அம்மாவசைக்கும் அப்துல்காதருக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அது போலத்தான் எனக்கும் திருச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
திருச்சி மட்டும் அல்ல விழுப்புரம் மற்றும் பண்ருட்டி தவிர வேறு எந்த இடத்திலும் எனக்கு சொந்தக்காரர் மற்றும் தெரிந்தவர் என்று யாரும் எனக்கு இல்லை... ஆனால் இன்று அப்படி இல்லை... உலகம் எங்கும் நண்பர்கள் இருக்கின்றார்கள்... அதுக்கு காரணம் இந்த பதிவுலகம்.. திருச்சி ஸ்ரீரங்கம் பற்றி அதிகம் சொன்னது சுஜாதாதான்...
திருச்சி மட்டும் அல்ல விழுப்புரம் மற்றும் பண்ருட்டி தவிர வேறு எந்த இடத்திலும் எனக்கு சொந்தக்காரர் மற்றும் தெரிந்தவர் என்று யாரும் எனக்கு இல்லை... ஆனால் இன்று அப்படி இல்லை... உலகம் எங்கும் நண்பர்கள் இருக்கின்றார்கள்... அதுக்கு காரணம் இந்த பதிவுலகம்.. திருச்சி ஸ்ரீரங்கம் பற்றி அதிகம் சொன்னது சுஜாதாதான்...
சீரியல்,சினிமா ஷுட்டிங் என பல ஊர்களுக்கு பயணித்து இருக்கின்றேன்.நிறைய ஊர்களில் தங்கி இருக்கின்றேன்.திருச்சிக்கும் எனக்குமான உறவு வேறு...
என் அப்பா கடலூரில் இருக்கும் பாண்டியன் டயர்ஸ் என்ற டயர் ரீட்டிரேடிங் கம்பெனியில் வேலை செய்தார்... நானும் அங்கு ஒரு வருடம் வரை வேலை செய்து இருக்கின்றேன்... அது மலையாளிகளால் நடத்தபட்ட ஒரு நிறுவனம்... அங்கு நடந்த பாலிடிக்ஸ் காரணமாக அங்கு இருந்து நின்று விட்டேன்.
ஆனால் அப்பா தொடர்ந்து அங்குதான் வேலை செய்தார்....டயரை ரீட்டிரேடிங் செய்ய ரப்பர் கேரளா அலப்புழாவில் இருந்து பண்டல் பண்டலாக திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்து விடும்.. அங்கு பிளாட்பாரத்தில் பல நாட்கள் கிடைக்கும்...அதனை அடுத்த கடலூர் செல்லும் ரயிலில் ஏற்றி அனுப்பினால்தான் இங்கு கம்பெனி ரன் ஆகும்...கம்பெனி நடக்க ரா மெட்டீரியல் முக்கியம்...டயர் ரெடிடி செய்து கொடுத்தால்தான் வாகனங்கள் ஓடும்...
இரும்புக்குதிரைகள் கதையில் பம்பாயில் இருந்து லடாக்ஸ் ரப்பர் ஏற்றி வந்த லாரியை தேடி விஸ்வநாதன் கதாபாத்திரம் செல்வது போல ஒருபயணம்தான் இது.. ஆனால் இது அடிக்கடி நடக்கும்..
இரும்புக்குதிரைகள் கதையில் பம்பாயில் இருந்து லடாக்ஸ் ரப்பர் ஏற்றி வந்த லாரியை தேடி விஸ்வநாதன் கதாபாத்திரம் செல்வது போல ஒருபயணம்தான் இது.. ஆனால் இது அடிக்கடி நடக்கும்..
ரப்பர் என்ன தானே போய் பிளாட்பாரம் மாறி ரயில் ஏறி விடுமா??? அங்கு இருக்கும் போர்டர்களிடம் லஞ்சம் கொடுத்தால் அடுத்த டிரெயினில் உடனே ஏற்றிவிடுவார்கள்..அப்படி லஞ்சம் கொடுக்க அடிக்கடி திருச்சிக்கு என்னை அனுப்புவார்கள்..
கேரளாவில் இருந்து ரப்பர் அனுப்பி திருச்சிக்கு வந்து விட்டது என்ற தெரிந்தால் என்னிடம் லஞ்சப்பணம் கொடுத்து பயணசெலவு மற்றும் சாப்பாடு செலவு ஆட்டோசெலவு எல்லாம் கொடுத்து அனுப்புவார்கள்..ஹலோ லஞ்சபணம் எனற்ல் ஏதோ சூட்கேசில் என்று நினைத்து விடாதீர்கள்..200 ரூபாய் அல்லது 300ரூபாய் அவ்வளவே... ஆனால் எங்கும் தங்க காசு கொடுக்க மாட்டார்கள்.. காரணம் கடலூரில் இருந்து திருச்சிக்கு போய் போர்டரிடம் லஞ்ச பணத்தை கொடுத்து விட்டு கடலூருக்கு அடுத்த பஸ் புடித்து வீடு வர வேண்டும் இதுதான் என் வேலை..
ஆட்டோவுக்கும், சாப்பாட்டுக்கும் கொடுக்கும் காசினை மிச்சபடுத்தி தியேட்டர் தியேட்டராக போய் படம் பார்ப்பது என் வேலை...சில நேரத்தில் இரவு நடுநிசியில் திருச்சியில் இறங்கினால் போர்டரிடம் பணம் கொடுத்து விட்டு, அங்கேயே பிளாட்பார சேரில் படுத்து கொசுக்கடியில் தூங்க முடியாமல்... இதோ விடிந்து விடும் இதோ விடிந்து விடும் என்று மனதை சமாதானப்படுத்தி விடியலில் ரெஸ்ட் ரூமில் காலைக்கடன்களை முடித்து விட்டு திருச்சியில் ஊர் சுற்றக்கிளம்பிவிடுவேன்...
திருச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த பழமையான நகரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ஒருமுறை எந்த படமும் நல்ல படம் இல்லை என்ற காரணத்தால் திருச்சி மலைக்கோட்டையில் ஏறினேன்.. பிள்ளையாரை வணங்கி விட்டு பாறையில் வந்து உட்கார்ந்தேன்... முகத்தில் காற்று பிச்சிக்கொண்டு அடித்தது பாருங்கள்.. அந்த ஒரு காற்றுக்கும் டாப் ஆங்கிளில் திருச்சி அழகை ரசிக்கவும் மலைக்கோட்டைக்கு அடிக்கடி பயணபட ஆரம்பித்தேன்.. முக்கியமாக மாலையில் இருந்து இரவுக்கு திருச்சி மாநகர் படிப்படியாக ஆயுத்தம் ஆகும் அந்த அழகை டாப் ஆங்கிளில் இருந்து ரசிக்கவும் முரட்டு தனமாக முகத்தில் அறையும் காற்றை ரசிக்கவும் நான் அடிக்கடி செல்லுவேன்..மனது குழப்பமாக இருந்தால் படியேறி பிள்ளையாரை பார்த்து விட்டு சைடில் இருக்கும் பாறையில் அமர்ந்து பாருங்கள்.. மனது லேசாகும்...
பத்து வருடத்துக்கு முன் திருச்சிக்கு பக்கத்தில் உறையூர் அருகே தம்பம்பட்டியில் இரும்புக்கடை செல்வராஜ் என்ற நண்பருக்கு திருமணம்.. அதனால் அவர் திருமணத்துக்கு ஜவுளி எடுக்க திருச்சி பஜார் முழுவதும் முக்கியமாக திருச்சி சாரதாசில் அடிப்பிரதக்ஷனம் செய்து இருக்கின்றேன்..
திருச்சி மாரிஸ் காம்ளக்சில் இருக்கும் எல்லா தியேட்டரிலும் படம் பார்த்து இருக்கின்றேன். அவள் வருவாளா படத்தில் சிம்ரனின் குழைவான இடுப்பை அந்த காம்பளக்சில் இருக்கும் ஏதோ ஒரு அரங்கத்தில் பார்த்த நியாபகம்... அதே போல் ஜீன்ஸ் படம் வந்த போது செல்வா நடித்த காமெடி படம் 100 பர்சன்ட் லோக்கல் என்ற கேப்ஷனோடு வந்த படத்தை பார்த்து அதில் முக்கியமாக மகாநதி சங்கர் கமெடி பார்த்து விழுந்து விழுந்து சிரித்த நியாபகம்...
மாரிஸ் பக்கத்தில் இருக்கும் கேடி தியேட்டரில் பிட்டு படங்கள் பார்த்து இருக்கின்றேன்... கேடி தியேட்டரின் உள் கட்டமைப்பு சான்சே இல்லை... அவ்வளவு பிரமாண்டம் என்று வியந்து இருக்கின்றேன்... ஜீன்ஸ் படம் ரிலிஸ் ஆகி இருந்தது... ரயில் நிலையத்தில் போர்ட்டரை பார்த்து விட்டு விடியலில் 4 மணிக்கே பாலக்கரை காவேரி தியேட்டருக்கு வந்து வாசலில் வெயிட் செய்து காலைக்காட்சி ஜீன்ஸ் படத்துக்கு முதல் காட்சி காலைக்காட்சி அங்கேதான் பார்த்தேன்... டிடிஎஸ் சவுண்ட் வந்த நேரம் அது... கோலம்பஸ் சாங்குக்கு வரும் பிகில் சவுன்ட் தியேட்டர் முழுவதும் சுற்றி சுற்றி வந்ததை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்..
ஆயிரம் சொன்னாலும் எனக்கு திருச்சியில் பிடித்த தியேட்டர் சிப்பி தியேட்டர்தான்.. அதில் தான் ஐ நோவ் வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர்.. ஆங்கில படத்தை பார்த்தேன்..
அப்படி தியேட்டர் தியேட்டராக சுற்றிய திருச்சிக்கும் எனக்கு பல வருட தொடர்பு இல்லாமல் போய் விட்டது.. பல வருடம் என்றால்?? ஒரு எட்டு வருடங்களுக்கு மேல் சுத்தமாக தொடர்பு இல்லை....ஆனால் போன ஞாயிறு திங்கள் இரண்டு நாளும் திருச்சியில் இருந்தேன். திருச்சி மாறி இருக்கின்றதா??? அடுத்த பாகத்தில் பார்ப்போம்...
படங்கள் ..என்கிளிக்ஸ்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
திருச்சி க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு ஊர் முழுக்க சுற்றி இருக்கிறீர்கள்.உங்களின் பார்வையில் திருச்சி அழகாய் இருக்கிறது.
ReplyDeleteஜாக்கி செல்வாவின் அந்த படம் பெயர் கோல்மால்
ReplyDeleteme the 1st..:-))
ReplyDeleteஇல்லைப்போல் இருக்கு..வடை போச்சே:-))
ReplyDeleteஜாக்கி....நீங்க வேலை செய்யாத துறை என்று எதுவுமில்லை போல இருக்கே.ஹோட்டல்,செக்யூரிட்டி,நகைக்கடை துணிக்கடை,கல்லூரி,வீடியோக்கடை என்று பட்டியல் நீளுதே..
ReplyDeleteநான் இதுவரை வேலை செய்த இடங்கள்...
ReplyDelete1.நகை கடையில் கவுண்டர் சேல்ஸ்..
2.நகை டிசைன் வெட்ட வைர ஊசி செய்யும் வேலை.
3.வெல்டிங் கடையில் வெல்டர் வேலை
4. சித்தாள் வேலை
5.செருப்புக்கடையில் வேலை.
6.வீடியோ லைப்பேரரியில் வேலை
7.கடலூர் கமலம் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை.
8.ஒரு வருடம் கடலூரில் ஆட்டோ ஓட்டுநர்.
9.பறக்கும் ரயில் பாதையில் கம்பி பிட்டிங்வேலை
10. பறக்கும் ரயில் பைலிங் ஒர்க்.
11.சென்னை கடற்கரை காந்தி சிலை பின் உள்ள சாகர் ஓட்டலில் சர்வர் வேலை
12.எல்ஐசி எதிரில் செக்யூரிட்டி வேலை.
13.மவுன்ட் ரோடு நிர்மலாதக்ஷன் ஓட்டல் அருகில் பீடா கடையில் வேலை.
14,தேவி, அலங்கார் தீயேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் விற்க்கும் வேலை.
15.லூனா டிரைவராக ஒரு வருடம்.
16.மாருதி காருக்கு டிரைவராக...சைடில் வால் பேப்பர் ஒட்டுவது..
17. பாண்டி, கடலூர் பகுதிகளில் ஐந்து வீடியோக்கடையில் கேமரா மேனாக 4 வருடங்கள்..
18.சென்னை வடபழனி கிரீன் லேண்ட் வாட்டர் சர் வீஸ் கடையில் சில நாட்கள்.
19. சென்ளை சரவண வீடடியோ சென்டர் இரண்டு வருடங்கள்
20கேமராமேன் டீஎஸ் விநாயகம் கேமாராவில் கேமரா அசிஸ்டென்டாக ஒன்றரை வருடம்
21,சென்னை எஸ்எஸ் மீடியாவில் ஒரு வருடம்.
22.கேமராமேன் பால முரளியிடம் அசிஸ்டென்ட் கேமராமேனாக இரண்டு வருடங்கள்...
23.எப்டிடிவி எனும் நிறுவனத்தில் கேமரா மேனாக வேலை.
24. சைடில் திருமணத்துக்கு போட்டோ எடுப்பது ,
25பூக்கடையில் வேலை
25.நான் ஒரு குறும்பட இயக்குநர் முதல்படம் துளிர் மாநில அளவில் நடந்த போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. என்று இப்படியாக நம் கதை ஓடியது விடுபட்டவை நிறைய......
இப்படியாகத்தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது, எந்த இடத்திலும் மிக நீண்ட நாட்கள் நீடித்தது இல்லை.
காரணம் நான் செய்யும் வேலையை ரசித்து செய்வேன்,நான் வேலை செய்யும் நிறுவனத்தை நேசிக்க மாட்டேன் அது நம் வளர்ச்சியை தடை படுத்தும் என்ற எங்கோ படித்தஞாபகம். அப்படி இருந்த நான் நான்கு வருடம் ஒரு கல்லூரியை நேசித்த கதை இங்கே...
மேலும் வாசிக்க
http://www.jackiesekar.com/2009/05/blog-post_29.html
நன்றி கோவை நேரம்...
ReplyDeleteநன்றி முரளி.. பேரை சொன்னதுக்கு ரொம்ப நேரம் யோசிச்சு அப்புறம் அப்படியே எழுதிட்டேன்..
ReplyDeleteஅண்ணே அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் மிக நெறுங்கிய தொடர்பு உண்டு ( நேர்ல பேசும் போது சொல்றேன் )
ReplyDeleteதிருச்சி 1996லிருந்து முதல் அதிகம் சென்றதுண்டு, இன்னும் தொடர்பில் உள்ள நண்பர்களும் இருக்கின்றனர், கந்தக பூனின்னு சொல்வாங்க அந்த ஊரை அதனால் கொஞ்சம் விலகியே இருப்பேன். பாஸ்ப்போர்ட் வேலைக்காக அதிகம் சென்றதுண்டு சமீபகாலங்களில். நண்பர் ஒருத்தர் பாஸ்போர்ட் விடயங்களுக்கு மிகவும் உதவி செய்வார் ( சார்ஜ் உண்டு தான் ). நிறைய நினைவுகளை கிளப்பி விட்டுட்டீங்க ...
நீங்க வேலை செய்த இடங்களை வைத்தே நிறைய எழுதலாமே, நினைவலைகளை தட்டியெழுப்பி எழுதுங்க ...
ReplyDeleteTHulir, Parthathu illaye. Link Kedaikuma? Mail me plz
ReplyDelete//நான் செய்யும் வேலையை ரசித்து செய்வேன்,நான் வேலை செய்யும் நிறுவனத்தை நேசிக்க மாட்டேன் அது நம் வளர்ச்சியை தடை படுத்தும் என்ற எங்கோ படித்தஞாபகம். //
ReplyDeleteசொன்னவர் இன்ஃபி நாராயண மூர்த்தி, அதை உனக்குச் சொன்னவன் நான்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஶ்ரீரம்
எங்க ஊரு தலைவா.. அதுவும் சத்திரம் பேருந்து நிலையம்.. அது ஒரு பூலோக சொர்க்கம். ஏன்னா அத சுத்தி SRC,Kaveri, HoliCross இப்படி Girls காலேஜ் அதிகம்.
ReplyDeleteமலரும் நினைவுகள்... மேலும் எழுதுங்கள்
Anna antha selva patam peru. Golmal.mammal eruvar tastum onnuthan.Dharma,maldives
ReplyDeleteதிருச்சி பதிவுக்கு திருச்சிகாரர்கள் சார்பில் ஒரு ஓ.......
ReplyDeleteUngalin busy schedule naduvil eppadi oru kalakal website ikku time odhukuvadhu, simply superb.
ReplyDeleteSaravanakumar
//சொன்னவர் இன்ஃபி நாராயண மூர்த்தி, அதை உனக்குச் சொன்னவன் நான்//
ReplyDeleteஏங்க... அவருதான் எங்கயோ படிச்ச நியாபகம்னு சொல்றாரில்ல? நீங்க என்னவோ.. நீங்க அவருக்கு சொன்னதா சொல்றீங்க?
நல்ல பதிவு. படங்கள் அருமை.. நல்ல கட்டுரை.
ReplyDeleteஎன்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க
திருச்சி நல்லா இருக்கு.
ReplyDeleteYou are a true inspiration. Keep writing Jackie
ReplyDeleteதிருச்சியில் 6 ஆண்டுகள் எனது கல்லூரி நாட்களை செலவிட்டிருக்கிறேன்......der s something spl in trichy.....தங்கள் பதிவு மிகவும் அழகாக இருக்கிறது..........thanks
ReplyDeleteதிருச்சியை மீண்டும் பார்க்கக் கிடைத்தது.
ReplyDelete