ஏழாவது சென்னைசர்வதேச திரைபடவிழா ஒரு பார்வை...(புகைபடங்களுடன்)
போன வருடம் போல் இந்த வருடம் முதல் நாள் திரைப்பட விழா ஏனோ களை கட்டவில்லை.... இருப்பி்னும் இந்த பெஸ்ட்டிவலில் கல்லூரி பெண்கள் பலர் கலந்து கொண்டது நன்றாக இருந்தது... எனது கல்லூரியில் இருந்து மட்டும் 75 மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கின்றார்கள்..
இருப்பினும் இரண்டு படங்கள் நேற்று பார்த்தேன்.... ஒரு குரோஷியா படமும் ,ஒரு ஹங்கேரி படமும் பார்த்தேன்... கலந்து கொள்ளவே முடியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது இறைவன் கருனையால் கலந்து கொண்டேன்....
அதிகமான மாணவ மாணவிகள் காரணமாக தியேட்டரில் அமைதியாக படம் பார்க்கமுடிவதில்லை... குசு குசு என்று ஏதாவது பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்... எதாவது கமென்ட் அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. இன்னும் பெண் பிள்ளைகளிடம் தன்னை ஹீரோவாக உயர்த்தி கொள்ள மற்றும்அவளின் பார்வை இவன் பக்கம் திரும்ப வேண்டும் என்ற காரணத்தால் மொக்கை கமென்ட் எல்லாம் அடித்துக்கொண்டு இருந்தார்கள்....
விழா ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்ய வில்லை.... அதனாலா என்னவோ பெரிய அளவில் கொண்டாட்டம் இல்லை என்பேன்...
பதிவர்களில் நான், வண்ணத்து பூச்சி சூர்யா, மட்டும் முதலில் இரண்டு படங்கள் பார்த்தோம் இரவு உண்மைதமிழன் அவர்கள் வந்து இணைந்து கொண்டார்கள்...அவ்ருடன் ஜுனியர் விகடனில் தொடர்ந்து எழுதும் பரகத் அலி வந்து இருந்தார்... அவரை போன வருடம் உலக படவிழாவில் அறிமுக விழாவின் போது பார்த்தேன்... அதன் பின் இப்போதுதான் பார்க்கின்றேன்...
உதவிஇயக்குனர்கள்... உதவி கேமரமேன்கள் போன்வர்களுக்கும் கட்டண சலுகை 300 ரூபாய் மட்டுமே.. உங்கள் சங்க கார்டை எடுத்துக்கொண்டு பொய் காட்டினால் 300 டிக்கெட் எடுக்கலாம்...
மாலை விழா தொடங்கியது .. விழா நிகழ்ச்சிகளை பாத்திமா பாபு தொகுப்புரை செய்தார்... வழக்கம் போல் இந்த முறையும் பேரை மறக்காமல் அழைத்தார்...
விழாவுக்கு தமிழக பிரபலங்கள்.... பருத்தி வீரன் கார்த்தி, தேவயானி,பேராண்மை இயக்குனர் ஜெனநாதன் போன்றவர்கள் வந்தார்கள்...
கார்த்தியை விட இயக்குனர் ஜெனநாதனுக்கு பயங்கர கைதட்டல் கிடைத்தது... தேவயானி இரண்டு வரிகளில் பேசி முடித்துக்கொண்டார்... பின்லான்டு, ஜெர்மன், யூ எஸ் ஏ போன்ற நாடுகளின் துதரக அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்க்ள்...பல நாடுகளின் இயக்குனர்கள் தொடக்க நாளிலேயே வந்து ஆச்சர்ய படுத்தினார்கள்....
வழக்கம் போல் விழாவை செய்தி மற்றும் ஒளிபரப்பு இனையமைச்சர் ஜெகத் ரட்சகன் விழாவினை தொடங்கி வைத்து பேரன்பு மிக்க பெரியோர்களே என்று ஆரம்பித்து தமிழ அரசியல்வாதிகளின் அக்மார்க் பேச்சினை பேசினார்....
எஸ்வீ சேகர் தலையில் கட்டுடன் வந்து இருந்தார்... என்ன சார் தலையில் கட்டு என்று டைரக்டர் விக்ரமன் மனைவி கேட்க ??? அடிபட்டதைவிட இதற்க்கான விளக்கம் சொல்லி சொல்லி வாய் வலிக்கின்றது என்றார்...
பாத்திமா பாபுவிடம் ஒரு அர்ஜென்டினா பெண் இயக்குனர்.. உங்கள் நாட்டு திரைப்பட விழாவில் என்ன பெண்களை அதிக அளவில் பார்க்க முடியவில்லை என்று கேட்டு வைத்தாரம்.. என்னபதில் சொல்வது....??? எனது நாட்டு பெண்கள் இப்போதுதான் மெல்ல வெளியே வருகின்றார்கள் என்று சொல்லத்தான் எனக்கு ஆசை...
அதே போல் இந்த வருடம் ஒரிஜினல் உலக சினிமா டிவிடிக்கள் சிலவற்றை தியேட்டரில் விற்றுக்கொண்டு இருந்தார்கள்....விலை கேட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள் ஒரு படத்தின் விலை 300ரூபாயாம்....
புகைபடங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்.....
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
சென்னை உலக படவிழா
Subscribe to:
Post Comments (Atom)
கவரேஜ் சூப்பர்.
ReplyDeleteஆனா நீங்களும் எங்க அண்ணன் உண்மை தமிழன் போடோவ போடலியே???
very good job.
ReplyDeleteThanks to you.
ஜாக்கியண்ணே..
ReplyDeleteஇவ்ளோ அவசரமா பதிவை போட வேண்டுமா..?
நிறைய எழுத்துப் பிழைகள்..! வலையுலகில் இத்தனை மாதங்கள் அனுபவம் வாய்த்த பின்பும் இப்படி தப்பும், தவறுமாக எழுதினால் எப்படிங்கண்ணா..?
[[[ராஜகோபால் (எறும்பு) said...
ReplyDeleteகவரேஜ் சூப்பர். ஆனா நீங்களும் எங்க அண்ணன் உண்மைதமிழன் போடோவ போடலியே???]]]
இந்தப் பதிவுக்கேற்ற பொருத்தமான முதல் பின்னூட்டம்..
சும்மா 'நச்'ன்னு இருக்குங்கண்ணா..!
நன்றி ஜாக்கி.
ReplyDeleteமாலை ”பெட்ரோ”வின் அருமையான படத்தை மிஸ் பண்ணிட்ட..
உ.தவும் பாதியிலேயே எஸ்கேப்.
Thanks a Ton Jackie
ReplyDelete///////விலை கேட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள் ஒரு படத்தின் விலை 300ரூபாயாம்....////////
ReplyDeleteஒரிஜினல் ரேட் அ விட கம்மி தானே தல
////அதிகமான மாணவ மாணவிகள் காரணமாக தியேட்டரில் அமைதியாக படம் பார்க்கமுடிவதில்லை... குசு குசு என்று ஏதாவது பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்... எதாவது கமென்ட் அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. இன்னும் பெண் பிள்ளைகளிடம் தன்னை ஹீரோவாக உயர்த்தி கொள்ள மற்றும்அவளின் பார்வை இவன் பக்கம் திரும்ப வேண்டும் என்ற காரணத்தால் மொக்கை கமென்ட் எல்லாம் அடித்துக்கொண்டு இருந்தார்கள்....//
ReplyDeleteதிரைப்பட விழாவிற்கு கல்லூரி மாணவர்கள் பொருத்தமா என்பது எனக்கு புரியவில்லை..அவர்கள் அதன் முக்கியத்துவம் புரியாமல் சத்யம் திரை அரங்கில் படம் பார்ப்பது போலத்தான் பார்ப்பார்கள்.
நல்லாயிருந்துச்சு.
ReplyDeleteஇண்டரெஸ்டிங்கா எதாவது படம் பார்த்தீங்கன்னா அதப்பத்தி எழுதுங்க.
300 ரூபாயா ???. ரொம்ப அதிகம்
நான் நேத்து மதியம் அந்த பக்கம் வேலை விஷயமா
ReplyDeleteவந்தேன்....கூட்டம் ரொம்ப கம்மி தான் போல...
சூடான சூப்பரான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி..
ReplyDeleteஅண்ணே நல்ல இரண்டாம் தொடர்.ஓட்டுக்கள் போட்டாச்சி
ReplyDelete/விலை கேட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள் ஒரு படத்தின் விலை 300ரூபாயாம்..../
ReplyDeleteOriginals are always costly and creators earn more money through these sales where as we got used to pirated DVD's . In US Piracy is considered as big crime so people are ready to pay for buying the originals . We too have lot of laws but implementation is the problem
கலக்குங்க தலைவரே ..............
ReplyDeleteஎன்ன என்ன திரைப்படங்கள் என்று ஒரு வரிசை செய்தாகி விட்டது - டி.வி.டி தான் நம்மால் முடிந்த விஷயம்..!! எனவே அடுத்த 2 மாதத்துக்கு இதுதான் ஓடும்.!!
ReplyDeleteநானும் இரண்டு முறை இப்படி திரைப்பட விழாக்களில் திரைப்படங்கள் பார்த்தேன் - பெரும்பாலும் மோசமான அனுபவங்கள் - இந்த முறை கணிசமான பதிவர்களும் வருவார்கள் எனவே செளகரியமாக இருக்கும் என்பது தோழியின் கருத்து. நான் ரிஸ்க் எடுக்க தயாரில்லை..
i wish to be a member in indo cine appreciation foundation. can anybody help me. plz mail me at vishal_1719@yahoo.co.in
ReplyDelete