Letters to Father Jacob(உலக சினிமா/பின்லாந்து) மன்றாடும் கடிதங்கள்....


எல்லோருக்கும் ஏதாவது ஒரு சோகம் அல்லது மனக்கவலை நிச்சயம் இருக்கும்... ஆனால் இறக்கி வைக்க ஆள் கிடைக்காமல் திண்டாடுவோம்....பிரச்சனைகளை எவரிடமாவது இறக்கி வைத்தால்தான் மன நிம்மதி கிட்டும் இல்லை என்றால் அதே நினைப்பாகவே மனது அலைபாயும்...

நமக்கு எற்படும் பிரச்சனைகளை அல்லது கவலைகளை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும்.. அது மனைவியாக அல்லது காதலியாக, மகனாக, மகளாக, நண்பனாக,டீக்கடை நாயராக.... யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்... எனக்கு எந்த கவலையாக இருந்தாலும் அல்லது மகிழ்வாக இருந்தாலும் என் மனைவியிடம் நான் பகிர்ந்து கொள்வேன்..அப்படியும் டிப்ரஷன் தீர வில்லை என்றால் என் அக்கா வீடு இருக்கும் மடிபாக்கம் போய் அவர்கள் வீட்டில் அரட்டை அடித்தாலே எனது கவலைகள் தீர்ந்து விடும்...என் அக்கா... என் தம்பி என்று ஒற்றை வார்த்தை சொல்லும் போது அந்த பாசத்தில் உருகி போய் விடுவேன்....

எல்லோருக்கும் எதாவது ஒரு இடத்தில் அவர்கள் குழந்தையாக மாறி ஆக வேண்டிய கட்டாயம் இருக்கின்றது... அவர்க்ளை பார்த்து கொள்வது யார்??? சரி சில பிரச்சனைகளை சொல்லி விடலாம்... சில பிரச்சனைகளை சொல்லவே முடியாது... அப்போது என்ன செய்வது...

கந்தசாமி படத்தில் வருவது போல் துண்டு சீட்டு கட்டி மாரியம்மன் கோவில் வேப்பமரத்தில் கட்டி வைக்க வேண்டும்... அல்லது பேனா நட்புகளிடம் தனது பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்... அப்படியும் மீறி போனால் சர்ச்சில் பாதரிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்... இந்த பின்லாந்து படத்தின் கதையும் இப்படித்தான் போகின்றது...


LETTRS TO FATHER JACOB.... பின்லாந்து படத்தின் கதை இதுதான்...

Leila Steen ஒரு கொலை குற்றவாளி... 12 வருட ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வருபவளுக்கு வயிற்று பிழைப்புக்கு எதாவது செய்து ஆக வேண்டும் அல்லவா?? அவளுக்கு யாரும் இல்லை... அவளுக்கு ஒரு இடத்தில் வேலை கிடைக்கின்றது...நெத்தி வேர்வை நிலத்துல சிந்தற அளவுக்கு ஒன்னும் அந்தளவுக்கு கஷ்டமான வேலை ஒன்னும் இல்லை....ஒரு பார்வை இழந்த வயதான கிருஸ்த்துவ பாதிரியாருக்கு (பாதர் ஜேக்கப்)வரும் கடிதங்களை படித்து அவருக்கு சொல்ல வேண்டும்...

அப்படி வரும் கடிதங்களுக்கு பதில் போட அவள் உதவ வேண்டும்... இதுதான் வேலை.... பலதரபட்ட மனிதர்கள் பாதர் ஜேக்கப்புக்கு கடிதம் எழுதுகின்றார்கள்...பலர் அவர்களுடைய பிரச்சனைகளை எழுத்து மூலம் எழுதி.. நிம்மதி காண்கின்றார்கள்... இதில் பாதர் ஜேக்கப்பு ஒன்றும் கடமைக்கு பதில் சொல்லும் ஆள் இல்லை உணர்பூர்வமாக பதில் சொல்பவர்...சிலருக்கு பண உதவியும் செய்வார்.... சிலர் பணம் அவருக்கு அனுப்பி வைப்பார்கள்... அவருடைய தனிமையான அந்த வீட்டில் தினமும் லட்டர் கொடுக்க ஒரு போஸ்ட்மேன் வருவான்... சிலருக்கு பிரத்தனை செய்ய உடல் நிலை ஒத்துழைக்காத நிலையிலும் பிறருக்காக மனம் உருகி பிரத்தனை செய்வார்... இருவருக்கும் ஒரு கட்டத்தில் சண்டை வருகின்றது... அன்பு வருகின்றது...எல்லாம் வருகின்றது முடிவு என்ன என்பதை வென்திரையில் காண்க...

படத்தின் சுவாரஸ்யங்கள்....

இந்த படம் இந்த வருடம் வெளிவந்த பின்லாந்து படம்...

இது ஒரு வாரத்துக்கு முன் நமது சென்னை 7வது உலக படவிழாவில் திரையிடபட்ட திரைபடம் இது...

இந்த படத்தை பார்க்க ரொம்ப பொறுமை அவசியம்... 75 நிமிடம் ஓடும் இந்த படத்தில் பிரதான பாத்திர படைப்பு மூன்றே போ் மட்டுமே....

பாதர்,அந்த பெண் கைதி, போஸ்ட்மேன்.... அவ்வளவுதான்...

இந்த படத்தை நமது ஊரில் எடுத்தால்.. மொத்தம் ஆறு பேர் மட்டுமே இந்த படத்தை பார்ப்பார்கள்... அந்து மூன்று கதாபாத்திரங்கள்.... படத்தின் தயாரிப்பாளர்,படத்தின் கேமராமேன்,படத்தின் இயக்குனர்...

எவ்வளவு பொறுமையாக சென்றாலும் இந்த படத்தின் மனதை மயக்கும் ஒளிபதிவுக்கு ஒரு ராயல் சல்யுட்....

அன்பை இவ்வளவு அழகாகவும் அதற்க்காக உலகம் எங்கும் பல ஜீவன்கள் அதனை வாழ வைக்க மெனக்கெட்டு கொண்டு இருக்கின்றார்கள்... என்பதை மிக எதார்த்தமாக சொல்லி இருக்கின்றார்கள்...

பாதரிடம் கோபித்துக்கொண்டு டாக்சி வர வைத்து விட்டு... டாக்சியில் ஏறியதும் எங்கே போக வேண்டும் என்று டாக்சி ஓட்டுனர் கேட்க... அவள் பல நொடிகள் அமைதி காத்து விட்டு டாக்சியில் இருந்து இறங்குவது கவிதை...

அந்த பழைய சர்ச் லோகேஷனும்... அந்த பாதர் ஜேக்கப் வீடும் அழகான இடத்தேர்வுகள்...

அந்த தள்ளாத வயதிலும் பிரார்தனை செய்ய சரியான நேரத்துக்கு சர்ச்சுக்கு செல்ல வேண்டும் என்று... பார்வை தெரியாத அந்த பாதிரியார் பதறி அடித்து வேக மாக நடக்கும் அந்த காட்சி கவித்துவம்...

பாதர் ஜேக்கப் சர்சில் மல்லாந்து படுத்து இருக்கும் காட்சியும் அதன் சிம்பிள் லைட்டிங்.. சூப்பர்....

படம் ரொம்ப பொறுமையாக பார்க்கவேண்டிய படம் என்றாலும்... கவித்தவமான அந்த முடிவு நெஞ்சை நெகிழவைத்து, சென்னை படவிழாவில் கைதட்டலை அள்ளிக்கொண்ட படம் இது...

படத்தில் மூன்றே கேரக்டர்களை வைத்துக்கொண்டு உணர்வுபூர்வமாய் கதை சொல்லி இருக்கின்றார்கள்...

கடிதம் எழுதுவதே என்ன என்று கேள்வி கேட்க போகும் அடுதத தலைமுறைக்கு இந்த படம் ஒரு வரலாற்று ஆவனம்...

இந்த படம் 6 விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடதக்கது...


படத்துக்கான டவுன்லோட் லிங்க....
http://rapidshare.com/files/304937349/Letters to Father Jacob (2009) DVDRip.part1.rar
http://rapidshare.com/files/304937322/Letters to Father Jacob (2009) DVDRip.part2.rar
http://rapidshare.com/files/304937341/Letters to Father Jacob (2009) DVDRip.part3.rar
http://rapidshare.com/files/304937362/Letters to Father Jacob (2009) DVDRip.part4.rar
http://rapidshare.com/files/304937385/Letters to Father Jacob (2009) DVDRip.part5.rar
http://rapidshare.com/files/304937327/Letters to Father Jacob (2009) DVDRip.part6.rar
http://rapidshare.com/files/304937329/Letters to Father Jacob (2009) DVDRip.part7.rar
http://rapidshare.com/files/304937090/Letters to Father Jacob (2009) DVDRip.part8.rar

படத்தின் டிரைலர்....


படக்குழவினர் விபரம்... Director: Klaus Härö Writers: Klaus Härö (screenplay) Jaana Makkonen (original idea) more Release Date: 3 April 2009 (Finland) more Genre: Drama more Awards: 6 wins & 1 nomination more parents Runtime: 74 min | Finland:75 min Country: Finland Language: Finnish Color:

அன்புடன் ஜாக்கிசேகர் தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் நன்றி.....

11 comments:

  1. படத்தை நன்றாக ரசித்திருக்கிறீர்கள் என்பது உங்களின் எழுத்துகளில் தெரிந்தது, நானும் இது போன்ற துள்ளிய உணர்வுகளை ரசிப்பவன் தான் என்னுடைய ரசனை உங்களுடன் ஒத்துப் போகிறது.இது போன்றவர்களால் மனிதர்களின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் படத்தைப் பற்றி நன்றாக எழுதியிருந்தீர்கள் சேகர்.

    ReplyDelete
  2. உணர்ச்சிகரமான நிகழ்ச்சிகளை மிக நுணுக்கமான வர்ணனையாக தந்திருப்பது அருமை ஜாக்கி.

    ReplyDelete
  3. விமர்சனம் அருமை..
    //கடிதம் எழுதுவதே என்ன என்று கேள்வி கேட்க போகும் அடுதத தலைமுறைக்கு//
    அட.. ஆமால்ல...?!?!

    ReplyDelete
  4. //பாதரிடம் கோபித்துக்கொண்டு டாக்சி வர வைத்து விட்டு... டாக்சியில் ஏறியதும் எங்கே போக வேண்டும் என்று டாக்சி ஓட்டுனர் கேட்க... அவள் பல நொடிகள் அமைதி காத்து விட்டு டாக்சியில் இருந்து இறங்குவது கவிதை...//

    நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை என்றாலும் இந்த காட்சியின் வீரியம் புரிகிறது

    ReplyDelete
  5. very good review for a very good film,thankyou bro,voted

    ReplyDelete
  6. அண்ணே நல்ல சிறப்பாக எழுதினீங்க,படம் இப்போவே பாக்கனும் போல உள்ளதே.
    அப்போ என் சீட்டில் என் ஓனர் இருந்தமையால் சாட்டுக்கு பதில் சொல்ல முடியலை.
    :)
    வாக்குகள் அளித்துவிட்டேன்

    ReplyDelete
  7. அண்ணே நீங்க எப்போவும் வீடியோவை இணைக்கையில் எம்பெட் கோட் "660" height="405" அளவுக்கு மேல் தேர்ந்தெடுக்காதீர்கள்,
    -------------------
    இந்த வீடியோ பார்டரைத்தாண்டி வெளியே வந்துவிட்டது, அப்படி இல்லை என்றால் ஃபுல் ஸ்ட்ரெட்ச் டெனிம் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்

    ReplyDelete
  8. நன்றி ராதாகிருஷ்ணன்... தொடர் வாசிப்புக்கு

    ReplyDelete
  9. படத்தை நன்றாக ரசித்திருக்கிறீர்கள் என்பது உங்களின் எழுத்துகளில் தெரிந்தது, நானும் இது போன்ற துள்ளிய உணர்வுகளை ரசிப்பவன் தான் என்னுடைய ரசனை உங்களுடன் ஒத்துப் போகிறது.இது போன்றவர்களால் மனிதர்களின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் படத்தைப் பற்றி நன்றாக எழுதியிருந்தீர்கள் சேகர்.//

    மிக்க நன்றி ராஜ்கமல்.. நீங்கள் படத்தை பாருங்கள்.. ஒரு 75 நிமிடம் அந்த படத்துக்கு ஒதுக்குங்கள்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner