கற்றது களவு திரைவிமர்சனம்...

திருட்டுகள் பல வகைபடும் தினமும் பல வகையான நூதன திருட்டுகள் நடை பெற்றவண்ணம் உள்ளன... நேற்று அமைந்தகரையில் வீட்டில் தனியாக இருந்த வயதானபெண்மணியிடம்...ஒருவன் தான் தமிழ் நாடு மின்சாரதுறை ஊழியர் என்றும்....
உங்கள் வீட்டில் ஏற்படும் மின்கசிவினால்தான் இந்த பகுதியில் மின்தடை எற்படுவதாக சொல்லி... வீட்டின் உள்ளே நுழைந்து எல்லா இடத்தையும் செக் செய்வதாக நடித்து, வாட்டர் ஹீட்டர் மேல் இருந்துதான் பிரச்சனை... அதன் மேல் தங்கம் வச்சா என்ன பிரச்சனைன்னு கண்டுபடிச்சிடலாம்னு சொல்ல.. அந்த பாட்டியும் தன்னுடைய 4பவுன் செயினை கழட்டி கொடுத்து இருக்கு... இவனும் வாட்டடர் ஹீட்டர் மேல வைத்து விட்டு குடிக்க தண்ணி கேட்டு இருக்கின்றான்...அந்த அம்மா தண்ணி எடுத்துகினு வந்தவுடன் தண்ணீர் குடித்து விட்டு அபிட்டாகி இருக்கின்றான்...

சரி இந்த விஷயம் அந்த பெண்மணிக்கு தெரியாதா? தெரியும்... சில பேர் எவ்வளவு படிச்சவைனையும் நம்பற அளவுக்கு பேசுவாங்க...அதுக்கு ரொம்ப பிளஸ்பாயின்ட் அவுங்க அப்பாவி முகமும் ஒரு காரணமா இருக்கும்.....


நானே ஒரு டாகில்ட்டி பார்ட்டி எனக்கே ஒருத்தன் 50ரூபாய் அபிட் விட்டான்...காலையில் ஒருத்தன் மஞ்சள் வேட்டி மஞ்சள் சட்டை போட்டு இருந்தான்...அங்காளம்மனுக்கு கூழ் ஊத்த வேண்டும் ஊர் வசூல் இது என்று சொன்னான்... புது இடம் சரி எவ்வளவு என்றேன்.. ? நன்கொடை புத்தகத்தை கொடுத்தான் அதில் 1000,500, 200, எல்லாம் எழுதி இருந்தது..

ஊர்வசூல்னு செல்லற... நீ மட்டும் தனியா வந்து இருக்க...மத்த ஊர்காரங்க எல்லாம் எங்கே என்று கேட்ட போது பக்கத்து விட்டில் வசூலிப்பதாக சொன்னான்...

நானும் கழுவாத மூஞ்சியை வச்சிக்கினு... கதவு திறந்து பக்கத்து வீட்டுக்காரனை காலையில ரொம்ப டிஸ்டர்ப் செய்யவேண்டாம்னு... நான் தம்பி எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை ஊர் வசூல்னு சொல்லறதால...இந்தா 50ரூபாய் வச்சுக்கோ என்று சொல்லி நன்கொடை புத்தகத்தில் அணுஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது போல் போட்டு தொலைத்து விட்டு, காலை பத்து மணிக்கு பக்கத்து அக்கத்து வீடுகளில் நீங்கள் அங்காளம்மன் கோவில் கூழ் திருவிழாவுக்கு எவ்வளவு கொடுத்திர்கள் என்று கேட்க...


அப்படி யாரும் வரவில்லை என்றும்.. இங்கு அப்படி ஒரு கோவில் இல்லை என்றும் சொல்ல அப்புறம்தான் அவன் எனக்கு மட்டும் ஸ்பெஷல்கூழ் ஊத்திவிட்டு சென்றது எனக்கு தெரிய வந்தது....இதே போல் ஒரு டகால்ட்டி பார்ட்டி பற்றிய கதைதான்... கற்றது களவு....

கற்றது களவு படத்தின் கதை என்ன?
கிருஷ்ணா மாணவர்களுக்கு பயனுள்ள ஒரு பேங்க் திட்டத்தை யோசித்து வைத்து இருக்க.. ஒரு தனியார் பேங்க் சேர்மேன் சந்தனபாரதியுடம், கிருஷ்ணா அந்த மாணவர் திட்டத்தை விவரிக்க அந்தபுராஜக்ட்டை தனது என்று சொல்லி சந்தானபாரதி பேர் வாங்கி கொள்கின்றார்..கிருஷ்ணாவை நம்ப வைத்து கழுத்து அறுத்த காரணத்தால் சந்தானபாரதியை பழி வாங்க கிருஷ்ணா ஏமாற்ற நேரம் பார்த்து கொண்டு இருக்க...


வீட்டில் டீச்சர் வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாய படுத்திய காரணத்தால்... ஹேர்ஹோஸ்டல் ஆக வேண்டும் என்ற கனவோடு சென்னை வரும் விஜயலட்சுமி(வேணி)....சென்னை வந்து கனவு சிதைந்து கிருஷ்ணாவிடம் நட்பாக... சந்தானபாரதியை ஏமாற்றுவதில் கிருஷ்ணாவுக்கு சின்ன சின்ன உதவி செய்ய ஆரம்பித்து, நிறைய திருட்டுகள் செய்து கொண்டே இருக்க....


இருவரும் ஒரு அரசியல் தலைவர் விஷயத்தில் மூக்கை நுழைக்க.. இவர்களை போலிஸ் என்கவுன்டரில் போட அலைகின்றது... அவர்கள் தப்பித்தார்களா? என்பது மீதி கதை...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது... ஆனால் அலிபாபா படத்துக்கு பிறகு கிருஷ்ணா நடிக்கும் படம்.. பட் அலிபாபா ஒரு நல்லபடம்...அந்த அளவுக்கு இதில் சுவாரஸ்யம் குறைவு என்பேன்...

அஜித் நடித்த தமிழ் பில்லா படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்னா நடித்த படம்...அவர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா எடுத்து கொடுத்து இருக்கும் படம்...

கிருஷ்ணா இந்த படத்தில் அலிபாபா அளவுக்கு அதிகமாக கவரவில்லை...விஜயலட்சுமி சென்னை 28க்கு பிறகு நல்லவளர்ச்சி அடைந்து இருப்பது படத்தின் பிரேம்களில் தெரிகின்றது...

படத்தின் டைட்டில் பாடலை தவிர மற்றது ஏதுவும் சொல்லி கொள்வது போல் இல்லை...
படத்தின் பல இடங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் முழு படத்தையும் நகர்த்த அந்த சுவாரஸ்யம் மட்டுமே போதுமானதாக இல்லை...

இராமேஸ்வரம் சேசிங் காட்சிகள் ஒரு நல்ல ஆங்கில படத்தை கண்முன் விரிய வைக்கும் அளவுக்கு சேசிங் இருந்தது... அதன் பிறகான டுவிஸ்ட் படம் நெடுகிலும் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.....

டான்ஸ்மாஸ்டர் கல்யான் இதில் வில்லன் போலிசாக நடித்து இருக்கின்றார்... சில வசனங்கள் நன்றாக இரந்தாலும் சில மேனரிசங்களில் பேசும் வசனங்கள் திணிக்கபட்டவையாகவே இருக்கின்றன...

இராமேஸ்வரம் காட்சிகள் மற்றும் கல்யாண் மணலில் படுத்து இருக்கும் போது
எடுத்து இருக்கும் அந்த லாங் ஷாட்...கிளைமாக்ஸ்க்கு முன் ஒரு விட்டில் இருவரையும் தே ட போகும் அந்த சேசிங் காட்சிகள் நன்றாகவே இருக்கின்றன....
சும்மா இருக்கும் போது பொழுது போகவில்லை என்றால் இந்த படத்துக்கு போகலாம்.. சில இடங்களில் சுவாரஸ்யபடுத்தி இருக்கின்றார்கள்...

இயக்குனருக்கு இது முதல் படம் என்று நினைக்கின்றேன்.. சர்கஸ் சாங் எல்லாம் இடைச்செருகலாக துறுத்திக்கொண்டு தெரிகின்றன...
தியேட்டர் டிஸ்க்கி...

விருகம்பாக்கத்துல தேவிகருமாரிஅம்மன் ஒரு தியேட்டர் இருக்கு அதுல சக்தி கருமாரின்னு ஒரு தியேட்டர்... அந்த தியேட்டரை நீங்க பார்த்து இருப்பிங்க....

சண்டைக்கோழி படத்துல தியேட்டர்ல மீரா ஜாஸ்மீன் கத்தி கூச்சல் போடுவாங்களே... படம் கூட தலைகிழ ஓடுமே... அதே தியேட்டர்தான்...

இந்த படம் தலைகிழ ஓடலை பாதியா ஒடிச்சி... சரி மாத்துவான் மாத்துவான்
பார்த்த மாத்தலை வழக்கம் போல கத்தினதும் சிரி செய்யபட்டது..

கீழ இருக்கற தேவிகருமாரி அம்மன்.. சூப்பரா பண்ணிட்டாங்க.. மத்த ரெண்டு தியேட்டருக்கு எப்ப விடிவுகாலம்னு தெரியலை...

மேல் பக்கம் டைட்டில் கிளியரா தெரியுது... கீழ் பக்கம்... அவூட்ல தெரியது... படம் முழுக்க நிறைய அவுட்... புரஜக்டர் லென்ஸ் அரதபழசா போயிடுச்சி.. அதனால் ரசிச்சி நெத்தி வேர்வை நிலத்துல சிந்தின உழைப்பை ரசிக்க முடியலை.....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

9 comments:

 1. தல நான் உங்க bloga ஒரு 5 மாசமா follow பண்றேன் . உங்களோட ஒவொரு சினிமா விமர்சனமும் பக்கவ இருக்கு . ஒரு படத்த பத்தி எழுதறதுக்கு முன்னாடி ஒரு ,சின்ன சம்பவம் சொல்றிங்க பாருங்க, அது தான் உங்களோட டச் சார், இந்த formula உங்களுக்கே உரியது அதனால தான் எந்த விமர்சனமாக இருந்தாலும் அத சுவாரசியமாக குடுகிரிங்க.

  வாழ்த்துக்கள்.

  அப்புறம் ஒரு விசயம் நானும் cuddalore கூத்தபாக்கம் தான். ஆனால் இப்போ சென்னை வாசம்.

  ReplyDelete
 2. அப்புறம் ஒரு விசயம் ஒங்க கிட்டே இருந்து "மைகேல் மதன காமராஜன் " மற்றும் "அபூர்வ சகோதரர்கள் " திரை விமர்சனம் எதிர்பார்கிறேன் .

  ReplyDelete
 3. எனக்கும் அலிபாபா படம் பிடிக்கும்....ஹீரோவை தவிர....  பார்க்கவா?? வேணாமா??னு சொல்லுங்க அண்ணே...


  //நல்லவளர்ச்சி அடைந்து இருப்பது படத்தின் பிரேம்களில் தெரிகின்றது...//  ஹி ஹி...அதுக்காக எல்லாம் போக முடியாது....

  ReplyDelete
 4. சுறா மாதிரியான படங்களுக்கு மத்தியில் இந்த மாதிரி புது இயக்குனர்கள் பாராட்ட பட வேண்டியவர்கள்

  ReplyDelete
 5. Vanakkam Nanbarey...

  Arumaiyaana Cenima vimarsarag Neengal...

  ReplyDelete
 6. அணைத்து விமர்சனங்களும் அருமை.

  உங்களை FOLLOW செய்கிறேன் ஆனால் என் DASHBOARD இல் அப்டேட் ஆவது இல்லை, ERROR காட்டுகிறது . கொஞ்சம் CHECK செய்யுங்கள்

  ReplyDelete
 7. // அவன் எனக்கு மட்டும் ஸ்பெஷல்கூழ் ஊத்திவிட்டு சென்றது எனக்கு தெரிய வந்தது.... //

  மனசு இரக்கப்பட்டா இப்படிதான்ணே
  அவர்கள் நல்லா இருக்கட்டும்..!

  ReplyDelete
 8. // அவன் எனக்கு மட்டும் ஸ்பெஷல்கூழ் ஊத்திவிட்டு சென்றது எனக்கு தெரிய வந்தது.... // hahahhahahhahahhah!!!!!!
  hahhah!!!#
  hehhe!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner