இயக்குனர் பாலசந்தரின் செகன்ட் இன்னிங்ஸ்...
இன்று இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களின் மேடைநாடகம் ஒரு கூடை பாசம் பார்த்தேன் .. திரும்பவும் அவர் மேடை நாடகம் டைரக்ட் செய்வதைதான் செகன்ட் இன்னிங்ஸ் என்று அறிவித்தார்.......நண்பர் உண்மை தமிழன் நாடகம் பார்க்க எனக்கு மற்றும் சில பதிவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்ததார்..
பதிவர்களில் நான், கேபிள்,நிலாரசிகன் போன்றவர்கள் மட்டு்மே வந்து இருந்தோம்...இரண்டேகால் மணிநேரம்... ஒரு வீட்டு செட்டை மாற்றாமல் கதை சொன்னது கேபியின் சாதனை என்பேன்...
இதற்கு முன் நான் ஒய்ஜி மகேந்திரன் மேடை நாடகம் பார்த்து இருந்தாலும் இது எனக்கு இரண்டாவது நாடகம்...
இரண்டேகால் மணி நேரத்தில் அரங்கம் பலமுறை விழுந்து விழுந்து சிரித்தது...கேபியின் வசனங்கள் படு ஷார்ப்...
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்க்கு அவரது வசனங்கள் ஒரு உதாரணம்... நடித்த எவரும் நடிப்பை மிகை படுத்தி நடிக்கவில்லை...
நாடகம் ஆரம்பிக்கும் முன் கேபி மைக்கில் நாயகன் படம் சிறந்த 20 படங்களில் ஒன்றாக தேர்வு ஆனது குறித்து இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி பாராட்டினார்...
இந்த நாடகம்... ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக பார்க்கும் உணர்வை உங்களுக்கு தந்தால் அதுவே எனக்கு வெற்றி என்றார்....அந்த வெற்றியை அவர் ரொம்ப இசியாக பெற்றுவிட்டார்...
கதை ஒன்றும் பெரிசாக இல்லை.. ஒரு குடும்பத்தில் திருமணத்தை பிடிக்காத மூத்த பெண்.. எவ்வாறு மெல்ல தனது மனதை மாற்றிக்கொள்கின்றாள் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லி இருக்கின்றார்...
இப்போது இருக்கும் சமுக கோபங்களை தனது கேரக்டர்கள் மூலம் ஒரு பிடி பிடிக்கின்றார்...அதே போல் தனது படைப்புகளை கூட அவர் கிண்டல் அடிக்க தவறவில்லை...
இருமல் தாத்தா போல் இந்த நாடகத்திலும் ஒரு கேரக்டர்....
நடித்த எல்லோரும் ரொம்பவும் பக்காவாக ரொம்பவும் புரோபஷனலாக நடித்தார்கள்.... வீட்டில் பெரிய பையனை காதலிக்க வரும் பாத்திமா பாபுவின் மகள் கேரக்டர் ....வீட்டை விட்டு வெளியே போகும் போது... போட்டுக்கொண்டு வந்த செருப்பை எடுத்து சென்றது... அருமை...
அதே போல் ஸ்கிரின் எட்ஜ் வந்து உள்ளே போகும் போதே நடிக்கும் கதாபாத்திரங்கள் ஒரு தொய்வு நிலையை காட்டும்... ஆனால் இந்த நாடகத்தில் ஒரு வீட்டின் அறைக்குள் எப்படி செல்வார்கள் என்பதை போல் சென்றது கேபியின் பர்பெக்ஷன் தெரிந்தது...
நாடகத்தை தூக்கி நிறுத்துவது நடிகை ரேணுகாதான்.. நமக்கு இப்படி ஒரு கண்டிப்பான அக்கா இருக்க கூடாதா? என்று என்னும் அளவுக்கு அவரின் நடிப்பு அற்புதம்...
இந்த நாடகத்தின் ஸ்கிரிப்டை எந்த உதவியாளரும் வைத்துக்கொள்ளாமல்... 160 பக்கத்துக்கு இந்த வயதில் கேபியே எழுதி இருக்கின்றார்.... அதனை டைப்பில் அடித்த உதவி புரிந்தவர் நமது பதிவர் உண்மை தமிழன் அவர்கள்...
கிருஷ்ணா ஸ்வீட்டில் ஒரு லட்டும்... கொஞ்சம் மிக்சரும்... ஒரு ஐயராத்து காபியும் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டார்கள்...
நாடகம் முடிந்து நான், கேபிள், நிலாரசிகன் , உண்மை தமிழன் மூவரும் தெரு முனை தேநீர் கடையில் பேசி வழக்கம் போல் பிரிந்தோம்....
குறிப்பு.... படபிடிப்புக்காக இன்று பாண்டிச்சேரி போகின்றேன்.... மற்றவை நேரம் கிடைக்கும் போது....
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
மீ தெ ஃப்ர்ஸ்ட்டேய்..
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்
ReplyDeleteநான் ஃப்ர்ஸ்ட் இல்லயா?
கமெண்ட் போட்டப்புறம் தான் தெரியுது மட்டுறுத்தல் இருக்குன்னு, ஏற்கெனவே 2 வோட்டும் விழுந்திருக்குன்னு...
உ.த வுக்கு 160 பக்கம் டைப் பண்ணுறதெல்லாம் ஒரு பெரிய வேலையா? ரெண்டு இடுகை சைஸ்தானே??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நியூஸ் ரொம்ப லேட் ஹா வந்து இருக்கே. முதலே தெரிந்து இருந்தால் உங்களுடன் நானும் வந்துருப்பேன் .
ReplyDeleteபதிவு நல்லா இருக்கு....
ReplyDelete/*உ.த வுக்கு 160 பக்கம் டைப் பண்ணுறதெல்லாம் ஒரு பெரிய வேலையா? ரெண்டு இடுகை சைஸ்தானே??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்*/
எங்கள் தங்கத்தின் திறமையை குறைத்து மதிப்பிட்ட அண்ணன் ஸ்ரீராம் அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன்...
160 பக்கம் என்பது, எங்கள் அண்ணனுக்கு எஸ்.எம்.எஸ், என்று தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
ஜாக்கி.. நானும் வருவதாக இருந்தேன். கடைசி நேரத்தில் ஒரு வேலையால் வர முடியவில்லை.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி..
ஜாக்கி.. நீயும் பிரபல பதிவராயிட்ட.. பதிவு போட்ட உடனே மைனஸ் குத்து சும்மா கும்முன்னு வருது பாரு..
Dear J
ReplyDeleteIn net most of them will talk about films and film related people's news. Very few wrote about Stage Acting which is very difficult then acting in films (here there is no retake)
Happy that you are one among the very few.
During my school days I used to come to chennai for summer vacation. By that time I used to see lot of dramas. Almost I saw all the S.V.Sekar's dramas, few of Crazy Mohan's dramas and one or two Y.G's dramas.
I got inspired and I wrote..directed and acted in few dramas in my school and college days. One time my drama aired in AIR(All India Radio)
Your post tickled my golden memories..THANKS
கமெண்ட் போட்டப்புறம் தான் தெரியுது மட்டுறுத்தல் இருக்குன்னு......
ReplyDeletewhat to do Sir...if there are few "NON GOOD" reader post "NON SENSE" comments he left with no other options other than மட்டுறுத்தல்.
//உ.த வுக்கு 160 பக்கம் டைப் பண்ணுறதெல்லாம் ஒரு பெரிய வேலையா? ரெண்டு இடுகை சைஸ்தானே??//
ReplyDeleteஅதானே
அவ்வ்வ்வ்வ்
ReplyDeleteநான் ஃப்ர்ஸ்ட் இல்லயா?
கமெண்ட் போட்டப்புறம் தான் தெரியுது மட்டுறுத்தல் இருக்குன்னு, ஏற்கெனவே 2 வோட்டும் விழுந்திருக்குன்னு...
உ.த வுக்கு 160 பக்கம் டைப் பண்ணுறதெல்லாம் ஒரு பெரிய வேலையா? ரெண்டு இடுகை சைஸ்தானே??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்------//
நன்றி ஸ்ரீ
மட்டுறுத்தல் போட கூடாதுன்னுதான் பார்த்தேன்.. சில வைரஸ்... அதுவா உள்ள அனுப்பிடறானுங்க... அதனாலதான்...
நியூஸ் ரொம்ப லேட் ஹா வந்து இருக்கே. முதலே தெரிந்து இருந்தால் உங்களுடன் நானும் வந்துருப்பேன் //
ReplyDeleteஉ..தமிழன் ஒரு சிலருக்குதான் சொல்லி இருக்கார்... அதனாலதான்...
நன்றி ரோமியோ பாய்
பதிவு நல்லா இருக்கு....
ReplyDelete/*உ.த வுக்கு 160 பக்கம் டைப் பண்ணுறதெல்லாம் ஒரு பெரிய வேலையா? ரெண்டு இடுகை சைஸ்தானே??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்*/
எங்கள் தங்கத்தின் திறமையை குறைத்து மதிப்பிட்ட அண்ணன் ஸ்ரீராம் அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன்...
160 பக்கம் என்பது, எங்கள் அண்ணனுக்கு எஸ்.எம்.எஸ், என்று தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.//
நையான்டி சொல்வதை அப்படியே வழி மொழிகின்றேன்..சில நேரத்தில் ஒரு எஸ் எம் எஸ் சே இரண்டு பக்கத்துக்கு கூட போகும்..
ஜாக்கி.. நானும் வருவதாக இருந்தேன். கடைசி நேரத்தில் ஒரு வேலையால் வர முடியவில்லை.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி..
ஜாக்கி.. நீயும் பிரபல பதிவராயிட்ட.. பதிவு போட்ட உடனே மைனஸ் குத்து சும்மா கும்முன்னு வருது பாரு..//
நன்றி சூர்யா.. அந்த மாலைநேரம் ரொம்ப நல்ல இருந்தது சூர்யா...
நான்தான் எப்பவோ பிரபலமாயிட்டேன் இல்லை... நான் பிரபலம் இல்லதப்பவே என்னை பிரபலம்ன்னு சொல்லி சண்டைக்கு வந்தவங்க நிறைய பேரு...
மைனஸ் ஓட்டு கூத்தறது ஒரு ஆளா இருந்ததாகூட பராவாயில்லை ஒரு குழுவா செயல்படுறானுங்க... அட படிச்சி பார்த்து பதிவு புடிக்கலைன்னு மைனஸ் குத்து குத்தினாலும் பரவாயில்லை.. படிக்கவே இல்லை போஸ்ட் போட்ட உடனே சில போஸ்ட்டுக்கு பட் பட்னு மைனஸ் ஓட்டு குத்தி தள்ளறானுங்க...
I got inspired and I wrote..directed and acted in few dramas in my school and college days. One time my drama aired in AIR(All India Radio)
ReplyDeleteYour post tickled my golden memories..THANKS//
நன்றி ராஜ்குமார் என் மீதான உங்கள் மதிப்புக்கு என் வந்தனங்கள்... உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பின்னுட்டத்துக்கு நான் ரசிகனாகிவிட்டேன்..பதிவில் உங்கள் அனுபவத்தையும் கலந்து எழுதுவது அழகு....
கமெண்ட் போட்டப்புறம் தான் தெரியுது மட்டுறுத்தல் இருக்குன்னு......
ReplyDeletewhat to do Sir...if there are few "NON GOOD" reader post "NON SENSE" comments he left with no other options other than மட்டுறுத்தல்.//
உண்மைதான்... ஒரு பதிவுல இப்படி பேர் வாங்கறது பிடிக்காம இப்படி அலைஞ்சா... அவனுங்க பக்கத்து வீட்டுகாரனுங்க சொந்தகாரன் நிலமை எல்லாம் யோசிச்சு பாருங்க ராஜ்..
//உ.த வுக்கு 160 பக்கம் டைப் பண்ணுறதெல்லாம் ஒரு பெரிய வேலையா? ரெண்டு இடுகை சைஸ்தானே??//
ReplyDeleteஅதானே//
நன்றி சூரியன் உங்கள் தொடர் ஆதரவுக்கு பின்னுட்டத்துக்கும்...