ஆல்பம்...
தண்ணீரில் முழ்கி பல குழந்தைகள் பரலோகம் போய் விட்டார்கள்... பருவ வயதில் தன் கண் எதிரில் பிள்ளைகள் துடித்து இறப்பதை பார்க்க சகிக்காமல் தனக்கு நீச்சல் தெரியவிட்டாலும்.. 4 குழந்தைகளை காப்பாற்றிவிட்டு அந்த பெண் டீச்சர் இன்னும் இரண்டு குழந்தைகளை காப்பபாற்றும் போது இறந்து விட்டாள்... அந்த டீச்சர்... பருவ வயதில் என்ன கனவுகள் கண்டாளோ....எவ்வளவு நெஞ்சில் புதைத்து வைத்தாளோ? எல்லாம் போய் விட்டது ஒரு நொடியில்.....
இப்போதுதான் எல்லா பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்கின்றார்கள்... இவ்வளவு நாள் வீட்டில் மணி ஆட்டிக்கொண்டு இருந்தார்கள்... இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த அலப்பரை நிச்சயம் இருக்கும்....அப்புறம் வழக்கம் போல் பழையகுருடி கதவை திறடி..... கதைதான்....
குஷ்புவின் தமி்ழ்...
விருது வழங்கும் விழாவில் குஷ்பு பேசிய தமிழ் கொலையை எல்லோருட் நக்கல் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்... முதலில் கு்ஷ்பு நமது மாநிலத்துகாரர் அல்ல அவர் வடமாநிலத்துகாரர்... அவரை விழா தொகுப்பாளியாக போட்டது முதல் தவறு.... அதற்க்கு ஒத்துக்கொண்டது குஷ்புவின் தவறு.....தமிழுக்கு “ழ” அழகு .. நக்கல் உட்ட பாதி பேருக்கு தமிழ்ன்னு சொல்ல தெரியாது தமிள்னுதான் சொல்லுவானுங்க....
ஒரு வழியாக ஆயிரத்தில் ஒருவன்... திரைப்படம்..வரும் பொங்கலுக்கு வரப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள்....பார்ப்போம் இரண்டு வருட உழைப்பு எப்படி இருக்கின்றது என்று....
நம்ம ஊர் வீட்டா விளம்பரம் போல.... பார்த்து ரசிக்க....
மிக்சர்....
சில பரிசு பொருட்கள்.....
நண்பர் கார்த்திகேயுனும் அறிவுத்தேடலும் ஊருக்கு வந்ததுமே எனக்கு போன் செய்தார்....மிக முக்கியமாக இந்த பயணத்தின் போது சண்முகபிரியன் மற்றும் உங்களை எப்படியும் சந்தித்துவிட வேண்டும் என்று சொன்னார்....ஆனால் அவர் ஊருக்கு வந்த போது ஐதராபாத்தில் இருந்தேன்.... அந்த நேரத்தில் ஷண்முகபிரியன் ஐயா வீட்டுக்கு வந்து விட்டு நான் ஊரில் இல்லாத காரணத்ததால் அந்த சந்திப்பு நிகழவில்லை...
அதன் பிறகு ஊருக்கு வந்த பிறகு நான் கார்த்தி வீட்டில் சந்தித்தேன்.. அவர் விட்டு மழலை வர்ஷினி படு சுட்டி...ஒரு இரண்டு மணிநேரம்.. எப்படி போனது என்று தெரியவில்லை....அவர் துணைவியார் நல்ல தோசை வார்த்து போட பசி அடங்கி விடைபெறுகையில்.. எப்போதோ எனது கீ போர்ட் பற்றி பேசி இருக்கின்றேன்.. அதை நினைவில் வைத்து கீ போர்டும் மவுசும் பரிசளித்தார்... அதற்க்கு முதல் நாள்தான் மவுஸ் மக்கார் பண்ண பதிவர் வடிவேலிடம் விலைவிசாரித்து சில மணிநேரங்களில் இந்த பரிசு பொருள்...சில பொருட்களுக்கு விலை மதிப்பே இல்லை அது போலதான் இதுவும்....
கார்த்தி... பாண்டி....
பாண்டிச்சேரியில் படபிடிப்பில் கலந்து கொண்டு இருந்தேன் பேக்கப் என்று சொன்ன போது சட்டென ஒரு பையன் கையை பிடித்துக்கொண்டு நீங்கள் ஜாக்கிசேகர்தானே என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்?????
எனக்கு ரொம்ப சந்தோஷம் மற்றும் ஆச்சர்யம்...பெயர் கார்த்தியாம்... பிரவுசிங் சென்டர் போய் தினமும் நோண்டும் போது தமி்ழ் வலையுலகம் அறிமுகமாம்... பிடித்த பதிவர் லக்கியாம்... அப்புறம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு காபி சாப்பிட கூப்பிட்ட போது... கார்த்தி அவர் ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்து சென்று காட்டினார்... அப்புறம் எனக்கு ஸ்பாட்டில் வாகனம் வெயிட் செய்ய விடு ஜுட்
விஷுவல் டேஸ்ட்... நான் எடுத்ததில் பிடித்தது...
ஏதோ அறிவியல் ஆராய்ச்சி நிலையம்னு நினைச்சுடாதிங்க... சென்னை அம்பேத்கார் மணி மண்டபம் கொஞ்சம் லோ ஆங்கிளில்....
சென்னை லைட் ஹவுஸ் ஒரு புதிய கோணம்...
சென்னை மெரினா மழையில் நனைந்து போன மணல் பரப்பு.. இரவு எங்கு உறங்குவது என யோசித்த படி மரத்தின் கீழ் ஒரு பிச்சைகாரர்...
வண்டியை கழுவி விட்டு சவாரிக்கு கிளம்பும் ஆட்டோ வாலா...
மழை தூரினாலும் உற்சாக குளியல் மெரினா நீச்சல் குளம்.....
படங்கள் பெரிதாய் தெரிய கிளிக்கி பார்க்கவும்....
நான்வெஜ்....
ஜோக்....
அந்த பெண் காய்கறி தோட்டம் வைத்து இருந்ததாள்....சந்தைக்கு போய் வரும் போது ஒரு விட்டு தோட்டத்தில் உள்ள எல்லா தக்காளிகளும் செக்க சிவப்பாய் காணப்பட... அந்த தோட்டத்தில் உள்ள தோட்டக்காரனிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்டாள்... அதற்க்கு அவன் நான் தினமும் இரண்டு முறை நிர்வாணமாய் என் தோட்டத்தை சுற்றி வருவேன் என்றான்... இவளும்... தனது தோட்டத்து தக்காளி சிவக்க அதே போல் தினமும் நிர்வாணமாய் சுற்ற...சில மாதங்களுக்கு பிறகு... தோட்டகாரனும் அவளும் சந்தையில் சந்தித்து கொள்ள...அவளிடம் தக்காளி சிவப்பை பற்றி தோட்டக்காரன் ஆவலாக கேட்க அவளோ .. என் வீட்டு தோட்டத்தில் தக்காளி சிவக்கவில்லை அதற்க்கு பதில் என் வீட்டு தோட்டத்தில் உள்ள வெள்ள்ரிக்காய் மற்றும் புடலங்காய் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர ஆரம்பித்து உள்ளன என்றாள்...
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
:)
ReplyDelete:)...........
ReplyDelete/////முதலில் கு்ஷ்பு நமது மாநிலத்துகாரர் அல்ல அவர் வடமாநிலத்துகாரர்... அவரை விழா தொகுப்பாளியாக போட்டது முதல் தவறு///
ReplyDeleteவடமாநிலத்துக் காரரை தொகுப்பாளினியாக போட்டது தவறில்லை நண்பரே , ஆனால் தமிழை தெளிவாக பேச / உச்சரிக்கத் தெரியாத ஒருவரை தொகுப்பாளினியாகப் போட்டது தான் தவறு ....அப்புறம் உங்க உலக சினிமா பற்றிய விமர்சனங்கள் அத்தனையும் அருமை என்ன மாதிரி யூத் பசங்க ரசிக்கற மாதிரி சுப்பர் ஆ எழுதறீங்க ....
Nice.
ReplyDeleteCollections.
/குஷ்புவின் தமி்ழ்...
ReplyDeleteவிருது வழங்கும் விழாவில் குஷ்பு பேசிய தமிழ் கொலையை எல்லோருட் நக்கல் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்... முதலில் கு்ஷ்பு நமது மாநிலத்துகாரர் அல்ல அவர் வடமாநிலத்துகாரர்... அவரை விழா தொகுப்பாளியாக போட்டது முதல் தவறு.... அதற்க்கு ஒத்துக்கொண்டது குஷ்புவின் தவறு.....தமிழுக்கு “ழ” அழகு .. நக்கல் உட்ட பாதி பேருக்கு தமிழ்ன்னு சொல்ல தெரியாது தமிள்னுதான் சொல்லுவானுங்க.//
????????
jackie...nonveg super!!!...enga ithalam refer panreenga?
ReplyDeleteகார்த்திகேயனை நீங்கள் தான் முதலில் சந்திதீர்கள் ஆனால் பதிவு ரொம்ப லேட் . அருமையான மனிதர் உலக படங்களை பார்ப்பதில் ரொம்ப ஆர்வம் உள்ளார். அவரை சந்திததில் எனக்கு ரொம்ப சந்தோசம் ..
ReplyDeleteதக்காளி எப்படியோ உங்கள் பதிவைப் பார்த்த பின் என் முகம் சிவந்து விட்டது.
ReplyDeleteநானும் ஆயிரத்தில் ஒருவன் பார்க்க
ReplyDeleteமிக ஆவலாய் உள்ளேன் அண்ணே....
பார்ப்போம்...
ஸ்டில் பட்டய கெளப்புது....குறிப்பா அந்த கலங்கரை விளக்கமும்...அப்புறம் கடற்கரையும்............
ReplyDeleteசென்னை மெரினா photo superb...
ReplyDeleteவிஷூவல் டேஸ்ட் அருமை.. குறிப்பாக ஆட்டோ வாலா படம். தண்ணீரில் படிந்திருக்கும் பிரதிபலிப்பு அருமையாக வந்துள்ளது.
ReplyDeleteமொபைல்- ரொம்ப வருத்தம் தான் தலைவரே.. மதுரைல கூட ரெண்டு நாள் முன்னாடி விபத்து நடந்தது..
ReplyDeletevery good post
ReplyDeleteஜாக்கி அந்த மெரீனா மரத்தை நீங்க எடுத்த மாதிரியே நானும் எடுத்து இருக்கேன்
ReplyDeleteஆட்டோ படம் அருமை
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
குஷ்புவின் தமிழை முதல்வரே பாராட்டியதாக சில இணையங்களில் செய்திகள் வந்தன. உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக இந்த நிகழ்வு வரும் அப்போ குஷ்புவின் தமிழைக் கேட்கலாம்.
ReplyDeleteஆட்டோவின் படம் ரெம்ப சூப்பரா இருக்கு. தண்ணீரில் அவர்கள் படம் ரிப்ளக்ட் ஆகிறது, அருமை அருமை :)
ReplyDeleteவாழ்த்துக்கள்
உங்களுக்கு பரிசு அளித்த அந்த நல்ல உள்ளத்துக்கு வலை உலக சார்பாக நமது வாழ்த்துகள் !
ReplyDeleteசாண்ட்விட்ச் சாண்ட்விட்ச் தான்... கலக்கல்'ணா....
ReplyDeleteபாண்டிச்சேரி வந்திங்களா? தெரிஞ்சிருந்தா நானும் வந்து பாத்திருப்பேனே. அடுத்த முறை வரும்போது சொல்லுங்கள். மீட் பண்ணுவோம்.
ReplyDeleteசாண்ட்விச் ஓ.கே.
நான்வெஜ் - ம், ஒ.கே.
அண்ணே,
ReplyDeleteமிக அருமையாக எழுதினீர்கள்,உங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
நல்லாயிருக்கு தலைவா! ஆனால் சின்ன வருத்தம்.... கார்த்திகேயனுடனான சந்திப்பை தனியா எழுதியிருக்கலாம்
ReplyDeleteநன்றி ராஜபிரியன்
ReplyDeleteநன்றி நையாண்டி நைனா
நன்றி 23சீ அதெல்லாம் ரகசியம்
நன்றி தர்ஷன்... பார்த்து செவந்து கிட்டே இருக்க போவுது...
நன்றி அப்பாவிதமிழன்.. தொடர் வருகைக்கும் பின்னுட்டத்திற்க்கும்...
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கும்
நன்றி தண்டோரா.. திரும்பவும் படிக்கவும்..
ReplyDeleteநன்றி ரோமியோ.. பாய் பணிச்சுமைகாரணமாக உடன் எழுத முடியவில்லை...
நன்றி லெமுரீயன் படங்களின் பாராட்டுக்கு நன்றி
நன்றி மகா
நன்றி ஜெட்லி
நன்றி கார்த்திகை பாண்டியன்... அந்த செய்தி என்னை வருத்தத்தில் ஆழத்தியது..
நல்ல டேஸ்ட்.
ReplyDeleteகுழந்தைகள் விசயத்திலாவது அரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும்.