வாழ்வில் படித்து முன்னேறி தொலைப்பதற்கு பல வகையில் ஒரு மாணவன் பல பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கின்றது...
இன்னும் கிராமப்புறமாணவர்களின் கதிகளையும் அவர்கள் படும் இன்னல்களை எந்த திரைப்படமும் பதிவு செய்தது இல்லை....இந்த படம் அது போலான ஒரு சமுக பிரச்சனையை பதிவு செய்கின்றது...]இன்னும் அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் படும் பாடு சொல்லி முடியாது... சமீபத்தில் சென்னை நந்தனத்தில் உள்ள தாழ்த்தபட்ட மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் சரியில்லை என்று போராடி சென்னை போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த்து நினைவுக்கு வருகின்றது..
அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தின் கதை என்ன??
குணா ஏழ்மை நிலையில் கல்வி கற்க்க விடுதியில் தங்கி படிக்க வெளியூரில் இருந்து தாமரைக்குளம்வரும் பிளஸ்டூ மாணவன்.. அதே வகுப்பில் படிக்கும் பணக்காரமாணவியோடு சினேகம்...விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை அந்த ஊரில் இருக்கும் நான்கு ரவுடிகள் தினமும் விடுதி அறையில் இருக்கும் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு, உள்ளே தண்ணி அடித்து வாந்தி எடுத்து விட்டு காலையில் போகும் ரகம்.. எதிர்த்து கேள்வி கேட்டால் உதைதான்.. வார்டன் என்ன செய்கின்றார் என்ற கேள்வி படிக்கும் உங்களுக்கு இயல்பாய் எழும்....
லோக்கல் பசங்களிடம் எதுக்கு வம்பு என்று அமைதிகாக்கின்றார்.. ஒரு நாள் அந்த விடுதியில் தங்கி படிக்கும் 90 மாணவர்களும் பொங்கி எழுகின்றார்கள்... லோக்கல் ரவுடிகள் சும்மா இருப்பார்களா? அந்த பிரச்சனையை எப்படி சமாளித்தார்கள் என்பது மீதி கதை...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
படத்தின் வார்டன் கேரக்டரில் நடித்து இருப்பவர் மற்றும் முக்கியபாத்திரத்தில் நடித்த பசங்கள் சிறப்பாகவே நடித்து இருக்கின்றார்கள்..ஒரு சில இடங்களில் அமச்சூர்தனம் எட்டி பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை..
கிராமபுற மாணவர்களின் விடுதி வாழ்க்கையை எந்த சினிமாத்தனமும் இல்லாமல் பதிந்து இருக்கின்றார்கள்.. அதற்கு திரைப்படக்குழுவுக்கு நன்றி தெரிவிக்கலாம்....
பட பிசினஸ் செய்ய ஒரு பாடலை சேர்த்து இருக்கின்றார்கள்... அந்த பாடலின் போது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
நிறைய இடங்களில் சொதப்பி சின்ன சின்ன இடங்களில் நெகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.
கிளைமாக்ஸ் விறு விறுப்பு படம் முழுக்க விரவி இருக்கவேண்டும்....
நண்பர் கேபிள் சங்கர் எக்ஸ்கியூட்டிவ் புரோட்யூசராக வேலை செய்த படம்.அவரின் அழைப்பின் பேரில் தேவிஸ்ரீதேவி தியேட்டரில் பிரிவ்யூக்கு போனேன்....
================
பைனல்கிக்....
அரும்பு மீசை குறும்பு பார்வை திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டு இருக்க வேண்டும்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
நன்றி.. ஜாக்கி..
ReplyDeleteகேபிள்.
welcome newfaces in tamilcinema!
ReplyDeleteஉங்களோட தளத்தை ஓப்பன் பண்ணின சிறிது நேரத்தில் Snapdeal.com விளம்பரம் ஓப்பன் ஆயிடுது.. அதை மூடுவதற்கான வழியும் இல்லை.. உங்கள் தளத்தை திறந்த உடன் பேஜ் லோடிங் ஸ்டாப் பண்ணிதான் படிச்சு இந்த கமெண்ட் போட்டேன்.. கொஞ்சம் என்னனு பாருங்க.
ReplyDelete