The Counterfeiters-2007/உலகசினிமா/ ஆஸ்திரியா/நாஜிக்களின் யூத கேம்பில் இருந்த குற்றவாளியின் கதை...



நேற்று 14/07/2011 அன்று தமிழ் நாட்டின் தமிழ் தினசரிகளில் ஒரு செய்தி, சின்ன பெட்டி செய்தியாக வெளியானது.. அது பலரது கவனத்தை கவர மறுத்து இருக்கலாம்..
அந்த செய்தி தமிழ்நாட்டுக்கு  ஒன்றும் பெரிய முக்கியத்துவமான செய்தியும் அல்ல...அது நம்ம நாட்டுக்கு சிறுதும் சம்பந்தமான செய்தியும் அல்ல..



கொய்யால அப்படி என்னய்யா செய்தி அது...?? சொல்லித்தொலைய்யா ஜாக்கி என்று கத்துகின்றீர்களா?



இதோ அந்த செய்தி கீழே....




லண்டன் ஜுலை 14, ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லர் வெளியிட்ட போலி இங்கிலாந்து கரன்சிகள்  அடுத்த மாதம் ஏலம் விடப்படுகின்றன...


ஜெர்மனியின் நாசி படைக்கு தலைமை ஏற்றிருந்த ஹிட்லர் இரண்டாம் உலக போரின் போது இங்கிலாந்தின் நிதி நிலையை சீர்குலைக்க திட்டமிட்டார்.. அங்கு பணவீக்கம் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்த இங்கிலாந்தின் 5,10,20,50 பவுண்டு கரன்சிகளை போலியாக அச்சடித்தார்.. இந்திய ரூபாய் மதிப்பில் 910 கோடிக்கு பவுன்டு கரன்சிகளை இங்கிலாந்தில் புழக்கத்தில் விட தனது படையினருக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். ஆனால் அந்த சதிதிட்டத்தை இங்கிலாந்து முறியடித்தது... அப்படி போலியான அந்த கரன்சிகளைதான் இப்போது ஆஸ்திரியாவில் ஏலத்தில் விட போகின்றார்கள்...



யோவ் ஜாக்கி.. இந்த செய்திக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்...இப்படி ஒரு விஷயம் அந்த ஆளு ஹிட்லர் செஞ்சான்ற விஷயமே எனக்கு இந்த நீயூஸ் படிச்சப்புறம்தான் தெரியும்... அதெல்லாம் விடுங்க..  நித்யா, ரஞ்சிதா வீடியோ உண்மையா பொய்யா?? அதை முதலில் சொல்லுங்க....



போடாங்......................



அந்த அரை நுற்றாண்டை கடந்த செய்திக்கு பின் பல பேரின் வலி நிறைந்த வாழ்க்கை இருக்கின்றது...பல சோகங்கள் இருக்கின்றது...யூதர்களின் இரவு பகலான உழைப்பு இருக்கின்றது...



நாளை உயிரோடு இருப்போமா? என்ற தினம் தினம் செத்து பிழைத்து வேலை செய்த நாட்கள்... என்று பலருடைய உயிர் போராட்டம் அந்த செய்தியில் புதைந்து இருக்கின்றது...

================



 The Counterfeiters-2007/உலகசினிமா/ ஆஸ்திரியா... படத்தின் கதை என்ன??



"Sorowitsch" (Salomon Smolianoff) ஒரு யூத போர்ஜரி ஆள்...  கள்ள நோட்டு அடிக்கறது மற்றும் போலி பாஸ்ப்போர்ட் ரெடி செய்யறதுதான் இவனோட பிரதான தொழில்.. இவனை ஜெர்மனியின் பெர்லின் போலிஸ் கைது செய்கின்றார்கள்..இரண்டாம் உலகபோர் சமயம் என்பதால் ஹிட்லருக்கு யூதர்கள் என்றால் எட்டிக்காய் கசப்பு... அவர்களை அழித்து விட்டுதான் மறுவேலை என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருந்த காரணத்தால் சாலமனை யூத கேம்பில் வைத்து இருக்கின்றார்கள்... எந்த நேரத்திலும் உயிர் எடுக்கப்படலாம் என்ற அடிமையான அகதி  சிறை வாழ்க்கை...


பல சோதனைகளை துயரங்களை கடந்து நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கும் வேளையில் சாலமன் மற்றும் ஒரு சிலரை மட்டும் வேறு யூத கேம்புக்கு மாற்றுகின்றார்கள்...இதோ உயிரை எடுக்க அழைத்து போகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் திறமைக்கு தகுந்தது போல ஒரு வேலை கொடுக்கின்றார்கள்...அது என்னவேலை...??

இதுக்கு முன்னாடி போர்ஜரி செய்து கொண்டு இருந்து சாலமனை போல கள்ள நோட்டு அடிக்கும் கிரிமினல்களை ஒன்றாக சேர்த்து இங்கிலாந்து பவுன்டு போல நோட் அடிக்க ஹிட்லரின் நாஜிபடையின் தலைமை வற்புறுத்துகின்றது...உயிர் பிழைக்க எதாவது செய்ய வேண்டும் அல்லவா? இங்கிலாந்து பவுன்டுகளை ரெடி செய்ய அச்சு மற்றும் காகிதம் ரெடி செய்கின்றார்கள்... 


அதில் நம் சாலமனின் பங்கு என்ன?? கள்ளநோட்டு தயாரித்து இங்கிலாந்து பொருளாதாரத்தை வீழ்த்தி இவர்களை பயண்படுத்தி முடிந்ததும் எப்படியும் கொன்றுவிடுவார்கள்.. மரணத்தை எதிர்நோக்கி நாட்களின் எண்ணிக்கையை எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் என்னவானார்கள் என்பதை வெண்திரையில் பாருங்கள்..



=============

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..



இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்..



நாஜி கேம்பில் சிக்கிய கள்ள நோட்டு, தொழில் சுத்தமாய் அடிக்கும் யூத குற்றவாளியான "Sorowitsch" (Salomon Smolianoff) என்பவரின் உண்மை சுயசரிதம்தான் இந்தக்கதை....



ராஜ வாழ்க்கை  வாழும் ஒருவனை காட்டி விட்டு அவன் பிளாஷ் பேக்கில் அவன் எப்படியெல்லாம் நாஜி ராணுவத்தால் அவன் வதைக்கபட்டான் என்று காட்டும் போதும்.. அந்த டிபரன்ட் லைப் விரிவாய் மனதில் இயக்குனர் பதிய வைக்கும் போது இந்த படம் நம் நெஞ்சில் சிம்மாசனம்  போட்டு உட்கார்ந்துக்கொள்கின்றது..



கொட்டடி வாழ்க்கையை பார்க்கும் போது ஒரு இனம் எப்படி எல்லாம் துன்புறுத்தபட்டு இருக்கின்றது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது....ஆனால் இன்று யூத இனம் தலைநிமிர்ந்து நிற்கிக்கின்றது...ஈழ தமிழர்கள்... அப்படி இல்லை.. காரணம் ஒற்றுமையின்மை...



அரைநுற்றாண்டுக்கு பிறகு யூதர்கள் வலி சொல்லும் படங்கள் வருவது போல... முள்ளிவாய்கால்  சோகங்கள் சொல்ல இன்னும் 20 வருடங்களுக்கு மேல் ஆகலாம்...



இன்னும் ஒரு வாரத்தில் இங்கிலாந்து பவுன்டு ரெடி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டும் காட்சிகள் அதற்கு யூதர்கள் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்யும் காட்சிகள்..மனதில் விட்டு நீங்காது...



காகிதத்தில் பிரச்சனை என்பதை கண்டு பிடிக்கும் இடம் சுவாரஸ்யமான இடம்...



பாத்ரூமில் கழுவிக்கொண்டு இருக்கும் போது அகம்பாவம் பிடித்த நாஜி வீரன் சாலமன் தலையில் அப்படியே ஒன்னுக்கு அடிக்கும் போது நம்முள் ஒரு வெறி வரும் பாருங்கள்.. அதுதான் அந்த காட்சியின் வெற்றி...



சாலமன் தனக்கு என்ன தேவை என்பதை விட, தன் திறமையால் ஒரு ஒரு நாளும் தன் குழுவினரை உயிரோடு காப்பாற்றும் காட்சிகள் நெஞ்சை விட்டு அகலாது...



தன் குழுவில் டிபி இருக்கும் ஒருவனுக்காக சாலமன் எடுக்கும் முயற்சிகள் திருடனாக இருந்தாலும் அவனது நல்ல எண்ணத்தை பறைசாற்றும் காட்சிகள்.. 


வார் முடிந்த பின் எல்லோரும் நடைபிணமாக நடந்து வரும் போது  நண்பனது பிணத்தை வைத்துக்கொண்டு  இந்த உடலை என்ன செய்வதுஎன்று கேட்டு விட்டு விழிக்கும் காட்சி அற்புதம்...



இந்த படத்தில் அந்த அகம்பாவம் பிடித்த ராணுவவீரன் என்னவானான் என்று காட்டாமல் விட்டது ஒரு குறைதான்..



"Sorowitsch" (Salomon Smolianoff) இரண்டாம் உலக போருக்கு பிறகு 1976 ஆம் ஆண்டு பிரேசிலில் இறந்தார்....

 படத்தில் வலது பக்கம் இரண்டாவதாக வெள்ளை சட்டை அணிந்து இருப்பவர்தான்... "Sorowitsch" (Salomon Smolianoff) இவருடைய நாஜிகளின் கன்சன்ட்ரேஷன் கேம்பில் இருந்த அனுபவங்கள்தான் இந்த படம்....இவருடைய பாத்திரத்துக்கு பொருத்தமான ஆளாக Karl Markovics என்ற ஆஸ்திரிய நடிகரை நடிக்க  வைத்து இருக்கின்றார்கள்..

இயக்குனர்   Stefan Ruzowitzky உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்... அந்த டீமுக்கும் சேர்த்துதான்.. அதனால்தான் இந்த படம் சிறந்த வெளிநாட்டுபடத்துக்கான ஆஸ்கார் விருதை 2007ல் பெற்றது...


===============



இந்தபடம் பெற்ற விருதுகள்..





    Academy Awards 2007 (24 February 2008)

        Won Best Foreign Language Film; Austria[4]



    Berlin International Film Festival, 2007

        Nominated for Golden Bear award: Stefan Ruzowitzky



    German Film Awards, 2007

        Won Best Performance by an Actor in a Supporting Role: Devid Striesow

        Nominated for Best Cinematography: Benedict Neuenfels

        Nominated for Best Costume Design: Nicole Fischnaller

        Nominated for Best Performance by an Actor in a Leading Role: Karl Markovics

        Nominated for Best Production Design: Isidor Wimmer

        Nominated for Best Screenplay: Stefan Ruzowitzky

        Nominated for Outstanding Feature Film: Nina Bohlmann, Babette Schröder, Josef Aichholzer



=================



Directed by     Stefan Ruzowitzky

Produced by    Josef Aichholzer

Nina Bohlmann

Babette Schröder

Written by       Stefan Ruzowitzky

Adolf Burger (book)

Starring           Karl Markovics

August Diehl

Devid Striesow

Music by         Marius Ruhland

Cinematography          Benedict Neuenfels

Editing by       Britta Nahler

Distributed by             Universum Film AG

Sony Pictures Classics (English subtitles)

Release date(s)            22 March 2007 (Germany)

March 23, 2007 (Austria)

Running time 98 minutes

Country           Austria

Germany

Language        German

Budget            4.2 million

====================

படத்தின் டிரைலர்....





 =================
 பைனல் கிக்..


இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்... அரை நுற்றாண்டுக்கு முன் யூதக் குற்றவாளி ஒருவனின் வாழ்வில் நடந்த சோகமான காலக்கட்டத்தின் பக்கத்தை புரட்டி பார்க்கும் ஒரு படம்... நிச்சயம் இந்த படத்தை பாத்தே தீரவேண்டும்... காரணம் நாம் எவ்வளவு ஆசிர்வாதிக்கபட்டு இருக்கின்றோம் என்று நமக்கு தெரிய வேண்டும் அல்லவா?? அதுக்காகதான்..


================
இந்த படம் மூவிஸ் நவ் ..டிவிடி கடையில் கிடைக்கின்றது...அலிபாய். செல்..9003184500
=============
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...


3 comments:

  1. Hi Jackie Sekar

    Good review, when you have a time watch Jakob the Liar - Robin Williams movie

    One of the best.

    Thank you

    Hari Rajagopalan

    ReplyDelete
  2. //அரைநுற்றாண்டுக்கு பிறகு யூதர்கள் வலி சொல்லும் படங்கள் வருவது போல... முள்ளிவாய்கால் சோகங்கள் சொல்ல இன்னும் 20 வருடங்களுக்கு மேல் ஆகலாம்.. //

    இது மனதில் நிற்கும் வரிகள்... அருமை ஜாக்கி சார்...

    ReplyDelete
  3. மதிப்புள்ள ஜாக்கி அவர்களே,

    நீங்கள் படத்திற்கு விமர்சனம் எழுதுகிறீர்கள், உங்கள் விமர்சனங்களை படித்து நான் நிறைய படங்களை பார்த்துள்ளேன், ஆனால் இந்த பதிவில் நீங்கள் கூறியது போன்று யூதர்களின் இனம் அழிக்கப்பட்டது என்பது உண்மைதான், உலகில் எந்த மனித இனம் அழிக்கபட்டலும் நாம் வெட்கி தலை குனிய வேண்டும்தான், ஆனால் இன்று அவர்கள் எழுச்சி பெற்று விட்டார்கள் என்பதும் உண்மைதான், ஆனால் அவர்களின் இந்த எழுச்சியிலும் ஒரு இனம் அழிக்கப்பட்டுள்ளது, அழிக்கபடுகின்றனர். அது உங்களுக்கு தெரியும் என்று நினைகிறேன், அது வேற எந்த இனமும் இல்லை, பலஸ்தீனில் உள்ள இஸ்லாமியர்கள்தான், இதை பற்றி மேலும் விபரங்கள் அறிய occupation 101 என்கின்ற டாகுமெண்டரி முடிந்தால் பாருங்கள். உங்களுக்கு புரியும். இது மட்டுமில்லை இன்னும் எரலாமனவைகள் உண்டு தெரிந்தால் பதிவிடுங்கள்................படிக்கிறேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner