திருச்சி....பாகம்/3

( இரவு வீட்டுக்குள் போகும் சில நிமிடங்களுக்கு முன் உச்சிபிள்ளையார் கோவில்)



திருச்சி பாகம் இந்த பகுதியோடு நிறைவு செய்கின்றேனன்..


மறுநாள் நண்பர் நல்லதம்பி டிராவல்சில் சொல்லி... என் உறவுக்காரர்கள்  கோவில் குளம் சுற்ற, நல்ல ஆம்னி வண்டியை புக் செய்து கொடுத்தார்.. மதியம் தனது வீட்டில் விருந்துக்கு வர வேண்டும் என்றார்... ஆனால் குழந்தையை அழைத்துக்கொண்டு அதிகம் அலையவேண்டாம் என்பதால் நான் நண்பர் நல்லதம்பி வீட்டுக்கு செல்ல வில்லை.



(நண்பர் நல்லதம்பி)


சாயந்திரம் ஒரு  நான்கு மணிக்கு கிளம்பி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றோம்...ரொம்ப நாளைக்கு பிறகு உச்சிப்பிள்ளையார் கோலுக்கு நான் செல்கின்றேன்.. என் மனைவி குழந்தைக்கு இதுதான் முதல் முறை... வெயில் தாழ ஐந்து மணிக்கு மலை  உச்சியை அடைந்த  போது காற்று பிச்சிக்கொண்டு அடித்து... பிள்ளையாரை கும்பிட்டு  பிரகாரத்தை சுற்றினோம்...
(மேல் மலை அடுக்கில் பிள்ளையார்)

காதலர்கள் புதிதாக திருமணம் ஆனாவர்கள் என்று பிள்ளையாரை தரிசிக்க வந்து இருந்தார்கள்...திருச்சி பிகர் வறட்சியை இந்த இடம் போக்கியது எனலாம்...தூரத்தில் காவிரியும், ஆற்றுப்பாலமும், ஸ்ரீரங்கம் கோபுரமும் கம்பீரமாக காட்சி அளித்தன..

முன்னை விட நகரம் தன் பரப்பளவை பெருக்கிக்கொண்டு விட்டது ஏரியல் வியூவில் பார்க்கும் போது அது  நன்கு தெரிந்தது... முக்கியமாக பைபாஸ் சாலைகள் வரை, நகரம் பெரியதாக வளர்ந்து விட்டது,...ஆனால் நகரத்தில் அதுவும் கோவில் சுற்றி பல வீடுகள் இன்னும் பழமை மாறாமல் இருக்கின்றன...

(உச்சிபிள்ளையார் கோவிலில் இருக்கும் ஒரு கோபுரம்)



மேலே இருந்து பார்த்த போது திருச்சி சாராதாஸ் ஜவுளிகடையின் விளம்பரத்தை அவர்களின் கடையின் கூறை மேல் அழகாக பெயிண்ட் செய்து இருந்தார்கள்.. நல்ல ஜடியா......





கோவிலில் இருந்து இறங்கி சாரதாஸ் அருகே வந்து நிற்கின்றோம் என்று சொன்னதும் டிரைவர்  கார் எடுத்து வந்தார்.... நல்ல கூட்டம் அப்படியே குளக்கரை வழியாக ஒன்வேயில் வெளியே வந்து மெயின்ரோட்டில் வேகம் எடுத்தோம்...

(திருச்சி சாரதாஸ் வாசலில் )


மத்திய பேருந்து நிலையம் ரொம்ப சின்னதாக இருக்கின்றது.. அதுக்கு பக்கத்திலேயே ராணுவத்துக்கு சொந்தமான இடம் பெரிய அளவில் காலியாக  இருப்பதாகவும், அதனை கொடுங்கள் என்று மாநகராட்சி பல முறை பேருந்து நிலையத்தை விரிவு படுத்த,  இராணுவத்திடம் இடத்தை கேட்பதாகவும் ஆனால் ராணுவம் இதுவரை செவி சாய்க்கவில்லை என்று சொல்லி காரின் டிரைவர் வருத்தப்பட்டார்....



இப்போது திருச்சியில்  நல்லதியேட்டர் எது என்று கேட்டேன்.. சோனா மீனா என்று சொன்னார்...பல தியேட்டர்கள் இன்னும் தனது பழமையை தொலைக்காமல் இருக்கின்றன...



வெகு வருடங்களுக்கு பிறகு திருச்சி சாலையில்  மாட்டு வண்டியை பார்த்தேன்....



திருச்சியில் முன்பு பழைய காவிரி ஆற்றுபாலத்தில் எக்ஸ்னோரா நிறுவனம், அழகு அழகாக செடி வளர்த்து வைத்து இருப்பார்கள்.. அந்த பாலத்தில் உட்கார்ந்து நன்றாக காற்று வாங்கி, காவிரி ஒடும் அழகை பார்த்து இருக்கின்றேன்.. ஆனால் இப்போது அதில் காலையில் வாக்கிங்

மட்டும்  போகின்றார்களாம்... நண்பர் நல்லதம்பியோடு அங்கு போகவேண்டும் என்று நினைத்தேன்.. முடியவில்லை....

(நானும் நண்பர் நல்லதம்பியும்)



ஆனால் நிறைய பேர் புதுப்பாலத்தில் ஓரத்தில் நின்று காவிரி அழகை தற்போது ரசிக்கின்றார்கள் என்று சொன்னார்...



இங்கு எப்படி சரவணாஸ்டோர் பல கடைகளை வாங்கி ரங்கநாதன் தெரு மற்றும் திநகர் முழுவதும் கடை திறந்து கொண்டு இருக்கின்றதோ, அது போல திருச்சியில் திருச்சி சாரதாஸ் அந்த திருப்பணியை செய்து கொண்டு இருக்கின்றது...



எடமலைபுதூரில் ரயில்வே மேம்பாலம் கட்டும் காரணத்தால் மதுரை பேருந்துகள் அனைத்தும் பைபாசில் செல்வதால் எடமலைபுதூர்பகுதி வாசிகள் சிரமத்தை சந்திகின்றனர்...



திருச்சியில் பெண்கள் ஆட்சிதான்..அரசின் முக்கிய ஐந்து துறையின் உயர் பொறுப்பில் பெண்கள் இருக்கின்றார்கள்... மாநகர மேயர், கலெக்டர் என்று போகின்றது அந்த லிஸ்ட்...





திருச்சி மலைக்கோட்டை குளக்கரை பர்மாபஜார் கடையில் தமிழ் சிடிகள் எதையும் விற்க்கக் கூடாது என்று பெண் கலெக்டர்  வியாபாரிகளிடம் கண்டிப்பாக உத்தரவை போட்டு இருக்கின்றார்...அதனால் தமிழ் சீடி கிடைப்பதில்லை என்று நண்பர் ஒருவர் வருத்தப்பட்டார்...



ஆட்சி மாற்றத்தின் காரணமாக முன்னாள் அமைச்சர் நேருவின் உதவியாளர்களின் மேல்  கஞ்சா சட்டம் பாய்ந்து கொண்டு இருக்கின்றது...





திரும்ப ஓட்டல் சவேனாவுக்கு வந்தேன்... நண்பர் மதுரை முருகன் போன் செய்து மதுரை வந்துட்டு போலம் இல்லை என்று கோபித்துக்கொண்டார்... மலைக்கோட்டையில் வலையல் கடை வைத்து இருக்கும் ஒரு வாசக நண்பர் போன் செய்தார்.. வந்து சந்திக்கின்றேன் என்று சொன்னார்..  பட் அவரால் வர முடியவில்லை...



நான் தங்கி இருந்த சவேனா ஓட்டல் எதிரில் ஹலோ எப்எம்  அலுவலகம் இருந்தது....





இரவு ராக்போர்ட்டுக்கு குடும்பத்துடன்  வந்து சேர்ந்தோம்...



ஹலோ ஜாக்கி..



சொல்லுங்க..



நான் நல்லதம்பி பேசறேன்... எந்த கம்பார்ட்மென்ட்?



எஸ் எயிட் சொல்லுங்க நல்லதம்பி....



தொ வந்துட்டேன் என்று சொல்லிய போது நல்லதம்பி இரவு பத்து மணிக்கு எங்கள் குடும்பத்தை வழி அனுப்ப திருச்சி ரயில் நிலையம் வந்து இருந்தார்.. 

ஒரு அதிஷ்ட்ட மூங்கில் செடியும் அதை வைக்க ஒரு கண்ணாடி பவுலும் வாங்கி வந்து பரிசளித்தார்... இது எதுக்கு  என்றேன்...?? நேற்று யாழினி குழந்தைக்கு  அந்த பரிசு பொருள்... இது எனது அன்பு பரிசு என்றார்.. அது மட்டும் அல்லாமல் முந்திரி அல்வாவும், முந்திரி மிக்சரும் ரயிலில் கொரிக்க என் குடும்பதினரிடம் கொடுத்தார்...

( நண்பா நல்லதம்பி  நீங்கள் கொடுத்த அன்பு பரிசு.. தினமும் உங்கள் அன்பை இது ஞாபகபடுத்துகின்றது..)




மிக நீண்ட நேரம் என் நினைவில்  நல்லதம்பியோடு பேசியவை யோசித்து பார்த்தேன்... அவருக்கு என்ன நான் பெரிதாக செய்து விட்டேன். நேரம் ஒதுக்கி பிளாக் எழுதுவதை தவிர...திருச்சி எனும் போது நல்லதம்பியின் நினைவு வருவதை தவிர்க்க முடியாது...




(ரயிலில் இருந்து காவிரி ஆற்றுப்பாலத்தை எடுத்தேன்....)

ரயில் சென்னைக்கு வந்தது....தாம்பரத்தில் இருந்து  லோக்கல் டிரெயினில் நிறைய முறை பயணித்து இருக்கின்றேன்...ஊட்டியில் அடிக்கடி ஒன்னுக்கு வந்துகொண்டே இருக்குமே.. அது போல தாம்பரத்தில் இருந்து மாம்பலம் வருவதற்குள்  லோக்கல் ரயில் அடிக்கடி நின்று நின்று கிளம்பும்..ஆனால் எக்ஸ்பிரஸ் ரயிலில் விடியலில் லோக்கல் ஸ்டேஷன்களை துச்சமாக மதிக்காமல் மாம்பலம் வரை வந்த வேகம் சான்சே இல்லை...



மாம்பலம்  வந்து இறங்கி ஆட்டோகாரரிடம் ரேட் பேசினேன் என்  சொத்தில்  பாதியை கேட்டார்.. நான் குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு வந்து விடுவேன் என்று சொல்லி கெஞ்சி கூத்தாடி, கால் சொத்தை கொடுத்து ஆட்டோவில் பயணித்து வீடு வந்து  சேர்ந்தேன்..மக்களிடம் பயணிக்காமல் தனி விமானத்தில் பயணிக்கும் நமது முதல்வர் ஜெவுக்கு எங்களை போன்ற சாமனிய குடும்பஸ்தன் ஆட்டோ கட்டணகொள்ளையால் அழிவது எப்படி தெரிய போகின்றது..???

திருவாருரில் இருந்து சென்னையில் வந்து சொத்து குவித்த கலைஞருக்கு எப்படி தெரிய போகின்றது..

ஹலோ இப்ப எதுக்கு கலைஞரை இழுக்கறிங்க...?? தமிழ் இணையத்தை பொருத்தவரை கலைஞர் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவரை திட்டிக்கிட்டே இருந்தாதான்  நீங்க நடுநிலையாளர்... போதுமா??
 ========
திருச்சி பதிவை விரிவாக எழுத சொன்ன திட்டக்குடி கார்த்திக்கு நன்றி

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.





(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

14 comments:

  1. அருமை.....எல்லாமே

    ////தமிழ் இணையத்தை பொருத்தவரை கலைஞர் ஆட்வியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திட்டிக்கிட்டே இருந்தாதான் நீங்க நடுநிலையாளர்... போதுமா??///

    சரியான செருப்படி ..

    ReplyDelete
  2. நல்ல நட்பு.
    உங்கள் விவரிப்பு எங்களையும் திருச்சிக்கே கூட்டிச் சென்றது.

    'மனசு' சே.குமார்

    ReplyDelete
  3. ஜாக்கி அவர்களே,

    நானும் திருசியில்தான், எனது கல்லூரி வாழ்கையை தொடர்ந்தேன், நான் 2001 m aandil அங்கே எனது கல்லூரி padippai முடித்தேன். அதன் பிறகு எனக்கு அங்கே செல்வதற்கான ஒரு வாய்ப்பு கிட்ட வில்லை...............ஏன் என்றால் நான் இப்பொழு வெளிநாட்டில் உள்ளேன், இந்த இந்தியா வந்தால் தான் ஒரு முறை செல்ல வேண்டும் அதுவும் உங்கள் பதிவை பார்த்த பிறகு இன்னும் ஆவல் கூடுகின்றது......................நன்றி உங்கள் பதிவிற்கு................

    ReplyDelete
  4. பங்காளி...

    திருச்சியில் மைக்கெல்ஸ் ஐஸ்கிரீம் ரொம்ப பேமஸ் அடுத்த முறை அதை மிஸ் செய்யாதீங்க...

    ReplyDelete
  5. எல்லாமே அருமை. மூணே பதிவுல முடிச்சுபுட்டீங்களே

    ReplyDelete
  6. //சங்கவி said...

    பங்காளி...

    திருச்சியில் மைக்கெல்ஸ் ஐஸ்கிரீம் ரொம்ப பேமஸ் அடுத்த முறை அதை மிஸ் செய்யாதீங்க...//

    ஆமாம் மறந்துடாதீங்க.

    ReplyDelete
  7. திருச்சி பக்கத்திலிருக்கும் முக்கொம்பு சென்றீர்களா.? மாலை நேரத்தில்

    மாலை நேரத்தில் சத்திரம்(மெயின்கார்ட் கேட்) பேருந்து நிலையம் வணணமயாய் இருக்கும்.கவனித்தீர்களா.?

    ReplyDelete
  8. உங்களுக்கு மட்டும் எப்படி தான் இந்த மாதிரி ஆளுங்க மாட்றாங்க ?? நல்ல தம்பி ஏன் அவ்வளவு விறப்பா இருக்காரு?? அவரை கொஞ்சம் சிரிக்க சொல்லி படம் எடுத்து இருக்கலாம்ல ..

    பதிவு நன்றாக இருந்தது :-)

    ReplyDelete
  9. அன்பின் ஜாக்..கி ...
    என்வென்று சொல்ல..திருச்சியை பற்றிய..தங்களது பார்வையை..

    "புடவையில் வந்து ஒரு பெண்மணி.. சட்டென முக்கா பேண்டும் லூஸ் டி சர்ட்டுமாக மாறிப்போனதை பார்த்து நான் அசந்து போய் விட்டேன்..." - இது வேறு யாருக்கும் தெரியாத ஒன்று, உங்களால் மட்டுமே. காண முடியும்.. காரணம் ராஜா பார்வை. (கண்ணு தெரியும்)...

    "வழக்கம் போல டிரெயின் லேட் என்ற பேச்சுக்கள் காதில் விழுந்த வண்ணம் மக்கள் கலைந்து போனார்கள்.." - உண்மை..

    "ஆமாங்க..நான் நல்லதம்பி பேசேறேன்... இப்பதான் பிளாக் ஓப்பன் பண்ணா நீங்க திருச்சியில் இருக்கறதா படிச்சேன்... நீங்க தங்கி இருக்கும் ஓட்டல் வாசலில் நிக்கறேன் என்று அவர் சொன்னபோது...இந்த வலையின் வீரியத்தை உணர்ந்துகொண்டேன்... " - இது வலையின் வீரியம் அல்ல.. உங்கள் எழுத்துக்களின் வீரியம்..

    "நான் போன நேரமோ என்னவோ எங்கேயும் பெண்களை கானோம்.. ஒரு மாதிரி டிரையாக திருச்சி இருக்கின்றது..." - இல்லை இல்லை..உங்களுக்கு தெரியும்.

    "மிக நீண்ட நேரம் என் நினைவில் நல்லதம்பியோடு பேசியவை யோசித்து பார்த்தேன்... அவருக்கு என்ன நான் பெரிதாக செய்து விட்டேன். நேரம் ஒதுக்கி பிளாக் எழுதுவதை தவிர...திருச்சி எனும் போது நல்லதம்பியின் நினைவு வருவதை தவிர்க்க முடியாது..." - நன்றி என்னை போன்ற.. நிறைய நண்பர்கள் உங்கள் வசம்..


    அருண்மொழித்தேவன் said...

    "உங்களுக்கு மட்டும் எப்படி தான் இந்த மாதிரி ஆளுங்க மாட்றாங்க ?? நல்ல தம்பி ஏன் அவ்வளவு விறப்பா இருக்காரு?? அவரை கொஞ்சம் சிரிக்க சொல்லி படம் எடுத்து இருக்கலாம்ல .."
    பதிவு நன்றாக இருந்தது :-) - கூட ஏட்டையா (ஜாக்) இருந்ததனால்..



    எனக்கு இன்னொரு ஆச்சர்யம்..எப்படி.. இவ்ளோ விசயங்கள் எழுதுவதற்கு..உங்களுக்கு மட்டும் கிடைத்தது.. உலகத்தில் எல்லா SLR கேமரா களும் waste.. காரணம் அதை உங்கள் கண்கள் செய்வதனால்....

    மொத்தத்தில் அத்தனையும் அருமை..

    உங்களை பார்த்ததும் என்னை கில்லி பார்த்து பரவசமானது.. உண்மை..

    உன் பார்வையில் நான் காண்கிறேன்.. உலகத்தை..

    நன்றி என்று சொல்லி நான் நகர்ந்து கொள்ள விரும்பவில்லை.. தொடரட்டும் நம் நட்பு..

    ரா.நல்லதம்பி.

    ReplyDelete
  10. எத்தனை தடவை சென்றாலும் அலுக்காத இடம் திருச்சி.
    உச்சி பிள்ளையார், சிறீரங்கம், திருவானைக்கா கண்முன்னே விரிகின்றன.....

    ReplyDelete
  11. மாம்பலம் வந்து இறங்கி ஆட்டோகாரரிடம் ரேட் பேசினேன் என் சொத்தில் பாதியை கேட்டார்.. நான் குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு வந்து விடுவேன் என்று சொல்லி கெஞ்சி கூத்தாடி, கால் சொத்தை கொடுத்து ஆட்டோவில் பயணித்து வீடு வந்து சேர்ந்தேன்..மக்களிடம் பயணிக்காமல் தனி விமானத்தில் பயணிக்கும் நமது முதல்வர் ஜெவுக்கு எங்களை போன்ற சாமனிய குடும்பஸ்தன் ஆட்டோ கட்டணகொள்ளையால் அழிவது எப்படி தெரிய போகின்றது..???/////

    naan trichy la irunthu chennai la train vantha po 140rs achu...anga iruka autokaran kitta saidapet ku ponum evalonu keytane 140rs kodunga sonnaan...apdiye thirumbi trichy ke poitane...

    your lovingly,
    gonzalez
    http://funny-indian-pics.blogspot.com/

    ReplyDelete
  12. அன்புள்ள சகோதர்/சகோதரி,

    மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

    பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

    தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

    நன்றி.

    அன்புடன்,
    அதிரைக்காரன்
    adiraiwala@gmail.com

    ReplyDelete
  13. ஜாக்கி சார்,
    ஆட்டோ காரர்களுக்கு எல்லா ஆட்சியிலும் ஒரே பதில் .....
    பெட்ரோல் விலை ஏறி போச்சு....
    தமிழ் நாட்ல தான் இவ்வளவு மோசம்...சார்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner