சின்ன சந்தையும் விட்டு வைக்காத ஆட்டோ ஓட்டிகள்....(பகுதி/2)

சென்னையில் வாழ பழக தொடருக்கு பெரும்பான்மையோர் நீங்கள் கொடுத்த அதரவுக்கு நன்றி...எனக்கு தெரிந்து அது எல்லோருக்கும் உள்ளே பொதிந்து இருக்கும் விஷயம்...

நான் சொல்கின்றேன்..அவ்வளவுதான்...நிறைய பேர் இதை எழுதுங்கள் அதை எழுதுங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே கொடுத்து தங்கள் வேதனைகளை வெளிபடுத்தி வருகின்றார்கள்...எல்லாவற்றையும் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுவோம்....

இன்று சென்னையிலும் தமிழ்நட்டிலும் சட்டென மூளை சூடாகும் ஒரு சின்ன விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள போகின்றேன்.. பிரெஞ்சுகாரர்கள் புதுவையில் எப்படி திட்டமிட்டு சாலை அமைத்தார்களோ அது போல திட்டமிட்ட சாலை தமிழகத்தில் இருப்பது எனக்கு தெரிந்து நெய்வேலி டவுன்ஷிப்...கல்பாக்கம் டவுன்ஷிப்பை குறிப்பிட்டு சொல்லலாம்....

ஆனால் பல லட்சக்கணக்கான மனிதர்கள் வாழும் தமிழகத்தில் அது போலான திட்டமிட்ட நகர சாலைகள் எங்கும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.. மிக குறுகிய சாலைகள்... அதில் ஒரு சிக்னல் அதில் பல்லாயிரக்கணக்கான வாகனத்தின் பயணம்...சென்னையில் அல்லது தமிழகத்தில் ஒரு சிக்னல் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம்... எல்லோரும் நெற்றிவியர்வை வழிந்து சிக்னலுக்காக காத்து இருக்கின்றோம்... சைடில் ஒரு சின்ன வழி இருக்கும் அதில் போனால் சிக்னல் பக்கத்தில் போய் நிற்க்கலாம்... 20 வாகனத்தை கடந்து முன்னே போகலாம் ... அந்த வழியில் ஒரு டூவிலர் மட்டுமே போகலாம்.. அது எல்லோருக்கும் தெரியும்...சரி அஅதில் போய் கொஞ்சம் முன்னே நின்று நேரத்தை மிச்சபடுத்துவோம் என்று நீங்கள் நினைத்து கொண்டு அந்த சந்தில் போக எத்தனிக்கும் போது.. அந்த சந்தில் ஒரு ஆட்டோ போக டிரை செய்யும்...

ஒரு சில நல்ல ஆட்டோ டிரைவர்கள்... அந்த சந்தை பார்த்தும் அதில் போக முடியாது என்று நின்று விடுவார்கள்.. ஆனால் சிலர் வீம்புக்கு உள்ளே நுழைந்து போய்... அந்த சந்தை மறைத்துக்கொண்டு எந்த டூவிலர்காரனும் முன்னே போய்விடாத படி மறைத்துக்கொண்டு நிற்பார்கள்...இதனால் ஒரு 20 டூவீலர்காரர்கள் பயன்பெற்று இருப்பார்கள்...அவர்கள் பயண நேரம் நிச்சயம் மாறு பாடு அடைந்து இருக்கும்....

நானும் கடலூரில் ஒரு வருடம் ஆட்டோ ஓட்டியவன் என்ற முறையில் சொல்கின்றேன்...ஆட்டோக்களின் பெரிய பிரச்சனை என்னவென்றால் அதன் நடுப்பகுதி டிரைவிங் சீட் ஒன்று ஓரத்தில் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை... அது சைடு பார்த்து ஓட்டுவதற்க்குள் தாவு தீர்ந்து விடும் ஆனால் இதில் நடுப்பகுதியில் திராட்டல் இருப்பதால் நடுவில் உட்கார்ந்து இருக்கும் ஆட்டோ டிரைவர் தன்னை டூவீலர் ஓட்டியாகவே தன்னை கருதிக்கொள்கின்றார்....அதனால்தான் சிறு சந்தையும் விடுவதில்லை...இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு எல்லா ஆட்டோவிலும் டிரைவிங் சீட் வலப்புற ஓரத்தில் வைக்க வேண்டும்....செய்யுமா அரசு..????

எல்லோரும் முன்னே போகவேண்டும் என்று ஆசைதான்.... நேரத்துக்கு போக வேண்டும் ஆசைதான்.. அதை குற்றம் சொல்லவில்லை... ஆனால் போகவே முடியாத சந்தில் முன்னே போக வேண்டும் என்றும்... எந்த டூவீலர்காரனும் முன்னே செல்லாத படி..சிதம்பரம் கோவில் நந்தி போல் இருப்பபது எந்த விதத்து நியாயம்.....தானும் படுக்காது தள்ளியும் படுக்காத இந்த போக்கு தமிழகத்தில் பார்த்தும் நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள்...


இப்போதெல்லாம் பல இடங்களில் இது போலான சின்ன சந்துகளில் இரு சக்ர , மற்றும் ஆட்டோ ஓட்டிகளுக்கு போட்டியாக, இன்டிகா கார் டிரைவர்கள் கூட டிரை செய்வது உட்சபட்ச காமெடி....


ஆட்டோகாரர்கள் மற்றும் டூவீலர்காகரர்கள்... புலம்பலை ஓரே நேரத்தில் சொன்னால் அது போரடித்து விடும் என்பதால் துவானம் போல் விட்டு விட்டு புலம்புகின்றேன்...அதே போல் இதில் ஆட்டோகாரன் மட்டம் டூவீலர்காரன் ஒஸ்த்தி என்று சொல்வது நம் நோக்கமல்ல எல்லோர் பக்கத்தில் இருக்கும் அவர்களுக்கே தெரியாமல்... அல்லது தெரிந்தே செய்யும் தவறுகளை நான் பார்த்தவரையில் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்..

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

25 comments:

  1. //ஆட்டோ டிரைவர் தன்னை டூவீலர் ஓட்டியாகவே தன்னை கருதிக்கொள்கின்றார்// பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இதுதான்.

    ReplyDelete
  2. சென்னையில் ஆட்டோ எடுப்பதைவிட கால் டாக்சி எடுப்பது உத்தமம்,
    ஆட்டோவைவிட குறைவாகத்தான் இருக்கிறது.

    இங்கு அரசு கடையான டாஸ்மாக்கில் பில் தருவது இல்லை அதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்

    ReplyDelete
  3. //ஆனால் பல லட்சக்கணக்கான மனிதர்கள் வாழும் தமிழகத்தில் அது போலான திட்டமிட்ட நகர சாலைகள் எங்கும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.//

    கிடக்கறது கிடக்கட்டும் கெழவிய தூக்கி மனைல வைய்யின்னுதான் ப்ரிட்ஜ் கட்டறாங்களே ஜாக்கி! அதுவும் பத்தலன்னா அதும்மேலயே இன்னொரு ப்ரிட்ஜ் கட்டவேண்டியதுதான். :))

    ReplyDelete
  4. இந்த பிரச்சனை ஒரு சங்கிலித் தொடர் பிரச்சனை.

    ரோட்டில் நடந்து செல்லும் மக்களும், சைக்கிள் ஓட்டிகளும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு இடஞ்சலாக தெரிவர்.

    ஆட்டோ மற்றும் கார் ஓட்டுபவர்களுக்கு இரு சக்கர ஓட்டிகள் மிக இடஞ்சலாக தெரிவர்.

    லாரி பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு மற்ற வாகனங்களில் பயணிப்போர் அதிக இடஞ்சலாக தெரிவர்.

    ஆனால் அனைவருக்கும் ஆட்டோ மீது பயம் அதிகம். ஏனெனில் எங்கு எப்படி திரும்பும் என்று கணிக்க இயலாத வண்ணம் ஓட்டுபவர்கள் அவர்கள் தான்.

    ReplyDelete
  5. இந்த பிரச்சனை ஒரு சங்கிலித் தொடர் பிரச்சனை.

    ரோட்டில் நடந்து செல்லும் மக்களும், சைக்கிள் ஓட்டிகளும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு இடஞ்சலாக தெரிவர்.

    ஆட்டோ மற்றும் கார் ஓட்டுபவர்களுக்கு இரு சக்கர ஓட்டிகள் மிக இடஞ்சலாக தெரிவர்.

    லாரி பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு மற்ற வாகனங்களில் பயணிப்போர் அதிக இடஞ்சலாக தெரிவர்.

    ஆனால் அனைவருக்கும் ஆட்டோ மீது பயம் அதிகம். ஏனெனில் எங்கு எப்படி திரும்பும் என்று கணிக்க இயலாத வண்ணம் ஓட்டுபவர்கள் அவர்கள் தான்.

    ReplyDelete
  6. ஜாக்கி இதை விட்டு விட்டீர்களே.
    வேகமாக சென்று கொண்டிருக்கும் திடீரென்று பிரேக் போடுவது அல்லது இடது பக்கம் ஓதுக்குவது...
    நீங்கள் சொல்வது போல நாம் அவசரமாக செல்லும் போது இப்படி நடக்குமானால், சென்னையின் பிரபல கெட்ட வார்த்தை நம்மையும் அறியமால் நம் வாயில் வந்து விடும். இதைத்தவிர வேறு என்ன செய்வது இவர்களை.

    ReplyDelete
  7. சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறது இதுதானா?

    ReplyDelete
  8. சமூகக்கண்ணோட்டம் பதிவில் தெரிகிறது . பகிர்வுக்குங் நன்றி

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. கும்மி அடிபோர்கள்வழங்கும் இந்த ட்ராபியை வேண்டுபவர்கள் எடுத்து சென்று வைத்துக்கொள்ளலாம்.

    http://ponmaalaipozhuthu.blogspot.com//


    அன்றியும் சிறப்பாக கீழே கண்டுள்ள அணைத்து "கும்மி கொட்டும் " பதிவர்களுக்கும் உங்கள் சார்பாகவே அளிக்கபப்டுகிறது.
    பட்டா பட்டி
    யூர்கன் க்ருகியர் (மாப்ள)
    வேலன் (மாப்ள)
    டவுசர் பாண்டி
    சேட்டைக்காரன்
    மான்குனி அமைச்சர்
    Phantom Mohan (பழைய "பருப்பு")
    ஜெய்லானி
    Muthu
    பன்னிகுட்டி ராமசாமி
    பனித்துளி சங்கர்
    ஜாக்கி சேகர் (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்)
    எப்பூடி
    எங்கள் Blog
    மற்றும் வேண்டிய அணைவருக்கும்

    ReplyDelete
  11. நன்றி ராபின்...


    நன்றி செந்தில்.. கால் டாக்சி விலை குறைவுதான்..

    நன்றி சங்கர்

    நன்றி குரு..


    நன்றி குரில் நிலா அந்த சங்கிலி தொடர் எனக்கும் தெரியும்...

    ReplyDelete
  12. நன்றி ராபின்...


    நன்றி செந்தில்.. கால் டாக்சி விலை குறைவுதான்..

    நன்றி சங்கர்

    நன்றி குரு..


    நன்றி குரில் நிலா அந்த சங்கிலி தொடர் எனக்கும் தெரியும்...

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. நன்றி பாலா அது தனி பதிவு...

    நன்றி சவுரி

    நன்றி ரமேஷ்

    நன்றி பனிதுளி சங்கர்..

    நன்றி கக்கு...

    கேள்வி குறியை மட்டும் வச்சிகிட்டு கேள்வி கேட்ட...பதில் சொல்லனுமா..?????சாரி கேட்டுபுட்டிங்க பதில் சொல்றேன்...

    இனி இந்த பின்னுட்டம் அனுமதிக்கபடாது..

    ReplyDelete
  15. இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete
  16. சென்னையில் ஆட்டோவில் பயனிப்பதற்கு உன்மையில் தில் வேணும்பா!

    ReplyDelete
  17. ஜாக்கி
    ப‌ல‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு தேவையான‌ போக்குவ‌ர‌த்து வ‌ச‌தி இல்லாத‌து தான் முத‌ற்குறை இத‌னை சீர் செய்யும் வ‌ரை ந‌ம் சாலைக‌ளை பிர‌ம்ம‌ன் வ‌ந்தாலும் ஒன்றும் செய்ய‌ முடியாது.
    உதார‌ண‌த்துக்கு கோய‌ம்பேடுவில் இருந்து கோட‌ம்பாக்க‌ம் வ‌ர‌னும் என்றால் ப‌ஸ்ஸை விட்டால் வேறு என்னென்ன‌ வ‌ழி இருக்கு?ர‌யில் போக்குவ‌ர‌த்து இல்லை அத‌னால் சாதார‌ண‌ ப‌ய‌ணிக‌ளுக்கு ஷேர் ஆட்டோ அல்ல‌து ஆட்டோ அதுவும் இல்லை என்றால் ஷேர் டாக்ஸி என்று எடுக்க‌வேண்டியிருக்கும்.ப‌ஸ்ஸின் நேர‌ இடைவெளி ப‌ல‌ ப‌ய‌ணிக‌ளை அங்கிருந்து துர‌த்திவிடுவ‌தாலும் ஆட்டோ கைக்கு எட்டும் தூர‌த்தில் இருப்ப‌தால் பொதுவாக‌ ம‌க்க‌ள் அதையே உப‌யோகிக்க‌ வேண்டிய‌ நிர்ப‌ந்த‌ம்.இந்த‌ அவ‌ச‌ர‌ கால‌ யுக‌த்தில் ப‌ஸ்ஸுக்காக‌ ஒருவ‌ர் எவ்வ‌ள‌வு நேர‌ம் காத்துக்கொண்டிருக்க‌ முடியும்?
    ந‌ம்முடைய சாலைக‌ள் தேவைக்கு ஏற்ற‌ பெரிதாக்க‌ முடியாத‌ சூழ்நிலையை அர‌சாங்க‌மே உருவாக்கிவிட்டு இப்போது புல‌ம்புவ‌தில் எந்த‌ பிர‌யோஜ‌ன‌மும் ஏற்ப‌ட‌ போவ‌தில்லை.சாலையை பெரிதாக்க‌ நில‌ ஆர்ஜித‌ம் ப‌ண்ணி அதை செய‌ல் ப‌டுத்த‌ எவ்வ‌ள‌வு வ‌ருட‌ங்க‌ள் ஆகும் என்ப‌தை க‌த்திப்பாரா ம‌ற்றும் தாம‌ப்ர‌ம் சாலைப்ப‌ணிக‌ளை மேற்கொண்ட‌ குத்த‌கைக்கார‌ர்க‌ளை கேட்டால் தெரியும்,ஏனென்றால் ந‌ம்மூர் நில‌ங்க‌ள் அர‌சாங்க‌த்து சொந்த‌மான‌து இல்லை.‌தேவையான‌ல் ஆர்ஜித‌ம் செய்ய‌லாம் அத‌ற்குள் 2 த‌லைமுறையை ச‌ந்திக்க‌வேண்டிவ‌ரும்

    ReplyDelete
  18. டூ வீலர் காரன் மட்டும் என்ன பண்றான், நீங்க கார் ஓட்டுபவர்களை சொல்வதற்குமுன்னல் டூ வீலர் ஓடுபவர்கள் செய்வதை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

    சனிக்கிழமை நடந்த சம்பவம், தேவி தியேட்டரில் இருந்து மவுண்ட் ரோடில் வேளச்சேரி நோக்கி வரும்போது சிக்னலில் சாலையின் கார் போகும் லேனில் மெதுவாக ஒரு 10km வேகத்தில் போன பொது வலது பக்கத்தில் இருந்த டூ வீலர் பயணி எனது காரின் முன் சக்கரத்துக்கு அருகில் இருந்தவர் வலது பக்கத்தை பார்க்காமலேயே வலது புறம் இருந்த சிறிய இடைவெளியில் புகுந்து போக முயற்சிக்க நான் ஹரன் அடித்தும் கண்டுக்க வில்லை, முயற்சியில் எனது வண்டியின் பம்பரில் இடித்து கீழே விழுந்தார், நல்ல வேலை வண்டியை நான் அந்த நேரம் நிறுத்தி இருந்தேன். விழுந்த அவர் என்னை பார்த்துமுறைத்து விட்டு வண்டியை எடுக்காமல் கண்டபடி வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிக்க நான் அமைதியார் இருந்தேன் ( கார் கதவுகளை லாக் செய்துவிட்டுதான் ) திடீரென் அங்கு வந்த போக்குவரத்து காவலாளி அவருக்கு பளாரென் ஒன்று விட்டு நீ வந்து விழுந்துடு அவர ஏண்டா முறைக்கிறாய் வண்டிய நிறுத்திட்டு வா என்று சொனதுதான் தாமதம் உடனே கிளம்பி விட்டார்.

    கடசில எனது பம்பர்ல கொடு விழுந்தது தான் மிச்சம், பைண்டிங் செலவு ஆயிரம் ரூபாய் குறைந்த பட்சம், இந்த மாதிரி வீரத்தளும்புகள் பல உண்டு.
    ஒரு நாள் என்னுடன் காரில் வாருங்கள் நான் காட்டுகிறேன் யார் யார் எவளவு தப்பு செய்கிறார்கள் என்று . கற் ஓடுபவர்கள் உட்பட.

    என்னை போருதவரி சென்னை நகரில் போக்குவரத்தை மோசமாகுவதில் முதலிடம் அரசுப்பேருந்து, அடுத்து ஆட்டோ அப்புறம் இருசக்கர ஓட்டிகள் மற்றும் கார் ஓட்டிகள்.

    ReplyDelete
  19. //கடசில எனது பம்பர்ல கொடு விழுந்தது தான் மிச்சம், பைண்டிங் செலவு ஆயிரம் ரூபாய் குறைந்த பட்சம், இந்த மாதிரி வீரத்தளும்புகள் பல உண்டு.
    ஒரு நாள் என்னுடன் காரில் வாருங்கள் நான் காட்டுகிறேன் யார் யார் எவளவு தப்பு செய்கிறார்கள் என்று . கற் ஓடுபவர்கள் உட்பட.//

    ஏற்கனவே இடப் பற்றாக்குறையாக உள்ள பெரு நகரத்தில் ஒரு காருக்கு ஒருத்தன் என்று உட்கார்ந்து கொண்டு இடத்தை அடைத்துக் கொண்டு செல்வதுடன் இல்லாமல், லேன் டிசிப்ளின் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பது போல எல்லா லேனிலும் நிறைத்துக் கொண்டு ஸ்லோவாக (காருக்கு சிராய்ப்பு ஆகிவிடும் என்று பயந்து கொண்டு) கார் ஓட்டுபவர்கள்தான் என் அனுபவத்தில் பெரிய வில்லன்கள்.

    எவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று தனது காருக்கு டேமேஹ் ஆகிவிடக் கூடாது என்பதில் மட்டும் கருத்தாக, மெதுவாக ஒட்டி டிராபிக் ஜாம் செய்பவர்களையும், ஒரு காருக்கு ஒருத்தன் என்று சென்று இடத்தை அடைப்பவர்களையும் தடை செய்தாலே பாதி பிரச்சினை சரியாகிவிடும்.

    சில விதிவிலக்கானவை தவிர்த்து ஆட்டோ இதுவரை எனக்கு பிரச்சினை செய்தது இல்லை(சென்னையில் 5 வருடங்களாக ஓட்டுகிறேன்).

    ReplyDelete
  20. சொகுசுக் கார்களில் செல்லும் பொறுப்பற்றவர்களின் நடத்தைக்கு ஒரு சின்ன உதாரணம், எந்த சிக்னலில் வேண்டுமானாலும் சென்று பாருங்கள், டிராபிக் அடைபடுவதற்கு காரணமாக கார்களே அணிவகுத்து நிற்பதைக் காணலாம்.

    சில வருடம் முன்பு வரை சென்னை இந்தளவுக்கு இருந்தது இல்லை. என்றைக்கு பெங்களூரைப் போல இங்கும் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியதோ அன்றிலிருந்து பிரச்சினை பெரிதாகத் தொடங்கிவிட்டது.

    ReplyDelete
  21. //ஏற்கனவே இடப் பற்றாக்குறையாக உள்ள பெரு நகரத்தில் ஒரு காருக்கு ஒருத்தன் என்று உட்கார்ந்து கொண்டு இடத்தை அடைத்துக் கொண்டு செல்வதுடன் இல்லாமல், லேன் டிசிப்ளின் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பது போல எல்லா லேனிலும் நிறைத்துக் கொண்டு ஸ்லோவாக (காருக்கு சிராய்ப்பு ஆகிவிடும் என்று பயந்து கொண்டு) கார் ஓட்டுபவர்கள்தான் என் அனுபவத்தில் பெரிய வில்லன்கள்.//


    if i am having a problem with back pain when i am going in two wheeler and i am not affordable to pay auto guys what shall i do other than going by car?

    if i am going to pick my friends or anyothers then is it clasified in the same way?

    i have done 35000kms in car and almost 10000 kms in city. i never drove without a lane decipline but i am not opposing whatg u say. many car drivers are like that and if city limit permits us to go in 40kmph and we do not know from where a two wheeler guy can overtake us and brake in front of us suddenly how can you expect a car to go more than 40kmph?

    thats why i am asking you to come with me for a drive, i will make you experience what are all the problems caqr drivers facing.

    i was doing the same mistake when i drive the bike.

    i have ful right to comments as i have an experience of 50000kms in bike and 35000 kms in car and traffic dicipline was thought by my dad who is drove government bus for almost 20 years and driving reputed school bus for two years.


    i am just asking any onre of you to come with me for a drive then write about your experience

    ReplyDelete
  22. எனக்குத் தெரிந்து எந்த ஆட்டோவிலும் இட, வலது இண்டிகேட்டர் விளக்குகளைக் கண்டதில்லை.

    ReplyDelete
  23. அட...நம்ம ரெண்டு பெரும் நிறைய விஷயத்துல ஒத்து போறோம் ஜாக்கி......
    ஒரு பட்டய படிப்பு படிக்க வேண்டி இருந்ததால் காலை முழுக்க பயிற்சி வகுப்புக்கு போய் விட்டு ,
    மதியத்துக்கு மேல் நண்பனின் ஆட்டோவை எடுத்து கொள்வேன்...
    சென்னை முழுவதும் சவாரி ஏற்றுவேன்...! :-) :-)
    ஆனால் கிலோமீட்டருக்கு எட்டு ரூபாய்தான் கணக்கு வைப்பேன்....
    சிலநேரம் நான் கேட்க்கும் கூலியை பார்த்தே என்னை விநோதமாக பார்த்த சென்னைவாசிகளும் உண்டு...
    அதில் பழக்கமான நிறைய கல்லூரி மாணவிகளும் உண்டு...
    மறக்க முடியா பொழுதுகள் அவை...
    (ஒரு ஏழு வருடங்களுக்கு முன்னாள் வைத்த அனுபவம்)

    :-) :-)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner