திருச்சி...பாகம்/2



பதிவர் சிங்கை கோவி தனது பதிவில் சீனாவில் மணிக்கு 300கீலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் பயணிகள் ரயிலில் ஏறி பயணித்த விஷயத்தை மிக சிலாகித்த எழுதி இருந்தார்....
எனக்கு அந்த ரயில் பயணம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்...

ராக் போர்ட் என்று பேர் மட்டும் வைக்க வேண்டும் என்று தென்னக ரயில்வேயை கேட்டுக்கொள்கின்றேன். எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்துக்கொண்டு அந்த ரயில் முக்கிய ரயில் நிலையங்களில் வரும் எல்லா ரயில்களுக்கும் வழி விட்டு முக்கி முக்கி 350 கிலோமீட்டர் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது...




ஆனால் ரயிலின் உள்ளே திருவையாரு தியாகராஜ ஆராதனைக்கு செல்வது போல ரயிலின் பல கம்பார்ட்மென்டுகளில் மாமிபாஷை சரளமாக ஓடிக்கொண்டு இருந்தது...புடவையில் வந்து ஒரு  பெண்மணி.. சட்டென முக்கா பேண்டும் லூஸ் டி சர்ட்டுமாக மாறிப்போனதை பார்த்து நான் அசந்து போய் விட்டேன்...

குழந்தைக்கு ரயிலில் தூளிகட்டி குழந்தையை துங்க வைத்தோம்.. பொதுவாக இரவு நேரபயணங்களில் நானும் என் மனைவியும் தூங்காமல் இரவு முழுவதும் பேசிக்கொண்டு வருவது எங்களுக்கு பிடித்த ஒன்று...

ரயிலில் பிஸ்டலுடன் ரயில்வே போலிசார் கம்பீரமாக நடந்து சென்றார்கள்..கையில் பெரிய டார்ச் லைட் வைத்து இருந்தார்கள்.. இவ்வளவு பெரிய லைட் எதுக்கு ??என்று குழம்பி போனேன்...ஒரு பத்து வருடங்களில் ரயில் பயணங்களில் இவ்வளவு கெடு பிடி எல்லாம் இல்லை..போராடித்தால் இரவு நேரத்தில் பெட்டியின் கதவு திறந்து படியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு வரலாம்.. ஆனால் இப்போது எல்லாம் டிக்கெட் செக் முடிந்த உடன் பெட்டியின் கதவை சாத்தி லாக் போட்டு விடுகின்றார்கள்...

ரயிலில் மணி  பதினொன்னரைக்கு எல்லாம் லாகர்தம்மாக எல்லோரும் படுத்து தூங்கி விட்டார்கள்.. ரயில் எக்ஸ்பிரஸ் என்ற பெயருக்கு ஏற்றது போல விழுப்புரம் வரை ஒழுங்காக சென்றது .. அதன் பிறகு கிராசிங் என்ற பெயரில் மூக்கால் மணி நேரம் மற்றும் அரை மணி  நேரத்துக்கு மேலாக பல ஸ்டேஷன்களில் நின்று சென்றது ஸ்டேஷனில் நிற்பது பிரச்சனை இல்லை.. 

நட்ட நடு வழியில் அரியலூர் அருகே முள்காடு அதிகம் இருக்கும் இடத்தில் நிற்க்க...இரயில்வே போலிசார் அந்த பெரிய டார்ச் லைட்டை  முள்காட்டினுள் அடித்து ஆள் நடமாட்டம் எதாவது இருக்கின்றதா? என்று பார்க்கின்றார்கள்  அப்போது மணி இரண்டரை இருக்கும்...

காலையில் ஆறரைமணிக்கு ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கத்து தேவைதைகளை  உதிர்த்து விட்டு திருச்சி ரயில்வே ஸ்டஷனில்  என்ஜின் கால் பதிக்கும் போது சரியாக எழு மணி... வழக்கம் போல டிரெயின் லேட் என்ற பேச்சுக்கள் காதில் விழுந்த வண்ணம் மக்கள் கலைந்து போனார்கள்..


திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு எதிரில்  இருக்கும் சவேனா ஓட்டலில் ரூம்...போன களைப்புக்கு குளித்து விட்டு ரூம் சர்விஸ் அழைத்து  சட்டை அயன் செய்து எடுத்து வரச்சொன்னேன்...சண்டே என்பதால் கடை ஏதும் இருக்காது என்று சொன்னார்கள்.. நான் எனது  சட்டையை எடுத்துக்கொண்டு திருச்சி மத்திய பேருந்து நிலைய வாசலுக்கு சென்றேன்.. ஒரு முதியவர்.. சட்டையை அயர்ன் செய்து கொண்டு இருந்தார்.. அவருக்கு ஒரு கை சூம்பி இருந்தது... தொழில் சுத்தமாக செய்தார்...மூன்று சட்டைக்கு பதினைந்து ரூபாய் கேட்டார்... நான் மூப்பது ரூபாய் கொடுத்தேன்.. தொழில் சுத்தத்திற்க்கும் சன்டே காலையில் கடை திறந்து வைத்து இருந்தமைக்கும் என்று சொன்னேன்....

எடமலைபுதூரில் பங்ஷன் முடிந்து குடும்பத்துடன் அறைக்கு வந்தேன்....

ஹலோ ஜாக்கியா
ஆமாங்க..
நான் நல்லதம்பி பேசேறேன்... இப்பதான் பிளாக் ஓப்பன் பண்ணா நீங்க திருச்சியில் இருக்கறதா படிச்சேன்... நீங்க தங்கி இருக்கும் ஓட்டல் வாசலில் நிக்கறேன் என்று அவர் சொன்னபோது...இந்த வலையின் வீரியத்தை உணர்ந்துகொண்டேன்... 

கீழே போய் அவரை சந்தித்தேன் பேசிக்கொண்டே பேருந்து நிலைத்துக்கு எதிரில் இருக்கும் காபி கடையில்  காப்பி சாப்பிட சென்றோம்.. திருச்சி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் சிஸ்டம் மேனேஜராக பணிபுரிகின்றார்...150க்கு மேற்பட்ட போக்குவரத்து சம்பந்த பட்ட கம்யூட்டர்களை கட்டி மேயக்கும்  வேலை.. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள்.. திருச்சி எடமலை புத்தூரில் வீடு...

காப்பி  சாப்பிட்டு விட்டு அறைக்கு அழைத்து சென்று மனைவி குழந்தையை அறிமுகப்படுத்தி வைத்தேன்.. யாழினியை கொஞ்சிக்கொண்டு இருந்தார்...எங்காவது வெளியே போகலாம் என்று துடித்துக்கொண்டு இருந்தார்... நான் உறவினருடன் வந்து இருப்பதால் என்னால் வரமுடியாது என்று சொன்னேன்... சாயந்திரம் போன் செய்கின்றேன் என்று சொன்னேன்..


திருச்சியில்பெரிய மாற்றங்களை எல்லா நான் காணவில்லை.. இரண்டு மூன்று மேம்பாலங்களை தவிர...மெகாமார்ட் போன்ற கடைகள் திருச்சிக்கு மாநகர பார்வைக்கு மாற்ற போராடிக்கொண்டு இருந்தன... நான் போன நேரமோ என்னவோ எங்கேயும் பெண்களை கானோம்.. ஒரு மாதிரி டிரையாக திருச்சி இருக்கின்றது...

இரவு வாசக நண்பர் நல்லதம்பி தனது மாருதி ஆம்னியை எடுத்து வந்தார்..அவரோடு வெளியில் கிளம்பினேன்... முதலில் தென்னூர் அருகில் இருக்கும் ஹந்தி பிரச்சார சபா எதிரில் இருக்கும் கிட்ஸ் கடைக்கு அழைத்துக்கொண்டு போய் யாழினிக்கு பொருட்களாக வாங்கி அடுக்க, நான் கோபித்துக்கொண்டேன்.. ஒரு சிப்பர் மற்றும் ஒரு டிரிஸ் மட்டும் எடுத்துக்கொண்டேன்... பெரிய கடை.. குழந்தைக்கு தேவையான அனைத்தும் யானைவிலை லேபிலோடு இருந்தன....

திருச்சியின் முக்கிய இடங்களை  காரில்  சுற்றி காண்பித்தார்.. அவர் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரில் இருக்கும் வேர் வேலை செய்யும்  அலுவலகத்தை காட்டினார்.. கருர் பைபாஸ் ரோட்டில் இருக்கும் பாரில் சிக்னேட்சர் விஸ்கியோடு இரவு உணவை முடித்து வரும் வழியில் சிப்பி தியேட்டரை பார்த்தேன் வெறுத்து விட்டேன்.. தள்ளுபடிவிலையில் புடவை கிடைக்கும் என்ற போர்டு மட்டும் இருந்தது....சிப்பி 70எம் எம் என்ற போட்டை கூட எடுக்காமல் வைத்து இருந்தது மனதை வலிக்க செய்தது..

நண்பர் நல்லதம்பி நிறைய பேசினார்...பிளாக் உலகம் பற்றி பல சந்தேகங்களை என்னிடம் கேட்டார்... வரும் போது அவரின் ஆம்னி வண்டியை நான் ஓட்டிக்கொண்டு வந்தேன்.. பாரில் சிக்கன் சிக்ஸ்ட்டி பை நன்றாக இருந்தது... பாரும் நன்றாகவே இருந்தது... பேர் நினைவில்லை...

தொடரும்....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

12 comments:

  1. I miss trichy. hope I will be going there by July 1 & 2. :-)

    ReplyDelete
  2. nadaiyin vekam munbaivida athikariththullathu... vaalththukkal. nalla anupava pathivu.

    ReplyDelete
  3. ரயிலில் பிஸ்கெட் யாரும் கொடுக்கவில்லையா ?

    :)

    ReplyDelete
  4. அய்யோ... சிப்பி தியேட்டருக்கு என்னாச்சு ???? வாழ்க்கை ல எனக்கு ரொம்ப மறக்க முடியாத இடம். நிறைய பார்த்திருக்கோம். எங்க ஊரை பற்றி நீங்க சொல்லி தெரிஞ்ச வேண்டிருக்கு. இப்பெல்லாம் வீட்டுக்கு போயிட்டு ..அப்படியே திரும்ப வந்துருவேன். உண்மையிலே மனசு வலிக்குதுண்ணே

    ReplyDelete
  5. please dont drink and drive. I hope u will understand and take this in the right spirit. Even if it is a small peg, its not corrct. We all do this mistake. But, we need to change this. please please

    ReplyDelete
  6. எங்க ஊரு பத்தி நல்ல எழுதி இருக்கீங்க.. நெறைய இடம் சுத்தி பாத்து இருக்கீங்கனு உங்க ஃபோடோஸ் சொல்லுது... அண்ணாமலை பாரா?

    ReplyDelete
  7. \\ஒரு முதியவர்.. சட்டையை அயர்ன் செய்து கொண்டு இருந்தார்.. அவருக்கு ஒரு கை சூம்பி இருந்தது... தொழில் சுத்தமாக செய்தார்...மூன்று சட்டைக்கு பதினைந்து ரூபாய் கேட்டார்... நான் மூப்பது ரூபாய் கொடுத்தேன்.. தொழில் சுத்தத்திற்க்கும் சன்டே காலையில் கடை திறந்து வைத்து இருந்தமைக்கும் என்று சொன்னேன்.\\\ GREAT SIR, I LIKE TO FOLLOW THESE HABIT FROM U

    ReplyDelete
  8. நல்லா இருக்கு திருச்சி அனுபவம்...
    நல்லதம்பி... நல்ல மனிதராக உயர்ந்து நிற்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அட நம்ம ஊரு..... "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா" எனக்கெல்லாம் திருச்சிதான் சொர்க்கம். நிறைய எழுதுங்க சார்

    ReplyDelete
  10. You dont have to publish my comment. But, what I want is ur resolve to not drino and drive. I am a regular reader of ur blog and often wondered ur points of view. As a well wisher and as a person who see the strict enforcement of law about this in Japan, I ask u do not drink and drive.

    Best wishes

    ReplyDelete
  11. அண்ணாமலை பார் K t தியேட்டர் எதிரில் உள்ளது .. ஜாக்கி சார் சொல்றது bridge ஏறி இறங்கியதும் உள்ளது .. கரெக்டா ஜக்கி சார்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner