ஷாட் ஒரு பார்வை...(சினிமா சுவாரஸ்யங்கள் பாகம்..4)

கேமரா ஆன் பண்ணி ஆப் செய்யும் போது என்னவெல்லாம் காட்சிகள் பதிகின்றதோ அதற்கு பேரு ஷாட்னு சொல்லி இருக்கேன்... ஒருபடத்துக்கு முதுகெலும்பு ஷாட்....

சரி ஒரு ஷாட்டை எப்படி எடுப்பாங்க...? அது கதையின் போக்கையும் ,திரைக்கதையில் தேவைபடும் காட்சிய பொறுத்து ஒரு ஷாட்டை எடுப்பாங்க...

ஏற்கனவே சொல்லி இருக்கேன் ஷாட்டுக்கு கால அளவு என்பது கிடையாது....மேலே இருந்து விழும் பூசனிக்காயை ரஜினி தலையால இடிச்சி சிதறவச்சி கட் பண்ணா... ஒரு குளோஸ்ல தியேட்டர் ஸ்கிரின் முழுவதும் ரஜினி ஸ்மைலோட கண் அடிப்பாறே... அந்த ஷாட்டுக்கு தியேட்டர்ல விசில் பறக்கும்.... அதை டைரக்கடர் நினைச்சி இருந்ததா ஒரு ஷாட்டுல வச்சி இருக்கலாம்... பட் ஹீரோ மாஸ் ஹீரோ அவர் என்டரிக்கும் முக்கிய்த்துவம் கொடுத்து ஆகனும் அதனால சிட்டுவேஷனுக்கு ஏத்தது போல வச்சிக்கலாம்...


சினிமா எனும் அழகியலுக்கும் திரை மொழிக்குஉள்ள முக்கிய்த்துவம்.... ரொம்ப முக்கிய்மானது... ஒருவன் ஜெயிலில் இருந்து தப்பி வரும் காட்சியை ஒரு பார்வையாளனுக்கு சொல்ல எழுத்தாளன் இரண்டரை பக்கம் எழுதி விவரிக்க வேண்டி இருக்கும்....

ஒரு சாப்ளின் படம் பெயர் நினைவில் இல்லை... காட்சிகள் கொஞ்சமாக மனத்திரையில்
சாப்ளின் சிறையில் இருந்து தப்பி விட்டார் என்பதை திரைக்கதையில் காட்சிகளாக சொல்ல வேண்டும்....

சிறையில் சைரன் சத்தம்.... சிறை உடையோடு சாப்ளி்ன் ஓடி வருதல்... அவ்வளவுதான் இரண்டே ஷாட்டுகளில் ஒருவர் தப்பி விட்டதை சொல்ல முடியும் அதுதான் சினிமா...


தமிழ்படங்களில் பாடல் காட்சிகளில் அதிகமான ஷாட்டுகள் இப்போது பயன்படுத்த படுகின்றன... 70களில் இயக்குனர் ஸ்ரீதர் தனது படத்தின் பாடல் காட்சிகளில் 35 ஷாட்டுகள்தான் வைப்பாராம்.. ஏனென்றால் பார்வையாளனுக்கு நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பது அப்போதுதான் புரியும் என்பாராம்...இயக்குளர் ஸ்ரீதர் எடுத்த ஒரு பாடல்காட்சியில் எத்தனை ஷாட்டுகள் என்று பார்த்து சொல்லுங்கள்...

ஆனால் ஒரு நிமிடத்தில் 54 ஷாட்டுக்ள் ஒரு விளம்பர படத்திற்க்கு இப்போது வைக்கின்றார்கள்... அந்தளவுக்கு வேகம்...

எனக்கு தெரிந்து விஜயகாந் பாணுப்பிரியா நடித்த ஒரு படம் அதில் டூயட் கூட இளையராஜா பாடி இருப்பார்... “கண்ணில் என்ன மின்சாரம் ”இந்த பாடலுக்கு அதிகபடியான ஷாட்டுகள் வைத்து எடுத்து இருப்பார்கள்... அப்போது ஷாட்டை பற்றி பலர் பரபரப்பாக பேசினார்கள்...

போன பகுதியில... லீவிஸ் ஜீன்ஸ் விளம்பர படத்தை போட்டு இருந்தேன் மொத்த ஷாட்54ன்னு பட்சி சொல்லுது... ஆனா இன்னைக்கு எடுக்கற படங்களில் அதிகமான ஷாட்களை உபயோகபடுத்துகின்றோம்...

ஆனால் இப்போதைய படங்களில் அதிகமான ஷாட்டுகளை எடுக்கின்றோம் .. அதற்க்கு காரணம் வேகம் .... அப்போதைய அதிகபட்ச வாகன வேகம் 60லிருந்து 100 இப்போது 150லிருந்து220வரை.. நம் வாழ்க்கை முறை மாறி விட்டது பாஸ்...சில பாடல்களில் அதிகமான ஷாட்டுகள் மூலம் நாயகனின் கேரக்டரை சொல்லிவிட முடியும்... இந்த அயன் படத்து பாட்டில் 550க்குமேல் ஷாட்டுக்ள் உபயோகபடுத்தி இருப்பார்கள்...சிம்பு நடித்த மன்மதன் படத்தின் ஒப்பனிங் சாங்குக்கு800ஷாட்டுகளுக்கு மேல் ஆனால் அதில் பல ஷாட்டுக்ள் ரிப்பிட் அகும்... ரிப்பிட் காட்சிகள் என்றால் வந்த காட்சிகளே திரும்ப திரும்ப வரும்...


அயன் படத்தில் இந்த படலுக்கு எந்த ஷாட்டும் ரிப்பிட்டாகது... அதில் நீங்கள் கானும் ஒரு வினாடி காட்சிக்கு கேமரா வைத்து ...கோணம் பார்த்து, லைட்டிங் செய்து , ஆர்டிஸ்ட் பொசிஷன் சொல்லி.... இரண்டு மூன்று ரிகர்சல் செய்து... அதன் பிறகு அந்த காட்சியை எடுக்க வேண்டும்.....

எழுதுவது போல் சினிமா எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல....

தொடரும்...

இந்த தொடருக்கான உங்கள் ஆதரவுக்கும் ஊக்குவிப்புக்கும் எனது நன்றிகள்...தொடர்ந்து படபிடிப்பு இருப்பதால் என்னால் தொடர்ந்து பதிவிகளை மட்டும் தப்பும் தவறுமாக தமிழ் கொலை செய்து விட்டு ஒடிவிடுகின்றேன்... போட்ட பின்னுட்டங்களுக்கு பதில் இட முடியவில்லை...மன்னிக்கவும்.. உங்கள் பின்னுட்டம்தான் எனக்கு சக்தி அளிக்க கூடியவை என்பதை மறவாதீர்...

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

14 comments:

  1. கடந்த சில மாதங்களாக உங்களுடைய பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களுடைய திரை விமர்சனம் சிறப்பாக உள்ளது.

    தற்போது தாங்கள் எழுதிவரும் திரைப்படம் எடுப்பது தொடர்பான பதிவும் எளிமையாக சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  2. /எனக்கு தெரிந்து விஜயகாந் பாணுப்பிரியா நடித்த ஒரு படம் அதில் டூயட் கூட இளையராஜா பாடி இருப்பார்... “கண்ணில் என்ன மின்சாரம் ”இந்த பாடலுக்கு அதிகபடியான ஷாட்டுகள் வைத்து எடுத்து இருப்பார்கள்... அப்போது ஷாட்டை பற்றி பலர் பரபரப்பாக பேசினார்கள்..//

    இந்த பாட்டு நான் பாது இருக்கேன் ...நல்ல இருக்கும் .

    இன்னும் நிறைய எழுதுங்க இதை பத்தி

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  3. இந்த தொடர்பதிவு காணோமே நினைச்சேன் உங்களுக்கு மெயில் அனுப்பலாம் இருந்தேன் நீங்களே பதிவை போட்டுடிங்க நன்றி!
    தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  4. GooD

    அட‌ப்பாவி ம‌க்கா இதுக்குமா மைன‌ஸ் ஓட்டு?

    ReplyDelete
  5. ஷாட்டு ரிப்பீட்டு ஆவுதோ இல்லையோ, சார்மி ரிப்பீட்டு ஆவுது... :)

    ReplyDelete
  6. வசந்த் இயக்கத்தில் வந்த படத்தில் வரும் “நிவேதா” பாடலில், நிறைய ஷாட் வைத்திருப்பார். சொல்வது சரியா ?.

    தொடருங்கள்...

    ReplyDelete
  7. சினிமா தொழில்நுட்ப தகவல்களை மிக எளிமையான முறையில் சொல்வது மிக நன்று. நீங்கள் குறிப்பிட்ட விஜயகாந்த் பானுப்ரியா பாடல் இடம்பெறும் படம் எஸ்.டி.சபாவின் 'பரதன்' பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் விஜயகாந்த் ஓரளவிற்கு சிறப்பாக ஆடிய பாடல் அது.

    ReplyDelete
  8. பேஷா எழுதரேள் ..கன்டினியு பண்ணுங்கோ..

    ReplyDelete
  9. தாங்கள் சார்மிதாசனா?
    அயன் செய்தி புதுசு
    அடுத்த வாட்டி கூர்ந்து பார்க்கிறேன்

    ReplyDelete
  10. \\எழுதுவது போல் சினிமா எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல....//

    படிக்கும் போதே கண்ணை கட்டுதே.. இத பத்தி தெரிஞ்சிக்க உங்கள மாதிரி நாங்களும் கேமராமேன் ஆகா இருக்க வேண்டும் தல.

    நாங்க எல்லாம் டிஜிட்டல் கேமரா வச்சே பெரிய படம் காட்டுவோம்..

    ReplyDelete
  11. /எனக்கு தெரிந்து விஜயகாந் பாணுப்பிரியா நடித்த ஒரு படம் அதில் டூயட் கூட இளையராஜா பாடி இருப்பார்... “கண்ணில் என்ன மின்சாரம் ”இந்த பாடலுக்கு அதிகபடியான ஷாட்டுகள் வைத்து எடுத்து இருப்பார்கள்... அப்போது ஷாட்டை பற்றி பலர் பரபரப்பாக பேசினார்கள்..//

    பரதன் படத்தில் வரும் வரும் “கண்ணில் என்ன மின்சாரம் ” பாடலின் youtube link

    http://www.youtube.com/watch?v=3qMh7u6JcJM

    ReplyDelete
  12. குட் பிளக் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நன்றாக பார்த்தால் பாடலில் ஒரு வரிக்கு ஒரு ஷாட் என்ற முறையில் பதிவு செய்து இருப்பார்கள். இப்போது வேகம் கூடிவிட்டதினால் ஒரு வரிக்கு பல ஷாட் ( குளோஸ் ஷாட், லாங் ஷாட், சைடு ஷாட் ) ஆனால் அதே டிரஸ் ஒரு ஷாட்க்கு ஒரு வரிக்கு ...அந்த ஒரு ஷாட்க்கு வேற வேற அன்கிள்ல 2 அல்லது 3 கேமரால எடுக்குறாங்க அவ்ளோ தான்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner