ஆல்பம்…
சமச்சீர் கல்விக்கு உயர்நீதிமன்றம் கேட்கும் சரமாரி கேள்விகளுக்கு ஜெ அரசு பதில் சொல்லாமல் தவிக்கின்றது..
இருந்தாலும் நான் புடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்று இன்னமும் மீசையில் மண் ஒட்டியும் ஒத்துக்கொள்ள மறுக்கின்றது.. பசங்கதான் பாவம்...இன்னும் பள்ளிகளில் முடிவு தெரியாமல் ஆசிரியர்களும் பெற்றோரும் அல்லாடிக்கொண்டு இருக்கின்றார்கள்...
இருந்தாலும் நான் புடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்று இன்னமும் மீசையில் மண் ஒட்டியும் ஒத்துக்கொள்ள மறுக்கின்றது.. பசங்கதான் பாவம்...இன்னும் பள்ளிகளில் முடிவு தெரியாமல் ஆசிரியர்களும் பெற்றோரும் அல்லாடிக்கொண்டு இருக்கின்றார்கள்...
.=======================
மேம்படுத்தபட்ட மருத்துவகாப்பீட்டு திட்டம் இன்னும் நன்றாக இருக்கின்றது... ஒரு திட்டம் அது நல்ல திட்டம் அதனை எந்த பேர் வேண்டுமானாலும் ஆட்சிக்கு ஆட்சி வைத்துக்கொள்ளுங்கள்.. ஆனால் அந்த திட்டத்தை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யவேண்டுமோ? அதனை செய்ய வேண்டும்.... கலைஞர் காப்பீட்டு திட்டத்தை இந்த அரசு மேம்படுத்தி அதில் உள்ள பிழைகளை அகற்றி இருக்கின்றது.. அது போலத்தான் சம்சசீர்கல்வியும்...மெம்படுத்துங்கள் வரவேற்கின்றோம்..
=====================================
தில்ஷான் கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்தாலும் சுட்டவன் வடநாட்டுகாரர் என்று கண்ணால் பார்த்த பையன் சாட்சி சொல்லி இருக்கின்றான்... ஆனால் பிடித்தது ராம்ராஜ் என்ற தமிழரைஇதில்தான் பிரச்சனையே.... என்னதான் நம் இந்திய இராணுவம்,இலங்கை தமிழர்களை அமைதிபடை பெயரில் கொன்று குவித்தாலும் அதுக்கு காரணம் டெல்லி தலைகள்தான்... அதே போல அவர்கள் தமிழர் எதிர்ப்பு மனோபாவம் வடநாட்டு ஆசாமிகளிடம் இருந்தாலும் நம் நாடு நம் இராணுவம் என்ற வரும் போது அதை முற்றாய் நிராகரிக்க என்னால் முடியாது... காரணம் நான் இந்திய குடிமகன்... தேசியகீதம் இசைக்கும் போது என் உடல் சிலிர்க்கின்றது... என்னதான் சில உறவுகளை திட்டி தீர்த்தாலும் ஒரே அடியாக ஒதுக்கி விடுவதில்லை.. அது போலத்தான் நம் இராணுவமும்...பெரிய இயற்கை பேரிழப்புகள் நம் நாட்டுக்கு நேரிடின் முதலில் அவர்கள்தான் களத்தில் இறங்குவார்கள்.. அதனால் முற்றிலும் இராணுவத்தை நிராகரிக்க என்னால் முடியாது....சில மென்டல்கள் நடந்து கொண்டதாலும்...டெல்லி தலைகளின் வழிகாட்டுதல்களால் தமிழர் மீது மாற்றான்தாய் மனோபாவம் இருந்தாலும் அது நம் நாட்டு இராணுவம்... உதாரணத்துக்கு சீனா நம் மீது போர் தொடுக்கின்றது... என்னதான் எனக்கு இந்திய இராணுவத்தின் மேல் கோபம் இருந்தாலும் இந்தியஇராணுவம்தான் ஜெயிக்க வேண்டும் என்ற சொல்லுவேன்... நான் பள்ளியில் கடற்படை மாணவர் பிரிவில் இருந்து இருக்கின்றேன்..
இந்த வீடியோவை பாருங்கள்... முக்கியமாக கடைசி ஜனகனமன வரும் போது நமது இந்திய வீரர் நமது தேசிய கொடியை தரையில் இருந்து அப்படியே நேராக நிறுத்துவார்... அப்படியே ஒருசல்யூட்டும் வைப்பார்... இந்த காட்சியை எப்போது பார்த்தாலும் எனக்கு உடல் சிலிர்க்கும்.... இந்த பாடல் பெங்களூருவில் இருக்கும் பல தியேட்டர்களில் எல்லாக்காட்சிக்கும் ஒளிபரப்புகின்றார்கள்......
===========================
உலகத்தில் எந்த பொருளின் விலை உயர்வு என்றாலும் நள்ளிரவு முதல் விலை உயர்வதுதான்... வாடிக்கை.. இங்கு டாஸ்மார்க் பாட்டிலின் விலை உயர்வை மதியம் பண்ணிரண்டு மணிக்கு மேல் உயர்த்த பல இடங்களில் கடைகளில் கைகலப்பு ஏற்பட முடிவிட்ட்டார்கள்.. பிறகு மறுநாள் 11ம்தேதியில் இருந்து அமுலுக்கு வருகின்றது என்று போர்டு வைத்தார்கள்...
=====================================
கண் எதிரில் கோவையில் நேற்று ஒரு கொலை நடந்து இருக்கின்றது.. பட்டப்பகலில், நட்டநடுவீதியில் ஓடஒட வெட்டிக்கொலை என்ற பேப்பரில் வாரத்துக்கு ஒரு செய்தி பார்க்கின்றோம்.. இருந்தாலும் அடுத்த பக்கத்துக்கு எளிதில் கடந்து போய் விடுவோம்.. ஆனால் வீடியோ பதிவாக ஒரு கொலையை பார்க்கும் போது அப்படி அதை கடந்து போக முடியவில்லை... நேற்று கோவையில் குடி தகராரில் நடு ரோட்டில் முக்கியமாக நான்கு சாலைகள் சந்திப்பில் ஒருவனை அவனது நண்பர்கள் குடிதகராறில் அடித்தே கொலை செய்து இருக்கின்றார்கள்...
பக்கத்தில் வாகன ஓட்டிகள் சிக்னலுக்கு காத்து இருந்து விட்டு செல்லுகின்றார்கள்..ஆனால் ஒருவரும் கேட்கவில்லை...அப்படி கேட்டால் கேட்டவன் மாட்டிக்கொள்ளுவான்... இதுவே ஊராக இருந்து இருந்தால் இந்த கொலை நடந்து இருக்காது.. பொது ஜனம் ஒரு பத்து பேர் நிச்சயம் அந்த சண்டையை விலக்கி விட்டு இருப்பார்கள்.. இந்த ஒரு கொலையையே நேரில் பார்க்கவே மனது சஞ்சலம் அடையும் போது ஈழத்து மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தார்கள் என்ற செய்தியை கேட்ட போதும், பார்த்த போதும் பதறி போய் கை பிசைந்து நிற்பதை தவிர வேறு வழியில்லை.. எவ்வளவு கொடூரம்... நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதைபதைக்கின்றது..
அது குறித்து எனக்கு வந்த மெயில்...
மேலே இருப்பதை கிளிக் செய்து படித்து பாருங்கள் அவர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை...
===================
எந்த அமைமைச்சாரும் மக்கள் பிரச்சனையை தீர்க்காமல் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று முதல்வர் ஜெ தன் அமைச்சரவை சகாக்களுக்கு ஆர்டர் போட்டு இருக்கின்றார்....எனக்கு தலையே சுற்றுகின்றது.. நான் கேள்விபடுவது கனவா அல்லது நனவா???
============================
ஒரு நிறுவணத்தை மிரட்டி விற்க்க வைத்து இருக்கின்றார்கள்.. அப்படி ஒரு மிரட்டல் சூழலில்அந்த நிறுவனர் எவ்வளவு மனது காயபட்டு இருப்பார்... முன்பே அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் கசிந்து கொண்டுதான் இருந்தன.. இப்போது உறுதியாகிவிட்டது...தயாநிதிமாறன் சிவசங்கரனை மிரட்டி ஏர்செல் நிறுவனத்தை விற்க்க செய்த விஷயங்கள் வெளிவந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கின்றார்....சிவசங்கரனின் நேரம் இப்போது நடக்கின்றது...அவர் காய் நகர்த்து கின்றார்...சன் குழுமம் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றது...
==============================
யாருக்கு நேரம் சரியாக இருக்கின்றதோ இல்லையோ? கலைஞர் பேமிலி மேப்ர்ஸ்க்கு நேரம் சரியில்லை... இன்னமும் கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை.. பேரன் மாறன் ராஜினாமா?- சிபிஐ வலையத்தில் மாறன் பிரதர்ஸ்... சன் நிர்வாக இயக்குனர் மீது பல பிரிவுகளில் வழக்கு...இன்னும் புகார் கொடுத்து கொண்டு இருக்கின்றார்கள்...வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
ஒரு நிறுவணத்தை மிரட்டி விற்க்க வைத்து இருக்கின்றார்கள்.. அப்படி ஒரு மிரட்டல் சூழலில்அந்த நிறுவனர் எவ்வளவு மனது காயபட்டு இருப்பார்... முன்பே அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் கசிந்து கொண்டுதான் இருந்தன.. இப்போது உறுதியாகிவிட்டது...தயாநிதிமாறன் சிவசங்கரனை மிரட்டி ஏர்செல் நிறுவனத்தை விற்க்க செய்த விஷயங்கள் வெளிவந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கின்றார்....சிவசங்கரனின் நேரம் இப்போது நடக்கின்றது...அவர் காய் நகர்த்து கின்றார்...சன் குழுமம் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றது...
==============================
யாருக்கு நேரம் சரியாக இருக்கின்றதோ இல்லையோ? கலைஞர் பேமிலி மேப்ர்ஸ்க்கு நேரம் சரியில்லை... இன்னமும் கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை.. பேரன் மாறன் ராஜினாமா?- சிபிஐ வலையத்தில் மாறன் பிரதர்ஸ்... சன் நிர்வாக இயக்குனர் மீது பல பிரிவுகளில் வழக்கு...இன்னும் புகார் கொடுத்து கொண்டு இருக்கின்றார்கள்...வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
==================
இந்தவார கடிதம்.
இந்தவார கடிதம்.
Dear Jackie anna...
I am one our fan since six month.Every day am reading your blog first
and reading cablesanker,trutamilans,Vinavu...You are writing amazing
manner..I don't know every day
am opening my PC automatically my hand go to your bookmarked site and
read your blog..
Need a help anna...Miss. Ragavi (15 years old) is suffering from blood
cancer, She is near to my village .Her father is priest at the local
temple in Unjalur near Erode, TN.
Pls refer the below mail and attached report from KMCH Erode.So pls
publish in your blog because at least minimum some thousands of people
reading your blog .Some of them help to Ragavi treatment.
Conway my best regards to your wife and best wishes to little angel YAZHINI...
Anna one more thing my wife name is also Yazhini
Presume your are publishing in your blog....
Regards
Duraimurugan
==============
==============
Dear Friends,
Miss. Ragavi (15 years old) is suffering from blood cancer and her dad is a
priest at the local temple in Unjalur near Erode, TN. The estimated cost
for
the chemotherapy treatment is Rs.3.5 to 4 Lacs. (PFA is the doctor note).
Her family is unable to meet the medical expenses and needs financial
support. We know her dad personally and it is a genuine case. It doesn't
matter how much we contribute. Each rupee counts. It would be of great help
if you can contribute some amount for the great cause.
Dear Jacki anna..
Hope you are doing well...
This has the below mail reference and tele talk reference with you past 20 days before.Pls
find the Ragavi father and other family details here under
Mr. G. Ragunathan 44(Father)
Mrs. R. Meenakumarai 35(Mother)
R. Bharanidharan 7(Brother)
R. Ragavi 14
Phone and bank details:
Ragunathan-8508859672
G.Saravanan-9715251432(Ragunathan brother)
G. Saravanan
Lakshmi Vilas Bank - Unjalur-638152,Erode
A/c No. 0781301000024648
Also here with attached the KMCH doctor reference letter for your reference.
Pls publish in your blog and save the little life...!!
Sorry for the delay...
My best wishes to your little angel Yazhni ...!!
Regards
Duraimuruga
============
Dear Jacki anna
Pls find the Ragavi house address for your reference
G.Ragunathan
S/0 U.K. Ganapathygurukkal
No.3/17, Parisal Thurai Street.
Unjalur Post
Erode District - 638 152
Regards
Durai
======================
இப்படித்தான் அந்த கடிதம் எனக்கு வந்து இருந்தது.. ஆனால் பெரிதாய் டிடெயில் இல்லை... இளமையில் கொடுமை வறுமை அதனிலும் கொடுமை இளமையில் மரணபயம்... நன்றாக படிக்கும் வயதுக்கு வந்த பெண் ராகவி...வயது பதினான்கு... இந்த வருடம் பத்தாம் வகுப்பு... பள்ளியில் இந்த வருடம் ஸ்டேட் பஸ்ட் வருவாள் என அவன் படிக்கும் தமரைக்குளம் மெட்ரிக்குலேஷன் பள்ளியே நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றது..க்விஸ் புரோகிராம்களில் முதலிடம்...ஆனால் பிளாட் கேன்சர்... அப்பா ரகுநாதன் கரூர்... ரோடு சாலையில் கொடுமுடி பக்கத்தில் இருக்கும் ஊஞ்சலூரில் இருக்கும் நாகேஸ்வரர் கோவிலில் குருக்களாக இருக்கின்றார்...
ராகவிக்கு பிளட்கேன்சர்...தட்டுதடுமாறி நண்பர்கள் பள்ளி மாணவ,மாணவிகள் நல்ல உள்ளங்கள் என பணம் கலேக்ட் செய்து,மூன்றரை லட்சத்துக்கு மேல் செலவு செய்து விட்டார்கள்....இன்னும் ஒரு இரண்டு லட்சம் தேவைபடுகின்றது...ஒரு இளம் பெண்ணுக்கு உங்களால் உதவி செய்ய முடிந்தமால் செய்யுங்கள்... தேவைக்கு அதிகமாக பணம் இருந்தாலோ அல்லது திருப்பதி ஏழுமலையானுக்கு கொடுப்பதாக எதாவது நேர்த்திக்கடன் வைத்து இருந்தால் இந்த பெண் மருத்துவ செலவுக்கு சிறு தொகையை கொடுத்து உதவிசெய்ய வேண்டுகின்றேன்...எல்லா டிடெய்லும் எழுதிஇருக்கின்றேன்...செக் செய்து விட்டே நீங்கள் உதவி செய்யுங்கள்..ராகவியின் அப்பா மற்றும் சித்தப்பாவிடம் பேசினேன்... இறைவா அந்த பெண் பிள்ளையை காப்பாற்று...
====================
மிக்சர்..
இரண்டு நாளா எதுவும் எழுதலை.. இன்பாக்ட் மினி சான்ட்வெஜ் கூட எழுதலை காரணம் என்ன??? கொஞ்சம் மைன்ட் டிப்ரஷன் அதான்... சரி அப்படியே இந்தவாரம் முழுக்க எழுதாம அடுத்த வாரத்துல இருந்து எழுதுவோமா? என்று கூட நினைத்தேன்... சாட் ஆன்லைன்ல வந்தாலே... அண்ணே எதாவது பிரச்சனையா ஏன் எழுதலை என்று அன்பான கேள்விகள்...??ஒரு பய மதிக்க மாட்டான்னு நினைச்சா இத்தனை பேரா? சரி எழுதுவோம்னு நேத்து கும்பகோணம் பத்தி எழுதினேன்...
===================
சென்னையில் இரவு எட்டு மணிக்கு பைனகல்பார்க் லலிதா ஜுவல்லரி எதிரில் டிராபிக் சுத்தமாக இல்லை... பொதுவாக இந்த இடத்தில் இரவு எட்டுமணிக்கு எறும்பு ஊருவது போல வாகனங்கள் நகரும்... பட் இப்போது அப்படி இல்லை விரைவாக செல்லுகின்றது ... அதுக்கு காரணம் சென்னை போக்குவரத்து போலிசார்தான்.. அவர்கள் எடுத்த கடுமையான நடவடிக்கைகள் இந்த அளவுக்கு மாற்றத்தை கொண்டு வந்து இருக்கின்றது... இது அப்படியே செயல்படவேண்டும் என்று நினைக்கின்றேன்.வாழ்த்துகள் சென்னை போக்குவரத்து போலிசாருக்கு....
==========
சென்னை எங்கும் புழுதிக்காடாய் காட்சி அளிக்கின்றது.. மதுரவயலில் இருந்து கோயம்பேடு போவதற்க்குள் கண்களில் ஒன்றரை டன் மண் விழுகின்றது...கோயம்பேட்டில் இருந்து அசோக் பில்லர் போதற்குள் தாவு தீர்ந்து விடுகின்றது...எல்லாம் மெட்ரோ ரயில் புராஜக்ட் உபயம்.... அந்தளவுக்கு தூசி மண்டலம்.....எப்போதோ ஒரு முறை சுஜாதா சிங்கபூரில் தங்கி இருந்த போது வாட்டர் பைப் சரி பண்ண இரவில் பள்ளம் நோண்டி காலையில் அந்த இடத்தில் பள்ளம் தோண்டிய தடயமே இல்லாமல் ஒர்க் செய்து முடித்து இருந்தார்கள் என்று எழுதியதை படித்தது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது...
=======================
ரொம்ப நாளைக்கு அப்பும் போருர் மேம்பாலம் கட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுகின்றார்கள்... நேற்று இரவு போரூர் சிக்னல் அருகில் பொக்லைன் மற்றும் டிப்பர் லாரிகள் அதிக அளவில் காணப்பட்டன.... சீக்கிரம் பாலத்தை கட்டுங்கப்பா...
=============
வரிசையாக ஆப்புகள் வந்தால் என்னதான் செய்ய முடியும்..??
முதல் அப்பு அப்புறம் பிரிதொரு சமயத்தில் சொல்லுகின்றேன்.
ஜான் எறினால் முழம் சரிக்கினால் பராவாயில்லை...3 அடி சரிக்கினால் என்ன செய்வது...???
வாசிங் மெஷின் திடிர்ன்னு மக்கார் பண்ணிச்சு.... நிச்சயம் அதை மாற்றியே ஆக வேண்டும்...
கும்பகோணம் போயிட்டு காரில் சென்னைக்கு திரும்பினேன்.. விடியல் இரண்டு மணிக்கு திண்டிவனத்திவ் டீ சாப்பிட வண்டியை நிறுத்தினேன்... மகள் சிரித்தாள்.. ஆசையாக வாங்கி கொஞ்சினேன்... மார்பில் இளம் சூடான திரவம்.....மகள் சூசூ போய் விட்டாள்.. பாக்கெட்டில் இருந்த எனது 10 ஆயிரம் ரூபாய் மொபைல் முழுவதும் அபிஷேகம் ஆனாது..டிஸ்பிளே கோவிந்தா கோவிந்தா...
=======================
வண்டி ஓட்டினால் மட்டும் எனது தொடைகள் அரிக்க ஆரம்பித்தது... என்ன பிரச்சனை என்று ஒரு 5 நாட்களாக யோசித்தால் பேன்ட் தொடைபகுதியில் பெட்ரோல் நாற்றம்.. என்ன என்று பார்த்தால் பெட்ரோல் டாங்கில் பெட்ரோல் கசிவு அது தொடையில் பட்டு அரிக்க ஆரம்பித்து விட்டது.. என்ன கொடுமை சரவணன் இது போல பிரிச்சனைகள் எனக்கு மட்டும் ஏற்படும் போல இருக்கு....ஒருவேளை உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரம்பா தொடையை அளவுக்கு மீறி ரசித்து விட்டேனோ...? அப்படியே இருந்தாலும் இத்தனை வருடங்கள் கழித்தா??? இதுதான் சயோஸ் தியரியோ???
========
மதுராந்தகம் போக சென்னை கோயம்பேட்டில் விடியல்காலை ஆறுமணிக்கு கடந்த சனிக்கிழமை காலை பேருந்துக்கு அலைந்துக்கொண்டு இருந்தோம்... இரண்டு பெண்கள் எங்கள் பின்னே வந்து கொண்டு இருந்தார்கள்... சின்ன தயக்கத்து பிறகு நீங்க ஜாக்கிதானே என்றார்கள்.. நான் ஆமாம் என்றேன்.... டெய்லி உங்க வெப்சைட் பாக்கறோம் கலக்கறிங்க.. என் மனைவியை பார்த்து இவுங்க உங்க ஒய்ப் ...என் குழந்தையை காட்டி இவள் யாழினிதானே என்று என்னை பேசவிடாமல் பேசிக்கொண்டே சென்றார்கள்.. உங்க ஒய்ப் மடிவாலாவில் இருக்காங்க இல்லை.. நாங்க எல்க்ட்ரானிக்சிட்டியில் இருக்கின்றோம் என்று சொன்னார்கள்...ஒருவர் பெயர் இளவரசி மற்றவர் பெயர் இலக்கியா... இரண்டு பேரும் நண்பர்கள்.. ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது... மற்றவருக்கு இன்னும் ஆகவில்லை... இரண்டு பேரும் சாப்ட்வேர் என்ஜினியர்ஸ்.... என் மனைவிக்கு வணக்கம் சொன்னார்கள்..அவர்களை அழைத்து போக கணவனும் அப்பாவும் வெயிட் செய்து கொண்டு இருந்தாலும்.. நீங்க கிராஸ் பண்ணதை பார்த்துட்டு உங்களை பாலோ செய்து வந்து உங்களிடம் பேசுகின்றோம் என்று சந்தோஷபட்டார்கள்..என் மனைவிக்கு பெருமை....
அன்பின் இலக்கியா இளவரசி
அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்த காரணத்தால் உங்களிடம் அதிகம் பேசமுடியவில்லை.. பிரிது ஒரு சந்தர்பத்தில் மடிவாளாவல் சந்திப்போம் மிக்க நன்றி...
============
அன்பின் இலக்கியா இளவரசி
அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்த காரணத்தால் உங்களிடம் அதிகம் பேசமுடியவில்லை.. பிரிது ஒரு சந்தர்பத்தில் மடிவாளாவல் சந்திப்போம் மிக்க நன்றி...
============
==============
இந்த வார புகைபடம்...
இது ஏதோ ஊட்டியில் எடுத்த ரயில் டிராக் போட்டோ அல்ல முந்தநாள் செங்கல் பட்டு டூ குரோம்பேட் ரயிலில் போகும் போது பெருங்களத்தூர் அருகே எடுத்தது....
கிரகபிரவேசம் முடிந்து ஐயர் ஒரு சொம்புல தண்ணி வச்சி மாவிலை தோரணம் போட்டு வீடு புல்லா தெளிங்க சொல்லுவாங்களே... அது போல முந்தாநாள் சென்னை புறநகரில் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது...அப்போது பெருங்களத்தூர் ரயில் பாதையில் பூமி சூட்டில் புகை கிளம்ப நான் கிளிக் செய்தேன்..
கிரகபிரவேசம் முடிந்து ஐயர் ஒரு சொம்புல தண்ணி வச்சி மாவிலை தோரணம் போட்டு வீடு புல்லா தெளிங்க சொல்லுவாங்களே... அது போல முந்தாநாள் சென்னை புறநகரில் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது...அப்போது பெருங்களத்தூர் ரயில் பாதையில் பூமி சூட்டில் புகை கிளம்ப நான் கிளிக் செய்தேன்..
========================
பிலாசபி பாண்டி
பிலாசபி பாண்டி
கடவுள் நான் ஒரு பெண்ணை ஹைடெக் பியூட்சர்சுடன் படைக்க போகின்றேன். எதாவது சஐஷன் இருக்கின்றதா என்று கடவுள் கேட்டார்... அதுக்கு பையன் பதில் சொன்னான். அவளின் இதயம் பாஸ்வேர்ட் இருக்கறது போல செட் செய்யுங்க.. கண்டவன் வந்து ஆட்டைய போட்டுட்டு போயிடுவானுங்க என்றான்...
=================
நான்வெஜ்18+
90 வயசுல செக்சாலிஜிஸ்ட் கிட்ட போன தாத்தா... டாக்டர் நான் இந்த வயசுல செக்ஸ் வச்சுக்கற நல்ல பொசிஷன் கொஞ்சம் சொல்லுகளேன்னு கேட்டார்... அதுக்கு டாக்டர் நாய் பண்ணற ஸ்டைலில் நீங்க பண்ணா பெட்டர்னு சொன்னார்...
யூ மீன் பிகைன்ட் ஆப் உமன் டாக்டர்...
அதுக்கு டாக்டர் பதற்றமாய் சொன்னார்... நோ நோ நான் அப்படி மீன் பண்ணலை...
just smell... lick& leave
யூ மீன் பிகைன்ட் ஆப் உமன் டாக்டர்...
அதுக்கு டாக்டர் பதற்றமாய் சொன்னார்... நோ நோ நான் அப்படி மீன் பண்ணலை...
just smell... lick& leave
===================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
sandwich super anna.
ReplyDeleteவர வர கோவையில் ரொம்ப கிரைம் நடக்கிறது...
ReplyDeleteஞாயிறு மினி சாண்ட்வெஜ் அண்டு புதன் சாண்ட்வெஜ் - புல் மீல் சாப்பிட்ட திருப்தியா இருக்குபா
ReplyDeleteThanks for publishing...!!
ReplyDeleteநிறைய தகவல்களை அறிந்து கொண்டேன்.நன்றி சார்.
ReplyDeletesuper mini sandwich
ReplyDeleteHello Jackie,
ReplyDeleteRegarding the blood cancer treatment. I suggest a doctor who is in cochin (who charge vewry minimal fee for treatement). He is the best in this. I am referring based on my friend's experience. http://www.lakeshorehospital.com/inner.aspx?PageId=101 please forward this link to the concern people.
//எந்த அமைமைச்சாரும் மக்கள் பிரச்சனையை தீர்க்காமல் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று முதல்வர் ஜெ தன் அமைச்சரவை சகாக்களுக்கு ஆர்டர் போட்டு இருக்கின்றார்....எனக்கு தலையே சுற்றுகின்றது.. நான் கேள்விபடுவது கனவா அல்லது நனவா???//
ReplyDeleteமானாட மயிலாட நானாட நமீதா ஆட என்று கடந்த 5 வருடங்களாக முதலமைச்சரை பார்த்து பழகிய நமக்கு இது போல் நடப்பதை பார்த்தால் தலையை சுற்றுவது போல் தான் இருக்கும்..
கோபி ஒரு மாசமா... பசங்க என்ன படிக்கறதுன்னு தெரியலை அதுக்கு மானாட எவ்வளவோ பெட்டர்...
ReplyDeleteபாடமே இல்லாத பள்ளிக்கூடங்கள்...
ReplyDeleteஇந்தம்மாவுக்கு ஏன் இப்படி ஒரு கல் நெஞ்சமோ!.
கோவையில் மட்டுமில்லை...மனிதாபாமானம் கொஞ்ச கொஞ்சமாய் எல்லா இடங்களிலும் செத்துப்போய்கொண்டிருக்கிறது...
ReplyDeleteஅவனவன் தன வேலையைப்பார்த்து போகிறான்...வழக்கம் போல கலக்கிறீங்க சேகர்..விரைவில்..depression விலக வாழ்த்துக்கள்..
Thanks Mr.Jackie for publishing Financial support request for Raghavi.
ReplyDeleteThis case is very much genuine. My close friend's family used to visit temple, where her father serves.