ஏர்டெல் எனும் பணம் தின்னி....



ஏமாறுபவர்கள் இருக்கும் வரை எமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பது எவருக்கு பொறுந்துகின்றதோ இல்லையோ இந்தியாவில் ஏர்டெல் செல்பேசி வைத்து இணைப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் பொறுந்தும்...

முதலில் அவர்கள் ரொம்பவும் ஒழுங்காகதான் நடந்து கொண்டார்கள்... அவர்கள் வலுவாக காலூன்ற ஆரம்பித்த பிறகு அவர்கள் அடிக்கும் கொட்டம் தாங்க முடியவில்லை...

ஏர்டெல் இணைப்பை நான் இன்கம்மிங்காலுக்கு காசுகொடுத்து பேசும் காலத்திலிருந்து வைத்துக்கொண்டு இருக்கின்றேன்... எனக்கு அப்போதெல்லாம் ஏர்டெல் ரொம்ப பிடிக்கும்... அதை பெருமையாக கருதியகாலங்கள் எல்லாம் உண்டு.... இப்போது அப்படி இல்லை...

ஒழுங்காக சென்று கொண்டு இருந்த ஏர்டெல் பூஸ்டர் என்ற விஷயத்தை பிரிபெய்டு கஸ்டமருக்கு அறிமுகபடுத்தியது.... இது போல ரேட் வேனுமா? அதுக்கு இந்த அமவுன்ட்ல ஒரு பூஸ்டர் போடு.... அதை அப்படியேவும் விடாம அதுக்கு ஒரு மாசம் வேலிடிட்டி போட்டு அது முடிஞ்சதும் திரும்பவும் அதே அமவுண்ட் பூஸ்டர் போடனும்.... இதுவே ஒரு பகல் கொள்ளைதான்...

அப்ப மூணு மாசத்துக்கு ஒரு பிளான்ல பிரிபெய்டு கஸ்டமர் இருக்கனும்னா... அவன் சொல்ற பூஸ்டர் பேக் போட்டே ஆகனும்... அதாவது காய்கறிவிக்கற,லெட்டின் அடைப்பை சிரிசெய்யற சாமானியனையும் போஸ்ட் பெய்ட் ரேட் போல பிக்சடா 3 மாசத்துக்கு ஒரு அமவுண்ட்டை நைசா வாங்கறதுக்கு பேருதான் இந்த பூஸ்டர் பிளான் எல்லாம்.....

எல்லாத்துக்கும் பூஸ்டர் போட்டு நாம பூஸ்ட்டே குடிக்காத அளவுக்கு செஞ்சிடறாங்க.... இதுல ரொம்ப கொடுமையான விஷயம் .. ஒரு ஆப்பர் கொடுத்து அந்த ஆப்பர்ல மக்களை விழவச்சி.. அதுக்கு ஒரு ரெண்டு வருஷம்ன்னு ஒரு லாக்கை போட்டுட்டா... அதுக்கு அப்புறம் அவன் எந்த பிளானுக்கு அவன் மாறவும் முடியாது... திரிசங்கு சொர்கம்தான்....அதுக்கு அப்புறம் டேரிப் செஞ்சு பண்ண ஏர்டெல் சட்டம் இடம் கொடுக்காது...

திடிர்னு ஒரு 201 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி அதை பத்து நாளைக்கு உள்ள பேசிடனும் சொன்னானுங்க... சரின்னு நம்பி 201 போட்டேன்... சட்டென நான் ஹைதராபாத் போயிட்டேன்....சரி அந்த 201 ரூபாய்ல பணம் கழிச்சிக்குவானுங்கன்னு பார்த்தா... அந்த அமவுன்ட் நான் தமிழ்நாட்டுல ஆட்டிகிட்டு இருக்கறப்பதான் அந்த அமவுண்ட் எடுப்பாங்களாம்.... ஹைதரபாத் வேற நாடு இல்லை.... அதுக்கு மெயின் அமவுண்டல இருக்கற பணம்தான் கழியுமாம்... அந்த 201 ரூபாய் கோவிந்தா... கோவிந்தாதான்... என்னம்மா டாகல்ட்டி வேலை காட்டுறானுங்க.... என்டா நான் என்ன பங்ளாதேஷ்க்கா போயிட்டேன்....

எங்காயாவது நீங்க ரீச்சாஜ் பண்ணற கடையில பிளான் டீடெயில்... இருக்கான்னு கேட்டு பாருங்க... இருக்காது.... எந்த விளக்கமும் இருக்காது.... என்னா மக்களை குழப்பி அந்த குட்டையில மீன் பிடிச்சாதானே மீன் மாட்டும்...

இதுல படிச்சவங்கலும் கொழம்பி போய் பணத்தை அதிக அளவுல இழக்கறதுததான் பெரிய சோகம்....

ஏர்டெல் முதலாளி வீட்டு வேலைகாரிக்கு சம்பளம் ஏத்தி கொடுக்க காசு இல்லையா? போடு ரூபாய் 250 பூஸ்டர் பிளானை... அந்த அம்மா பொண்ணு சமைஞ்சி அதுக்கு சடங்கு சீர் செய்யனுமா? அதுக்கு போடு 105 ரூபாய் பூஸ்டர் பிளானை.... இப்படிதான் எல்லா மக்களையும் பூஸ்ட் போட வச்சிருக்கானுங்க.....

எல்லாத்தை விட பெரிய காமெடி ஏர்டெல் ரோமிங் சார்ஜ் குறைத்து விட்டதுன்னு எல்லா பிசினஸ் தொலைக்காட்சியிலும் பிளாஷ் நியூஸ் ஓடியது என்னடா வென்று பார்த்தால்... அதற்க்கு ஒரு இரண்டு பூஸ்டர் பேக் போட்டால்தான் அது ஆக்டிவேட் ஆகுமாம்.... சரி அதை போட்டு தோலையாலம்னு நினைச்சா .. உங்க பழைய பிளான் கம்ளீட்டா சேஞ் ஆயிடுமாம்... என்ன கொடுமைசார் இது....

இதுல வேற ஹேப்பி ரோமிங்னு வெக்கம் இல்லாம எல்லா இடத்துலயும் ஹோர்டிங் வேற....

முதல்ல நீங்க கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி சட்டுன்னு ஒரு சந்தேகத்தை கேட்டுங்க.. பார்க்கலாம்... ஒன்னை அழுத்தவும் இரண்டை அழுத்தவும் 4ஐ அழுத்தவும் ஏழை அழுத்தவும் என்று டென்ஷன் ஏற்றி அழகு பார்ப்பார்கள்... சரி அப்படியே லைன் கிடைத்தாலும் பதில் சொல்ல தெரியாவிட்டால்.. சட்டென இனைப்பை துண்டித்து விடுவார்கள் ... அப்புறம் திரும்பவும் ஒன்னை அழுத்தவும் இரண்டை அழுத்தவும் கதைதான்.....

ஏர்டெல்..
எப்போழுதும்...
எங்கிருந்தாலும்...
பணம் சுவாக செய்யபடும்....

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி

குறிப்பு ... தொடர்ந்து படபிடிப்பு இருப்பதால் பின்னுட்டத்துக்கு வெகுவிரைவில் பதில் அளிக்கின்றேன்... மன்னிக்கவும்...

34 comments:

  1. என்னங்க பண்றது? எல்லா corporates ம் cheaters தான்.

    ReplyDelete
  2. என்ன ஜாக்கி ரொம்ப நொந்திருக்காப்ல இருக்கு..
    எரியற கொள்ளியில ரிலையன்ஸ் கொள்ளி கொஞ்சம் நல்ல கொள்ளி, நான் 5 வருஷம் வச்சிருந்தேன், இன்னும் என் அம்மாவிடம் அம்பானி ப்ளான் இருக்கு (மாசத்துக்கு 400 ருபாய் ஃபிக்ஸ்ட், 400 நிமிஷம் ஃப்ரீ)

    Number portability அறிமுகம் செய்தால் மட்டுமே இவனுங்க திருந்துவானுங்க..


    என்றும அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்..

    ReplyDelete
  3. அன்பின் ஸ்ரீராம்,

    Number portability will be available from Jan 1st 2010 onwards.

    The charge for the same is only Rs 19/-

    ReplyDelete
  4. அன்பின் அரவிந்தன்,
    தகவலுக்கு நன்றி,, ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காங்க, பண்ணா நல்லது.எங்க சர்வீஸுக்கு மாறுங்கன்ன்னு இன்னொறு டெலி மார்க்கெட்டிங் ஆரம்பமாயிடும்..
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  5. ஜாக்கி அண்ணே,
    நல்ல பதிவு, நானும் இந்த ப்ளான்கள் புரியாமல் குழம்பி இருந்தேன், மகா மோசடி, பிஎஸ் என் எல் தேவலை போல, பூஸ்டரே ஒரு மோசடி, முன்பு துபாய்க்கு பேச நிமிடத்துக்கு 9-00 ரூபாய் இருந்தது, இப்போது 11-00 ஆக்கி விட்டனர், எந்த அறிவிப்பும் செய்யாமல்,மக்கள் தான் ஏமாறாமல் இருக்கனும்

    ReplyDelete
  6. அதிரடி பதிவு....
    அண்ணாத்த.... புல் பார்ம்'ல இருக்கீங்க போல....???

    ReplyDelete
  7. அதே எயார்டெல் இப்ப இலங்கையிலும் தொடங்கியிருக்காங்க தல, நம்ம ரஹ்மான் விளம்பர இசை என்று வாங்கி, இப்போ அந்த சிம்ம தூக்கி வீசிட்டேன்..

    ReplyDelete
  8. Air tel call centre:121
    After, hear record voice press 129

    ReplyDelete
  9. ஜாக்கி அண்ணா..

    இப்ப இருக்குற முக்கியமான பிரச்சனையப் பத்தி அருமையா எழுதியிருக்கீங்க. இருக்குறதுலயே பெரிய துன்பம் ஏர்டெல் கஸ்டமர் கேர்க்கு போன் பண்றதுதான்.

    ReplyDelete
  10. 12754 plan they have. till now i don't know what plan i m in

    ReplyDelete
  11. ஹாய் ஜாக்கி

    பதிவு அருமை.

    உங்களுடைய இந்த பதிவில் அவசரம் தெரிகிறது.

    பிழைகளை தவிர்க்க முயற்சிக்கவும்

    நட்புடன்
    ஜெய் செல்வம்

    ReplyDelete
  12. ரோமிங் என்பது ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு செல்லும்போதே துவங்கி விடுகிறது.

    பெங்களூரிலிருந்து ஹோசூர் 40 கிமீ தான் இருக்கும். ஆனால் அதற்கு ரோமிங்.

    நீங்க இப்போதான் அடிபட்டு இருக்கீங்க

    வேற ஸ்டேட் போகிட்டால் அங்கே அந்த லோக்கல் சிம் ஒன்னு ரெடி பண்ணி அதை வைச்சு ஓட்டுங்க.

    இல்லாட்டி இப்படித்தான்...

    ReplyDelete
  13. அதான் இப்ப TRAI ஆப்பு வச்சிட்டானே .. அதே நம்பரோட வேற Provider மாத்திக்கிற வசதி வந்துடுச்சே ...
    ஒரு காலத்துல நானும் இப்படித்தான் கொட்டி அழுதுக்கிட்டு இருந்தேன் .. அப்புறம் போடான்னு மாத்திட்டேன்.
    AIRTEL is very bad.

    ReplyDelete
  14. நர்சிம் & தண்டோரா சொன்ன அறிய

    கருத்துக்களை நானும் வழி

    மொழிகிறேன்.

    ReplyDelete
  15. சார் !இதை நானும் ஒரு பதிவாக போட்டேன் .தயவு செய்து படித்து ஒட்டு போடவும் .

    ReplyDelete
  16. சேவை குறைபாடுகள் இருந்தாலும் BSNL தான் சிறந்தது. திட்டமிட்டு ஏமாற்றப்படுவதில்லை.constant tariff with few schmes. no hidden charges. there is no trouble at all unless u need to go for customer care for any problems.

    ReplyDelete
  17. nice jacky.
    not only Airtel.ellorum kuttu kalavaninga than.
    Cell phone service providerskulla oru kuttam pottu,eppadi ellam makkala emathalamunu idea pannuranunga ippa.intha sms booster packla oru fraud pannuranuga neenga evlo Rs sms booster pottalum,pongal,diwali,etc mari festivel timela free sms kediyatham.1 sms rs.0.50 edupanuga.Airtell mattum ella, ella networkkum,Ana intha kasu pudungara visuthuthu Airtel expertga.. TRAInu onnu irukkum pothe intha attam TRAI ellana.. Soththa ezhuthi vangiduvanuga..de...iya pasanga..

    ReplyDelete
  18. PLS NOTE THAT airtel WAS NOT IN EXISTENCE WHEN MOBILE INCOMING WAS CHARGED.
    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  19. கைப்பேசி வாங்கியபோது, என்னிடம் என்ன சேவை என்ன நம்பர் என்ன திட்டம் இருந்ததோ, அதேதான் இப்பொழுதும் என்னிடம் உள்ளது (2004-லிலிருந்து!).

    கம்பெனியே மாறினார்கள் (ஹட்ச் டூ வோடஃபோன்) நான் மாறவில்லை!

    என்னை வோடஃபோனிலேயே வேறு திட்டங்களுக்கு சேரச்சொல்லி சேரச்சொல்லி கஸ்டமர் கேரிலேயே சோர்(நொ)ந்துபோயிருப்பார்கள்..

    அதற்கு சேர்த்துவைத்தாற்போல இப்பொழுது ஏர்டெல் இணைய இணைப்பு! கேட்கவேண்டுமா!

    கார்த்திகேயன்
    http://kaaranam1000.blogspot.com

    ReplyDelete
  20. this airtel bastard, introduce all sort of non sense. i changed the airtel.

    i never do that booster , i am paying 1rs per min. its more useful than wasting money in booster

    ReplyDelete
  21. அண்ணே எல்லாத்துக்கும் நம்ம பேராசை தான்னே காரணம்.. 210 ரூபாய் குடுத்து ரீசாஜ் செய்றதுக்கு முன்னாடி யோசிக்க வேணாமா 10 நாட்களில் செலவழிக்க முடியுமா இல்லையான்னு?

    அப்புறம் இந்த பேக் எல்லாம் நீங்க எந்த மாநிலத்துல இருக்கீங்களோ அதுல தான் செல்லுபடி ஆவும் ரோமிங்குல இல்ல.. மேலும் ரோமிங்க போன்ற இன்ன பிற விஷயங்களை முடிவு செய்வது டிராய் என்னும் அமைப்பு.. ஏர்டெல்லோ, இல்ல ஹட்சோ இல்ல.. மேலும் அந்த அந்த மாநிலத்துல(circle) அவங்க சேவையை வழங்க தனித்தனியா கட்டணம் கோடிக்கணக்குல செலுத்தணும்.. எல்லாத்துக்கும் காசு சுனில் மிட்டல் என்ன கைகாசு போட்டா குடுப்பாரு.. :)

    ReplyDelete
  22. //எங்காயாவது நீங்க ரீச்சாஜ் பண்ணற கடையில பிளான் டீடெயில்... இருக்கான்னு கேட்டு பாருங்க... இருக்காது.... எந்த விளக்கமும் இருக்காது.... என்னா மக்களை குழப்பி அந்த குட்டையில மீன் பிடிச்சாதானே மீன் மாட்டும்...//
    அண்ணே எல்லா ரீட்டெயிலரும் பெரும்பாலான திட்டங்களை பற்றி தெரிஞ்சி வெச்சி இருப்பாங்க இல்லாட்டி கஸ்டமர் கேருக்கு போன் செய்து பேசுங்கண்ணு சொல்லிடுவாங்க..

    எனக்கு தெரிஞ்சி செல் போன் கம்பெனிகளிலேயே சுலபமாக அனுகக்கூடிய கஸ்டமர் கேர் ஏர்டெல் தான்..

    ReplyDelete
  23. Airtel Friends
    Airtel Lucky games,
    Airtel Quiz

    Ipdi neraya makkala Emaathi panam pudunga Aagapatta plan.

    Cheat internet tarrif including in Broad Band schemes also.

    Mobile la balance irundha Airtel companykku porukkathu udane call panni caller tune set pannu josiyam paru job alert parunnu
    sikka vaikka paakaran

    2010 la
    Airtellukku Aapu nichayam

    ReplyDelete
  24. தலைவரே.. ஏர்டெல் மட்டும் இல்ல எல்லா கம்பெனியும் இதையே தான் செய்யுறாங்க. என்னோட சுமார் 9 வருஷ அனுபவத்தில ஏர்டெல் கஸ்டமர் கேரை சில நொடிகளில் அணுகிக் கொண்டுதானிருக்கிறேன்.

    ஹட்ச், எல்லாம் பேசி,பேசி, நம்பர் அழுத்தியே நோக அடிச்சிருவானுங்க.

    அதே போல ஏர்டெல் லேண்ட் லைன் கம்ப்ளெயிண்ட் பண்ண அடுத்த நாளூக்குள்ள கிளீயர் ஆயிடும்

    ReplyDelete
  25. ivanungala naama ethuvum panna mudiyatha boss.

    ReplyDelete
  26. Mobile Telecom network operators in most countries come under this category. But in INDIA they overexxagerate their fraud activities. Goyale Sunil Mittal's 75% income comes from fraudulent billings.

    ReplyDelete
  27. i thing ur comment is correct.my first simcard was BSNL,when the incoming free came the next day i bought it,that time sms was free.after some time the bsnl service went down, i was changed to airtel corperate plane,before i spent 300 only,when i was using airtel my bill is around rs 1500, later only i realise that,but one thing,now i am working in saudi, compare to india here to much cost,

    sorry, i don't know how to type in tamil, if u know any software pls send the link to me

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner