இன்று எழுத்தாளர் பாலகுமாரனுக்கு பிறந்தநாள் 05/07/2011







நேற்று திருச்சியில்  என் கசின் லேப்டாப்பில் பேஸ்புக்கில் சில நண்பர்களை என்  நண்பர்கள் லிஸ்ட்டில்  கன்பார்ம் செய்தேன்..
.நடராஜ்ஜெகந்நாதன் என்பவரிடத்தில் இருந்து உடனே ரிப்ளே வந்தது.. அவரிடம்  பேசிக்கொண்டு இருந்த போது அவர் எனது நண்பர்  ஒளிப்பதிவாளர் ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் என்று  தெரிந்துக்கொண்டேன்.. அப்படியே பேச்சு உங்களுக்கு பாலகுமாரன் பிடிக்குமா? என்று பேச்சு நீண்ட போது நான் உங்களை பாலகுமாரனிடம் அழைத்து செல்லட்டுமா? என்று   சொன்ன  போது, நான் மகிழ்ந்தேன்..இன்று பிறந்தநாள் என்பதால் நிச்சயம் போய் பார்த்து விட்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.


 காலையில் நண்பர் ஜெகனோடு பயணபட்டேன். நான் ரசித்த படித்த எழுத்தாளர் விட்டுக்கு போக போகின்றேன் என்ற நினைக்கும் போது ஒரு திரில் இருந்தது...
1995க்கு முன்னால் நண்பர்கள் கையில் பாலகுமாரன் புத்தகங்கள் வைத்து இருந்தால் அது மதிப்புக்கு உரிய விஷயம்.. 1995க்கு பிறகு எலக்ட்ரானிக் மீடியா வளர்ச்சி காரணமாக அப்படி வாசிக்கும் விஷயம் குறைந்து போய்விட்து எனலாம்...
அதே போல பாலகுமாரன் கதைகள் வாசிக்கின்றார் என்று தெரிந்ததும் அவர்களிடம் நட்பாகி இன்றுவரை தொடர்வதும் அப்போது அதகம் நடந்தவை..

நான் இதுவரைக்கும் ஆட்டோகிராப் வாங்கியவர்கள் ஒரு சிலரே...சுஜாதா,பாலகுமாரன்,மதன் அவ்வளவுதான்... இவ்வளவு ஏன் நான் அதிகம் மதிக்கும் கமல், மணிரத்னம் இரண்டு பேரிடம் கூட நான் ஆடோகிராப் வாங்கியதில்லை....
சரி பாலகுமாரன் அப்படி என்ன ஸ்பெஷல்...? நான் நானாக இருக்க கற்றுக்கொடுத்தவர் அவர்தான்..   


நிறையபேர் அவருக்கும் கடிதங்கள் எழுதுவார்கள்....  கற்றுக்கொடுப்பவன்  குரு எனில் நீங்கள் என் குருவே...  சொல்லிக்கொடுப்பவன் என் தகப்பன் எனில் நீங்கள் என் தகப்பனே என்று உணர்ச்சி  மிகுந்த கடிதங்களை பலர் எழுதி இருக்கின்றார்கள்... ஆனால் நான் அதை உணர்ந்து இருக்கின்றேன்...


 நான் எல்லாம் செமையான மக்குபையன்..பெண்களை ஹாவென பார்த்தவன், காதல் பற்றிய புரிதல் இல்லாதவன்... காதல் என் வாழ்வில்  சாத்தியமே இல்லை என்று நினைத்துக்கொண்டு இருந்தவன்..வாழ்வில் என்னவாகபோகின்றேன் என்று எந்த இலக்கும் இல்லாதவன்... ஆனால் பாலாவின் எழுத்துக்கள் என்னை  நான் யார் என்று என்னை  தேடே வைத்தது... நாம் எதாவது செய்ய வேண்டும் என்று என்னை உசுப்பி விட்டது பாலாவின் எழுத்துக்கள்தான்...இன்று எனது தளத்தை பலஆயிரம் பேர்  வாசிக்கின்றார்கள்.. என்னை கொண்டாடுகின்றார்ர்கள்.. அதுக்கு  என் ஆர்வமும்  பாலாவின் எழுத்துக்களும்தான் காரணம்..


பாலாவையும்,சுஜாதாவையும் வணிகஎழுத்தாளர்கள் என்ற பட்டத்தை கொடுத்து இலக்கிய வட்டத்துக்குள் அவர்களை நுழைய விட்டதில்லை..பாலவின் எழுத்துகள் இலக்கியமோ  இல்லையோ என்னை போன்ற ஆரத்து பொரிக்கிகளை அவரின் எழுத்து நல்வழிபடுத்தி இருக்கின்றது... அது போதும்.... அந்த  எழுத்து இலக்கியதரமாக இருக்கவேண்டும் என்று ஒரு மயிறும் தேவையில்லை.....


எனக்கு தெரிந்து வாசககனுக்கு கற்றுக்கொண்டால் குற்றமில்லை என்று தன்னை வாசிப்பவன் எப்படி தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுத்த ஒரேகுரு பாலகுமாரன்தான்.

பாலகுமாரனின் அனைத்து எழுத்துக்களையும் நான்  அப்படியே கண்ணை முடிக்கொண்டு கொண்டாடுவது இல்லை.. எனக்கு என்ன தேவையோ அவைகளை எடுத்துக்கொண்டு இருக்கின்றேன்.. அவரிடமும் குறைகள் இருக்கின்றன... நானே  யோக்கியசிகாமணியாக இல்லாத போது அடுத்தவர்குறையை நான் எப்படி பெரிது படுத்தமுடியும்...


 சென்னை மெரினாவில் கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டு இருந்த போது இயக்குனர் ஷங்கரோடு பாலகுமாரன் நான் வேலைசெய்த சாகர்விகார் ரெஸ்டாரண்ட்டுக்கு வந்து இருக்கின்றார்.. அப்போது அவரிடம் நான் ஆட்டோகிராப் வாங்கி இருக்கின்றேன். அவ்வளவுதான்.. அதன் பிறகு சாருவின் தேகம் புத்தக வெளியீட்டு விழாவில் அவரை பார்த்து இருக்கின்றேன். தம்பி கார்த்தி கூட விழா முடிந்ததும் சந்திக்வேண்டும் என்று நினைத்து இருந்தோம்.. பட் நேரமின்மையால் அது  சாத்தியபடவில்லை.

 சென்னை 28, விசாலாட்சி தோட்டம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பில் அவரது வீடு.. வீட்டின் உள்ளே   போனேன்...வணக்கம் வைத்தேன்.. பிறந்தநாள் நல்வாழ்த்துகள்சார் என்று சொல்ல எனக்கு  நாக்கே வரவில்லை....


 இவர்தான் ஜாக்கிசேகர் இணையத்தில் இவர்  பிரபலம்,300 படங்களுக்கு மேல் பல மொழி படங்களுக்கு விமர்சனம் எழுதி இருக்கின்றார் என்று அவரிடம் என் நண்பர் என்னை அறிமுகபடுத்தி சொன்ன போது எனக்கு கூச்சத்தால் உடம்பு கூசியது...
 பாலகுமாரன் என்னிடம் ஜாக்கி எனக்கு இணையம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. நான் சொல்லும் நேரத்தில் பிரியாக இருந்தால் எனக்கு  வலைபற்றிக்கற்றுக்கொடுக்க முடியுமா? என்று கேட்டார்...  சார் நானே.. இந்த மூன்று வருடமாத்தான் இணையத்தில் இயங்குகின்றேன் எனக்கு என்ன  தெரிகின்றதோ  அதை உங்களுக்கு சொல்லித்தருகின்றேன் என்று சொன்னேன்..

தொடர்ந்து போனில் வாழ்த்து செய்திகள் குவிந்த வண்ணம் இருக்க நேரில் வந்து வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் வாங்கி கொண்டு இருநத்ர்கள்.

இணையசண்டைகள் பற்றிய பேச்சு வந்த போது.... பேச்சு நீண்டு கொண்டு போனது.. நான் ஒருமுறை காப்பி அடித்தல் பற்றிய கட்டுரை உதாரணத்துக்கு எனது எழுத்தில் பாலகுமாரன் சுஜாதா  வாசித்த காரணத்தால் அவர்கள் டச் இல்லாமல் இருக்காது என்று சொல்ல தொலைக்க பலர் புயலென புறப்பட்டு பூந்து விளையாடியகதையை சொன்னேன்...


சரி ஜாக்கி நீ சொல்லு.. நான் இணையத்தில் எழுதட்டுமா? இல்லை  வேண்டாமா? என்று என்னிடத்தில் கேட்டார்... நான் சொன்னேன்... நிறைய சைக்கோ உலாவும் இடம்... அதனால் அதுக்கு பதில் சொல்லிமாளாது...எதுவுமே எழுத  தெரியாட்டாலும் எழுதியவனை வரிக்கு வரி நக்கல் விட ஒரு பெருங்கூட்டம் இருக்கின்றது.. இது நேரவிழுங்கி அதனால் இணையம் வேண்டாம் என்று சொன்னேன்...

அதன் பிறகு  யோகிராம்சுரத்குமார் பக்தி பாடல்கள் பஜன்பாட வாரவாரம் வரும் மகளிர் குழுவினர் வந்தார்கள்... பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னார்கள்... அப்பா அப்பா என்று பாலகுமாரனை கொண்டாடினார்கள்..

98ல் பார்க்கும் போது ஒரு  நீல ஜீன்சும்   வெள்ளை சட்டையில் பார்த்து இருக்கின்றேன். இப்போது எல்லாம் வெள்ளை... வேட்டி முடி  எல்லாம்...
யோகிராம்சுரத்குமார்.. பற்றிய பாடல்களை பாடினார்கள்... பிறந்தநாள் பரிசு பொருட்களை கொடுத்தார்கள். ஆசி வாங்கினார்கள்..

பாலகுமாரன் ஒருவரை  காட்டி இவர் ஏர் இண்டியா பைலட் இப்போது பெரிய பதவியில் இருப்பதாக சொன்னார்...பதவி ஞாபகத்துக்கு வரவில்லை... என்னோட ஆல்டைம் பேவரைட் பயணிகள் கவனிக்கவும்தான்.. அதில் மூழ்கி விட்டேன்.. அவரிடம் என்னை அறிமுகபடுத்தும் போது இவர் ஜாக்கி இணைய எழுத்தாளர் என்று சொன்னார்...திரும்பவும்  எனக்கு உடம்பு கூசியது... தலையை தொங்க போட்டுக்கொண்டேன்..


நான் அவரிடம் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள நினைக்க அங்கே இருந்த பெண்கள் எல்லோரும் பாலாவுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விருப்பம்  கொள்ள தனித்தனியே அவரோடு நிற்பது போல போட்டோக்கள் எடுக்க ஆரம்பித்தேன்...
வாழ்த்து பெற ஆட்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.. வேறு எந்த எழுத்தாளருக்காவது இது போல கூட்டம் வருமா என்று எனக்கு தெரியவில்லை..ஒருவர் பாடல்  பாடிக்கொண்டே கால் பிடித்து விட ஆரம்பித்து விட்டார்... பெண்கள் அவரை கொண்டாடினார்கள்..கணவர் பிள்ளைகளுடன் வந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு சென்றார்கள்...

நான் ஆசி வாங்கினேன்.. சமயபுர அம்மன் கோவில் பிரசாத்ம் வந்தது.. அதில் இருந்த பிரசாதங்களை எனக்கும் மற்றும் நண்பர்களுக்கும் வழங்கினார்...
போட்டோ எடுத்ததும் எப்போது போட்டோ கிடைக்கும் என்று கேட்டார்.. நா அவர் மகன் சூர்யா லேப்டாப்பில் அனைத்து படங்களையும் ஏற்றிக்கொடுத்தேன்.. எடுத்த படங்களை பார்த்தார்.. பிரேம்கள் அருமையாக  இருப்பதாக சொன்னார்...

வெகு நாட்களுக்கு பிறகு அவரை  சந்திக்க வேண்டும்  என்ற ஆசை நிறைவேறியது...சந்திப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் நடராஜன்ஜெகன் அவர்களுக்கும் என் நன்றியும் அன்பும்...

அடுத்து பாலகுமாரன் கர்வி யாரையும் மதிக்கமாட்டார் என்ற பேச்சும் இருக்கின்றது.. பட் எனக்கு அப்படி நடக்கவில்லை...

 எனக்கு பாலகுமாரனிடம் பிடித்த விஷயம்... அவர் தேங்கியூ என்ற ஆங்கில வார்த்தையை பிரயோகிக்கும் அழகு....

நான் ரசித்த ஒரு எழுத்தாளனை அவரது பிறந்தநாளின் போது அவரை சந்தித்த இந்த நாள் வாழ்வில் நான் மறக்க முடியாதநாள்


பாலகுமாரனை பத்தி பயங்கரமா கூவி இருக்கறே???
அவரு என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா????
எங்கப்பன் எனக்கு சொல்லிக்கொடுக்காத பல விஷயங்களை அவருடைய கதைகள் மூலம் எனக்கு சொல்லிக்கொடுத்தவர்...
அதனால எனக்கு அவர்பெரிய (அப்பா)டக்கர்தான்
-- 

குறிப்பு


 காலையில் வலையேற்றி இருக்க வேண்டும்... சிஸ்டம் பிரச்சனை அதுதான்...


பிரியங்களுடன்/ ஜாக்கிசேகர்




(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...



 


=====================

14 comments:

  1. என் திருமண நாளுக்கு முதல் நாள் அவர் பிறந்த நாளா...? இனி மறக்காது. ரைட்டு..

    ReplyDelete
  2. நான் இதற்காக ஜகன் சாரை மன்னிக்கவே மாட்டேன்..என்னையும் அழைத்துப் போய் இருக்கலாம் இல்லையா? ஜாக்கி உங்களையும் மன்னிக்க மாட்டேன்.

    அடுத்த முறை மரியாதையாக என்னையும் அழைத்துப்போங்கள்.

    ReplyDelete
  3. நான் பாலா சாருடைய காமதேனு மற்றுன் இரண்டாம் கல்யாணம் இந்த இரண்டு நாவல்களை மட்டும்தான் படித்திருக்கிறேன். உங்களை பாத்தித்த புத்தகங்களை சொல்ல முடியுமா? Pls

    ReplyDelete
  4. ஜாக்கி,

    நாம் இருவரும் சந்தித்து பேசிய பாலகுமாரானின் கடலோர குருவிகள் நினைவலைகள் வந்து. மனதில் ஆடியது.

    நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  5. அவருடைய தலையனை பூககள் பல முறை வாசித்திருப்பேன். பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  6. ஜாக்கி...

    சுஜாதா எழுத்து ஒரு வகை... அனைத்து துறைகளிலும் கலந்து கட்டி அடிப்பார்... அதன் பின் நான் வெகுவாக நேசித்தது பாலகுமாரன் எழுத்துக்களையே...

    மிகப்பெரிய அளவிலான பாலகுமாரன் புத்தகங்கள் கலெக்‌ஷன் வைத்திருக்கிறேன்... சில புத்தகங்கள் என்னிடம் இல்லை... முயற்சி செய்து, அவற்றையும் வாங்கி வைத்து விடுவேன்...

    இந்த பதிவின் மூலம் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்தை பதிவு செய்கிறேன்...

    பாலகுமாரன் அவர்கள் இன்னமும் நிறைய எழுத வேண்டும்...

    ReplyDelete
  7. உங்கள் மூலமாக அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    இனிமேல் எனக்கும் மறக்காது சூர்யா சார்! ஏனெனில் அன்று என் மகன் பிறந்தநாள்...!

    இப்போது உங்கள் திருமணநாள் வாழ்த்துக்களும் கூட!!

    ReplyDelete
  8. இந்த பதிவின் மூலம் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்தை பதிவு செய்கிறேன்...

    ReplyDelete
  9. என் கல்லூரி நாட்களில் மிகவும் ஈர்த்த எழுத்தாளர் பாலகுமாரன்..நேரில் 2 முறை சந்தித்திருக்கிறேன்..நாயகன் படபிடிப்பில்..ஒரு முறை..வாழ்த்துக்கள் எழுத்து சித்தருக்கு..

    ReplyDelete
  10. அண்ணே,
    சென்னையில் தான் இருக்கிறேன்.எழுத்தாளர் பாலகுமாரனுடன் மிக அருமையான சந்திப்பை நிகழ்த்தியுள்ளீர்கள்,படங்கள் அழகு, மிக்க மகிழ்ச்சி,நேரம் வாய்ப்பின் என்னையும் அழைத்து செல்லுங்கள்.

    ReplyDelete
  11. மிகுந்த மகிழ்ச்சி ஜாக்கி.. பாலகுமாரன் பாரட்டப்பட வேண்டியவரே.,

    ReplyDelete
  12. இதற்குதன ஆசைப்பட்டாய் ஜாக்கீ உஙகள் மூலம் குருவுக்கு வாழ்துக்கள்.சித்தர் பாலகுமாரான் வாழ்க வாழ்க வளமுடன் ... நட்புடன் நக்கீரன்

    ReplyDelete
  13. I used to be a fan of Shri Balakumaran's writing too. You are lucky to have met in him person.

    Thanks for sharing your experience with him.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner