சென்னை மாநகர பேருந்தும், சென்னைவாசிகளையும் பிரிக்க முடியாத விஷயம்... இன்று காரில் பைக்கில் பயணப்படும் பல பேர் ஒரு காலத்தில் மாநகர பேருந்துகளை உபயோகபடுத்தியவர்களாகவே இருப்பார்கள்...நானும் பல வருடங்கள் பேருந்தை உபயோகப் படுத்தியவன்தான் என்றாலும்... கடந்து 6 வருடங்களாக மாநகர பேருந்தை நான் அதிகம் உபயோகிக்கவில்லை....
அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக நான் பேருந்தில் எறி இறங்கியது சொர்ப தினங்கள் என்பேன்....எனது சீடி 100 பைக்தான் என்னையும் எனது மனைவியையும் சென்னை முழுவதும் சுமக்கும் வாகனம்....
சென்னை எனக்கு பரிச்சயம் என்பது சிறு வயதில் செனனைக்கு சுற்றுலா வந்து அண்ணா சமாதியையும் கோல்டன் பீச்சையும் பார்த்து விட்டு போனது ஞாபகம் இருக்கின்றது... அதன் பின் சென்னைக்கு வந்து மாநகர பேருந்தையும் அதன் பரபரப்பையும்,பெரிய சினிமா கட்டிடங்களையும், அழகு பெண்களையும் பார்த்த போது என்னை அறியாமல் சென்னையை மெல்ல ரசிக்க ஆரம்பித்தேன்...
எனக்கு நன்றாக நினைவு இருக்கின்றது கடலூரில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றேன்... செல்வராஜ் என்ற தம்பம்பட்டிகாரர் எங்கள் ஊரில் இரும்புகடை வைத்து இருந்தார்... அவருக்கு இரும்பு கம்பிகள் லோட் புக் செய்ய சென்னைக்கு வந்தேன்... அப்போது பிராட்வே பஸ்நிலையம்தான்... தாம்பரத்தில் இருந்தே சென்னை நகரின் பரபரப்பு பார்த்து வியந்து போனேன்... என்னுள் அந்த பரபரப்பு ஒட்டிக்கொண்டது....
பச்சைகலரில் கரும்புகை கக்கியபடி பயணிக்கும் பல்லவன் பேருந்துகளை பார்த்த போது... அதற்கு முன் அதனை சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கின்றேன்...நேரில் பார்த்த போது அந்த பஸ்சுக்காக பெண்கள் விழுந்து அடித்து ஓடி, ஆணுக்கு நிகராக பேருந்தில் இடம் பிடித்து போது... என் சொந்த ஊர் கடலூரை நினைத்து பார்த்துக்கொண்டேன்...
டி அர் இயக்கி சிம்பு நடித்த எங்க வீட்டு வேலன் திரைப்படம் வெளியான சமயம் அது... எங்கள் ஊரில் ஒரு கட் ஆவுட் கூட அந்த படத்துக்கு வைக்கவில்லை.. ஆனால் இப்போது மண்ணோடு மண்ணாக மூத்திரம் ஆடிக்கும் இடமாக மாறிப்போன சபையர் தியேட்டர் வளாகத்தில் வாசலிலேயே.. முருகன் வேலுடன் நிற்கும் பொம்மைகளை வைத்து கலக்கிய நேரமே நான் சென்னை பல்லவனில் பயணம் செய்த நேரம் ஆகும்.....அதன் பிறகு அதே வேலை பொருட்டு சென்னை வந்த போது கமலின் சிங்கார வேலன் ஓடிக்கொண்டு இருந்தது... அப்போதும் சென்னை பல்லவன் பேருந்தில் ரொம்ப பெருமையாக பயணம் செய்தேன்...
சென்னை பல்லவன் பேருந்தில் அடுத்த முறை நான் பயணம் செய்த போது ஜென்டில்மேன் படம் சென்னை சங்கம் தியேட்டரில் வெளியான சமயம் அது... அப்போது இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கும் சூழ்நிலை அப்போது சென்னை பல்லவனில் பயணம் செய்ய... நான் ஆண்கள் இருக்கையில் அமர்ந்து இருந்தேன்... அழகான பெண்களை அதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்து ரசித்து இருக்கின்றேன்...
ஒரு பெண்கள் கூட்டம் பேருந்தில் ஏறியது... ஒரு பெண்ணுக்கு மட்டும் இடம் இல்லாமல் போக... எக்ஸ்கியூஸ்மீ இப் யூ டோன்ட் மைன்ட் இந்த சீட்ல நான் உட்காரலாமா? என்று கேட்ட போது...அவள் ரொம்ப ஈசியாக கேட்டுவிட்டாள்... நோ பிராப்ளம் என்று சொல்லி தொலைப்பதற்குள் உள்நாக்கு எனக்கு ஒட்டிக்கொண்டது....
என்னை போல ஒரு இன்பிரியாரிட்டி காம்ளெக்ஸ் ஆளை நீங்கள் பார்த்து இருக்கவே முடியாது... எனக்கு நான் அழகாக இல்லை என்ற ஒரு சுயவருத்தம் என்னுள் ஓடிக்கொண்டு இருந்த காலம் அது...இப்போது அந்த வருத்தம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டு இருக்கின்றது... என்றாலும் அந்த அளவுக்கு இப்போது இல்லை... எனென்னறால் என்னை அதிகம் மாற்றிய பெருமை என் காதல் மனைவியையே சாரும்...
என் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்த போது... இந்த சென்னையின் பல்லவன் பேருந்தும், கடலூர் அளவுக்கு அலட்டாத பெண்களையும் மெல்ல பிடித்து போனது...
அதன் பிறகு கமலின் சத்யா படத்தில் வரும் வலையோசை சாங்.... பல்லவன் பேருந்தில் படிகட்டில் பயணம் செய்யும் போது எல்லாம் கமல் மேனாரிசங்களை என் நினைவுக்கு வந்து தொலைக்க...பேருந்தில் படிகட்டில் தொங்கிய படி பேருந்து சன்னலோரம் தெரியும் பிகர்களை சைட் அடிப்பது ரகளையான விஷயமாக மாறிப்போனது...
3.13 வினாடிகளுக்கு பிறகு பல்லவ்ன் பேருந்தும் கமலும்... அமலாவும் உயிரோட்டமாக இந்த பாடலில்....
சென்னைக்கு பரிச்சயமான போது இந்த ஜாக்கியின் பால் வடியும் முகம்...
டிக்கெட் செக்கரிடம் மாட்டி திட்டு வாங்கிய கதை அடுத்த பாகத்தில்.....
ஒரு நான்கு நாட்கள் உலக படவிழாவில் கலந்து கொள்ள ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து நேராக உட்லண்ட்ஸ் தியேட்டருக்கு , சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர பேருந்து மூலம் பயணபட்ட போது பல்வேறு மலரும் நினைவுகள் என் கண் முன் வந்து நிழலாடியது... ஆடிய நிழல்களை முடிந்த மட்டும் உங்களோடு....சில நாட்களுக்கு....
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
அண்ணே
ReplyDeleteலீவா? நல்லா சல்லு சல்லுனு பதிவு வருதே? நல்ல நினைவுகளை மீட்டுக்கொடுத்த பதிவு, உங்க சீசன் டிக்கெட் படத்தை பத்திரமா வச்சிருக்கீங்களா?சூப்பர்.
வாக்களித்துவிட்டேன்
சென்னையிலேயெ படித்ததால்(பள்ளி,கல்லூரி)பேருந்து பயணம் இதுவரை அலுக்கவில்லை.
ReplyDeleteஅருமைங்க. பயணிகளின் நண்பனைப் பற்றி எழுதுவதற்கு ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன!
ReplyDeleteவலையுலகில் 'மாநகர் பேருந்து அனுபவம்' பற்றி ஏதேனும் தொடர்/சங்கிலி பதிவு எழுதியிருக்கிறார்களா?
இல்லை, நீங்கள் மட்டுமே தொடர் இடுகைகளாக எழுதப்போகிறீர்களா?
சென்னையில் இருந்த வரைக்கும், நான் பைக்கில் போனது ரொம்ப கம்மி. பல்லவன்தான். இல்லைன்னா நடந்து போவேன்.
ReplyDeleteஇப்ப ரெண்டு ஸ்டெப் வச்சா மூச்சு வாங்குது. பல்லவன் கூட்டத்தை எல்லாம் இனிமே சமாளிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
சென்னையிலேயெ படித்ததால்(பள்ளி,கல்லூரி)பேருந்து பயணம் இதுவரை அலுக்கவில்லை--//
ReplyDeleteநன்றி கல்ப் தமிழன்... ரொம்ப நாளைக்கு அப்புறம் ஏறினேன் அலுத்துவிட்டது...
நல்ல பகிர்வு அண்ணே....
ReplyDeleteவலையுலகில் 'மாநகர் பேருந்து அனுபவம்' பற்றி ஏதேனும் தொடர்/சங்கிலி பதிவு எழுதியிருக்கிறார்களா?
ReplyDeleteஇல்லை, நீங்கள் மட்டுமே தொடர் இடுகைகளாக எழுதப்போகிறீர்களா//
நன்றி ஊர் சுற்றி...
சங்கில தொடர் இடுக்கை எல்லாம் இல்லை நான் மட்டுமதான் எழுத போறேன்..
இப்ப ரெண்டு ஸ்டெப் வச்சா மூச்சு வாங்குது. பல்லவன் கூட்டத்தை எல்லாம் இனிமே சமாளிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்//
ReplyDeleteநிச்சயம் முடியாது பாலா.. ஒரு மூனு நாளைக்குதான் போனேன்...படுத்தி எடுத்துட்டாங்க..
நன்றி ஜெட்லி
ReplyDeleteஅன்பின் ஜாக்கி சேகர்
ReplyDeleteகொசுவத்தி சுத்த வச்சீட்டீங்க - பல்லவனில் பணி புரிந்ததும் - பல்லவனைல் ஊர் சுற்றியதும் ( வலது கைய உயர்த்தி நாலு விரலக் காட்டினா போதும் - டிக்கெட் எடுக்க வேணாம் ) - பல்வேறு நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன
நல்வாழ்த்துகள் சேகர்
சென்னையை பொறுத்தவரை ரயில் பயணம் சுகமானது, விரைவானது. ஆனா "சத்யா பட மேட்டருக்கு" பஸ்தான் வசதி.
ReplyDeleteமலரும் நினைவுகள் ............ மனதிற்கு இதமாக இருக்கிறது
ReplyDeleteமலரும் நினைவுகள் ............ மனதிற்கு இதமாக இருக்கிறது
ReplyDeleteஉங்களின் சினிமா காதல், இந்த இடுகையில் நன்கு வெளிப்படுகிறது. பஸ் பயணங்களை சினிமாக்கள் மூலமாக நியாபகம் வைத்திருப்பது நல்ல யுக்தி.
ReplyDeleteநானும் பஸ்ஸில் போய் பல காலம் ஆகிவிட்டது.
ஆனால், எப்பொழுதாவது பஸ் ஜன்னல்களின் வழி தெரியும் அழகான யுவதிகள் ஒரு சுவாரசியம்.
விடுங்க ஜாக்கி எல்லாருக்கும் எதாவது ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மை இருக்கும். அது மட்டும் இல்லை என்றால் ஆணவத்தில் அழிந்து போய்விடுவோம். இருப்பது ரொம்ப நல்லது.
கருப்பாக இருப்பது எனக்கு தா.ம, அதே நேரம் வெள்ளையாக இருக்கும் என் நண்பர்களிடம் வேறு ஒரு தா.ம இருப்பதை பார்த்திருக்கிறேன்.
அடுத்த இடுகைக்காக வெயிட்டிங்.
ஆம் ஜாக்கி.பல்லவன் பயணிகள் மனம்கவர்ந்த வல்லவன்.
ReplyDeleteபல்லவன் பேருந்து பயண அனுபவங்கள் எப்பவுமே அலுக்காத ஒன்று தான்..
ReplyDeleteஇப்போ பேர MTC-ன்னு மொக்கையா மாத்தி வச்சிருக்கானுங்க கிரகம் பிடிச்சவனுங்க...
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டம் இல்லாத மாநகர பஸ்கள் தான் என்னுடைய சாய்ஸ்..பெண்கள் ஷாப்பிங்,கோயில் என்று ஃப்ரீயாய் போய் வரலாம்....
ReplyDeleteபல்லவனில் காலை 11 முதல் மாலை 5 வரை போகணும்,என்னை மாதிரி இல்லதரசிகள் ஷாப்பிங்,ஃப்ரண்ட்ஸ் வீடுகள்,கோயில் போக ஏற்ற நேரம், கூட்டம் இருக்காது. பல்லவன் பல்லவன் தான்.....வேறு எந்த ஸ்டேட்ஸும் பக்கத்தில் கூட வர முடியாது...
ReplyDeleteபழைய நினைவுகளை தூண்டியது உங்கள் இடுகை. பல்லவன் பயணம் எனக்கும் ஆனந்தமான ஒன்று தான் ஜாக்கி.
ReplyDeleteகாயலான் கடைக்கு போக வேண்டிய தகர டப்பா பேருந்துகளை இன்னமும் இயக்கி வருகிறது சென்னை போக்குவரத்து கழகம். சில நேரங்களில் பழைய பேருந்துக்கு பெயிண்ட் அடித்து விட்டு புதிய பேருந்து வாங்கி விட்டதாக கணக்கு காட்டி விடுகின்றனர்.
ReplyDeleteவடிவேலு பாணியில் சொல்வதானால், " எவ்வளவோ மிஸ்டேக் இருந்தாலும் , இந்த பஸ்சு எம்புட்டு கூட்டம் ஏறினாலும் தாங்குது. இது ரொம்ப நல்ல பஸ்சு !..."