்கிட்டு அட்வைஸ் வேற பண்ணுனான்.. முடியல.. சென்னை ட்ராபிக் போலீஸ்க்கு 10 ரூபாய் போதும்...

  ReplyDelete
 10. ஜாக்கி சார்,
  அந்த போலீஸ் காரர் ரெண்டு மணி நேரத்துல 1500 சம்பாதிக்கிறார் . ஒரு வருஷத்துல எத்தன லட்சம் வரும். இது அத்தனையும் கருப்பு பணம். இந்த கருப்பு பணத்தை உருவாக்குவது நாம் தானே.

  இது இல்லாம நம்ம சுப்பாராவ் பணப்புழக்கம் ஜாஸ்தி ஆகி விட்டது னு வட்டி ஏத்திகிட்டே போறார். வீடு லோன் கார் லோன் வட்டி எல்லாம் ஜாஸ்தி ஆகுது.

  ReplyDelete
 11. ///இரண்டு மணி நேரத்தில் இந்த ******** இதுவரை 1500ரூபாய்க்கு மேல சம்பாதித்து இருப்பான் சார்... //////


  இரண்டு மணி நேரத்துல 1500 ரூபாய்...

  8 மணி நேரம் = 1500 x 8 = 12000
  வாரத்துக்கு = 6 x 12000 = 72000
  மாதத்துக்கு = 25 x 12000 = 300000

  அடப்பாவி
  3 லட்சமாயா உனக்கு கிம்பளம்...

  வெரி காஸ்ட்லி டிராஃபிக் ஆபிஸர்

  ReplyDelete
 12. ///ஊதற சங்கை ஊதியாகிவிட்டது.. மகனே உன் சமத்து..

  எவ்வளவு மாட்டினாலும் அந்த நிமிடம் மனசு சஞ்சலப்பட்டு விடுகிறது.... என்ன செய்ய... :(

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner