ஒரு அற்புதமான குத்தல் விளம்பரம்....

சில பிள்ளைகள் ஓவராக செல்லம் கொஞ்சுவார்கள்.... என் அம்மா எல்லாம் நாங்கள் அடம் பிடித்தால்...புன்னகை மன்னன் ஸ்ரீவித்யா போல் பொலிச்சென்று கன்னத்தில் ஒரு அறைவைப்பார்கள்.. அந்த எதிர்பாராத தாக்குதலால் நான் நிறைய தடவை நிலை குலைந்து போய் இருக்கின்றேன்....

அப்படி என் அம்மா எங்களை அடித்து வளர்க்கா விட்டாலும், என் அப்பாவின் சொற்ப்ப வருமானத்தில் மானத்துடன் குடும்பம் நடத்தி இருக்க முடியாது...

இந்த விளம்பரம்.. பல கேள்விகளை முன் வைக்கின்றது... பார்த்து ரசித்து பின்னுட்டம் இடுங்கள்.. காண்டம் விளம்பரம்தான் என்றாலும்.. அவர்கள் யோசிப்புக்கு ஹேட்ஸ் ஆப்..இனி உங்கள் அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகள் அழுதால் அல்லது அடம் பிடித்தால்... இந்த விளம்பரபடம் உங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது...


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

20 comments:

 1. எப்படி யெல்லம் யோசிக்கிறாங்க...
  நல்ல விளம்பரம் :))))

  ReplyDelete
 2. நல்ல கருத்துள்ள விளம்பரம் :)

  ReplyDelete
 3. நம்ம நாட்டுக்கு தேவையான விளம்பரம்...

  ReplyDelete
 4. என்னமா யோசிக்கிறாய்ங்க...

  ReplyDelete
 5. வணக்கம் ஜாக்கி

  விளம்பரம் சிரிப்புடன் சிந்திக்க வைக்கிறது.

  சக பதிவர் க. தங்கமணி பிரபுவின் வலையில் வந்த பதிவு
  சன் டிவி தொலைக்காட்சி தொடருக்கு நடிகர் / நடிகையர் தேவை

  ReplyDelete
 6. இது கறபனை இல்லை. நெஜமாவே இங்கே இப்படிப் பார்த்திருக்கேன்.

  பிள்ளைகளை அடிக்கவோ, திட்டவோ, மிரட்டவோ கூடாதுன்னு இருக்கும் நாடுகளில் இப்படித்தான் கெட்டுக்கிடக்கு.

  அதுக்காக இந்தியாவில் பிள்ளைகள் இப்படியெல்லாம் செய்யறதில்லைன்னு நினைச்சுக்காதீங்க. சென்னையில் சில இடங்களில் இந்த 'செல்லப்பிள்ளைகள்' செய்யும் அட்டகாசங்களை அந்தப் பெற்றோர்களைவிட யாருமே ரசிக்கமுடியாது(-:

  ReplyDelete
 7. நன்றி ஷாகுல்,கைப்புள்ள, வேந்தன் மூவருக்கும் எனது நன்றிகள்...


  ஷாகுல், வேந்தன் நீங்கள் இருவரும் எனது தளத்துக்கு புதியவர்கள்.. உங்களுக்கு என் நன்றிகள்..

  ReplyDelete
 8. ரசிக்கும் சிமாட்டி, சம்பத், பூங்குன்றன் மூவருக்கும் என் நன்றிகள்... வருகைக்கும் பகிர்விக்கும்

  ReplyDelete
 9. நன்றி புதுவைசிவா... வருகைக்கும் பலர் பயன் பெற லிங்க் கொடுத்தமைக்கும்..

  ReplyDelete
 10. அதுக்காக இந்தியாவில் பிள்ளைகள் இப்படியெல்லாம் செய்யறதில்லைன்னு நினைச்சுக்காதீங்க. சென்னையில் சில இடங்களில் இந்த 'செல்லப்பிள்ளைகள்' செய்யும் அட்டகாசங்களை அந்தப் பெற்றோர்களைவிட யாருமே ரசிக்கமுடியாது(-://

  டீச்சர் முக்கியமா.. ரிலையன்ஸ்ல வேலை மெனெக்கெட்டு அடுக்கி வச்சத எல்லாம் குழந்தைங்க கலச்சி போட்டு போகும் போது.. அதை கண்டிக்காத அம்மாக்களை பார்த்தா.. எனக்கு அவ்வளவு கோபம் வரும்..

  ReplyDelete
 11. நன்றி பிளாக் பாண்டி.. மிக்ககககக நன்றி... தொடர் பின்னுட்டத்துக்கு

  ReplyDelete
 12. பையன் நல்லா ஃபீல் பண்ணி கூவுறான் ஜாக்கி... :))

  ReplyDelete
 13. இந்த விளம்பரம் சம்பந்தப்பட்ட நாடு எதுவோ தெரியல, அந்நாட்டவர்க்கு அவங்களோட பார்வைல இந்த விளம்பரம் தேவையோ என்னவோ!

  நம்மைப் போல மூன்றாம் உலகநாட்டவரைப் பொறுத்தவரை இதில் ஒரு குரூரம் தெரிகிறது!

  தமாசூன்னு சிரிச்சிட்டு போயிட முடியாது, இதுல தன்னோட, மத்தவனோட பிள்ளை பிறப்பும் சம்பந்த்ப்பட்டுள்ளது! ஆணுரை கிடைக்கலன்னா எப்படி? கலைச்சிடலாமா? தவறி பொறந்துட்டா ....கொன்னுடலாமா?

  மன்னிக்கனும்! நமக்கு, நம் சமூகத்துக்கு, அடிமைப்பட்டுக்கிடந்த நம் இந்தியாவுக்கு குடும்பம்ங்கற ஒரு அமைப்பு முழுமையா உருவாகியே 2 தலைமுறைதான் ஆச்சு! நாமும் அவனுக உயரத்துக்கு பொருளாதார வளர்ச்சியடயற ஐடியா கிடைச்சா நல்லாயிருக்கும்! இல்ல நல்ல குழந்தை வளர்ப்பு பத்தி ஏதாவது சொல்லற விளம்பரம் கிடைச்சா நல்லாயிருக்கும்!

  பொறுப்புகளிலிருந்து விலகி ஓடிபோகத் துடிக்கும் புதிய, இளைய சந்ததியினரை உறசாகப்படுத்தற மாதிரி உள்ள இந்த விளம்பரம் நமக்கானதில்ல!!

  தொடர்ந்து சொல்லப்படும் குடும்ப கட்டுப்பாடு மற்Ruம் பொருளாதார காரணங்களால் நகரத்தின் பல குடும்பங்களில் ஒற்றை குழந்தை(Single Child), கொலை செய்யுமளவு போகும் குழந்தைகளின் மன அழுத்தம்! இதுக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம நம் நாட்டு உளவியளாலர்கள் விழி பிதுங்குகிறார்கள்!எவ்வளவு குறும்புக்கார குழந்தையாயிருந்தாலும், உன்னைப் பெத்ததே தப்புன்னு சொல்லிப் பாருங்களேன்! அதுக்கு பொருத்தமான பதில் அந்த குழந்தையே சொல்லும்! என்க்கென்னவோ சகிப்புத்தன்மையில்லாதவனுக்கு அவனவன் உள்ளாடைகூட சுமைதான்! அதை அவுத்து வீசிடுன்னு சொல்லற நிர்வாண கடற்கரைக்கார மேல்நாட்டு ஞானம் நமக்கு நகைச்சுவையாகூட வேனுமா?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner