மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு 03/07/2011

ஆல்பம்..
கேரளாவில் பத்மநாப சாமி கோவிலில் ஒருலட்சம் கோடிக்கு மேல் நகைகள் கிடைத்து இருக்கின்றது…
இன்னும் ஒரு அறையை திறக்கவேயில்லையாம்…அதில் இன்னும் எத்தனை கிலோ நகைகள் இருக்கும் என்று அனுமானிக்க முடியவில்லை…இந்த கோவில் மட்டும் நம்ம ஊரில் இருந்து இருந்தால் பெருமாளுக்கு நாமகட்டியை மட்டும் மிச்சம் வைத்து ஆறுகாலபூஜைக்கு நாமத்தை குழைத்து குழைத்து சாத்தியிருப்பார்கள். பழனிமுருகனின் நவபாஷன சிலையில் முருகனின் ஒரு காலையே சுரண்டி அவர் கண்ணை குத்துவார் என்ற பயம் இல்லாமல் அவரை பிசிக்கலி சேலன்ஜ்டு பர்சனாக மாற்றியவர் நம்மவர்கள்….கொய்யால நம்ம ஊர்ல இல்லாம போயிடுச்சி….
==================================
டிஸ்கவரி சேனல் போல தமிழில் நேஷனல் ஜியாகிரபியும் வந்து விட்டது…அம்மா கையில் அரசு கேபிள் கண்ட்ரோல் அவுங்க நேரடி பார்வையில் வந்து இருக்கின்றது… அந்த ரெண்டு சேனலையும் கொடுத்தால் புண்ணியமா போகும்…

==================
மிக்சர்…
வெகுநாட்களுக்கு பிறகு திருச்சிக்கு ரயிலில் வந்து இறங்கினேன்.. திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் இருக்கும் சவேனா ஓட்டலில் தங்கி இருக்கின்றேன்.. திருச்சி நண்பர்களை சந்திக்க ஆவல்.. நாளை திங்கள்கிழமை இரவு ராக்போர்ட்டில் சென்னைக்கு பயணம்.. அதுவரை குடும்பத்தினர் கோவில் குளம் என்று சுத்தவேண்டியதுதான்..
==============

இந்தவாரகடிதம்..
ஜாக்கி சேகர் அவர்களுக்கு,

வணக்கம்.

2009 வருடத்தில் தங்களது site- சேமித்து வைத்திருந்தேன்.
மறந்து விட்டேன் வேலையில்....

இப்பொழுது சில மாதங்களாக படிக்கிறேன்.
சொல்ல வார்த்தைகள் இல்லை
மிக 
மிக 
இயல்பாக எழுதுகிறீர்கள்

எல்லாவற்றிலும் கடைசி 4 வரிகள் `நச்'
வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை

உங்கள் வாசகன் 
அப்பாஜி

============================
நன்றி அப்பாஜி….. விரிவாய் ஒரு பதில் எழுதுகின்றேன்….மிக்க நன்றி ஊர்காரரே…..

===================
பிலாசபிபாண்டி
ஆம் நான் தவறு செய்துவிட்டேன்… இந்த தவற்றை ஒற்றுக்கொள்ள எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. காரணம் வாழ்க்கை யூசர் இண்ஸ்டரக்ஷன் மேனுவலோடு வருவதில்லை….
===================
நான்வெஜ் 18+
ஜோக்..1

ஆண்களுக்கு மட்டும்…………..
======
நியூட்டன் ஆறாவது விதி..
என்னதான் மேலும் கிழும் ஆட்டினாலும், விரல்களின்மேல் தட்டினாலும், உலுக்கு உலுக்கு என்று உலுக்கினாலும் அந்த கடைசி டிராப் யூரின் எப்படியும் உங்கள் ஜட்டியில் விழுவதை அந்த ஆண்டவனே தடுக்க நினைத்தாலும் தடுக்க முடியாது....
=============

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)EVER YOURS...

 

9 comments:

 1. national geographic channel is coming in tamil for more than one year. I Have seen that in tamil in cuddalore.

  ReplyDelete
 2. அருமையான சாண்ட்விச்... வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
 3. நியூட்டன் ஆறாவது விதி. ok. நியூட்டன் 4, 5 விதி . சொல்லல.

  ReplyDelete
 4. பாஸ் ..மறக்காம மலைகோட்டை அருகில் இருக்கும் ஐஸ் கிரீம் கடைக்கு போய்ட்டு வாங்க ...மைக்கேல் அண்ட் சன்ஸ்

  ReplyDelete
 5. Jackie sir, It is not one crore, Its One Lakh Crore.

  Almost half the amount of 2G Scam.

  ReplyDelete
 6. டேய் அம்பி anankrishna
  தமிழில் ஒரு வருஷமா வர்ற சேனல் Discovery ட
  சாளேஸ்வரம் வந்துடுசோன்னோ

  ReplyDelete
 7. //கேரளாவில் பத்மநாப சாமி கோவிலில் ஒரு கோடிக்கு மேல் நகைகள் கிடைத்து இருக்கின்றது…//

  தலீவா... 2ஜிக்கு அப்புறம் 1 லட்சம் கோடின்னா கூட ஒரு கோடி அப்படின்னு சொல்ல பழகிட்டோமா...? அங்கு கிடைத்த நகைகள் மதிப்பு 1 லட்சம் கோடிகள் அளவு இருக்கும்னு சொல்றாங்க பாஸ்....

  ReplyDelete
 8. //கேரளாவில் பத்மநாப சாமி கோவிலில் ஒரு கோடிக்கு மேல் நகைகள் கிடைத்து இருக்கின்றது…//
  எத்தனை கோவில் தமிழ் நாட்டில் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது...நண்பா... இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட நன்றாக் பாரமரிக்கப்படுகிறது....திருப்பதி தவிர அந்த மாநிலத்தில் மற்ற கோவில்களை எவ்வளவு கேவலமாக உள்ளது தெரியுமா?...மற்ற மாநிலங்களை விட பல விசயங்களில் நாம் நன்றாக்வே உள்ளோம்...

  ReplyDelete
 9. பிலாசபியெல்லாம் ஓகே.யூசர் இண்ஸ்டரக்ஷன் மேனுவல் கிடைக்கவில்லை என்பதற்க்காக கிரைண்டறை கண்டபடி ஓடவிட்டீங்க எண்டா லைப் repaira போய்டும் சார்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner