(BLIND CHANCE)18+ உலகசினிமா/ போலந்து... இரயிலை பிடித்தால்/விட்டால்

எல்லோருக்கும் ஒருசில வாய்புகள் ... கிடைத்தால் எப்படி இருக்கும்... சில வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் எப்படி இருக்கும்... வயிற்று பிழைப்புக்கு நான் தவறான பதையில் போய் இருந்தால்.. வேறு வாழ்க்கை... வேறுபாதை என்று வாழ்க்கை திசை மாறி இருக்கும்...

வாழ்வில் அது கிடைக்கவில்லை.. இது கிடைக்கவில்லை என்ற புலம்பும் பலரை பார்த்து இருப்போம்.. எது எது எப்போது கிடைக்கவேண்டும் என்று நம் தலையில் எழுதி இருக்கின்றதோ... அப்போது அது நிச்சயம் கிடைக்கும்...அதுதான் நிலைக்கும்..

BLIND CHANCE போலிஷ் படத்தின் கதை இதுதான்.....

Witek (Bogusław Linda) தந்தை இறப்பின் போது அவரது கடைசி ஆசை தன் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்று விருப்பம் கொள்கின்றார்... அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற ரயிலை பிடிக்க போகும் அவன் ரயிலை பிடித்து இருந்தால் என்ன ஆகி இருப்பான் என்பதையும்.. ரயிலை பிடிக்காமல் விட்டு இருந்தால் என்ன ஆகி இருப்பான் என்பதையும்.. அவன் வரும் முன் ரயில் பிடிக்க முடியாத தூரத்தை அடைந்து இருந்தால் என்ன ஆகும் என்பதையும் இந்த படத்தில் பார்க்கலாம்...ஒருவனை சுற்றி நடக்கும் மூன்று விதமான கதை... அதற்க்கான பின்புலம் என்று பார்க்க படு சுவாரஸ்யம்.... அது என்ன என்பதை வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம் 1981ல் எடுக்கபட்டு பல வருடங்கள் கழித்து 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டடது...


இந்த படத்தின்இயக்குனர்Krzysztof Kieślowski உலகின் மிகச்சிறந்த இயக்குனர் பட்டியலில் இவர் பெயரும் உண்டு..

இவரின் ரெட், ஒயிட் ,புளு ,படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடபட்ட படங்கள்..

படத்தில் அன்றைய போலந்து இளைஞர்களின் அரசாங்கத்து எதிரான மனநிலையையும்... அந்த கால கட்டத்து மாணவர்களின் மனநிலையையும் ஒரு சேர வெளிபடுத்திய படம் இது...

அரசுக்கு எதிரான போராட்டம் என்பது இல்லாத ஊரே... நாடே இல்லை என்று சொல்லலாம் போல் இருக்கின்றது...

படத்தின் திரைக்கதையும் அந்த இரயில் பிடிக்க ஓடி வரும் சீன்களும் அதற்க்கு எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் ரசிக்கதக்கவையாக இருக்கும்...

படத்தின் ஒரு காட்சி...

படக்குழுவினர் விபரம்...
Directed by Krzysztof Kieślowski
Produced by Jacek Szelígowski
Written by Krzysztof Kieślowski
Starring Bogusław Linda
Music by Wojciech Kilar
Cinematography Krzysztof Pakulski
Editing by Elżbieta Kurkowska
Distributed by Kino (USA)
Release date(s) May 1987
(United States)
Running time 122 minutes
Country Poland
Language Polish

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

8 comments:

  1. ஏன் தலைவா நம்ம தமிழ்ல வந்த 12பி கதையும் இந்த படத்த பாத்து உல்டா அடிச்சதா?

    ReplyDelete
  2. ப‌கிர்த‌லுக்கு ந‌ன்றிக‌ள்,ப‌கிர்ந்த‌துக்கு ஓட்டுக்க‌ள் (போட்டாச்சு)
    தொட‌ர‌ட்டும் உங்க‌ள் சேவை

    ReplyDelete
  3. //எது எது எப்போது கிடைக்கவேண்டும் என்று நம் தலையில் எழுதி இருக்கின்றதோ... அப்போது அது நிச்சயம் கிடைக்கும்...அதுதான் நிலைக்கும்..//

    பஞ்ச் டயலாக் தூள் பறக்குது !!

    BLIND CHANCE படத்தை விட உங்கள் விமர்சனம் சூப்பர் அண்ணே..

    ReplyDelete
  4. சாரு நிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீடும், புகைப்படங்களும்.

    http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

    ReplyDelete
  5. அண்ணே,
    மிக நல்ல படத்துக்கு மிக நல்ல விமர்சனம்,சீக்கிரம் தரவிறக்கி பார்ப்பேன்.ஓட்டுக்கள் போட்டாச்சு

    ReplyDelete
  6. //12பி//

    sliding doors .
    படத்தின் காப்பி. அதன் ஒட்டமும் இது போல் இருக்கும்

    Run LolaRun படமும் இது போன்ற போக்கையே கொண்டிருக்கும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner