(EMMA'S BLISS) 15+ உலக சினிமா ஜெர்மனி...பன்றி மேய்பவளின் பரிசுத்த காதல்...



யாருமே தனித்து இயங்குவோம் என்று இந்த உலகில் யாரும் மார் தட்டி சொல்ல முடியாது.. காரணம் இந்த உலகில் நாம் யாரையாவது சார்ந்து வாழ வேண்டும் என்பது தவிர்க்க முடியாத உண்மை...

ஆண்களை பிடிக்காது.. அதனால் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சொல்லிவிட்டு 40 வயதுக்கு மேல் எல்லோரிடமும் எரிந்து விழுந்து கொண்டு இருக்கும் பெண்களை நான் பார்த்து இருக்கின்றேன்... அதே போல்தான் ஆண்களும்... இதில் ஒரு சிலர் மட்டு்மே... இயல்பாய் இருக்கின்றார்கள்... மற்றவர்களின் வாழ்க்கை பயணம் என்பது நரகம்தான்... பகிர்ந்து கொள்ள ஆளில்லாத போது ஏற்படும் வெறுமை...சகிக்ககாத ஒன்று...

அதே போல் அரவனைப்புக்கு ஏங்காத மனிதன் இல்லை... யாராவது ஒருவர் நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும்... அவர்கள் அவனை அல்லதுஅவளை அரவனித்து கொள்ள வேண்டும்... எனக்கு தெரிந்து பெண்கள் பெரும்பாலும் காதல் வசப்படுவது.. அவர்களை மிக மரியாதையாக நடத்தினாலே அந்த ஆண் மிக நல்லவன் என்று நினைத்து கொள்ள ஆரம்பிக்கின்றாள்... பொதுவாக அரவனிப்புக்கு மனதை பறி கொடுக்காதவர்களே இல்லை எனலாம்...
EMMA'S BLISS ஜெர்மன் படத்தின் கதை இதுததான்.....

எம்மா என்பவள் ஒரு பொம்பளை ரவுடி... அவள் ஒரு தோட்டத்து வீட்டில் தனியான வாழ்க்கை.... யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைபடமாட்டால்..அவள் உண்டு அவள் பன்னிக்குட்டிகள் உண்டு என்று வாழ்க்கையை கடத்துபவள்... மேக்ஸ் அவனக்கு கேன்சர் என்று தெரியவருகின்றது... அவன் முதளாளியின் பல லட்சக்கணக்கான பணத்தை அபிட் விட்டுக்கொண்டு காரில் தப்பிக்கின்றான்... ஒரு கட்டத்தில் வாழ்ந்து என்ன மயிரை சாதிக்க போகின்றோம் என்று வண்டியை விபத்துக்குள்ளாக்கின்றான்... ஆனால் அதிஷ்ட வசமாக உயிர் தப்பிக்கின்றான்... அதுவும் எம்மா வீட்டு தோட்டத்து வீட்டில் அந்த விபத்து நடக்கின்றது....எம்மா அவனை காப்பாற்றுகின்றாள்...

ஒரு கட்டத்தில் எம்மாவுக்கு மேக்சுக்கு காதல் வருகின்றது.... தான் கேன்சரில் இறக்க போவதை அவளிடம் தெரிவிக்கின்றான்.... அப்படியும் அவனை திருமணம் செய்து கொள்கின்றாள்.. எல்லாம் அவன் சந்தோஷத்துக்காக...அவன் கேன்சரில் துடிக்க எம்மா என்ன முடிவு எடுத்தாள் என்பது நெஞ்சை நெகிழ வைக்கும் படத்தின் முடிவு...

படத்தின் சுவாரஸ்யங்கள்.....

படம் முடிந்த போது கண்ணில் வரும் நீரை ஆண் பெண் இருவராலும் அடக்க முடியாது...

இந்த படம் இயல்பு வாழ்க்கையில் பல வேலைகள் செய்தாலும் இந்த படத்தின் பாதிப்பும் நினைவும் பல நாட்களுக்கு நம்மை சுற்றி வரும்....

இது ஒரு அற்புதமான காதல் கதை...நெஞ்சை நெகிழ வைக்கும் காதல் கதை...இந்த படத்தில் இருவருக்கும் காதல் பூக்கும் அந்த தருணமும்... அவர் உடலுறவில் ஈடுபடும் போது ஏற்படும் பின்னனி இசையும்... அற்புதம்....


இந்த படம் ஒரு நாவலாக வெளிவந்து பின்பு படமாக்கபட்டது...

இந்த படம் பல்வேறு உலக படவிழாக்களில் கலந்து கொண்டு 13 அவார்டுகளையும் 5 நாமினேன்களையும் பெற்றது....

இந்த படத்தின் இயக்குனர்Sven Taddicken முதலில் ஷாட் பிலிம் எடுப்பவாராக இருந்து இதில் பல வெற்றிகள் பெற்று பின்பு பெரிய திரைக்கு வந்தவர்...

இந்த படத்தை பார்க்கும் போது இது போல் தமிழில் எப்போது படம் வரும் என்று ஏக்கத்தை கொடுக்கும்....

படத்தில் இரண்டே கேரக்டர்கள் அதை வைத்து99 நிமிஷம் மிக சுவாரஸ்யமாக தரும் போது.... இது போள்ற பல படங்கள் வந்து தமிழில் வெற்றி பெற்றால் இன்னும் பலரின் சுவராஸ்ய வாழ்க்கை கதைகள் செல்லுலாய்டில் ஏற்றும் நிலை வரும்....


உடல் நிலை சரியில்லாத மேக்சை தூக்கி கொண்டு நடக்கும் போது அவனுக்கு பணிவிடைகள் செய்யும் போது நமது காவிய நாயகி நல்லதங்காள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை....
படத்தின் டிரைலர் பாதி கதையை சொன்னாலும் முடிவு நீங்கள் அறிய இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும்....

படத்தின் டிரைலர்...

படக்குழுவினர் விபரம்....
Director:
Sven Taddicken
Writers:
Ruth Toma (screenplay) &
Claudia Schreiber (screenplay) ...

Release Date:
17 August 2006 (Germany) more
Genre:
Drama | Romance more
Plot Keywords:
Husband Wife Relationship | Terminal Illness | Exploding Car | Car Salesman | Captive
more
Awards:
13 wins & 5 nominations more
User Comments:
a very nice and pleasant film more

Runtime:
99 min
Country:
Germany
Language:
German
Color:
Color
Aspect Ratio:
2.35 : 1 more
Certification:
Germany:12 | Argentina:13 | Ireland:15A
Filming Locations:
Bergisches Land, North Rhine - Westphalia, Germany more
Company:
Wüste Film West GmbH more


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

22 comments:

  1. எப்போதோ கதை புரியாமல் பார்த்த ஞாபகம். மறுபடியம் பார்க்க வேண்டியது தான்...

    ReplyDelete
  2. இந்தப்படம் பார்த்திருக்கிறேன். அருமையான படம். உங்களின் விமர்சனம் மறுபடியும் பார்க்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  3. ஜாக்கி,

    விமர்சனத்துக்கான உங்கள் உழைப்பு தெரிகிறது.

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம். நன்றி. 3G இணைய இணைப்பு வாங்கிய பிறகு தான் (ஆனால் ஜனவரி - 2010 ல் தான் ஏலமே நடக்கப்போகிறது) நீங்கள் அறிமுகப்படுத்திய படங்களை ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  5. உடனே மைனஸ் ஓட்டு குத்தி என்னை பிரபலமாக்கும் குழுவினருக்கு நன்றி...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. எப்போதோ கதை புரியாமல் பார்த்த ஞாபகம். மறுபடியம் பார்க்க வேண்டியது தான்...--

    நன்றி ராம் திரும்பவும் பாருங்கள் டிவிடி கிடைத்தால் இந்த பக்கம் தட்டி விடுங்கள்..

    ReplyDelete
  8. இந்தப்படம் பார்த்திருக்கிறேன். அருமையான படம். உங்களின் விமர்சனம் மறுபடியும் பார்க்கத் தூண்டுகிறது//
    நன்றி பின்னோக்கி திரும்ப பார்த்தாலும் இந்த படம் மனதை விட்டு இகலாத படம் இது..

    ReplyDelete
  9. ஜாக்கி,

    விமர்சனத்துக்கான உங்கள் உழைப்பு தெரிகிறது.//
    நன்றி காவேரி கனேஷ்...

    நன்றி பாராட்டுக்கு... வருகைக்கும்

    ReplyDelete
  10. நல்ல விமர்சனம். நன்றி. 3G இணைய இணைப்பு வாங்கிய பிறகு தான் (ஆனால் ஜனவரி - 2010 ல் தான் ஏலமே நடக்கப்போகிறது) நீங்கள் அறிமுகப்படுத்திய படங்களை ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்து பார்க்க வேண்டும்.//
    நன்றி பிளாக் பாண்டி மிகக நன்றி தொடர் பின்னுட்டத்துக்கு இந்த படம் உங்கள் மனதை விட்டு அகலாத படம் இது...

    ReplyDelete
  11. இன்னுமொரு அழ‌கான‌ விம‌ர்ச‌ன‌ம். ந‌ன்றி ஜாக்கி.

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  12. நீங்க சொல்ற படங்கள பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன் ஆனா இருக்கறதோ சின்ன கிராமத்துல இங்க பிராடு பேன்ட் கனைக்ஷனே ரொம்ப அதிகம் ஹும் என்ன பண்ண ? ஆனா ஆர்வம்ன ஆர்வம் படு ஆர்வங்க!

    ReplyDelete
  13. அருமை ஜாக்கிஅண்ணே,
    சிறப்பான விமர்சனமும் படங்களும்,முன்பே பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது

    ReplyDelete
  14. இன்டரஸ்டிங் விமர்சனம்..

    ReplyDelete
  15. இந்த படத்தோட DVD கிடைக்குமா தல ?

    ReplyDelete
  16. அருமையான திரைப்படங்களை அறிமுகப்படுத்துவதற்க்கு நன்றி...

    ReplyDelete
  17. இன்னுமொரு அழ‌கான‌ விம‌ர்ச‌ன‌ம். ந‌ன்றி ஜாக்கி.//
    நன்றி டூடூ தொடர் வாசிப்புக்கு

    ReplyDelete
  18. நீங்க சொல்ற படங்கள பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன் ஆனா இருக்கறதோ சின்ன கிராமத்துல இங்க பிராடு பேன்ட் கனைக்ஷனே ரொம்ப அதிகம் ஹும் என்ன பண்ண ? ஆனா ஆர்வம்ன ஆர்வம் படு ஆர்வங்க!//ஸ்ரீதரன் கண்டிப்பா பார்ப்பிங்க.. மனசுல லிஸ்ட் மட்டும் வச்சிக்கிடுங்க.. ஒர நாள் கனவு நிறைவேறும்..

    ReplyDelete
  19. அருமை ஜாக்கிஅண்ணே,
    சிறப்பான விமர்சனமும் படங்களும்,முன்பே பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது//

    நன்றி கார்த்தி தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  20. நன்றி ராஜீபன் , மணிகண்டன்....

    ReplyDelete
  21. நன்றி ரோமியோ பாய் இந்த பட்ம் போன உலக படவிழாவில் பார்த்தது...

    ReplyDelete
  22. நல்லதொரு பகிர்வு.

    வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner