குதுகலிக்க சென்னை தயாராகிவிட்டது.... அந்த கொண்டாட்டம் வருடத்துக்கு ஒரு முறை நடக்கும்... அந்த திருவிழாவுக்கு பெயர்... சென்னை உலக திரைப்டவிழா...
மேட்டுக்குடி மக்கள் ராகங்களை தெரிந்து கொண்டு நல்லி பட்டை கட்டிக்கொண்டு... டிசம்பர் மாதத்தில் சபா சபாவாக அலைந்து... பாடல் கேட்டு, லயித்து... உங்க அம்பி ஸ்டேட்ஸ்ல எங்க இருக்கான் போன்ற... சம்பிரதாய கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கும் .... மேட்டுக்குடி மக்கள் மட்டும் சந்தோஷமாக டிசம்பர் பொழுதுகளில் இருந்தது அந்த காலம்...
சினிமா ரசிகர்களுக்கு ஒவ்வோறு வருடமும் டிசம்பர் மாதம் மறக்க முடியாத மாதமாக கடந்து ஆறு வருடங்களாக மாறி இருக்கின்றது...
கடந்த 6 வருடமாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்து கொண்டு இருக்கின்றது.. அதில் ஒரு வருடத்தை தவிர மற்ற எல்லா வருடங்களிலும் கலந்து கொண்டு நான் சந்தோஷபட்டு இருக்கின்றேன்... இந்த வருடம் எழாவது வருடம்...
இந்த விழாவில் நான் கலந்து கொள்வது சந்தேகம்தான்.. ஏனெனில் இரண்டு படங்கள் படபிடிப்பு நடந்து கொண்டு இருப்பதால் தனிதெலுங்கான போல் சாத்திய கூறுகள் ரொம்பவும் கம்மியாக இருக்கின்றது...
ஒரு நாளைக்கு 5 படம் மொத்தம் மூன்று தியேட்டர்கள்... உட்லண்ட்ஸ்... உட்லண்ட்ஸ் சிம்பொனி..,சவுத் இன்டியன் பிலிம் சேம்பர்... அப்படின்னா ஒரு நாளைக்கு 15 படம் திரையிடுவார்கள்...ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு 5 படம்தான் பார்க்க முடியும்.... மொத்தம் பத்து நாட்கள்...பத்து நாளும் பெஸ்ட்டிவல் அட்டென்ட் பண்ணினா.... ஒரு ஆள் சராசரியாக 50 படம் பார்க்கலாம்....
படம் திரையிடலுக்கு முன்பே திரைப்படம் பற்றிய சிறிய அறிமுகத் புத்தக வடிவில் கொடுத்து விடுவதால்.. நீங்கள் படங்களை செலக்ட் செய்து பார்க்கலாம்...
டிக்கெட் விலை 500 ரூபாய்.. மேம்பர்களுக்கு என்றால் 300 ரூபாய்...
டீ , பட்டை சோறு சாப்பிட்டு விட்டு அடுத்த படத்துக்கு ஓடிய பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன...
38 நாடுகளில் இருந்து மிகச்சிறந்த படங்கள் திரையிட இருக்கின்றார்கள்... சில படங்கள் நெஞ்சை தொடும்.. சில படங்கள் குப்பையாக இருக்கும்... சில படங்கள் எப்படி இந்த படம் எல்லாம் பெஸ்ட்டிவலில் வந்தது??? என் ற கேள்விகளோடு பார்ப்பீர்கள்....
படம் நன்றாக இருந்தாலும் இல்லா விட்டாலும் படம் முடிந்ததும் எழுந்து நின்று கை தட்டுவார்கள்...மிக அமைதியாக படம் பார்ப்பார்கள்....
18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அனுமதி...
எந்த படத்துக்கும் சென்சார் கிடையாது.....
நான் பார்த்து எழுதிய பல படங்கள் இது போல் பெஸ்ட்டிவலில் பார்த்ததுதான்... எங்க டிவிடி கிடைக்கும்? என்றால் நான் எங்கே போவது....
பலர் வீட்டில் இருந்து ஆபிசுக்கு போவது போல் மதியம் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து சாப்பிட்டு விட்டு படம் பார்ப்பார்கள்...
பத்து நாளைக்கு லாஸ் ஆப் பே பரவாயில்லை என்றால் படவிழாவில் கலந்து கொள்ளுங்கள்...
இப்போது எல்லாம் விஸ்காம் மற்றும் எல்க்ட்ரானிக் மீடியா மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அதிக அளவில் பங்கு பெருகின்றார்கள்...
மாணவர்களுக்கு டிக்கெட் 300 ரூபாய் மட்டுமே...கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் அனுமதி...
விழாவில் சினிமா பிரபலங்கள் சர்வசாதாணமாய் வந்து போவார்கள்... 3 வது சென்னை உலக படவிழாவில் எனது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தவர்.. நம்ம சியான் விக்ரம்
மேலும் விபரங்களுக்கு இந்த தளத்துக்கு சென்று விபரம் அறிந்து கொள்ளுங்கள்... சென்னை உலக படவிழா...
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நல்ல தகவல் ஜாக்கி!
ReplyDeleteசூப்பருண்ணே... ஒரு படத்துக்கு டிக்கெட் 500 ரூபாயா? சாதாரணஆளுங்க ஒருபடமே பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்....
ReplyDeleteநன்றி இளவட்டம்..
ReplyDeleteஅடுத்த வருஷம் நான் ரெண்டு சினிமா பிரபலத்திற்கு நடுவில் இருந்து பார்ப்பேன்...
ReplyDeleteசூப்பருண்ணே... ஒரு படத்துக்கு டிக்கெட் 500 ரூபாயா? சாதாரணஆளுங்க ஒருபடமே பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்...//
ReplyDeleteஎப்பா ஒருபடத்துக்கு 500 ரூபாய் இல்லைப்பா... 10 நாளைக்கு 500 ரூபாய்...16ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை மூன்று தியேட்டர்ல திரையிடும் 150 படத்துக்கு நுழைவு கட்டணம் 500 ரூபாய் மட்டுமே...
ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்துக்குனு போனா.. உன் பேரு போட்டு உனக்கு ஒரு கழுத்து பட்டை கொடுத்துடுவாங்க... அதை பத்து நாளும் 3தியேடட்ர்லயும் எப்ப வேனா காமிசிட்டு உள்ளே போகலாம்.. வெளிய வரலாம் போதுமா????
விரிவான தகவலுக்கு நன்றி...
ReplyDeleteஉபயோகமான பதிவு. பகிர்தலுக்கு நன்றி தல.
ReplyDeleteதகவலுக்கு நன்றி அண்ணே...
ReplyDeleteஉட்கார இடமெல்லாம் கிடைக்குமா??
இல்ல நின்னுக்கிட்டு
தான் பார்க்கணுமா??
அருமை அண்ணே,
ReplyDeleteபல அறிய தகவல்களுக்கு நன்றி,
இங்கு இதே பேக்கேஜ் 150 திர்காம் அதுவும் ஒரு படத்துக்கு ஒரு ஜோடிக்கு. மிகவும் நியாயமான கட்டணம், அண்ணே இதுக்குமா நெகெடிவ்?
ஜாக்கி, நான் நுழைவு சீட்டு எடுத்து விட்டேன்.
ReplyDeleteஅதற்குள் ஒரு வருடம் ஒடி விட்டதா..??
ஜெட்லி, நன்றாக வசதியா உட்கார்ந்து பார்க்கலாம்.
ReplyDeleteகவ்லை வேண்டாம்.
நல்ல தகவல்.. நன்றி நண்பரே.
ReplyDeleteநல்ல தகவல் நன்றி.இதில் தமிழ் படம் ஏதும் திரையிடவில்லையா.
ReplyDelete