சில மணி தாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/06/07/2011


ஆல்பம்...

இந்திய இராணுவ துப்பாக்கிக்கு தமிழர் சமுகத்தை சுடுவது என்றால் கொள்ளை பிரியம்
என்பது இலங்கையில் அமைதிபடை போய் நடத்திய கொடுரங்கள் வாயிலாக நாம் உணர்ந்து இருக்கின்றோம்...சென்னையில் இராணுவ குடியிருப்பில் பழம் பறிக்க போன சிறுவனை துப்பாக்கியால் சூட்டு சாகடித்து இருக்கின்றார்... ஒரு கர்னல்.. முதலில் இந்த விஷயத்தை மூடி மறைக்க பார்த்தார்கள்... ஆனால் முதல்வர் ஜெ இந்த கொலையை சாடியதும் வழக்கை சிபிசிஜடி வசம் ஒப்படைக்கபட்டது... இப்போது சுட்ட ஆள் யார் என்று தெரிந்து விட்டது...இப்போது இராணுவத்தினர் விசாரனை நடத்தி வருகின்றனர்... நீதி கிடைத்தால் சரி...முதலில் தமிழன் என்றாலே வடநாட்டுகாரர்களுக்கு சுத்தமாக பிடிக்காது... பையன் தில்சான் கருப்பு வேறு அல்லவா??? அதனால் துப்பாக்கி யோசிக்கவில்லை...

===================
சமச்சீர் கல்வியில் எப்போது ஒய்ஜி பார்த்தசாரதி வந்தாரோ அப்போதே அதன் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியும்...அதனால் சமச்சீர் கல்வி தரம் சரியில்லை என்று அரசு சார்பில் நியமிக்கபட்ட குழுவினர் சொல்லி இருக்கின்றார்கள்..அதே போல சமச்சீர்கல்வி சர்ச்பார்க் காண்வென்ட் ஸ்டேன்டர்டில் இருக்க வேண்டும் என்று முதல்வர் நினைப்பது தெளிவாக தெரிகின்றது........இந்த வருடம் அமுல் படுத்த முடியாது... எராளமான மாற்றம் பாடங்களில் தேவை என்பதை சொல்லி இருக்கின்றார்கள்....


=====================
திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார்.. என் கிளிக்ஸ்...

தனி தெலுங்கனா பிரச்சனையில் மாணவர்கள் போராட்டம் வலுவடைந்து இருக்கின்றது... ஆனால் நம் ஊரில் இப்படி ஒரு போராட்டத்துக்கு மாணவர் ஆதரவு சாத்தியமா? என்றால் இல்லை என்று சொல்லவேண்டும்.. இந்தி எதிர்ப்புக்கு பிறகு மாணவர்களின் எதிர்ப்பு என்பது  பொது விஷயத்தில் தமிழகத்தில் நீர்த்து போய் விட்டது என்பதே நிதர்சன உண்மை.. காரணம் என்ன..??? ஒரு நாள் மெதுவாய் அலசுவோம்..

=====================
சன்டிவி நிர்வாக இயக்குனர் சாக்ஸ் கைது செய்யபட்டு இருக்கின்றார்...காரணம் பணப்பிரச்சனைதான்.. தயாரிப்பாளர் சங்கத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கின்றார்கள்..எவ்வளவு பெரிய வன்மம் மனதில் இருந்து இருக்கும் என்பதை அவர்கள் தரும்  பேட்டியில் காணமுடிகின்றது... 18 வருடம் அசைக்கமுடியாத இடத்தல் இருந்த சன் கோட்டையில்  லைட்டாக விரிசல்... அது தவிர்க்க முடியாதது...காரணம் இயற்பியல் விதி சொல்கின்றது  இந்த பூமி பந்தில் யாராக இருந்தாலும் உயர்வு தாழ்வை சந்தித்தே ஆக வேண்டும்...
============================

இந்தவாரசலனபடம்..1

தீபாவளிக்கு சங்கு சக்கரம் பார்த்து இருப்பிங்க.. அதை நினைவு படுத்துகின்றது... இந்த விபத்து...



=================
மிக்சர்..
நண்பர் எல்சிடி டிவியும். ஏசியும் வாங்க வேண்டும் எனறார்.. நம் தளத்துக்கு விளம்பரம் கொடுக்கும் எல்டெக் கடைக்கு அழைத்து சென்றேன்.. நண்பர் ஜெயவேல்  எந்த அளவுக்கு பெஸ்ட் பிரைசில் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து கொடுத்தார்.. நண்பருக்கு மகிழ்ச்சி..சென்னையில் இதுவரை சொன்ன விலைகொடுத்து வாங்கியே எனக்கு பழக்கம்... பட் முதல் முறையாக சில நூறு ரூபாய்கள் குறைத்து பொருள் வாங்கி இருக்கின்றேன் என்று நண்பர் சொன்னார்.. அவருக்கு சந்தோஷம்.. கரண்டியில் இருந்து ஏசிவரை விற்க்கின்றோம் என்று சொன்னார்...டோர் டெலிவரி வசதியும் உண்டு... எங்கள் நிறுவனத்தில் ஏர்கூலர் மட்டும் விற்பதில்லை என்றார் காரணம்.. கடல் ஓரத்தில் 50 கீலோமீட்டர் அளவுக்கு ஏர்கூலர்கள் செயல்பாட்டில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்று சொன்னார்...நமது தளத்தில் இருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு யார் கடைக்கு போனாலும் நமது தளத்தின் பேரை சொல்லுங்கள் உங்களுக்கு என்ன பெஸ்ட் பிரைசோ அதனை உங்கள் தளத்து சென்னை வாசகர்களுக்கும் செய்து கொடுக்கின்றேன் என்று சொன்னார்...எல்டெக் கார்பரேஷன் மாம்பலத்தில் பிருந்தாவனம் தெருவில் இருக்கின்றது... போரூரில் குன்றத்தூர்  ரோட்ல் ஈபி ஆபிஸ் எதிரில் இருக்கின்றது.... ஜெயவேல்  போன் நம்பர்...9840398398  போன் செய்து அவர் கடையில் இருக்கின்றார் என்பதை உறுதி செய்துக்கொண்டு செல்லுங்கள்..
==============
புதன் கிழமை இரவு எட்டுமணிக்கு பதிவுலகம் பரபரப்பானது... பதிவர் லதானந் கார் விபத்தில் இறந்து போய் விட்டார் என்று செய்தியை நம்பி டூவிட்டர் மற்றும் பஸ்சில் ஆழ்ந்த இரங்கலை நண்பர்கள் தெரிவித்துக்கொண்டு இருந்தார்கள்..லக்கி ஒரு படி மேலேபோய் ஒரு பத்துமணிக்கு போன் பண்ணி சென்னையில் லதானந் இறப்புக்கு,
சனிக்கிழமை சென்னை பதிவர்கள் சார்பாக அஞ்சலி கூட்டம் நடத்த வேண்டும் என்று
சொன்னார்.. கண்டிப்பாக செய்யலாம் என்று சொன்னேன்.. நல்ல மனுஷன் கோவை போய் அவரிடம் பேசமால் வந்தால் கோபித்துக்கொள்வார் என்று சொன்னார்.. எனக்கு அதிகம் பழக்கம் இல்லை.. சாட்டில் சின்ன உரையாடலில் பேசி இருக்கின்றோம் என்று சொன்னேன்.. சஞ்சய் கல்யாணத்தில்தான் அவரை நேரில் சந்தித்தேன்... என்னோடு போட்டோவும் எடுத்துக்கொண்டு நம்மையும் போட்டோ எடுத்தார் என்று சொன்னேன்..ச்சே நல்ல மனுஷன் என்று எங்கள் போன் உரையாடல் முடிந்தது.. சாப்பிட்டு விட்டு வந்து இணையத்தைதிறந்து பார்த்தால் எல்லாரும் எமாந்து இருக்கின்றார்கள்... ஏன் இப்படி???? இறந்துவிட்டதாக நண்பரை விட்டு சொல்ல சொல்லி இருக்கின்றார் லதானந்... இப்படியும் மனிதர்கள்.. போங்கப்பா....

================
அரியலூர் கிட்ட ஏதோ சிமென்ட் கம்பனி ஸ்டசேன் கிட்ட டிரையின் கிரசிங்ல நின்னுச்சி... எதிரில் வந்த ரயிலை அது  என் ஜன்னலுக்கு முன்  வேகமாக எட்டிப்பார்த்த அந்த கணத்தை பதிவு செய்த இந்த படம் எனக்கு பிடித்த படம்... என்கிளிக்ஸ்..2


==============
வேலைவாய்ப்ப்பு...
How are you? Hope you are doing good.

I am one of your regular reader and this is my first email to you.

I am writing this email to you to publish few vacancy details in your next 'job opening" blog posts. I am working in a reputed MNC and one of the top five in the world. We have 10+ Java positions open in my company and need people with the below skill sets,

    4-7 years of exp in Java
    Exp in Websphere
    Should possess good communication skills ( writing and oral )
    Should ready to work in production support projects ( partially )
    We need 10-15 people.

I can't reveal my company name in open forums as policy doesn't allow that. But, I will tell the company name if anyone contacts me. Kindly ask the required persons to send their resumes to my email address ( vennirajan@gmail.com ).

I thought of writing this email to you in Tamil, but cant communicate the job details correctly and continued in English. Sorry about that. I am working in writing Tamil emails. Hope my next email would be in Tamil for you.

Regards,
S.Venni Rajan.
================
 வாழ்த்துகள்...

நண்பர் லக்கி என்கின்ற யுவகிருஷ்ணா இரண்டாம் பெண்குழந்தைக்கு தந்தையாகி இருக்கின்றார்... எனது இதயம்கனிந்த வாழ்த்துகள்..குழந்தைக்கு பெயர் தமிழ்நிலா.. தமிழ்நிலாவுக்கு எனது அன்பும் கனிவும்...

==================
 இன்று 07/072011 பிறந்தநாளை கொண்டாடும், பாஸ்டன் அதிமுக நகரகிளை செயலர், ரத்த்தின் ரத்தம், அம்மா செல்லம்..எனது  நண்பர் பாஸ்டன் ஸ்ரீராமுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்..வயசை சொன்னால் உதைத்து விடுவேன் என்று சொன்னான்... அதனால் என்னால் அவன் சொல்லை மீற முடியாது என்ற காரணத்தால் என்னால் சொல்ல முடியவில்லை..வயதை ஊகித்து கொள்ளுங்கள்...ஸ்ரீராமுக்கு திருமணம் ஆகி ஒரு பெண்குந்தை இருக்கின்றது என்பதை இங்கே தெரியாதவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்...
==============
இந்தவார கடிதம்..


ஜாக்கி, வணக்கம் நண்பா.

மன்னிக்கணும்.

ஞாபகம் இருக்கும்ன்னு நெனைக்கறேன். ரொம்ப நாள் ஆச்சு நண்பா உங்க கிட்ட பேசி. கல்யாணத்துக்கு மெயில் அனுப்பினேன். நீங்க, என் அப்பா நம்பருக்கு போன் பண்ணிப் பேசினீங்க. அப்பறம் நான் ஊருக்கு வந்தப்பறம் உங்க கிட்ட பேசினேன். வாழ்த்துக்களை சொன்னீங்க. நான் அப்பறம் பேசறேன்-ன்னு சொன்னேன். ஆனா, இன்னிக்கு வரைக்கும் பேசலை. அதுக்கு தான் அந்த மன்னிப்பு.

சரி, மேட்டருக்கு வரேன். இன்னிக்கு காலைல ஆபீஸ் கெளம்பும்போது சட்டை அயர்ன் பண்ணிட்டு இருந்தேன். திடிர்னு ஒரு யோசனை. உங்களைப் பத்தி தான். எதுக்காக அந்த யோசனை வந்துச்சுன்னு யோசிச்சுட்டு இருந்தேன் / இருக்கேன்.

நீங்க இதை நம்பி தான் ஆகணும். என் மனசில உதிச்ச எண்ணம் இது தான். ஒரு படம், அதுக்கு ஒளிப்பதிவு ஜாக்கி, கதை/திரைக்கதை/டைரக்ஷன் கேபிள், புரோட்யுசர் - வாசகர்கள். கம்பெனிக்கு பேரு "டாட் காம் புரொடக்ஷன்ஸ்".

சினிமாத் துறையில் சாதிக்கணும்னு துடிக்கறீங்கன்னு தெரியும். உங்கள் வாசகர்கள் ஏன் உங்க படத்துக்கு புரோட்யுசர் ஆகா கூடாது? நீங்க ஏன், வாசகர்கள் கிட்ட ஒரு நிதி உதவி கேக்க கூடாது?

உங்களோட இன்னிக்கு பதிவு "மனிதாபிமானம் கிலோ என்னவிலை என்று கேட்கும் சென்னை" பாத்தா, முதல் வரியே, "ஒரு குறும்படம் எடுக்க  நினைத்துக்கொண்டு இருந்தேன்... ஆனால் அதுக்கு ஒரு புரோட்யூசர் தேவை  என்பதால் அந்த படம் கிடப்பில் கிடைக்கின்றது."... அதுக்கு முதல் பின்னூட்டம் கேபிள்... நிஜமாவே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஜாக்கி. மனதில் தோன்றிய எண்ணத்தை சொன்னேன் ஜாக்கி.

மேலே சொன்ன எண்ணம் திடிர்னு எதுக்கு வந்துச்சுன்னு எனக்கு இப்போ வரைக்கும் புரியல.

மனைவியும், உங்கள் குட்டி தேவதையும் நலமா ஜாக்கி?

--
என்றும் அன்புடன்,
V.S.Prasanna Varathan
==========
 நண்பரே உங்க கனவு எனக்கு மெய்சிலிர்க்க  வைக்கின்றது... எல்லோரும் நலமே.. மிக்க நன்றி  நண்பரே..
=======================
hello sir im kumaran,im in london.
i just want to tell some thing i like your each and every pages,
each and every day i expect ur pages .....

=============
மிக்க நன்றி  நண்பா தொடர்  வாசிப்புக்கு மிக்க நன்றி...
=========
இந்தவாரசலனபடம்..2

போனவாரம் பஸ்சில் இணையத்தில் இந்த குறும்படத்தை கொண்டாடினார்கள்.. திரும்ப திரும்ப  என் கண்ணில் பட்ட காரணத்தால் இதில் என்னதான் அப்படி இருக்கின்றது என்று பார்க்க ஆரம்பித்தேன்... மிக அருமையான உணர்பூர்வமான சின்ன நாட்... இசை மற்றும் காட்சிகள், இயல்பான நடிப்பு என்பதாய் இந்த படம் நெஞ்சில் நின்றது.. முக்கியமாக கடைசிகாட்சியில் ரேஸ் விட்டுக்குவோமா? என்று கேட்கும் போது நமக்கும் ஒரு உற்சாகம் வருகின்றதே அதுதான் இந்த படத்தின் வெற்றி.. குறும்பட குழுவினருக்கு என் வாழ்த்துகள்..


=================


பிலாசபி பாண்டி..

சாவு என்பது பெரிய இழப்பு அல்ல... உயிருடன் இருக்கும் நண்பர்கள் பிரிவதுதான் பெரிய இழப்பு... எல்லாத்தை விட உயிரோடு இருக்கும் போதே செத்து விட்டேன் என்ற புரளி கிளப்பி விடுவது  எந்த வகை என்று தெரியவில்லை..
===========
நான்வெஜ் 18+
ஜோக்..1

எதுக்கு  கல்யாண பொண்ணுக்கு அதிக மேக்கப் அழகா இருந்தாலும் அழகா இல்லாட்டாலும் போடறாங்க தெரியுமா?போடத்தானேன்னு ரொம்ப லோக்கலா என் லெவலுக்கு  நினைக்கதிங்க...பொருள் எப்படி இருந்தாலும் கிப்ட் பேக் அழகா இருக்கும் படி பார்த்துக்குவோம் இல்லை அது போலத்தான்..
=========
 திருச்சிமாநகரத்தை  இரவு மோகினி மெல்ல விழுங்க அரம்பிக்கும் போது மலைக்கோட்டையில் இருந்து எடுத்த படம்.... தூரத்தில் 5 மாத மாதகற்பினியாய் காவிரி...என்கிளிக்ஸ்..3


 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

 

=====================================

16 comments:

  1. நல்ல பதிவு நண்பரே ...சென்னை வாசி களுக்கு மட்டுமா எல்டேக் ..? நாங்க எங்க வாங்குறது ..? அப்புறம் ..திருச்சில முக்கொம்பு போனிங்களா..?

    ReplyDelete
  2. Jackie, the bike video was very nice...was like a grid lock....thanks for sharing....keep writing and i like the way you narrate in your own style (especially "ootha")

    ReplyDelete
  3. // தயாரிப்பாளர் சங்கத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கின்றார்கள்..எவ்வளவு பெரிய வன்மம் மனதில் இருந்து இருக்கும் என்பதை அவர்கள் தரும் பேட்டியில் காணமுடிகின்றது..//

    என்ன சொல்ல வர்றீங்க ஜாக்கி... சாக்ஸ் மேல எந்த தப்பும் இல்ல, சன் டி.வி. அராஜகம் பண்ணியிருக்க வாய்ப்பில்லைன்னா? அப்படின்னா, சாரி தலைவா.. உங்களின் புரிதல் கண்டிப்பாக தவறு... அவர்கள் ஆடிய ஆட்டம் அனைவருக்கும் தெரியும்... மிக பழைய மற்றும் மூத்த தயாரிப்பாளர், விநியோகஸ்தர், டைரக்டரான கேயார் கூட சன் டி.வி.யின் அராஜகங்களை பற்றி சொல்லி இருந்தார்...

    ReplyDelete
  4. இன்று பிறந்த நாள் காணும் பாஸ்டன் அதிமுக நகரகிளை செயலர், ரத்தத்தின் ரத்தம், ”அம்மா”வின் செல்லப்பிள்ளை..தோழர் பாஸ்டன் ஸ்ரீராமுக்கு என் மனமார்ந்த, இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்......

    கலக்குங்க ஸ்ரீ........

    ReplyDelete
  5. இல்லை கோவை நேரம் ......மூனு மாச குழந்தையை வச்சிகிட்டு எங்கயும் அலைய விருப்பம் இல்லை.. சாயந்திரம் மலைக்கொட்டைக்கு மட்டும் போனோம்.. நீங்க சொன்ன ஐஸ்கிரிம் கடைக்கு கூட போகலை...

    ReplyDelete
  6. கோபி.. சாக்ஸ் மேல சன் மேல எவ்வளவு பெரிய கோபம் இருந்து இருந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடி இருப்பார்கள் என்று சொல்லி இருக்கின்றேன்...

    சன் என்ன தப்பு எல்லாம் செய்து இருக்கின்றது என்பதை சினிமாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும்... நான் வக்காலத்து வாங்கவில்லை.. அதனால் 18 வருடடம் கோலாச்சிய நிறுவனம் தற்போது செய்திகளில் அடிபடுகின்றது என்று சொல்லி இருக்கின்றேன்..

    ReplyDelete
  7. நன்றி வெங்கட்

    நன்றி செ குமார்..

    ReplyDelete
  8. //சமச்சீர் கல்வியில் எப்போது ஒய்ஜி பார்த்தசாரதி வந்தாரோ அப்போதே அதன் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியும்.//

    இதைத்தான் பஸ்ஸுல சொன்னேன், அடிக்க வந்துட்டாக சிலர்

    ReplyDelete
  9. நீங்க வந்து இங்க கமெண்ட்ஸ் போட்டது ரொம்ப சந்தோசம் , ஆறு மாதம் கழித்தும் என்னுடைய கடிதத்திற்கு பதில் வந்தது மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. //இந்தி எதிர்ப்புக்கு பிறகு மாணவர்களின் எதிர்ப்பு என்பது பொது விஷயத்தில் தமிழகத்தில் நீர்த்து போய் விட்டது என்பதே நிதர்சன உண்மை.. காரணம் என்ன..???//

    இதையும் பாருங்கள் ..

    ReplyDelete
  11. பண்ணயாரும் பத்மினியும்............. சூப்பர் தலைவா......
    மேக்கப் மேட்டர்ல கொஞ்சம் A எதிர்பாத்துட்டன்... He He ........././.

    ReplyDelete
  12. //ஜாக்கி சேகர் said...
    கோபி.. சாக்ஸ் மேல சன் மேல எவ்வளவு பெரிய கோபம் இருந்து இருந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடி இருப்பார்கள் என்று சொல்லி இருக்கின்றேன்...//

    ********

    விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி ஜாக்கி... சாரி... என் புரிதலில் தான் தவறு...

    ReplyDelete
  13. "வடநாட்டுக்காரர்களுக்கு தமிழர்களென்றாலே பிடிக்காது"
    -இப்ப நீங்க என் முன்னால இருந்தா அப்பிடியே தூக்கிடுவேனுங்கோ.என்ன ஒரு புரிந்துணர்வு.இந்த புரிந்துணர்வு அவிங்களுக்கு இங்கயும் கட்டவுட் வைக்கிற "தன்மானத் தமிழர்களுக்கு" இல்லீங்களே..!

    ReplyDelete
  14. //முதலில் தமிழன் என்றாலே வடநாட்டுகாரர்களுக்கு சுத்தமாக பிடிக்காது//

    இப்படி பொத்தாம் பொதுவாக எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? இப்படி எப்பப் பார்த்தாலும் மற்ற இனத்தவரை பற்றி நினைத்தால் அப்புறம் யாருக்குதான் பிடிக்கும்?
    வடநாட்டுக்காரன், மலையாளி, சிங்களவன், மலேசியாகாரன், மகாராஷ்ராகாரன், கன்னடன்னு யாருக்குமே தமிழனை பிடிக்கமாட்டீங்குதுன்ன நம்ம கிட்டதானே ஏதோ தப்பிருக்குதுன்னு அர்த்தம்?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner