பிளாக் ஆன்ட் ஒயிட் படங்களிலேயே நாம் ஷாட்களை திறம்பட பயண்படுத்தினாலும் பெரும்பாலும் வெகுஜன மக்கள் ஷாட்களை பற்றி அதிகம் பேச ஆரம்பித்தது...பாரதிராஜா,பாலுமகேந்திரா,மகேந்திரன், மணிரத்னம் வருகைக்கு பின்தான்...
தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிகமாக இன்டர்கட் ஷாட் யூஸ் செய்தவர் பாரதிராஜாதான்...
சரி சின்ன ஷாட்களை எடுத்தவர்களை பற்றி சிலாகித்தோம் பெரிய ஷாட்களை எடுத்தவர்களை பற்றி பேசவேயில்லையே...
பொதுவாக லென்த் ஷாட் என்றாலே... கமல் நடித்த குணா படத்தில் ஒரு ஆஸ்பத்திரி அறையில் டாக்ட்ரிடம் பேசிக்கொண்டே கமல் நடந்து போய் சுவற்றில் இடித்து விழுவது பற்றி அந்த லென்த் ஷாட்டை பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் அப்போது பேசினார்கள்... காரணம் அதில் நடிப்பும் அந்த லென்த் டயலாக் அதற்க்கு காரணம்...
ஆனால் அதே படத்தில் படத்தின் தொடக்க காட்சியில் கமல் அறிமுகத்திற்க்கு முன் அந்த இடத்தின் ஆட்மாஸ்பியர் காட்ட 2,30 நிமிட ஷாட் பற்றி யாரும் பேசவில்லை.... கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்...பெயர் போட்டதும் கமல் பின்புறத்தில் காலைதூக்கி நிற்பது போல் காட்டி விட்டு கேமரா கட் ஷாட் இல்லாமல் டிராவல் ஆகும்.. திரும்பவும் கமல் லாங்ஷாட்டில் அதே இடத்தில் நிற்பது வரை ஒரே ஷாட்.... இதில் நடித்த எல்லா நபர்களும் காட்சியின் முக்கியத்துவம் கருதி சொதப்பாமல் நடிக்க வேண்டும் ...இதில் கிரேனில் இருந்து கேமரா அசிஸ்டென்ட்டில் இருந்து போகஸ் புல்லரில் இருந்து.....லைட் மெனில் இருந்து... எல்லோரும் திறம்பட செய்தால்தான்... அந்த லென்தி ஷாட் குட் ஷாட்டாக மாறும்.... அருமையாக காட்சிகளை வடிவமைத்த குழுவினருக்கும் ஒளிப்பதிவானர் வேணு. மற்றும் கமலுக்கு நன்றிகள்...பரிட்சார்த்த முயற்ச்சிகள் உலக சினிமாவுக்கு அடுத்து உள்ளுர் சினிமாவில் அறிமுகபடுத்தும் ஒரே நபர் அவர்தான்......
அதே போல் இதே வீடியோவில்.. கமல் டாக்டரிடம் பேசும் அந்த காட்சியும் இருக்கின்றது... அதுவும் 2,30நிமிட காட்சி.. இந்த காட்சிக்கு எத்தனை ஒத்திகை பார்த்து இருக்க வேண்டும் தெரியுமா....? சொதப்பினால் எடுத்தது எல்லாம் வேஸ்ட்....
இதே போல் ஒரு ஷாட் சினிமா பாரைடைசோ படத்தை இயக்கிய இத்தாலி இயக்குனர் தி ஸ்டார் மேக்கர் படத்தில் இதே போல் ஒரு 3 நிமிடம் ஓடக்கூடிய ஷாட் ஒன்று உள்ளது..நான் யூ டீயுப்பில் தேடி பார்த்தேன்... கிடைக்கவில்லை யாராவது லிங்க் கொடுத்தால் நலம்.... அதே போல ரஜினி அண்ணாமலையில் ஒரு லென்த்தி டயலாக் பேசுவார் அந்த விடியோ லிங்க் பிளிஸ்..
அடுத்த பகுதியில் சினிமா காதலன் ஸ்டேன்லிகுயூப்ரிக்....ஷாட் டேஸ்ட்
எங்கிருந்த கிளம்பி இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை... போன 4ம் பாக பதிவில்5/10 என்ற நிலையில் மைனஸ் ஓட்டு குத்தி இந்த பதிவை பல பேர் படிக்காத அளவுக்கு செய்து இருக்கின்றார்கள் ... ... நல்லது... அந்த நாதாரிகளுக்கு தனியாக ஒரு நாள் கச்சேரி வைத்துக்கொள்கிறேன்...
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
எப்பொழுதும் போல இதுவும் அருமை .................. :)
ReplyDeleteவேற மாதிரி சொல்ல தெரியல தல
எப்பொழுதும் போல இதுவும் அருமை .................. :)
ReplyDeleteவேற மாதிரி சொல்ல தெரியல தல
ரிப்பீட்டு.........
ReplyDeleteஎப்பொழுதும் போல இதுவும் அருமை
ரிப்பீட்டு.........
ReplyDeleteஎப்பொழுதும் போல இதுவும் அருமை
ஒரு சின்ன டவுட்ங்க. சின்ன சின்ன ஷாட் எடுத்து, எடிட் பண்ணி அது ஒரே ஷாட்டுன்னு காமிக்க முடியுமா ? முடியும்னா, அப்ப உண்மையாலுமே ஒரே ஷாட்ல தான் எடுத்துருக்காங்கன்னு எப்படி கண்டுபிடிக்கிறது. அதப் பத்தியும் எழுதுங்க.
ReplyDeleteஎதுக்கு நெகட்டிவ் ஓட்டு போடணும் ? அப்படி ஒண்னும் பிரச்சினையான விஷயத்த நீங்க எழுதலயே ?
விடுங்க காய்ச்ச மரத்துக்கு தான் கல்லடி. நீங்க பெரிய பதிவரா ஆகிட்டீங்கன்னு அர்த்தம். வாழ்த்துக்கள்.
அண்ணே... நல்ல தொகுப்பு...
ReplyDeleteநல்ல ஷாட் அண்ணே..
ReplyDeleteஅதாவது நல்ல பதிவுன்னு சொன்னேன்.. :)
நல்ல ஷாட் அண்ணே..
ReplyDeleteஅதாவது நல்ல பதிவுன்னு சொன்னேன்.. :)
அருமை! சரி! இந்த ஷாட்களுக்கும் அந்தகாலத்தில் மனோகரா பராசக்தி போன்ற படங்களில் சிவாஜி கணேசன் பேசி நடித்திருப்பாரே, அதற்கும் என்ன வித்தியாசம் ?
ReplyDeleteஎப்பொழுதும் போல இதுவும் அருமை .................. :)
ReplyDeleteவேற மாதிரி சொல்ல தெரியல தல--
நன்றி ராஜபிரியன்...
ரிப்பீட்டு.........
ReplyDeleteஎப்பொழுதும் போல இதுவும் அருமை//
நன்றி பிஸ்கோத்துபயல்
jacky, நீ ஊர்ல இருக்கும் போது இன்னும் கொஞ்சம் எழுதலாம்.
ReplyDeleteபடிக்க ஆரம்பித்தவுடன் முடிந்து விடுகிறது.
டிஸ்கி சூப்பர்.
SHOT AND SWEET!
ReplyDeleteIn "Avvai Shanmugi"...I think the market shot (Mr. Delhi Ganesh, Mr. Manivanan and Kamal)is also long short.
ReplyDeleteஅடங்க மாட்டியா நீயி??
ReplyDeleteஒடம்பு சரியாகிற வரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வந்து எழுதலாமில்ல??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அவ்வ்வ்வ்வ்
ReplyDeleteஎன்னோட கமெண்ட் எங்கே போச்சு???
என்னோட பின்னூட்டத்தை ரிலிஸ் பண்ணாத ஜாக்கியை வன்மையாக கண்டிக்கிறேன்
இப்போ என் கண்டனத்தை வாபஸ் வாங்கிக்கறேன்
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
என்னங்க அந்தக் காலத்துல பாதி Long Shot தானே வெச்சாங்க. இப்பவும் ஷாட் இருக்கும் எடிட்டிங்கல மாத்தி மாத்திதானே வெக்குறாங்க. உதா பாடல் காட்சிகளை சொல்லலாமா? அதுவும் விஜய் பாடல்கள் மாதிரி
ReplyDeleteஒரே ஷாட் மாதிரி தெரியலயே தல.. !
ReplyDeleteஅண்ணே பல பயனுள்ள தகவல்கள்
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி
ஒரே ஷாட், எடுப்பதற்கு வேண்டுமானால் நன்றாகயிருக்கும்.. பார்ப்பதற்கு நன்றாகயிருக்காது என்பது என் கருத்து. அதையாரும் கண்டுபிடிக்காமல்விட்டால் சுவாரஸியமும் இல்லை !
ReplyDeleteஇதோடு எனக்குத்தெரிந்த ஒரே ஷாட் (காமெடி பீஸ்.. எவ்வளவு நிமிடங்கள் தெரியாது.. )
வின்னரில் பிரசாந்த் எருமைகளை குளிப்பாட்டிக்கொண்டிருப்பார். அந்தப்பக்கமிருந்து, வடிவேலு தன் சகாக்களுடன் விந்திவிந்தி வர, அவர்களுடன் நடந்துகொண்டே பேச்சுக்கொடுப்பார்..
அப்பொழுது சொல்லும் வடிவேலுவின் வசனங்கள் வெகு பிரபலம்.
”அண்ணெ பேச்சு எப்பவும் ஒன்வே”, “ரத்தபூமி..” ஆகியவை.
ஒரு சிறு தெருவையை “ப” மாதிரி சுற்றிவந்து, ”குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் வாங்கிட்டுவருவேன்” என்று சொல்லி பிரசாந்த்-இடம் விடைபெறும் வரை ஒரே ஷாட்.
இவ்வளவு நீளத்திற்கு வசனத்தோடு உடலசைவையும் கவனத்தில் கொண்டு நடிக்கவேண்டும்..
அதேபோல, “யாரு..யாரோடி..” என்ற மணிரத்னத்தின் பாடலில், நீள ஷாட்டுகள் வைத்ததுமாதிரி ஞாபகம்..
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
நல்லா பதிவு
ReplyDeleteஎனக்கு தெரிந்து மெட்டிஒலி சீரியலில் ஒரு எபிசொட் ( 20 நிமிடங்கள் ) ஒரே ஷாட்ல எடுத்தாங்க. நான் அதை சன்டிவி யில் பார்த்து இருக்கிறேன்.
அவர்கள் அந்த தொடரில் இது போன்ற சில புதுமைகள் செய்தனர். ஒரு எபிசொட் வசனம் எதுவும் இல்லாமல்.
super
ReplyDelete