சென்னை பதிவர் சந்திப்பு (16/07/2011)புகைபடங்களுடன்..



பதிவர் சந்திப்பு போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதால் பதிவர் சந்திப்பு போட வேண்டும் என்று ஒரு ஒரு சந்திப்பிலும் நண்பர்கள் பேசினாலும், அதுக்கு நேரம் வந்தது கடந்த சனிக்கிழமைதான்..




பொதுவாக சென்னை பதிவர்கள் மேல் பல ஊர் பதிவர்களுக்கு இருக்கும் சின்ன பொறாமை என்னவென்றால், இந்த பதிவர் சந்திப்புதான்... 

சென்னை போன்ற பெருநகரங்களில் பதிவர்கள் கூட்டம் அதிகம்...இரண்டு மாதத்துக்கு ஒரு  சந்திப்பு வைத்தாலும் 20 பேருக்கு குறைவில்லாமல் வருவார்கள்..காரணம் சென்னை பரந்த நகரம்...



அது மட்டும் அல்ல எந்த விழாவாக இருந்தாலும், தலைநகரில் நடப்பதால்  எந்த விழாவுக்கு போனாலும் பதிவர்கள் இரண்டு பேரினால் எளிதில் அடையாளபடுத்திக்கொள்ள முடியும்... அது சென்னையின்  பிளஸ்..




பதிவர் சந்திப்புக்கு என்று சென்னையை பொறுத்தவரை எந்த தலைமையும் கிடையாது...ஒரு நாலு பேர் சேர்ந்து எம்பா அடுத்த வாரம் ஒரு சந்திப்பு போட்டு விடலாமா? என்று கேட்டாலே

 போட்டு விடலாம் என்று அமோதித்தால் சொன்ன தேதியில்  போட்டு விடுவார்கள்...




 (படத்தில் இடமிருந்து வலம் 
அதியமான், கார்த்தி(எல்கே),டாக்டர் புருனோ,கேஷவ் பாஷ்யம், கார்கி,டோண்டு,அப்துல்லா,விந்தைமனிதன்,அருணையாடி,நசேரேயன்)

மூன்று வருடத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் இந்த சந்திப்பில்தான் எனது  போன் நம்பர் அறிவிப்பில் போட்டு இருந்தார்கள்... அதனால் மெரினாவுக்கு, நாலு அம்பதுக்கே போனேன்.. சப்போஸ் யாராவது புதிய பதிவர் யாராவது வந்தால் அடையாளம் சொல்ல வசதியாக இருக்கும் அல்லவா? அதனால்தான்..



  • முதலில் அருணையாடி மற்றும் ஸ்டாலின் பெலிக்ஸ் வந்தார்கள்...அவர்கள் இருவரையும் நான் முதன் முறையாக நேரில் பார்க்கின்றேன்..



  • புதுகை அப்துல்லா
  • கே.ஆர்.பி. செந்தில்
  • Bruno-Mascarenhas JMA
  • விந்தைமனிதன் ராஜாராமன்
  • அசோகபுத்திரன் (சென்..)
  • கேபிள் சங்கர்
  • Kesava Bashyam VN
  • அரவிந்தன்( பெங்களுர்)
  • வலைமனை சுகுமார்
  • அதியமான்
  • வழிப்போக்கன் யோகேஷ்
  • அண்ணன் லியோ
  • நசேரேயன்
  • ராம்ஜி யாஹு
  • உருப்படாத நாரயணன்





  • டோண்டு ராகவன்
  • பபஷா



  • ம ரா
  • அருண்மொழிதேவன்
  • காவேரி கணேஷ்
  • ராம்ஜி யாஹூ
  • ஸ்டாலின் பெலிக்ஸ்
  • குட்டி டின்
  • கந்ததாசன் ப்ளஸ்
  • O.R.B Raja
  • கார்க்கி
  • "அக்கப்போர்" ராஜா



எல்லாருடைய பேரும் எழுதி இருக்கின்றேன் என்று எண்ணுகின்றேன்...



டோண்டுசார் பொதுவாக எல்லா பதிவர்  சந்திப்பிலும் செய்யும் வேலையை இந்த சந்திப்பில் செய்யவில்லை... ஒரு நோட்டை எல்லா பதிவர்களிடமும் நீட்டி, அவரது பெயரையும், வலைதளமுகவரியையும் எழுத சொல்லி அதனை அவர் பதிவில் எழுதும் போது, எல்லோருடைய பெயரையும் குறிப்பிடுவார்... போர் அடித்து விட்டது போல... அதனால் அது இந்த முறை மிஸ்சிங்... பட் டிரைவர் வைத்துக்கொண்டு தனது காரில் வழக்கம் போல வந்து இருந்தார்...



முதலில் காந்திசிலைக்கு பின் பேசிக்கொண்டு இருந்தோம் சென்னைபுகழ் மெரினா சுக்கு காப்பியை, ஒரு பையன் எடுத்து வந்தான்.. எல்லோரும் சாப்பிட்டோம்.. என் மனைவி காதலியாய் இருந்த போது மெரினாவில் பேச்சை விடுத்து எப்போது சுக்கு காப்பி வரும் என்று காத்து இருப்பேன்... எனது காதலி பேச வேண்டிய முக்கிய பேச்சுகள் சுக்குகாப்பிக்கு பிறகே பேசுவாள்...காரணம் அதுக்கு பிறகுதான் அவள் சொல்வதை கவனத்தில் நிறுத்துவேன்.




(புகைபடத்தின் வலம் இருந்து இடம்..வலைமனை சுகுமார்,நசரேயன், அருணையாடி நான்....)

நிறைய வட இந்திய பெண்கள் தாரள உடைகளில் எங்களை கடந்து போன காரணத்தால் என் கவனத்தை சிதறிடித்துக்கொண்டு இருந்தார்கள்... வலைமனை சுகுமாரும் நானும் நிறைய இடங்களில் கவனத்தை சிதறிடித்துக்கொண்டு இருந்தோம்...


பொதுவாக சந்திப்புகளில் அன்பார்ந்த நண்பர்களே என்று யாரும் ஆரம்பிக்க மாட்டார்கள்.. பொதுவான  பேச்சு என்பது இங்கு உண்டு.. எல்லோரும் எல்லோருடைய பேச்சையும் கேட்கலாம் கவனிக்கலாம்...

(வலமிருந்து இடம் பின்னுட்டபுகழ் ராம்ஜி யாஹு,டோண்டு, மயில்ராவணன்,ஸ்பெ,நசரேயன்)



கூட்டம் அதிகமான காரணத்தால் நாங்கள்..மணல் நோக்கி நடந்து சென்று வட்டமாக அமர்ந்து கொண்டோம்...இப்போது சுண்டல் பையன் வந்தான்... அப்துல்லா ஒரு மணிநேரம் கழித்து வரச்சொல்ல மிகச்சரியாக 20நிமிடத்தில் வந்தான்.. அவனிடம் சுண்டல் வாங்கினோம்.. பேச்சு நிறைய டாபிக்கில் பயணித்தது.. இந்திய கடற்கரை கோஸ்ட்கார்டு ஹெலிகாப்டர் ஒன்று பதிவர்களுக்கு நேராய் வட்டமிட்டுக்கொண்டு இருந்தது...உளவுதுறையினாராக கூட இருக்கலாம்...??





மழை லேசாக தூர இடத்தை காலி செய்து வழக்கம் போல மண்டபடியாகின்ற கலங்கரை விளக்கத்துக்கு பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்கு புதிய தலைமைசெயலகத்தில் இருந்து பழைய தலைமைசெயலகத்துக்கு அவசரம் அவசரமாக ஜெ அரசு போனது போல, மழையில் நனைந்துக்கொண்டு டீக்கடை நோக்கி ஓடினோம்...

(வலமருந்து இடம்... ஸ்பெ,நசரேயன்,அருணையாடி,குட்டிடின், பிபாஷா,விந்தைமனிதன்,னுசுகுமார், கேஆர்பி செந்தில்,அதியமான், கார்கி)


ஆல்பர்ட் தியேட்டரில் விட்டோத்தி சுந்தரம் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஆறரை மணிக்கு போகலம் என்று இருந்தார்கள்.. பட் மழை பெய்த காரணத்தால் போகவில்லை... எனக்கு அங்குஇரண்டு பேரைதான் தெரியும் ..பட் இங்கு எல்லோரையும் தெரியும்...வெகு நாட்களுக்கு பின் சந்தித்த காரணத்தால்  நண்பர்களுடன் இருக்க முடிவு செய்தேன்..





நான் எனது பைக்கில் அருணையாடியை அழைத்து சென்றேன்... அப்போதுதான் மழை பெய்ய ஆரம்பித்த காரணத்தால், எனக்கு முன்னால் சென்ற ஸ்கூட்டியின் ஸ்லீவ்லெஸ் கையில், மழை நீர்  துளி துளியாக பட்டு  ஒன்றுடன் ஒன்று இணைந்து சங்கமத்திருவிழா நடத்திக்கொண்டு இருந்தகாரணத்தால், நான் கவனம் இழக்காமல் இருக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு லைட் அவுஸ் அருகில் இருக்கும் டீக்கடையில் வண்டியை நிறுத்தினேன்..

(இடமிருந்து வலம்... ரோமியோ,நசரேயன்,பலாப்பட்டறை சங்கர், அரவிந். எல்கே,நாரயணன்,வழிப்போக்கன் யோகேஷ்,)

டீக்கடைக்கு போனபிறகுதான்... குழுவாக பேச ஆரம்பிபோம்.. எந்த பேச்சு பிடிக்கின்றதோ அந்த பேச்சில் நாம் நின்று கவனிக்க ஆரம்பிக்கலாம் அல்லது யாரிடம் உங்களுக்கு பேச பிடிக்குமோ அவர்களிடம் பேசலாம்...எல்லா டாபிக்கும் அங்கு ஓடும்.. நமக்கே தெரியாத பல பாயிண்ட்கள் பல விஷயங்களில் நமக்கு கிடைக்கும்....

(இடமிருந்து வலம்.. அப்துல்லா, புருனோ, கேபிள்,எல்கே)



பல காரசார விவாதங்கள் அங்குதான் நடைபெறும்....பொதுவாய் ஒரு ஒருவராக விடைபெற்று கிளம்ப இரவு  ஒன்பதுமணிவரை பிடிக்கும்....



தம்பி டம்பி மேவி வருகின்றேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை...அதே போல் இரண்டு நண்பர்கள் வருகின்றேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை....



சென்னையில் இருந்தாலும் இதுவரை எந்த பதிவர் சந்திப்பிலும் கலந்து கொள்ள அண்ணன் உண்மைதமிழன் விரும்பமாட்டார்.. என்ன காரணம் என்று எனக்கு சந்தியமாக தெரியாது...உதா ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து போன் மட்டும் செய்தார்...



பதிவர் சந்திப்பில் அதிகம் கலந்து கொள்ளும் பாலபாரதி மற்றும் ஜீயரோம் சுந்தர் இந்த முறை இரண்டு பேரும் மிஸ்சிங்...



புதிய பதிவர்கள் வருவார்கள் என்று நினைத்தோம்... வரவில்லை...ஆனால் வேறு ஒருவர் வந்து இருக்கின்றார்.. நான் சில அலட்டிய பிகர்களின் மேல் கவனம் வைத்த காரணத்தால் அவரை நான் பார்க்க வில்லை....



பதிவுலகின் நீண்டகால இளவரசர்கள் லக்கி மற்றும் அதிஷா இருவரும் வரவில்லை...ஆல்பர்ட் தியேட்டருக்கு போய் இருக்க வாய்ப்பு இருக்கின்றது...



மணிஜியும் வரவில்லை.....



எழுந்திரு அஞ்சலி எழுந்திரு



யூ மேட் மை டே.... ராஜா மற்றும் அப்து



இரவு மிட்நைட் எக்ஸ்பிரசில் நண்பர்களோடு சாப்பாடு இரவு மிக லேட்டாய் தூங்கிப்போனேன்...


(அப்துல்லா, அண்ணன் லியோ)


குறிப்பு..
அப்துல்லாவின் இந்த புகைபடம் குசும்பனுக்கு ஏதோ ஒரு நாளில் உதவியாய் இருக்கும் என்று எண்ணுகின்றேன்...

படங்களை கிளிக்கி பார்க்கவும்...

============

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்




(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...
 



==================

13 comments:

  1. யூத் பதிவர்கள் யாரையுமே காணும்?

    ReplyDelete
  2. நாங்களும் யூத்துதான் :-)

    ReplyDelete
  3. ஜாக்கி : நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி......

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    நிறைய பதிவர்களை புகைப்படத்தில் பார்த்துக் கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. நன்றி. விரிவான பதிவு.

    ReplyDelete
  6. அண்ணே நான் உங்களுக்கு போன் பண்ணும் போது எந்த வேலையும் இல்ல .... எங்க ஆபீஸ் இருக்கிறவங்களுக்கு முக்கு வேர்த்து போயிருச்சு போல ...இரண்டு கொல கேஸ் விசாரணைக்கு வந்துருச்சு. நிதிபதியா இருக்க வேண்டியதா போயிருச்சு ...ம்ம்ம் அப்து அண்ணனின் நவரச போட்டோவை பார்த்த பிறவு மிஸ் பண்ணிட்டோமேன்னு பீல் பண்ணுறேன்.

    வந்திருந்த புத்தக திருவிழாவில் பண்ணியது போல் எதாவது ஆராய்ச்சி பண்ணிருக்கலாம் :))))))))))

    ReplyDelete
  7. என்னது அசோகபுத்திரனா ? வேற யாராவது என்னோட பேர்ல இருக்காங்களா ? அப்போ துண்ட போட்டு இடம் புடிச்சது வேஸ்டா ? எப்படியோ, அடுத்தமுறை பதிவர் சந்திப்பிற்கு வந்து என் இருப்பை உறுதி செய்கிறேன்..

    ReplyDelete
  8. நன்றி. நல்ல பகிர்வு

    ReplyDelete
  9. நண்பரே , வலை பதிவர்களின் அடுத்த சந்திப்பு எப்போது ?
    அங்கு வந்தால், தங்களை நான் சந்திக்கலாமா.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner