கர்மவீரர் காமராஜர் அவர்களே, நீங்கள் இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு...

 
இன்றைய பிள்ளைகள் பள்ளிக்கு போவதையும், அவர்கள் பள்ளிக்கு கிளம்புவதையும் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கின்றது...
அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில் இவைகளை பார்க்கும் போது நான்  என் இளமைகாலங்களில் இழந்து போனவை ஏராளம் என்பது உண்மை...



பிள்ளை பள்ளிக்கு கிளம்பும போது சிப்பர் என்று ஒரு சமாச்சாத்தில் தண்ணீர் நிரப்பி கொடுக்கின்றார்கள்..சாப்பாடுக்கு தனி டப்பர் வேர்...காஸ்ட்லியான புத்தகப்பை... ஆனால்  நான் பள்ளிக்கு போன அந்த நாளை நினைத்துப்பார்க்கின்றேன்.



ஒரு ஜோல்னா பை.. அதில் ஒரு சிலேட்டு, ஒரு அட்டை, ஒரு 1431 பயோரியா  பல்ப்பொடி டப்பாவில் சில பலப்பங்கள்.. எதை மறந்தாலும் மறக்காமல் அனிச்சைசெயலாய் மதிய உணவுக்கு நெளிந்து போன ஒரு எவர்சில்வர் தட்டு இப்படித்தான் பள்ளிக்கு நான் போய் இருக்கின்றேன்..

மதிய உணவை பள்ளியில்தான் சாப்பிட்டு இருக்கின்றோம்...

இப்போது போல் அப்பபோது எல்லாம் பள்ளிகளில் சமைத்து போட மாட்டார்கள்... பள்ளியில் சத்துணவு சமையல் கூடம் என்று ஒரு சாமாச்சாரம் என்பது அப்போது இல்லை...



ஒரு மஞ்சள் கலர் மேட்டேடர் வேன் ஒன்று வரும் அதில் கருப்பு கலர் டிரம்மில் தான்  சாப்பாடு வரும்.. அந்த மஞ்சள்வேன் ஒரு நாளும் சரியான நேரத்துக்கு வந்தது இல்லை... அதில் கோதுமை உப்புமா பிரதானமாக இருக்கும்.... சில நேரங்களில் அந்த  உப்புமா வாயில் வைக்க முடியாது...



கடலூரில் அக்கிள் நாயிடு தெருவும் போடிசெட்டி தெருவும் இணையும் முக்கில் நான் படித்த ராமகிருஷ்ணா உதவிபெறும்நடுநிலைப்பள்ளி இன்றும் தன் முகம் மாற்றிக்கொண்டு இருக்கின்றது...



அந்த வேன்  போடிசெட்டிதெருவில் இருந்துதான் வரும்... ஒரு சில நேரங்களில், அந்த வேன் மதியம் இரண்டு பிரியட் கழித்து கூட வரும்...மதிய சாப்பாட்டை  மதியம் மூன்று மணிக்கு மேல் சாப்பிட்டு இருக்கின்றோம்...



மதிய உணவு சாப்பிடும் பிள்ளைகளுக்கு இப்போதுதான் வேன் வந்து இருக்கின்றது  அதனால் போய் சாப்பிட்டு விட்டு வரவும் என்று  ஆசிரியர் சொல்லும் போது.. எல்லா பிள்ளைகளும் பாடம் படிக்கும் போது, மதிய உணவு சாப்பிடும் நாங்கள் ஜொல்னா பையில் இருந்து அந்த நெளிந்து போன எவர்சில்வர் தட்டை எடுத்து செல்வோம்... முக்கியமாக நான் படித்தது  எட்டாம் வகுப்புவரை கோ எஜிகேஷன் பள்ளி... பெண் பிள்ளைகள் எதிரில் தட்டு எடுத்து சாப்பிட போகும் போது வெட்கம் எங்களை பிடுங்கி தின்னும்......



சில நேரங்களில் பயங்கரமாக பசிக்கும்...எட்டாவது படிக்கும் பெரிய பசங்கள் அந்த மஞ்சள் மெட்டேடர் வேன் வருகைக்கு அந்த ரோட்டின் வளைவையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள்..எங்களுக்கு அந்த மஞசள்வேன்தான் சாப்பாடு போடும் அமுதசுரபி....



சில நேரங்களில்  கோதுமை உப்புமாவுக்கு பதில் சாம்பார் சாதம் வரும் அது மஞ்சளாக இருப்பதால் அது சம்பார் சாதம்,.. சில நேரங்களில் அந்த சாப்பாட்டில் புழு இருக்கும்.. அதுக்காக  சாப்பாட்டை அப்படியே வைத்து விட மாட்டோம்.... புழு இருக்கும் பகுதியை மட்டும் எடுத்து போட்டு விட்டு மிச்சத்தை சாப்பிடுவோம்...




அந்த மதிய சாப்பாடு வந்த கருப்பு டிரைம்மை சாப்பாடு போட்டு முடிந்தவுடன்  அதனை கழுவி வைக்க வேண்டும்... அதை கழுவ மாணவர்களிடம் ஒரு பெரிய போட்டியே நடக்கும்.. காரணம் அதில் ஒட்டி இருக்கும் உணவை கழுவும் முன் எடுத்து  சாப்பிடலாம் அல்லவா??? அதில் அரை பிளேட் அளவுக்கு உணவு இருக்கும்...



சில நேரங்களில் சாப்பாடு மிக குறைவாக வரும்... ஒரு கரண்டிக்கு மேல் சாப்பாடு கிடைக்காது... பாதி வயிற்றோடு வகுப்புக்கு போய் விடுவோம்.....மதியம் மூன்று மணிக்கு எல்லாம் பசி வயிற்றை பிடுங்கும்..

இன்று பல்வேறு நிலைகளை கடந்து மதியஉணவு நல்ல உணவாக கிடைக்கின்றது..எம்ஜிஆர்  அந்த திட்டத்தை விரிவு படுத்தினார்.. பள்ளிகளிலேயே சமையல் கூடங்கள் கட்டி அதிலேயே உணவை தயாரித்தார்கள்...மிக முக்கியமாக சாப்பாடு தனியாக மற்றும் சாம்பார் தனியாக ஊற்ற ஆரம்பித்தார்கள்.. அப்புறம் கலைஞர் ஆட்சியில் முட்டை ,வாழைப்பழம் என்று அந்த திட்டம் விரிவுபடுத்தபட்டது...



இன்று வசந் டிவியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் படத்தை திரையிட்டார்கள்... காமராஜர் மதிய உணவை  எப்படி பள்ளிகளுக்கு அந்த திட்டத்தை எடுத்து வந்தார் என்று சில காட்சிகளை காட்டும போது என்னையறியாமல் என்  கண்கள் கலங்கி நெகிழ்ந்து போனேன்....

யாரோ ஒரு சிவகாமி என்ற புண்ணியவதி பெற்றெடுத்த காமராஜர் என்ற சுயநலமற்ற,  நல்ல எண்ணம் கொண்ட ஒரு தமிழக முதல்வர் எடுத்த சீரிய முயற்சியில் எங்களை போன்ற ஏழை பிள்ளைகள்  படிக்க காரணமாய் இருந்த காமராஜர் ஜயாவே உங்களுக்கு ஏழேழு ஜென்மத்துக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...



சிலவேளைகளில் அளவுக்கு அதிகமாய் ஓட்டலில் உணவுகளை ஆர்டர்  செய்து விட்டால் கூச்சம் எல்லாம் படாமல் மிச்ச உணவை பார்சல் செய்ய சொல்லி, அந்த உணவை தெருவில் பசியோடு இருக்கும் யாராவது ஒரு வழிப்போக்கனுக்கோ,அல்லது யாராவது முதியவருக்கோ கொடுத்து விட்டு செல்லுவேன்.... காரணம் மதிய உணவை வரிசையில் நின்று வாங்கி பசியை போக்கிய அந்த வலி நிறைந்த வாழ்வை ஒரு போதும் மறக்க முடியாது...





காமராஜருக்கு போன தலைமுறை மட்டும் அல்ல இன்றைய  தலைமுறையும் கடமைபட்டு உள்ளது...

காமராஜர் ஜயா நீங்கள் எங்கும் நிறைந்து இருக்கும் எத்திசைக்கும் ஒரு கும்பிடு...


=======
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...


25 comments:

  1. தல, யாரோ ஒரு புண்ணியவதி இல்லை, அந்த தாயின் பெயர் சிவகாமி. நெல்லை கண்ணன் அவர்களின் காமராஜர் பற்றிய ஓர் பேச்சு இருக்கிறது, கேட்டு பாருங்கள், கண்ணில் நீர் வழியும்.

    ReplyDelete
  2. எல்லாம் நல்லாருக்கு தலைப்பைத் தவிர,
    நீ வச்சிருக்கும் தலைப்புக்கு அர்த்தம் என்ன தெரியுமா?
    காமராஜரே இனி உங்களை சந்திக்கவே மாட்டேன் என்று சொல்லத்தான் உங்க திசைக்கே ஒரு கும்பிடு என்ற பதத்தை உபயோகிப்பார்கள்.

    மச்சி, நீ தப்பா நெனச்சாலும் பரவாயில்ல, தமிழ் பாவம், அது வாழ்ந்த்துட்டுப் போகட்டும். ஒண்ணு என் கிட்ட தமிழ் ட்யூஷன் கத்துக்கோ, தினமும் ஆன்லைன்ல சொல்லித் தர்றேன், இல்லை என்னை உனக்கு சம்பளமில்லா ஃப்ரூப் ரீடரா வச்சிக்கோ, மறுபடியும் சொல்றேன், தமிழ் பாவம் வாழ்ந்துட்டுப் போகட்டும்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  3. பதிவை வாசிக்க முடியாதபடி கண்ணில் நீர்

    ReplyDelete
  4. அன்பின் ஸ்ரீ.. ஆரம்பத்துல இருந்து சொல்லி வரேன்... எனக்க இலக்கிய அறிவு எல்லாம் இல்லை... காட்டுப்பய போல எனக்கு என்ன தொனுதோ அதை எழுதி வரேன்...

    நீங்கள் இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு என்பது தவறான வாக்கியம் அல்ல... கும்பிடு என்பது கெட்டவார்த்தையும் இல்லை... அந்த பதத்தை அதிகம் நாம் நல்ல விஷயங்ககளுக்கு பயண்படுத்துவது இல்லை....

    ரெண்டாவது காமராஜருக்கும் எனக்கு வாய்க்கா வரப்பு சண்டை எல்லாம் இல்லை... அப்படி இருந்து இருந்தால் நீங்கள் இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு என்று எழுதி இருப்பேன்....

    திசைக்கு ஒரு கும்பிடு என்பதற்கும்
    திசைக்கே ஒரு கும்பிடு என்பதற்கான வித்யாசம் என்ன?? என்று என் சிறுமூளை உணர்த்துகின்றது...



    கட்டுரையின் முடிவில் சிறு மாற்றம் மட்டும் செய்து இருக்கின்றேன்.. அதை மட்டும் பாருங்கள்...

    ReplyDelete
  5. நன்ற ராம் மாற்றி விட்டேன்..

    ReplyDelete
  6. //நீங்கள் இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு என்பது தவறான வாக்கியம் அல்ல...// இல்லை, இலக்கணச் சுத்தமாகச் சரியான வாக்கியம்தான். ஆனால், இந்த expression அர்த்தம் மாறி வஞ்சப்புகழ்ச்சி மரபுக்குள் வந்துவிட்டது. இதையே ஸ்ரீராம் சொல்லி இருக்கிறார். இதற்கு என்னத்துக்கு கடுப்பாக வேண்டும்?

    சரி, இப்போது தலைப்பில் மட்டும் இருப்பது வாசகர்களை அதிர்வித்து உள்ளிழுப்பதற்கான ஒரு உத்தி என்று கொள்ளலாம். நான் அப்படித்தான் இக் கட்டுரைக்குள் வந்தேன்.

    ReplyDelete
  7. ராஜு சுந்தரம்.. இதில் கடுப்பு எல்லாம் இல்லை.... இப்ப ஸ்ரீராம் சொல்ல வருவது தலைப்பு சரியாக வைக்க வில்லை அதனால தமிழ் டியுசனுக்கு வர வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்.... தலைப்பு அப்படி இருக்கின்றது எனக்கு தெரியாமல் இல்லை...

    நான் பதில் சொல்லும் ஸ்டைலே அப்படித்தான்.

    ReplyDelete
  8. // ஒரு ஜோல்னா பை.. அதில் ஒரு சிலேட்டு, ஒரு அட்டை, ஒரு 1431 பயோரியா பல்ப்பொடி டப்பாவில் சல பலப்பங்கள்.. எதை மறந்தாலும் மறக்காமல் அனிச்சைசெயலாய் மதிய உணவுக்கு நெளிந்து போன ஒரு எவர்சில்வர் தட்டு இப்படித்தான் பள்ளிக்கு நான் போய் இருக்கின்றேன்..

    //

    நீங்க சொன்னதில் அப்படியே அத்தனையும் எனக்குப் பொருந்துகிறது, ஜோல்னா பை தவிர, எனக்கு சாரதாஸ் ஜவுளிக்கடை மஞ்சள் பை.

    ReplyDelete
  9. kamaarajaraal ilavasa kalvi perra laksha maanavarkalil naanum oruvan.Jockey sekar sollavanthathu:KAMARAJAR IRUKKUM THISAI (NO)KKI KUMBIDU(kiren). avartham mazhalai sol kelaathavar.than kuzhandaiyin mazhalai rasikkakoodiyathe.

    ReplyDelete
  10. கல்வி தந்தை காமராஜரை நினைவு படுத்தியமைக்கு நன்றி அண்ணா...!

    ReplyDelete
  11. மச்சி, ஏனி மடம் - நோனி மடம் ஞாபகம் இருக்கா, நீ சொன்னதுதான் கொஞ்ச நாளைக்கு முன்னர். இப்போ நீ அதுதான் பண்ணிக்கிட்டு இருக்க.

    ஒருவரிடம் தவறு இருக்கலாம் (உலகில் யாரும் பர்ஃபெக்ட் கிடையாது) ஆனா தவறை வேறொருத்தன் சுட்டிக் காட்டும் போது அ). ஒத்துக் கொண்டு அதை திருத்திக்கணும், ஆ). அதே தவறை மறுபடி செய்யாதிருக்கணும். இதுதான் சராசரி மனித இயல்பு. நீ எழுத்தாளராச்சே, அப்படியெல்லாம் ஒத்துக் கொண்டுவிட முடியுமா????

    நீ கண்டிப்பா ஒத்துக் கொள்ளப் போவதில்லை & திருத்தப் போவதில்லைன்னு எனக்குத் தெரியும், இருந்தும் சொன்னேன் ஏன் தெரியுமா? நேத்துதான் பரம் பொருள் பற்றிச் சொன்னேன் இன்னிக்கு இது.
    ஜுனூன் தமிழ் என்பது போல ஜாக்கி தமிழ் இது என்று பலர் இகழ்வதால் சொல்லித்தான் பாப்பாமோ என்று சொன்னேன், மற்ற படி நீ ஒத்துக் கொள்வாய் என்றோ மாற்றி விடுவாய் என்றோ நான் நினைக்கவில்லை.

    நான் ஒருவன் மட்டுமென்றால் பரவாயில்லை, லக்கி, டாக்டர் புருனோ, கார்த்திக், கணேஷ், குமார் என்று அனைவருக்கும் வாக்கிய அமைப்பு தவறென்றே பட்டிருக்கிறது.

    இலக்கிய அறிவு, காட்டுப் பய இதெல்லாம் உன் ஈகோவை காத்துக் கொள்ள நீ அணியும் சட்டைகள், அவற்றை கெட்டியாக நீ பிடித்துக் கொண்டிருக்கும் வரை, மாற்றத்துக்கு வாய்ப்பில்லை.

    மத்தவங்க எல்லாம் சிரிச்சிட்டு போகும் போது நான் மட்டும் இடித்துக் கூறுவது ஏன்னு புரியுமுன்னு நினைக்கிறேன்.

    இனிமே நீ தண்ணிக்கு சுன்னின்னு எழுதினாலும் ஏன்னு கேக்கமாட்டேன், நன்றி

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  12. காமராஜரை திட்டுறீங்களா, புகழ்கிரீர்களா என்றே தெரியவில்லை. அவரது காலத்து சத்துணவு வாயிலேயே வைக்க முடியாது என்கிறீர்கள். ஆனால், நாங்கள் படித்த பள்ளியில் அங்கே சமைப்பார்கள். அந்த கோதுமை உப்புமா அம்புட்டு ருசியாக இருக்கும். இன்றளவும் அது திரும்பக் கிடைக்காதா என்று ஏங்குகிறேன்.

    ReplyDelete
  13. உங்களநினைக்கும் பொது இந்தமாதிரி பெரியவங்களுக்கு நன்றி எண்டு வார்த்தாள சொல்லிட முடியாது.. நாங்க இப்ப அனுபவிக்குற வாசதிஎலம் உங்களுக்கு அப்போ இருந்திருந்த நீங்க இன்னும் பெரிய இடத்துல இருந்திருப்பிங்க

    ReplyDelete
  14. கண்ணில் நீர்

    ReplyDelete
  15. காமராஜருக்கு போன தலைமுறை மட்டும் அல்ல இன்றைய தலைமுறையும் கடமைபட்டு உள்ளது...
    உண்மை...

    ReplyDelete
  16. ஜாக்கி,
    காமராஜரை இன்னொரு முறை நினைத்து கண்கலங்குகிறேன்..அவரைத் தோற்கடித்தவர்கள் தானே நாம்? நமக்கு இன்றைக்கு இருப்பது போன்ற அரசியலும் தலைவர்களும் தேவைதான்.

    கட்டுரையை விட்டுவிட்டு சிலர் வெட்டி வம்பு இழுக்கிறார்களே? இவர்களுக்கு என்னதான் பிரச்னை?

    ReplyDelete
  17. Jackie,
    Interesting post and the follow-on conversations.
    Thanks for sharing your thoughts on Shri Kamaraj.
    I believe that among Tamil speaking politicians, he is one the very few self-less leader.

    Nadodipaiyyan

    ReplyDelete
  18. jackie sekar - மச்சி. என்னை பார்த்து சிரிக்கறவங்களை பார்த்துட்டு ஒரு நண்பனா என்னை 100 பர்சன்ட் மார்க் வாங்கனும்னு நீ என்னை மாத்த நினைக்கற... பட் இந்த மரமண்டைக்கு 55 பர்சன்ட் தாண்டறதே பெரியவிஷயமா இருக்கு...


    எனக்கு இப்படித்தான் எழுத வருதுன்னு சொல்லறது எந்தவகை ஈகோன்னு தெரியலை... அது உனக்கு ஈகோவா தெரியுது...

    என்னை பார்த்து சிரிக்கறவங்க சிரிச்சிட்டு போவட்டும்.. பட் நான் சொல்ல வருவது எத்தனை பேருக்கு புரியுதுன்னு எனக்கு தெரியும்...

    ஒரேவாக்கியம் பலருக்கு பலதை புரியவைக்கும்.. உதாரணத்துக்கு நீ தலைப்பு தப்புன்னு சொல்லற..

    ரோகிணி சிவாவுக்கு நான் எந்த விதத்துல சொல்லி இருக்கேன்னு புரியுது...ஆனா நீ என்ன சொல்ல இருக்கே.. என்னால ரோகிணிக்கு காரியம் அவுதுன்னு...

    அவுங்களை நேரில் பார்த்தது ஒரு நிமிடத்துக்கும் மிக குறைவு.... நான் என்ன பதத்துல சொல்ல வந்தேனோ .அதே பதத்துல அவிங்களுக்கு புரிஞ்சி இருக்கு.... அது போதும்..


    முனிஸ்வரனுக்கு ஒரு கும்புடு போட்டுக்கோ என்பது நான் வளர்ந்த விதம்...

    ஊம்மாச்சியை சேவிச்சிக்கோ என்பது நீ வளர்ந்த விதம்...

    தலைப்பு தப்பு இல்லை... ஆனா அது வேற அர்த்தத்தை கொடுக்குது... அது எனக்கும் தெரியும்...

    எனக்கு அப்படிதான் எழுதவருதுன்னு சொல்லறேன்...நீ மாத்திக்கன்னு சொல்லற.... நான் சொல்லறேன்.. தப்பா நான் எழுதலை நான் சொல்ல வரும் கருத்து பலருக்கு புரிஞ்சி இருக்குன்னு சொல்லறேன்....

    இப்ப இதே பஸ்ல என் தலைப்பு தவறை இரண்டு பேர் சுட்டி காட்டி இருக்காங்க...

    ஒருத்தன் நீ.. இன்னோருத்தர் சுகுமார்....

    சுகுமார் என்ன சொல்லி இருக்கார்..

    kamaarajaraal ilavasa kalvi perra laksha maanavarkalil naanum oruvan.Jockey sekar sollavanthathu:KAMARAJAR IRUKKUM THISAI (NO)KKI KUMBIDU(kiren). avartham mazhalai sol kelaathavar.than kuzhandaiyin mazhalai rasikkakoodiyathe.

    அதை உனக்காக தமிழ் படுத்தறேன்...

    காமராஜரால் இலவசகல்வி பெற்ற லட்ச்சக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன்.. ஜாக்கிசேகர் சொல்லவந்தது காமராஜர் இருக்கும் திசை (நோ)க்கி கும்பிடு(கின்றேன்) அவர் தம் மழலை சொல் கோளதவர். தன் குழந்தையின் மழலை ரசிக்க கூடியதே....

    எங்கள் ஊரில் பெரிய ஆட்களை பார்த்து உங்களை கும்புட்டுக்கறோம் எசமான்னு சொல்லிட்டு போன விவசாய மக்களை நான் பார்த்து இருக்கேன்...அதனால் அந்த தலைப்பில் வாக்கியத்தில் வந்து இருக்கலாம்...

    மச்சி உனக்கு ஒன்னு தெரியுமா? வேற யார் சொன்னாலும் என் பதில் சிரித்து விட்டு கடந்து போவதே..
    உனக்குதான் இவ்வளவு பெரிய பதில்....Edit7/16
    Bruno-Mascarenhas JMA - தமிழில் ஒரே சொல் பல வட்டாரங்களில் வேறு பொருள் தரும்

    “உங்கள் திசைக்கு ஒரு கும்பிடு என்ற சொற்தொடருக்கு ”இனி உங்கள் பக்கம் வர மாட்டேன்” என்று குறிப்பிட்ட வட்டார வழக்கை / சொற் பிரயோகங்களை அறிந்தவர்களால் மட்டுமே பொருள் கொள்ள முடியும்

    ஒருவர் அனைத்து வட்டார வழக்குகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது

    திசைக்கே ஒரு கும்பிடு என்ற வட்டார வழக்கில் இருக்கும் எதிர்மறை பொருள் ஜாக்கிக்கு தெரியவில்லை. அதனால் அப்படி தலைப்பு வைத்து விட்டார்

    நீங்கள் எழுதியதில் மற்றொரு (எதிர்மறை) பொருளும் இருக்கிறது என்று சொல்லி விட்டோம். அவரும் தெரிந்து கொண்டு விட்டார்

    இனி மேல் இந்த சொற்தொடரை சரியாக கையாள்வார்7/16 (edited 7/16)
    Bruno-Mascarenhas JMA - ”சொம்பில் தண்ணீர் மோண்டு கொண்டு வா” என்ற சொன்னால் சில மாவட்டங்கள் குடத்தில் அல்லது பானையில் இருக்கும் தண்ணீரை சொம்பில் எடுத்துக்கொண்டு வா என்று அர்த்தம்

    சில மாவட்டங்களில் வேறு அர்த்தம்

    ஏன்

    சொம்பு என்ற சொல்லிற்கு கூட் பல அர்த்தங்கள் உள்ளன :) :)

    இது மட்டும் போதாது என்று தமிழ் சமூக வலைவெளியில் (tamil social media) சொம்பு என்பது, நாட்டாமை, பஞ்சாயத்து என்று தொடர்புடையது :) :)7/16
    Bruno-Mascarenhas JMA - கொண்டை தெரியுது என்ற சொற்தொடருக்கு தமிழ வலையுலகில் இருப்பவர்களுக்கு மட்டும் அர்த்தம் தெரியும் அல்லவா :) :)7/16
    jackie sekar - நன்றி டாக்டர் புருனோ.. சுபம்.Edit7/16
    அபி அப்பா - அடடே எனக்கு இப்ப தான் பொங்குது. அதுக்குள்ள சுபம் போட்டுட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... சரி விடுடா சுனாபானா ஏழர எதுனா பச் விட்டிருப்பாரு. அங்க போய் பொங்கலாம் இன்னிக்கு. ஜாக்கி பொழச்சி போவுட்டும்:-)7/16 (edited 7/16)
    கேவிஆர் . - நான் பள்ளிக்கூட மதிய உணவு சாப்பிட்டதில்லை. ஆனாலும், இந்தப் பதிவு படிக்கும்போது லைட்டா கண் கலங்கினது உண்மை. இன்னைக்கு எத்தனையோ பேர் உச்சத்தில் இருக்காங்கன்னா அதுக்குக் காமராஜர் நிச்சயமாக ஒரு காரணம்.

    தலைப்பை ஒரு பெரிய பிரச்சனை ஆக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. அது ஜாக்கி மொழியாகவே இருந்தாலும் பிரச்சனை இல்லை. நம்மில் யாரும் பிழையின்றி எழுதுபவர் இல்லை :-)7/16
    வெண்பூ . - நல்ல பதிவு ஜாக்கி....

    ReplyDelete
  19. ///சில நேரங்களில் சாப்பாடு மிக குறைவாக வரும்... ஒரு கரண்டிக்கு மேல் சாப்பாடு கிடைக்காது... பாதி வயிற்றோடு வகுப்புக்கு போய் விடுவோம்.....மதியம் மூன்று மணிக்கு எல்லாம் பசி வயிற்றை பிடுங்கும்..///

    இப்படி எல்லாம் படிசுருகிங்க நீங்க கிரேட் ஜாக்கி சார் கஷ்டபட்டதான் வாழ்க்கை பட் அதுலயும் சுகம் இருக்குல சார்

    ReplyDelete
  20. When Kamaraj announced commencement of Mid Day Meals Scheme (without sufficient funding from the Treasury), the first person who gave away Rs. 1 lac (a very big amount those days) was Sivaji Ganesan. I remember Sivaji's picture appeared on Kalki's cover, with a write up on the subject inside the magazine. Another anecdote on Kamaraj which I heard was this. When the student leader P. Srinivasan won against Kamaraj in Virudhu Nagar constituency on a DMK ticket, he went about bragging in the media about his success. Annadurai, the then CM, called Srinivasan and told him to shut up, saying that Srinivasan had no locus standi to talk ill of the great Kamaraj. Annadurai thus proved his greatness too.

    ReplyDelete
  21. அந்த பெருந்தலைவர் ஆரம்பித்த உணவு திட்டத்தில் 55-60களில் நான் சாப்பிட்டு வளர்ந்தேன். அதை கண்முன் நினைவு பெற செய்ததற்கு நன்றி.

    அந்த மாதிரி தலைவர்கள் எங்களை வளர்த்தார்கள்!

    ReplyDelete
  22. உன் வீட்டுப் பக்கமே வர மாட்டேன் என்பதற்கும், உன் வீட்டு பக்கம் வரமாட்டேன் என்பதற்கும் உள்ள வித்தியாசம்தான் நீங்க சொல்றது.
    இது எழுத்துப்பிழை இல்லீங்க. பொருட்பிழை. எழுத்துப்பிழைன்னா எழுத எழுத திருந்திடும். பொருட்பிழை?

    எழுத வந்து ரெண்டு வரும் ஆச்சு. இன்னுமா எழுதிப்பழகலை? ௨ வது படிக்கிற பசங்க கூட முன்னேறிட்டாங்க, நீங்க எப்பவுமே இதை சொல்லிட்டுதான் இருப்பீங்களா? எங்களுக்கே போர் அடிக்குதுங்க அண்ணாச்சி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner