சார் 180 படம் எப்படி இருக்கு????
உங்க டேஸ்ட் எப்படின்னு எனக்கு தெரியாதே??
சார் எனக்கு படத்துல கதை இருக்கனும்...
கதைன்னா??பொதுவா தமிழ்ப்படத்துல கடைசில வணக்கம் போடும் போது நல்லவன் கெட்டவன் எல்லாரும் அந்த இரண்டுமணிநேரத்துல திருந்தி பல்லகாட்டி சுபம் போடும் சிரிப்பாங்களே? அது போல இருக்கனுமா??
ஆமாம்சார்...
அப்ப நீங்க 180 படத்து பக்கம் திரும்பி கூட பார்க்காதிங்க...
=====================
ஜாக்கி நான் ஒரு படத்துக்கு போலாம்னு இருக்கேன். எதாவது ஒரு படம் பார்க்கறா போல சொல்லுங்களேன்....
நீங்க என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க...??
நான் பார்ட் டைம்மா என்ஜினியரிங் படிக்கின்றேன்..புல் டைம்மா லவ் பண்ணறேன்...ஜாக்கி நான் இரண்டு வருஷமா லவ் பண்ணிகிட்டு இருக்கேன்..ஒரே லவ் பீலிங்கா இருக்கு...நேத்து என் லவ்வர் ரெண்டு மணிநேரத்துக்கு மேல மொக்கை போட்டுகிட்டு பேசினா??? அது மொக்கைன்னு எனக்கு நல்லா தெரியும்.. ஆனாலும் பேசிகிட்டு இருக்கும் போது ஒரு சொகம் இருக்கே அந்த ருசியே தனி....
ரைட் ஒங்களுக்குன்னே ஒரு படம் வந்து இருக்கு.. படத்துக்கு பேரு 180..
தேங்ஸ் ஜாக்கி.....
எக்ஸ்கியுஸ்மீ.. படத்துல லாஜிக், கதை, எதையும் எதிர்ப்பார்க்கம போகனும் ஓகேவா?
ஓகே ஜாக்கி... பட் லவ்வரோடு நான் படம் பார்க்கும் போது எந்த லாஜிக், மேஜிக், கதை எந்த கருமத்தையும் நான் பார்க்கறதில்லை..எப்படா லைட்டை ஆப்பண்ணிட்டு படத்தை போடுவானுங்கன்னு இருக்கும்....
அடப்பாவி...............
=================================
180 படத்தின் கதை என்ன?
நேற்று என்பதை பற்றி கவலை இல்லை.....நாளை என்பது யாருக்கு தெரியும், இன்று மட்டும் இந்த நொடி மட்டும் நிஜம் என்று வாழ்க்கை நடத்தும் மனோ சித்தார்த்.. அவன் பெயர் கூட தெரியாது... ஒரு பையனிடம் ஒத்தையா ரெட்டையா? கேட்கும் போது அகபட்ட பெயர் அந்த பெயர்.. மனோ வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கின்றான்..
அவன் வாழும் அந்த வாழ்க்கையை பார்த்த பத்திரிக்கை நிருபர் பெண் வித்யா (நித்யாமேனன்) அவ்ன் மீது காதல் கொள்கின்றாள்...காதலை சொல்லும் போது விபத்தில் வித்யா சிக்குகின்றாள்.. திரும்ப காதலை சொல்லும் போது தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்ல்லுகின்றான்..
அமெரிக்காவில் மனோ டாக்டராக இருக்கும் மருத்துவமணைக்கு விபத்தில் சிக்கி வரும் ரேணுகா(பிரியாஆனந்)வுக்கும் மனோவுக்கும் நட்பாகி, காதலாகி, திருமணம் செய்து கொள்கின்றார்கள்.. அப்பறம் என்னமேன் பிரச்சனை?? அப்புறம் பெரிய பிரச்சனை வந்து விடுகின்றது???யாருக்கு??
அதை திரையில் பாருங்கள்... அந்த நிருபர் பொண்ணை சித்தார்த் கல்யாணம் செய்துப்பாரா???
யோவ் தியேட்டர்ல போய் பார்க்க சொன்னேன் இல்லை..
========================================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
பொதுவா 20 வருஷமா சமைக்கற அம்மா ஒரு நாள் உப்பு அதிகமா போட்டுட்டான்னு அவளுக்கு சமைக்கவே தெரியலைன்னு எப்படி சொல்ல முடியாதோ? அது போலத்தான்.. நான் சினிமாவை அணுகுவேன்..உப்பு ஒரு கல் அதிகம் அயிட்டதாலா அதை குப்பையில கொட்ட போறதில்லை.. அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடறதில்லையா... அது போலத்தான் நான் சினிமாவை பார்ப்பேன்....
சில படங்கள் உப்பை மட்டும் கொட்டிவிட்டு தின்னு தொலை என்று சொல்லுவார்கள்..அது போலான படத்தை ஒன்னும் சொல்ல முடியாது...
பட் இந்த படம் அப்படி அல்ல உப்பு ஒரு கல் அதிகம்தான்....
பொதுவா காதல்காட்சிகளில் எனக்கு காதலிக்கும் ஒரு உணர்வை ஏற்படுத்த வேண்டும்.. உதரணத்துக்கு இதே சித்தார்த் திரிஷா நடித்த ஆயுத எழுத்து படத்துல வரும் இரண்டு பேருக்கான லவ் சிக்வென்ஸ் நான் எத்தனை தடவை வேனா பார்ப்பேன்.. அப்படி ஒரு அற்புதமான காதல் காட்சி அது... சார் அது மொக்கை சீன் சார்... என்னை பொருத்தவரை அந்த லவ்ல ஒரு கியூட்னெஸ் இருக்கும்..... அது இந்த படத்துல மிஸ்சிங்....
180 படத்தில் முதல் பாதியில் வரும் அந்த காதல் பீலிங்... சின்ன சின்ன கியூட்னெஸ் படம் முழுக்க இல்லை...இரண்டாம் பாதியில் கத்திரியின் தேவை அதிகம் இருக்கின்றது...
சித்தார்த்...
ஓத்தா பாய்ஸ் படத்துல பார்த்தது போலவே இருக்கியே?? உனக்கு எல்லாம் வயசே ஆகாதா? என்று என் மனசாட்சி முதல் பிரேமிலேயே சித்தார்த்தை காட்டும் போது அங்கலாய்ப்பதை தடுக்க முடியவில்லை....
சித்தார்த்துக்கு அந்த ஒழுங்கற்ற மீசை கூட அழகாக இருக்கின்றது..
நித்யாமேனன்..the girl next door போல அழகாக இருக்கின்றார்... பெரிய கண்கள்...பள்ளி ஆண்டு விழாவில் சேலையில் வரும் போது பெரிய பெரிய மனதோடு இருக்கின்றார்...
நன்றாக நடிக்கவும் செய்கின்றார்.. முக்கியமாக மவுலியிடம் அமிதாப்பச்சன் இருக்காரா? என்று கேட்கும் போது ஆர்வத்தோடு வீட்டின் உள்ளே பார்க்கும் பார்வை அந்த பதட்டம் போன்றவற்றை மிக அழகாக வெளிபடுத்தி இருக்கின்றார்..
சித்தார்த்திடம் ஒரு விரலை தொட்டுவிட்டு அடுத்த விரலையும் சடுதியில் தொடுவது கியூட்...
இரண்டாம் பாதியில் வரும் பிரியா ஆனந் சில காட்சிகளில் செயற்க்கைதனம் தெரிகின்றது... பாதி மார்பகம் பல பிரேம்களில் தெரிவது போலான உடை உடுத்தி இருக்கின்றார்...தனது உதட்டை ஈரப்படுத்திக்கொள்ள அவ்வப்போது சித்தார்த் உதட்டுக்கு பர்மிஷ்ன் கொடுக்கின்றார்... ஒரு காட்சியில் சேலையில் தனது வளைவான யூடேர்ன் சிம்பிளுக்கு இணையான இடுப்பை காட்டி ரசிகர்களை கிறக்கம் அடையவைக்கின்றார்..
மவுலி கீதா பாத்திரம் மனதில் நிற்கும் பாத்திரங்கள்.
படத்தின் பெரிய பலம்.. கேமரா கோணங்களும் காட்சிகளும்தான்...அதுதான் இந்த படத்தின் கதாநாயகன் என்று சொன்னால் மிகையில்லை..
இதுவரை காட்சி படுத்திய பல திரைப்படங்களை விட இந்த படம் சென்னையை மிக அழகாக காட்டி இருக்கின்றார்கள்.. சென்னையின் ஏதோ ஒரு கணத்தின் வானத்தையும்,மேகத்தையும்கூட மிக அழகாக காட்டி இருக்கின்றார்கள்..
ரூல்ஸ் கிடையாது பாடல் காட்சிகள் கவிதை... சாப்பாடு கூடை லிப்ட்கொடுக்கும் பாட்டியை போட்டோ எடுக்கும் பிரேம் கிளாஸ்..
பேப்பர் பசங்களோடு சைக்கிளில் கை விட்டு 1000 பிரேமில் வரும் காட்சிகள் கவிதை..
படத்தை ரெட் ஒன்னில் எடுத்து இருக்கின்றார்கள்..1000பிரேம் காட்சிகளில் கேமரா கோணம் அசத்தல்... டோபிகள் துணி துவைக்கும் காட்சிகள் 1000 பிரேம்களில் அசத்தல்...குளோசப் காட்சிகளில் லோ ஆங்கிளில் ஜும் லென்சில் மரத்தின் வெயில்படும் இடங்களை பேக்ரவுண்டாக ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்..
எந்த பிரேமையும் அலட்சியமாக எடுக்கவேயில்லை. அந்த மெனக்டெலுக்கு இரண்டு பொக்கே.. ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துக்கும், இயக்குனர் ஜெயந்திராவுக்கு
தமிழ் விளம்பர உலகின் ராஜா ஜெயெந்திராவின் முதல் படம்..
அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக கதை சொல்லுங்கள்.
காட்சிக்கு மெனெக்கெடல் உதாரணம்.. சித்தார்த் ஆட்டோவில் மவுலி வீட்டுக்கு வரும் போது அந்த மிதமான சூரிய வெளிச்சம்...
எழுத்தாளர் சுபா கதை வசனம்...தொடர்ந்து இரண்டு படத்துக்கு பத்திரிக்கை நிருபர் வேடம... கோ அப்புறம் இந்த படம்.. சார் பார்த்து பண்ணுங்க...
டிஐயில் நிறைய கலர்கரெக்ஷன் செய்து ஒரு பேண்டசி படத்துக்கான லுக்கை எடுத்து வந்து இருக்கின்றார்கள்..
180பாடலில் இப்போதைய எனது பேவரைட்... சந்திக்காத கண்களில் இன்பங்கள்....இது போலான மெலடிகள் நான் ரசித்தது இல்லை... இப்போது ஏன் என்று தெரியவில்லை.. ஒருவேளை சேர்க்கை
ஜுன்ஆறு படத்துக்கு மியூசிக் செய்த ஷரத் இந்த படத்துக்கு இசை அமைத்து இருக்கின்றார்..
சத்யம் சினிமா தயாரித்து இருக்கின்றார்கள்..அவர்களின் தியேட்டர் போலவே படத்தின் பிரேம்கள் ரிச்சாக இருக்கின்றன...
படக்குழுவினர் விபரம்..
Directed by Jayendra
Produced by Kiran Reddy
Swaroop Reddy
C. Srikanth
Produced by Kiran Reddy
Swaroop Reddy
C. Srikanth
Written by Subha & Jayendra (Tamil)
Umarji Anuradha (Telugu)
Screenplay by Subha
Jayendra
Story by Jayendra
Starring
* Siddharth
* Priya Anand
* Nithya Menen
Music by Sharreth
Cinematography Balasubramaniem
Editing by Kishore Te.
Studio SPI Cinemas
Aghal Films
Distributed by Ayngaran International (Tamil Version)
Release date(s) June 25, 2011 (2011-06-25)
Country India
Language Tamil
Telugu
Umarji Anuradha (Telugu)
Screenplay by Subha
Jayendra
Story by Jayendra
Starring
* Siddharth
* Priya Anand
* Nithya Menen
Music by Sharreth
Cinematography Balasubramaniem
Editing by Kishore Te.
Studio SPI Cinemas
Aghal Films
Distributed by Ayngaran International (Tamil Version)
Release date(s) June 25, 2011 (2011-06-25)
Country India
Language Tamil
Telugu
===================
படத்தின் மேக்கிங்...
தியேட்டர் டிஸ்கி..
படத்தை சென்னை சாய் சந்தியில் (இரவு)பர்ஸ்ட்ஷோ பார்த்தேன்...
குறைவாக கூட்டம்.
டிக்கெட் வாங்கி படி ஏறும் போதே நடிகர் திலகம் சிவாஜி கதர் சட்டையில் வீட்டில் கேஷுவலாக இருக்கும் போது எடுத்த படத்தில் கதர் வெள்ளை சட்டை போட்டு நெஞ்சில் நரைத்த முடியோடு ஆசிர்வாதம் செய்வது போல வரவேற்கின்றார்..
படம் ஒடும் போது ஒருத்தன் ரொம்பவும் ஓவராக கமென்ட் அடித்துக்கொண்டு இருந்தான். காரணம் முன் பக்க வரிசையில் இரண்டு வயதுக்கு வந்த பெண்கள் அவர்கள் அப்பா அம்மாவோடு படத்துக்கு வந்து இருந்தார்கள்.
இடைவேளைக்கு பிறகு பின் சீட்டுக்காரர்கள் எதிர்க்க அடங்கி போனான்...
இடைவேளையில் அந்த பெண் பாப்கார்ன் வாங்க வந்த போது ஆழ பார்வை படும் இடத்தில் நின்று தலைவாரியதும், ரஜினி போல ஸ்டைலாக நிற்க்க முயற்சித்ததும் செமை காமெடி...
===============
பைனல்கிக்..
இந்த படம் டைம்பாஸ்படம்தான். அப்புறம் எதுக்கு இவ்வளவு நீளம்..மிக அழகான கவிதையான பிரேம்கள்..சென்னையை அழகாக காட்டியமைக்கு.....முதல் பாதி சின்ன சின்ன கியூட்னெஸ்க்கும்..
இதுக்கா இம்மாம் பெரிசு எழுதின??? பதிவின் முதல் இரண்டு பாராக்கள் திரும்ப வாசிக்கவும்..
==================
திரட்டிகளில் ஒட்டு போடுவது உங்கள் இஷ்டம்.. இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களிடத்தில் அறிமுகம் செய்து வையுங்கள்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
====================
Even "Nee Korinaal Vaanam Maaratha" is a excellent song with astounding lyrics...
ReplyDeleteசந்திக்காத கண்களில் பாடலை உன்கள் விமர்சனம் படித்த பின்புதான் கேட்டேன்
ReplyDeleteஇப்போ அந்த பாட்டுதான் என்னோட FAVOURITE
நல்ல வேளை இன்னும் நான் பார்க்கல
ReplyDelete